படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

முஸ்லிம் தீவிரவாதி என்கின்றனர்

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்பது அமைதி, சமாதானம், இறைவனுக்கு அடிபணிதல் என்று பல பொருள்களை
உள்ளடக்கிய ஒரு சொல்லாகும்.



*இஸ்லாம் எப்போது உருவானது?***

ஒவ்வொரு மொழிப்பற்றும் சயமப் பற்றும் உள்ளவர் கூறும்போது எங்கள் மொழி மற்றும்
சமயம் 4000 ஆண்டுகள் தொன்மைவாய்ந்தது, 6000 ஆண்டுகள் பழமைவாந்தது என்று
புகழந்து பேசுவார்கள் ஆனால் இஸ்லாத்தை புகழ்வதற்கோ எல்லைகள் இல்லை காரணம்
எப்போது முதல் மனிதர் ஆதம் (அலை) அதாவது ஆதாம் ஏவால் படைக்கப்பட்டார்களோ
அப்போதே இஸ்லாம் மார்க்கம் தோன்றிவிட்டது ஆனால் அதன் சட்டதிட்டங்கள் நபிகளாரின்
காலம் வரை அவ்வப்போது அல்லாஹ் (உங்கள் இறைவன்) நாகரீக வளர வளரு தன்னுடைய
சட்டதிட்டங்களை தன் இறைத்தூதர்கள் மூலமாக நெறிப்படுத்தி மெருகூட்டிவந்தான்.
இறுதியாக தன்னுடைய இறுதித் தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின்
வாயிலாக இஸ்லாம் என்ற அமைதிப் பாதையை அதன் சன்மார்க்க நெறிகளை முழுமையாக்கி உலக
முடிவு நாள்வரை இந்த மார்க்கத்தை நிலைபெறச் செய்துவிட்டான்.

*இஸ்லாம் எப்படிப்பட்ட காலகட்டத்தில் முழுமையடைந்தது.***

உலகில் காட்டு தர்பார் முறை அரங்கேற்றப்பட்டு மக்கள் மூடர்களாகவும்,
அடிமைகளாகவும் மாற்றப்பட்டு சில பொற் காசுகளுக்காக மக்களை விற்பனை
செய்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும், ஆண்கள் பெண்களை விடுத்து ஆண்களிடமே
தங்கள் இல்லற வாழ்க்கையை மேற்கொண்டும், பெற்ற தாயை தாரமாகவும் ஆக்கிய
அக்கிரமமான சூழ்நிலைகளில் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட மக்களுக்கு சத்திய
சன்மார்க்க நெறிமுறைகளை போதிப்பதற்காக உங்கள் இறைவன் அல்லாஹ் அருளிய மார்க்கம்
தான் இஸ்லாம்.



**

*நபிமார்கள் என்றால் யார்?***

நபிமார்கள் என்பவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களைப் போன்ற சாதாரண
மனிதர்களே. அவர்களுக்கு உங்கள் இறைவன் வேதத்தையும் அதன் ஞானத்தையும் கொடுத்து
அவர்களை தனது திருத் தூதா என்று மகிமைப்படுத்தினான். மக்களுக்கு சட்டம் இயற்ற
வந்த நல்லடியார்கள்தான் நபிமார்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இந்த நபிமார்கள்
மக்களோடு மக்களாக மக்களின் உற்ற சகோதரர்களாக வாழ்ந்து வந்தார்கள் இவர்கள்
இறைவனிடமிருந்து வேதத்தையும் அதன் ஞானத்தையும் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை)
மூலமாக [கிருத்தவ நண்பர்கள் காப்ரியேல் என்றழைப்பர்] இறைச் செய்தியை பெற்று
வந்தார்கள். இறைவனிடமிருந்து வரும் அந்த இறைச் செய்தியை ஏற்று முதலில்
நபிமார்கள் வாழ்ந்துகாட்டுவார்கள் பின்னர் தம் நடைமுறைப்படி வாழ மக்களுக்கு
அழைப்பு விடுப்பர்.





நபிமார்களை இறைவன் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்கு எந்த தெய்வீக ஆற்றைலையும்
கொடுக்கவில்லை மாறாக அவர்களின் சில நடவடிக்கைகளில் அற்புதங்களை
நிகழ்த்திக்காட்டுவான். அப்படிப்பட்ட அற்புதங்களில் நபி மூஸா (அலை) வாயிலாக
கடலை பிளந்தது, நபி ஈஸா (அலை) வாயிலாக இறந்தவரை உயிர்பித்தது போன்றைவை உலகம்
அறிந்ததே. ஆனால் இந்த இறைத்தூதர்கள் காலத்து மக்களோ இவர்களிடம் ஏதோ தெய்வீக
சக்தி வந்துவிட்டதாக எண்ணி இவர்களில் சிலரை கடவுளின் பிள்ளையாக
ஆக்கிக்கொண்டனர்.



அவ்வாறு உருவானதுதான் மாற்று மதங்கள், அந்த மதங்களின் உட்பிரிவுகளே குலம்,
கோத்திரம் மற்றும் சாதிகள். இந்த வேறுபாடுகளை கலையவும் சத்திய சன்மார்க்க
நெறிமுறைகளை ஒழுங்காக மக்கள் அனைவரும் கடைபிடித்து வாழவும்தான் இறுதித்தூதர்
முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக திருமறை திருக்குர்ஆன் அருளப்பட்டது. அவர்
அதன்படி வாழ்ந்து காட்டிய விதம்தான் முஸ்லிம்களின் வாழ்க்கை நெறியாகும்.





*ஒவ்வொரு முஸ்லிம்-க்கும் உரிய தகுதிகள் என்ன?***

முஸ்லிம் என்பவன் தன்னை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனுக்கு எந்த
வித வஸ்துக்களையும் அதாவது கல், மரம், சிலை, சமாதி, உருவம் போன்றவைகளின்
வாயிலாக இறைவனுக்கு இணை வைத்து வணங்காமல் தன்னுடைய இறைத்தூதர்களான நபிமார்கள்
எவ்வாறு இறைவனை அறிந்துக் கொண்டார்களோ அவ்வாறு அறிந்துக் கொண்டு முற்றிலும்
இறைவனுக்கே வழிபட்டு அவனிடமே உதவி தேடி முற்றிலும் இறைவனுக்கெ கட்டுப்பட்டவனாக
வாழ்பவன் என்று பொருள்படும். அப்படிப்பட்ட நான் முஸ்லிம் என்று சொல்வதில் என்ன
தவறு இருக்கிறது. நான் ஏன் இஸ்லாத்தை ஏற்க தயங்க வேண்டும். நான் ஏன் இஸ்லாத்தை
பரப்ப பயப்படவேண்டும்!.



*இஸ்லாமியர்கள் ஏன் படையெடுத்தார்கள் ***



தென்நாட்டை ஆண்டுவந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் போர் புரிந்தார்கள்
இந்திய நாட்டை கைப்பற்றினார்கள், அதே போன்று மேற்கத்திய நாட்டை ஆண்ட மாவீரன்
நெப்போலியன், அலெக்ஸாண்டர் போன்றோர் படையெடுத்தார்கள் ஒவ்வொரு நாட்டையும்
கைப்பற்றினார்கள் அது போன்றுதான் முஸ்லிம் மன்னர்களும் தங்களால் இயன்ற அளவு
படையெடுத்தார்கள் நாட்டை கைப்பற்றினார்கள் ஆனால் முஸ்லிம் ஒருவன் போர்
தொடுத்தால் மட்டும் கொல்லையடிக்க வந்தார்கள் என்று கூறுவது ஏன்?. இந்திய
நாட்டில் ஒரு அரசன் 17 முறை படையெடுத்து வந்தான் ஆனால் கடைசியாக படையெடுத்த
நேரத்தில்தான் இந்தியாவை கைப்பற்றினான் இதை சாதகமாக எடுத்துக்கொண்டு முஸ்லிம்
மன்னர்களை கொள்ளையர்கள் என்கின்றனர். ஆனால் அந்த முஸ்லிம் மன்னன் 17 முறை
படையெடுத்து அதில் 16 முறை தோல்வியடைந்தான் அப்போது இந்திய மன்னர்கள் அந்த ஒரு
முஸ்லிம் மன்னனின் செல்வத்தையும் போர்க் கைதிகளையும் எந்த அளவுக்கு
சூரையாடியிருப்பார்கள் சற்று எண்ணிப்பாருங்கள்! ஒரு முஸ்லிம் 1 முறை நாட்டை
கைப்பற்றினால் அவன் கொள்ளைக்காரன் மாறாக இந்திய நாட்டை ஆண்ட குறுநீல மன்னர்கள்
16 முறை அந்த ஒரு முஸ்லிம் மன்னனை சூரையாடினால் அது வெற்றியா?





இந்த நாட்டில் பிறந்த முஸ்லிம் மன்னன் திப்பு சுல்தான், ஹைதர் அலி,
சிராஜ்-உத்-தௌலா போன்றோர் எல்லோரும் இந்திய மக்களிடம் கொல்லையடித்தார்களா?
மாறாக இந்தியர்களை விட திறம்பட ஆட்சி நடத்திய வரலாறுகள் கண்முன்னே உள்ளது அதை
பற்றி பேசும் போது அழகாக திப்பு சுல்தான் என்றுதான் பேசுவார்கள் ஆனால் அவரை ஒரு
முஸ்லிம் மன்னன் என்று யாராவது பாராட்டுவது உண்டா?




*இஸ்லாம் காட்டும் போர் நெறி முறைகள்***



அல்லாஹ்வின் தூதுர் (ஸல்) அவர்கள் கலந்துக்கொண்ட அறப்போர் ஒன்றில் பெண்ணொருத்தி
கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதை கண்டித்தார்கள் (நூல் புகாரி 3010,
முஸ்லிம் 3587



நபிகளார் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல் வதற்குத்
தடைவிதித்தார்கள் என்ற கட்டளையை புகாரி 3015, முஸ்லிம் 3588, திர்மீதி,
அபுதாவுத், அஹ்மத், இப்னுமாஜா போன்ற ஆதார நூல்களில் இடம்பெள்றுள்ளன.



*இஸ்லாம் தீவிரவாத மார்க்கமா?***

சகோதரர்களே இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் தீவிரவாதம் தலைதூக்கி
இருப்பது உண்மைதான் அதை மறுப்பதற்கு இல்லை ஆனால் அதிலும் நம் தொலைக்காட்சி
ஊடகங்கள் இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களுக்கு எதிராக கலத்தில் இறங்கி பெயரை
கெடுக்கின்றனர். உலகில் எண்ணை வளத்துக்காக அரபு தீபகற்பத்தையே சூரையாடும்
அமெரிக்கர்கள் ஒருபக்கம் எண்ணையை அபகறித்துக்குக்கொண்டு முஸ்லிம் நாடுகளில்
உள்ள மக்களை போரினால் அநாதைகளாக மாற்றி பிச்சை எடுக்க வைத்துள்ளனரே இது
அநியாயமில்லையா? அதை ஒரு கிருஸ்தவன் என்ற கண்ணோடத்தில் பார்ப்பதில்லை மாறாக
அமெரிக்கர்கள் என்று பார்க்கின்றனர். அதே சமயம் அந்த பாதிக்கப்பட்ட நாட்டைச்
சேர்ந்த குடிமகன் தன் நாட்டு மக்களுக்காக ஆத்திரப்பட்டு ஆயுதம் ஏந்தினால் அவனை
முஸ்லிம் தீவிரவாதி என்கின்றனர். இந்த இரட்டை வேடம் எதற்கு!



சிந்தித்துப் பாருங்கள் நான் ஒரு இந்தியன் என் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து
வாழ கடமைப்பட்டுள்ளேன் ஆனால் என் நாட்டின் சட்டதிட்டங்களை மீறினால் நான்
இந்தியன் என்ற கவுரவத்தை இழந்துவிடுவேன் இது ஒரு நாட்டுக்கு உள்ள கட்டுப்பாடு.
இதை மீறினால் என்னைத்தான் திட்ட முடியுமே தவிர என் இந்திய நாட்டை திட்ட
முடியுமா?



ஒரு முஸ்லிம் இஸ்லாம் என்ற மார்க்கத்ததுக்கு சொந்தக்காரன் அவன் தன் மார்க்க
சட்டதிட்டங்களை மதித்து வாழ கடமைப்பட்டுள்ளான் ஆனால் அவன் மார்க்க
சட்டதிட்டங்களை மீறினால் அவன் முஸ்லிம் என்ற கவுரவத்தையும் கண்ணியத்தையும்
இறைவனிடம் இழந்துவிடுவான் என்பது உண்மை. அவ்வாறு இருக்க இஸ்லாமிய மார்க்க நெறி
முறை களை மீறி நடந்துக்கொண்ட ஒரு சில அரசர்களையோ, தனி நபர்களை இனம் கண்டு
கொள்ளாமல் ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் கொல்லை யடித்தார்கள், கொலை செய்தார்கள்,
கற்பழித்தார்கள், முஸ்லிம்கள் ஒட்டுமொத்த தீவிரவாதிகள் என்று கூறுவது எந்த
விதத்தில் நியாயம்.



*இஸ்லாம் கொள்ளையடிக்க கூறியதாக நீங்கள் திருக்குர்ஆனில் படித்ததுண்டா? *

* *

*இஸ்லாம் பெண்களை கற்பழிக்க அறிவுறுத்தியதாக நீங்கள் திருக்குர்ஆனில்
படித்ததுண்டா? *

* *

*இஸ்லாம் கொலை செய்ய அறிவுறுத்தியதாக நீங்கள் திருக்குர்ஆனில் படித்ததுண்டா?*



*ஆயிரம் குற்றவாளிகள் மன்னிக்கப்படலாம் ஒரு நிரபராதி தண்டிக் கப்படக்கூடாது
என்று கூறும் இந்திய திருநாட்டில் ஒரு பின் லேடன் என்ற குற்றவாளிக்காக உலகில்
வாழந்து வரும் 200 கோடி முஸ்லிம்களை திருடர்கள், கொள்ளையர்கள், தீவிரவாதிகள்
என்று கூறுவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததா?*



சிந்தியுங்கள் செயல்படுங்கள்!

jazakallahu khaira



http://onegodonerace.blogspot.com/


http://grave123.wordpress.com/
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி