படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

2 டிச., 2010

ஜனநாயகம்–பணநாயகம்–குண்டர்நாயகம்!!


நம் தாய்த் திருநாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். பெரும் மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாடு என பெருமை பேசுகிறோம். ஆனால் நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து உண்மையில் நடைபெறுவதோ போலி ஜனநாயகமாகும். அதாவது 100% மக்களில் சுமார் 50% அல்லது 60% மக்கள் வாக்களித்து அதில் பலமுனைப் போட்டியில் சுமூர் 20% அல்லது 25% வாக்குகளைப் பெறறவர் வெற்றி பெற்று சட்டசபைக்கோ மக்கள் மன்றத்திற்கோ, எம்.எல்.ஏ., எம்.பி.யாகச் செல்லும் கேளிக் கூத்தையே பார்த்து வந்தோம். 100% மக்களில் 25% வாக்குகளைப் பெற்றவர் எப்படி பெரும்பான்மை மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்ல முடியும்.
எனவேதான் அதைப் போலி ஜனநாயகம் என்கிறோம்.அது மட்டுமல்ல, செல்வந்தர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களிப்பதைக் கெளரவக் குறைவாகக் கருதி வாக்களிக்கவே மாட்டார்கள். நடுத்தர, ஏழை எளிய மக்களே வாக்களிப்பார்கள். ஆனால் ஆட்சியோ வாக்களிக்காத அந்தச் செல்வந்தர்களின் கைப்பாவையாகச் செயல்படும். இந்த வகையிலும் நமது நாடு போலி ஜனநாயகத்தையே கடைபிடித்து வந்தது.
இந்த நிலையிலிருந்து தாழ்ந்து நமது நாடு போலி ஜனநாயகத்திலிருந்து முன்னேறி(?) பணநாயகத்தில் அடியெடுத்து வைத்தது. பணத்தை அராஜக வழிகளில் ஈட்டிய பண முதலைகள் அந்தப் பணத்தில் ஒரு பகுதியை தேர்தல் காலங்களில் முறை தவறி செலவிட்டு மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கி; அது கொண்டு ஆட்சியில் அமர்ந்து செலவழித்த பணத்தை பன்மடங்காகப் பெறும் வியாபார(?) தந்திரத்தை அரசியல்வாதிகளாக மாறி கடைபிடிக்க ஆரம்பித்தனர். அதனால் போலி ஜனநாயகம் பணநாயகமாக மாறியது. கொழுத்த ஆதாயம் தரும் ஒரு வியாபாரச் சந்தையாக அரசியல் மாறியது. இதிலும் மனநிறைவு அடையாத அரசியல்வாதிகள் இப்போது பண நாயகத்திலிருந்து குண்டர் நாயகத்திற்கு முன்னேறி(?) இருக்கிறார்கள்.
சமீபத்தில் இடம்பெற்ற தமிழக திருமங்கலம் தொகுதியின் சட்டசபை இடைத்தேர்தல் எமது இந்’தக் கூற்றை உண்மைப்படுத்துகிறது. அந்த ஒரே ஒரு தொகுதித் தேர்தலுக்காகச் செலவிடப்பட்ட பணத்தை வைத்து தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் நியானமான தேர்தல் நடத்தி விடலாம் என்று சொல்லும் அளவிற்கு அங்கு பணம் தண்ணீராகப் பாய்ச்சப்பட்டது. குண்டர்களின் அராஜகத்திற்கோ அளவே இல்லை. இதற்கு இந்தக் கட்சி, அந்தக் கட்சி என சொல்ல முடியாது. செல்வாக்கு மிக்க அனைத்துக் கட்சிகளின் நிலை இதுதான்.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த இடைத்தேர்தலில் 89% வாக்குகள் பதிவாகியுள்ளன என்றால் பண பலத்தையும் குண்டர் பலத்தையும் அளவிட்டுக் கொள்ளலாம். இந்த நிலை நீடிக்குமானால், இனிமேல் இந்தியாவில் போலி ஜனநாயக ஆட்சியும் நீடிக்காது. அரைகுறையாக நடந்து கொண்டிருக்கும் குண்டர்களின் ஆட்சியே முழுமையாக இந்தியாவை ஆட்சி செய்யும் மன்னராட்சியைவிட, சர்வாதிகார ஆட்சியைவிட மிகமிகக் கொடுமையான குண்டராட்சிக்குக் கீழ் இந்திய மக்கள் கொண்டு வரப்படுவார்கள். இந்த அராஜகப் போக்கு தொடர வேண்டுமா என்பதை அறிவு ஜீவிகளும் மக்கள் நலன் நாடுபவர்களும் நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஆட்சி என்பதே மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் சேவை செய்ய வேண்டும் என்ற நன்நோக்கில் அமைக்கப்படுவதே. எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மக்களுக்குத் தொண்டு செய்வதாக, சேவை செய்வதாகக் கூறிக் கொண்டே களத்தில் இறங்குகிறார்கள். உண்மையிலேயே அவர்களின் நோக்கம் மக்களுக்குத் தொண்டு செய்வதாக இருந்தால் அந்த எம்.எல்.ஏ. பதவிகளோ, எம்.பி.பதவிகளோ இல்லாமலும் தொண்டு செய்ய முடியும். எனவே அவர்கள் தேர்தல் அல்லாத காலங்களில் தொகுதியைச் சுற்றி சுற்றி வந்து மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். மக்களின் குறைகேட்டு அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகள் செய்து தொண்டு செய்ய வேண்டும். அதன் மூலம் அந்தத் தொகுதி மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க வேண்டும். மக்கள் அவரது தொண்டை சேவையை அனுபவத்தில் கண்டு அவரை அடையாளம் காண வேண்டும்.
இப்படி அனைத்துத் தொகுதிகளிலும் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டு செய்யும் நல்லுள்ளத்தோடு சிலர் தயாராக வேண்டும். தேர்தல் காலத்தில் இவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதோ, அதற்காகத் தொகுதிகளில் பிரசாரமோ ஒருபோதும் இனி இருக்கக் கூடாது. தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் தொகுதி மக்களைச் சந்திக்கும் நிலை இருக்கக் கூடாது.
இப்படி சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் தான் பல சீர்கேடுகள், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்களிக்கச் சத்தியம் வாங்கும் அவல நிலை. அதனால் கட்சிகளுக்கிடையே அடிபிடி தகராறு, சட்டம் ஒழுங்கு சீர்கெடல், மத்திய இராணுவம் அழைக்கப்பட்டது என மக்களின் வரிபணம் பல ஆயிரம் கோடி பாழாகும் அநியாயம் அரங்கேறுகிறது. எனவே தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் குறிப்பாக வேட்பாளர்கள் தொகுதி மக்களை சந்திக்கும் நிலை முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். தேர்தல் அல்லாத காலங்களில் அவர்கள் தொகுதிகளை குட்டி போட்ட நாய்போல் சுற்றி சுற்றி வந்து மக்களுக்குத் தொண்டு செய்து, சேவையாற்றி தங்களின் சேவைகள் மூலம் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடிக்க முடியும். இது உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டு செய்யும் தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கு மிகமிக எளிதானதே ஆனால் தொண்டு என்ற பெயரால் மக்களை ஏமாற்றி, வஞ்சித்துக் கோடி கோடியாக பணம் பண்ண விரும்பும் கயவர்களுக்கு இது எட்டிக் காயாகக் கசக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
முன் காலத்திலாவது தொலைக்காட்சி போன்ற பிரசார வசதிகள் இல்லாத காரணத்தால், வேட்பாளர்கள் தொகுதிகளுக்குச் சென்று வாக்கு கேட்கும் நிலை இருந்தது. இன்றோ தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடே இல்லை. அரசே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகளை அளித்துள்ளது. எனவெ தொகுதிகளுக்குச் செல்லாமலேயே வேட்பாளர்கள் தொலைக்காட்சி மூலம் தொகுதி மக்களை அடையமுடியும். தங்களின் சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியும். வீடு வீடாகத் தேர்தல் காலத்தில் படியேற வேண்டிய அவசியம் இல்லை.
எனவே ஜனநாயகம், பணநாயகமாகவோ, குண்டர் நாயகமாகவோ ஆகக் கூடாது என்ற உயர்நோக்கு அரசுக்கு இருந்தால் சட்டம், ஒழுங்கு கெட்டு, தேர்தல் காலத்தில் மக்களின் அமைதிக்குப் பங்கம் வரக்கூடாது என அரசு விரும்பினால், மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடி வீண் விரயம் ஆகாமல் காக்க அரசு விரும்பினால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் மக்களை தொலைக்காட்சிகளில் அல்லாமல் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னால் வேட்பாளர்கள் தொகுதி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, செய்த சேவை இவை மூலம் மக்களுக்கு அறிமுகமாகி அதன் மூலம் அவர்களின் வாக்குகளை அடைவதே முறையான ஜனநாயகமாகும்.
தேர்தல் காலத்தில் பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை மதிமயக்கி, ஏமாற்றி அவர்களின் வாக்குகளை அபகரிக்கும் அநியாய நிலை முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட வேண்டும். அப்படியானால்தான் அரசியல்வாதிகள் முழங்கும் ஜனநாயகம் நிலைக்கும் இல்லை என்றால் பணநாயகம், குண்டர்நாயகம் மக்களை ஆட்டிப்படைக்கும் கொடூர ஆட்சியே ஆட்சிக் கட்டிலில் அமரும் அவலமே எஞ்சி நிற்கும்.
ஆயினும் மனிதக் கற்பனையில் அதாவது மனுதர்மத்தால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி, ஏழைகளையும் நடுத்தர மக்களையும் சுரண்டி கோடீஸ்வரர்களானவர்கள் மேலும் மேலும் பல்லாயிரம் கோடிகள் ஈட்டவே துணை நிற்கும். இதற்குச் செல்வந்தர்களே பயணிக்கும் விமானங்களுக்கு பெட்ரோல் விலையை குறைத்த அரசு, ஏழை எளியவர்கள், நடுத்தர மக்கள் பயணிக்கும் வாகனங்களின் பெட்ரோல் டீசல் விலையைப் போதிய அளவில் குறைக்காமல் அடம் பிடிப்பதும் வாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியானதும் போதிய ஆதாரமாகும்.
ஆக ஜனநாயக ஆட்சி முறை ஏழைகளைப் புறந்தள்ளி முழுக்க முழுக்க வசதி படைத்தவர்களையே முற்றிலும் சார்ந்திருப்பதே போல், கம்யூனிஸ ஆட்சி முறையோ செல்வந்தர்களைப் புறந்தள்ளி தொழிலாளர்களையே முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறது. தொழிலாளர்களின் முறைகேடான செயல்பாடுகளுக்கும் துணை போகிறது. இதுவும் மனிதன் அமைத்த மனுதர்ம சட்டமே.
இந்த இரண்டு வகை மனுதர்ம சட்டங்களைப் புறந்தள்ளி, மனிதனைப் படைத்த இறைவன் அளித்துள்ள இறைச்சட்டம் மட்டுமே மனித சட்டமான மனுதர்மம் கலக்காத மிகத் தூய்மையான சட்டமாகும். இந்த இறைச் சட்டமே பரம ஏழைகள், ஏழைகள் தொழிலாளர்கள் செல்வந்தர்கள் என அனைத்து சாராருக்கும் நியாயம் வழங்கும் நடுநிலைச் சட்டமாக இருக்கிறது.
இந்த நடுநிலைச் சட்டத்தை இறைவனின் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. உள்ளத்திலிருக்கும் காழ்ப்புணர்வுகளை சில நிமிடங்கள் தூக்கி எறிந்துவிட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு அல்குர்ஆனை படித்து விளங்குகிறவர்கள் இந்த உண்மையை உணர முடியும்.
இன்று முஸ்லிம் மத குருமார்கள் அமைத்து வைத்திருக்கும் சட்டங்கள் இறைவன் அளித்த சட்டங்கள் அல்ல. இவர்களின் முன்னோர்களான புரோகிதர்கள், அரசியல்வாதிகள் தங்கள் நலன்களுக்காக சட்டம் வகுப்பது போல் புரோகிதர்களின் சுயநலன்களுக்காக அமைக்கப்பட்ட மனுச்சட்டங்களே இவை. இந்துக்கள் கடைபிடிக்கும் மனுச்சட்டம்-மனுதர்மம் போல், முஸ்லிம்கள் கடைபிடிக்கும் மனுச்சட்டம் – மனுதர்மமே. இந்த மதகுருமார்களான மதப்புரோகிதர்கள் இஸ்லாத்தின் பெயரால் சொல்லும் கட்டுக்தைகளையும் கற்பனைகளையும், மூட நம்பிக்கைகளையும், அனாச்சரங்களையும் இறைச் சட்டமாக நம்பி யாரும் ஏமாற வேண்டாம். அல்குர்ஆன் அவர்கள் மட்டுமே விளங்கும் ஒரு நூல் அல்ல. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புக்களைப் படித்து தாராளமாக மிகச் சரியாக விளங்க முடியும். இதில் இந்தப் புரோகிதர்களின் பூச்சாண்டியை ஒருபோதும் நம்பக்கூடாது.

www.annajaath.com/?p=951

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி