படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

10 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: ஆபத்தானது சிபிஎம் பொலிட் பீரோ

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்தது ஆபத்தானது – சிபிஎம் பொலிட் பீரோ

புதுடெல்லி,அக்:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் உண்மைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தீர்ப்பை மக்கள் எதிர்கொண்டவிதம் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், ஆதாரங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளாமல் நம்பிக்கைக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்தது கவலையை அளிக்கிறது. இத்தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும்.
பாப்ரி மஸ்ஜிதை இடித்தது கிரிமினல் குற்றமும், மதசார்பற்ற கொள்கையின் மீதான தாக்குதலுமாகும். இவ்விஷயம் நீதிமன்றத்தின் கவனத்தில் வராவிட்டாலும் கூட மஸ்ஜிதை தகர்த்தை நியாயப்படுத்தும் விதமாகவே நீதிமன்றத் தீர்ப்பு புரிந்துக் கொள்ளப்பட்டது.
மஸ்ஜித் இடிப்புத் தொடர்பான வழக்குகளை கையாளும் நீதிமன்றங்கள் இதனை மிக கவனத்தில் கொள்ளவேண்டுமென பொலிட் பீரோ வலியுறுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய நிலத்தை 3 ஆக பிரித்து அளிக்கும் தீர்ப்பைத் தொடர்ந்து பிரம்மாண்டமான கோயிலை கட்டுவதுத் தொடர்பாகத்தான் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம் எனக்கூறுவோர் கூட மஸ்ஜித் கட்டுவதைக் குறித்து மெளனம் சாதிக்கின்றனர்.
பொலிட் பீரோ கூட்டத்தின் தீர்மானங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாரஷ் காரட் விளக்கினார்.

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி