படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

24 நவ., 2010

யார் இந்த நிர்மோஹி அகரா? (Safron Terrorism)



அவுஜுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்




யார் இந்த நிர்மோஹி அகரா?


பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தை சொந்தம் கொண்டாடும் சாதுக்களின் அமைப்பிற்கு பெயர்தான் நிர்மோகி அகரா. இவர்கள் ஹிந்து சமயத்தைச் சார்ந்த வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் அனுமாரின் தீவிர பக்தர்கள். மொத்தம் வடஇந்தியாவில் 14-அகரா பிரிவுகள் உள்ளன இந்த பிரிவுகளைத்தான் அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்துள்ளது
அகரா என்றால் என்ன?
அகரா என்ற சமஸ்கிருத வார்த்தையை அகதா என்றும் அழைப்பார்கள் அதாவது சாதுக்களின் பிரிவில் தற்காப்பு படையினர் என்று பொருள்படும். ஆதாரம் இதோ


ஹிந்து சமயத்தில் சாதுக்கள் என்றால் அமைதியானவர்கள் என்றும் புளு பூச்சியை கூட கொல்லமாட்டார்கள் என்றும்தான் நாம் அறிவோம் ஆனால் அதே சாதுக்களின் அமைப்பில் தற்காப்புக்காக கொலை செய்வதும் உண்டு என்பது இந்த அகரா என்ற அமைப்பின் மூலம் தெரியவருகிறது! இந்த சாதுக்களின் அமைப்பில் மிக முக்கிய பிரிவான அகரா என்ற சாதுக்கள் அமைப்பு தந்திரமான அமைப்பாகும் அதாவது இவர்கள் சாதுக்கள் போல் காட்சியளித்தாலும் தாங்கள் கொண்ட கொள்கைக்காக எதிரணியில் இருப்பவர்களுடன் போர் தந்திரத்தாலும், குஷ்டி மோதல்களாலும் சண்டையிட்டு தாங்கள் மட்டும் வெற்றி பெறுவதாகும் இதன் மூலம் சாதுக்கள் அசுர குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பாபர் மசூதியின் பிரச்சினையில் உண்மையாகிறது. அகரா எனப்படும் இவர்களை சாதுக்கள் என்று கூறுவதைவிட அசுர வர்க்கத்தினர் என்று கூறுவதுதான் சிறந்ததாகும் எனவே இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க அரங்கேற்றிய கூத்துக்களை இங்கு முன்வைக்கிறோம்!
அகரா பிரிவின் வரலாறு
இந்து சமயத்தில் அகரா என்ற பிரிவு கி.மு 2500ம் ஆண்டு வாக்கில் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. இவர்களின் வரலாறுபடி இந்த ஆதி சங்கராச்சாரியார் 7 அகாரா பிரிவினரை தோற்றுவித்தவராகிறார் இவைகளின் பெயர்களாவான!
1.      மஹாநிர்வானி
2.      நிரஞ்சனி
3.      ஜுனா
4.      அடல்
5.      அவஹன்
6.      அக்னி
7.      அனந்த் அகரா
இந்த 7 அகரா பிரிவினர் பிற்காலத்தில் பல்கிப் பெருகி 14 பிரிவினராக மாறின இவைகளில் உள்ள பாபர் மசூதியை இடிக்க துணை நின்று பெயர் சம்பாதித்த ஒரு பிரிவுதான் நிர்மோகி அகரா!
சில அகாரா யோகிகள் தங்கள் அமைப்பை ஆதி சங்கராச்சாரியார் தோற்றுவிக்கவில்லை என்றும் தங்கள் மத குருவான கோரக்நாத்என்ற முனிவர்தான் தோற்றுவித்தார் என்று கூறுகின்றனர்.
அகரா பிரிவுகளின் பலம் மற்றும் பலவீனம்
கைகளில் வாள் ஏந்தும் நிர்வாண அகராக்கள் (சாது அசுரர்கள்)
மஹாநிர்வாணி, நிரஞ்சனி, ஜுனா ஆகிய அகரா சாதுக்களின் பிரிவுகள் மிகவும் பலமானதாகும். எனவே மற்ற பிரிவுகள் இந்த பலமான பிரிவுகளுடன் சமரசமாயின அவைகளாவன
  • அடல் அகரா என்ற பலவீனமான பிரிவு மஹாநிர்வாணி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!
  • அனந்த அகரா என்ற பலவீனமான பிரிவு நிரஞ்சனி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது
  • அவஹன் என்ற பலவீனமான பிரிவு ஜுனா என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!
இந்த பலவீனமான பிரிவுகள் பலமான அகராவுடன் இணைந்தாலும் சிற்சில நேரங்களில் தங்களுடைய எண்ணங்கள், வெற்றி தோல்விகள், தங்கள் குருதேவ் ஆகிய விஷயங்களில் வேறுபாடு கண்டு பொறாமை மனப்பாண்மையினால் உயர்வுதாழ்வு கொள்ளும்
அகராக்களின் வழிபாட்டு முறைகள்
அகராக்கள் பல்வேறு பிரிவினராக இருப்பதுடன் தங்கள் இஷ்ட தெய்வங்களின் முறைப்படியும் சண்டையிட்டு பிரிந்துவிடுவார்கள்
கடவுள் வழிபாட்டு முறையில் வேறுபாடு
சிவ அகராக்கள்சிவனை வழிபடுபவர்கள்
கல்பவஸிஷ் அகராக்கள்பிரம்மாவை வழிபடுபவர்கள்
வைராகி அகராக்கள்விஷ்ணுவை வழிபடுபவர்கள்
கடவுளுக்கு தவம் இருப்பதில் வேறுபாடு
ஒரு அகரா பிரிவு 8 வகை தவங்களை மேற்கொள்ளும் அந்த 8 தவங்களுக்கும் 52 வகையான மர்ஹிஸ்கள் (MARHIS நடுவன்) உள்ளது. ஒவ்வொரு மர்ஹிசும் மஹந்த் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.  இந்த நிர்வாகத்திற்கு தலைமை வகிப்பவர் ஸ்ரீ பஞ்ச் (பஞ்ச் என்ற ஐந்து தலைவர்கள் – பஞ்சாயத்து தலைவர் போன்று). இந்த ஸ்ரீ பஞ்ச் என்ற தலைவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவா, சக்தி, கணேசா ஆகிய கடவுள்களை பின்பற்று பவர்களாவர். இந்த ஸ்ரீபஞ்ச் என்ற 5 தலைவர்களையும் கும்ப மேளா என்ற விழாவின் போது தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கும்ப மேளா என்பது என்ன?
கும்பா என்பது சமஸ்கிருத வார்த்தையாகும் இதற்கு PITCHER என்று ஆங்கிலத்தில் அழைப்பர் அதாவது கலசம் என்று கூறப்படும் கைப்பிடி இல்லாத மண் பானையாகும். அதாவது கும்ப ராசிக்காக காட்டப்படும் ஒரு வகை பானை. மேளா என்பது சந்திப்பு, கூட்டம் கூடுதல், சந்தை என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள்.
இந்த கும்ப மேளாவின் ஆரம்பத்தை பற்றி கி.பி. 602-664ன் இடைப்பட்ட காலத்தின்படி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட சீன துறவி (Huan Tsang or Xuanzang)யின் குறிப்பு படி ஹர்ஷவர்த்தனர் என்ற மன்னர்தான் இதை ஆரம்பித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய யோகி முனிபர்கள் இதை மறுக்கின்றனர்.
கும்ப மோளாவில் என்ற நடைபெறுகிறது
இங்குதான் அகரா பிரிவுகள் சங்கமிக்கிறார்கள். நிவாணமாக நடனமாடுகிறார்கள், நிர்வாணமாக வழிபடுகிறார்கள், ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக குஷ்டி மோதல்களில் ஈடுபட்டு தங்கள் திறமைகளை அகரா சாதுக்களின் தலைவர்கள் முன் காட்டுகிறார்கள். இறுதியாக நிர்வாணமாக அனைவரும் ஆற்றில் குளிக்கிறார்கள்.
இதோ இவர்கள்தான் நிர்மோஹி அகரா!
நீங்கள் மேலே கண்ட அகரா பிரிவுகளில் நிர்மோஹி அகராவும் ஒன்றாகும் இது பிற்காலத்தில் தோன்றிய 14 பிரிவுகளில் இந்த நிர்மோஹி அகரா என்ற பிரிவை அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்தது!
நிர்மோஹி அகராவின் நோக்கமும் உண்மை நிலையும்!
இந்த அமைப்பு வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி தோற்றுவிக்கப்பட்டது. இவர்களின் கடவுள் ஹனுமான் அதாவது ராமாயணம் என்ற இதிகாச கற்பனைக் கதையின் கதாநாயகனான ராமனுடை சேவகன் ஹனுமான்! இந்த அமைப்பின் தலைவர் மஹந்த் பாஸ்கர தாஸ் என்பவராவார்.  இந்த அமைப்பினுடைய பெயரான நிர்மோஹி அகார என்பதற்கு ஒரு பொருள் உள்ளது அதாவது யாருடனும் ஒன்றிப்போகாத குழு. (NIRMOHI AKHARA meansGROUP WITHOUT ATTACHMENT) இதன் தலையயை கோட்பாடு யாருடனும் ஒத்துப்போகாமல் வாழ்வதே!
நிர்மோஹி அகராவின் ஆரம்பகால சதியும் தோல்வியும்!
இந்த நிர்மோஹி அகரா அமைப்பு 1949ம் ஆண்டுதான் பாபர் மசூதியுடன் தொடர்புடையது என்று அனைவராலும் பேசப்படுகிறது ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும் இந்த அமைப்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலேயே இனக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு 1885ல் பாபர் மசூதியின் இடத்தை சொந்தம் கொண்டாடியது!
அடிமை இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் 1885ம் ஆண்டு ஃபைசாபாத் (FAIZABAD) ஒரு சூட் பைல் (நீதி மன்ற வழக்கு) ஒன்றை தாக்கல் செய்தது அந்த வழக்கில் இவர்கள் முன்வைத்த வாதம் இதோ ”அயோத்தி என்ற பகுதியில் ராமர் (ராம் சபுத்ரா) கோவில் இருந்ததாகும்  இது பாபர் மசூதிக்கு மிக அருகாமையில் இருந்ததாகும் கூறப்பட்டிருந்தாக அறியப்படுகிறது. ஆனால் அன்றைய ஃபைசாபாத் நீதிமன்ற நீதிபதிகள் இந்த பிரச்சினையை வளர்க்கவிடாமலும் பிரச்சினை நீடித்தால் இனக்கலவரம் ஏற்பட்டு சமுதாயம் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்றும் கருதி ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது! மேலும் கோவிலை கட்ட இந்த யோகி அமைப்பு முறையிட்ட பரிந்துரையின் மீதும் தடை விதிக்கப்பட்டது. இது நிர்மோஹி அகரா என்ற இந்த இந்துத்துவா அமைப்பின் மீது விழுந்த முதல் அடியாகும்!  இந்த பலமான இடியை தாங்கிக்கொள்ள இயலாத இந்த அமைப்பு 64 ஆண்டுகாலமாக பொங்கிக்கொண்டே இருந்தது! பின்னர் 1949ல் சுதந்திர இந்தியாவில் மீண்டும் தன் பழைய கதையை தொடர்ந்து வழக்கு தொடர்ந்தது! இந்த நேரத்தில் இவர்கள் முன்வைத்த வாதம் பாபர் மசூதி அந்த பகுதியில் இல்லை என்பதே!
இறுதியாக இந்த நிர்மோஹி அமைப்பு 1989ல் உத்திரப்பிரதேச அரசாங்கத்தின் மீதே லாசூட் (LAWSUIT) என்ற வழக்கை தொடர்ந்தது. அதன்படி இவர்கள் நீதிமன்றத்தை அணுகி பாபர் மசூதியின் இடத்தை தங்களுக்கு வழங்கி ராமரை வழிபட வழிவகை செய்வதேயாகும். இந்த வழக்கு உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பிறகு நடைபெற்றவை படங்களாக உங்கள் முன் இதோ

 http://www.nellaieruvadi.com/news/news.asp?NewsID=3086

21 நவ., 2010

நான் குதிருக்குள் இல்லை!


ஜனநாயகம், மதச்சார்பின்மை இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பெரும் தூண்களாகும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைகளின்படி செயல்பட்டுக் கொள்வது நமது ஜனநாயகம் வழங்கும் அடிப்படை உரிமையாகும்" - உலக அளவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்புடன் வைக்கும் சட்டத்தின் மிக முக்கிய நிபந்தனைகளான இவை இரண்டும் துரதிஷ்டவசத்தால் பெரும்பாலான சமயங்களில் வெறும் ஏட்டில் மட்டும் வைத்து அழகு பார்க்கும் வரிகளாக மாறிப்போகின்றன.

அனைவருக்கும் சமமான நீதி நடைமுறை உறுதிப் படுத்தப்படுவதே ஜனநாயகம் தழைப்பதற்கும் மக்கள் அமைதியாக வாழ்வதற்குமான அடிப்படை காரணிகளாகும். ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை நீதி என்பது பணம், பதவியுடையவர்களுக்கு ஒரு விதமாகவும் ஏழைகளுக்கு வேறு விதமாகவுமே உள்ளது. அதனாலேயே காஞ்சி காம கோடி, அத்வானி, மோடி, ஜெயலலிதா, ஹர்ஷத் மேத்தா போன்ற இன்னபிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், மோசடி போன்றவற்றில் ஊறிப்போனவர்கள் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி வலம்வருகின்றனர். அதேவேளை, சின்னஞ்சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சாதாரணமானவர்கள் மீது மட்டும் சட்டம் தனது முழுவலிமையைப் பிரயோகிக்கின்றது.

சமநீதி விஷயத்தில் வலியவன், எளியவன் என்ற பாரபட்சம் பார்க்கும் நீதி, முஸ்லிம்கள் என்று வரும் பொழுது அத்தகைய கருணை வாசலையும்கூட அடைத்து விடுகின்றது.
அநியாயம் செய்திருந்தாலும் வலியவனுக்குச் சாதகமாகவும் அநீதி இழைக்கப் பட்டிருந்தாலும் எளியவனுக்குப் பாதகமாகவும் வளைந்து கொடுக்கும் இத்தகையச் செயலைகளை "நீதி தேவன் மயக்கம்" என்ற பெயரில் அறிஞர் அண்ணா ஒரு நாடகம் எழுதினார். 1954ஆம் ஆண்டு மேடையில் அரங்கேறிய அவரது நாடகம் இப்போது(ம்) அரங்கேறிக் கொண்டிருப்பது நமது நீதிமன்றங்களில்!

இந்திய விமானப்படை ஊழியர் அன்ஸாரீ அஃப்தாப் அஹ்மது என்பவர் சீக்கிய ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு நடைமுறையிலிருக்கும் தாடி வளர்த்துக் கொள்ளும் மத உரிமையைத் தனக்கும் அளிக்க வேண்டும் எனக் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், இந்திய விமானப்படை வழிகாட்டு நெறிமுறைகள் 2003இன்படி "சீக்கியர்களுக்கு வழங்கும் உரிமையை 2002ஆம் ஆண்டுக்குப்பிறகு விமானப்படைக்குத் தேர்வு செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது" என்று கடந்த ஆண்டு பஞ்சாப்/ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றவர்க்கு வளைந்தும் முஸ்லிம் என்றால் நிமிர்ந்தும் நிற்கும் சட்டம் இந்திய விமானப்படைக்கு மட்டும் சொந்தமானதன்று.

மத்தியப்பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்திலுள்ள சிரஞ்ச் நகரில் இயங்கி வரும் 'நிர்மலா கான்வெண்ட்' என்ற பள்ளியில் தொடக்கம் முதல் பத்தாம் வகுப்புவரை முஹம்மது ஸலீம் என்ற முஸ்லிம் மாணவர் கல்வி பயின்று வந்தார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குத் தாடி வளர்ந்து விட்டது. "தாடியை மழிக்காமல் பள்ளிக்கு வருவதாக"க் கூறிப் பள்ளியின் நிர்வாகி ப்ரின்ஸிபால் தெரஸா மார்ட்டின், மாணவர் ஸலிமைப் பள்ளியிலிருந்து நீக்கினார். அதை எதிர்த்து, தன்னைத் "தாடி வளர்த்துக் கொள்ளப் பள்ளி அனுமதிக்க வேண்டும்" எனக் கோரி முதலில் பள்ளிக்கு முறைப்படி விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம் மறுதலித்துவிடவே, உயர்நீதி மன்றத்தில் மாணவர் ஸலீம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

"முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளிச் சட்ட - திட்டத்தினைத் தளர்த்தக் கோரி ஸலீம் சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் கடந்த 30.12.2008இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடாப் பிடியாக, "தாடி வளர்ப்பது என்னுடைய மத உரிமை. மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு (சட்டப் பிரிவு 25இன்படி) தன் மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக் கூடாது. எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் கோரி, உச்சநீதி மன்றத்துக்கு வழக்கைக் கொண்டு சென்றார்.

ஸலீம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி இரவீந்திரன் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாணவர் ஸலிமுடைய கோரிக்கையை, அவர் பயிலும் பள்ளியின் சட்ட-திட்டங்களை மட்டும் காரணம் காட்டி மறுதலித்திருந்தால் பிரச்சினை பெரிதாகி இருக்காது.

ஆனால், சட்டம் கற்றுத் தேர்ந்ததாகச் சொல்லப் படும் ஒரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு என்பவர், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்" என்ற காரணம் கூறி கடந்த திங்கட்கிழமை (30.3.2009) வழக்கைத் தள்ளுபடி செய்து, தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் வெறும் 30 ஆண்டுகால வரலாறுடைய தாலிபானுக்கும் என்ன சம்பந்தம்? நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கே வெளிச்சம்!

தாலிபான் என்ற பெயரே அறியப் படாத ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் முஸ்லிம் ஆண்கள் தாடி வளர்த்தும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தும் வருகின்றனர். தாடி இல்லாத ஆண் சீக்கியர் இல்லை என்னும் அளவுக்கு சீக்கிய ஆண்கள் தாடியோடுதான் இருப்பர். தாடி வளர்த்திருப்பவரெல்லாம் தாலிபான் அமைப்பின் உறுப்பினரா? நம் பிரதமரை நீதிபதி கட்ஜு ரொம்பத்தான் தாக்குகிறார்!

"தாலிபான்களை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது" என்று கூறியதோடு, "நாளைக்கு ஒரு (முஸ்லிம்) மாணவி, பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கலாம். நாம் அதை அனுமதிக்க முடியுமா?" என்று நீதிபதி கட்ஜு அறிவு(?)ப்பூர்வமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

"நாட்டின் மதசார்பற்ற நிலைபாட்டைப் பயன் படுத்திக் கொண்டு இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது" எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே நீதிபதி ஜோக்கடித்திருக்கிறார்.

"சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்துக் கொள்ளவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும்போது, என்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி நிர்வாகத்தின் தெளிவான இரட்டை நிலைபாடு" என ஸலீம் வாதித்தார்.

ஆனால் பயனில்லை. "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30ஆம் பிரிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸலீம் வேறு ஒரு பள்ளியைத் தேர்வு செய்து கொள்ளட்டும்" எனவும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

இந்நாட்டில் ஒரு சமுதாயத்திற்கு அனுமதிக்கப்படும் நீதி, அதே வடிவில் பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் எனில் மறுக்கப்படுகிறது. இது "இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் மத அடிப்படைகளைப் பின்பற்றுவதற்கான உரிமைகளுக்கு" முரணான நிலைபாடு எனில், வழக்கிற்குத் தொடர்பில்லாத வகையில் இஸ்லாமிய அடிப்படைகளைச் சம்பந்தமில்லாத தனிப்பட்ட குழுக்களோடு தொடர்பு படுத்தி இழிவுபடுத்துவது இந்திய நீதித்துறைக்கு அவமானத்தைப் பெற்றுத்தரும் செயலாகும். அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு அணுகவேண்டிய, நாட்டின் உன்னத பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பான அதிகாரியின் சட்டமீறலுமாகும்.

"தாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்; இந்தியாவில் தாலிபானிஸம் வளர்வதை அனுமதிக்கமுடியாது" என்று உண்மையைப் பொய்களுடன் கலந்து உண்மையைப் பொய்யாக்குவதையும் பொய்யை உண்மையாக்குவதையும் அதனை வைத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதையும் தங்களது பாணியாகக் கொண்டுள்ள ஹிந்துத்துவத்தின் ஒரு மோடி, அத்வானி வகையறாக்களின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் உதிர்ந்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அதுவே நாட்டின் உன்னத பீடத்தை அலங்கரிக்கும் ஒரு நீதிபதியின் வாயிலிருந்து வருவதென்றால்.....?

நீதிபதி கட்ஜுவின் அறியாமைக் கருத்துகளுக்கு எதிராகவும் நீதியின் இரட்டைமுக நிலைபாட்டிற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் 'தாலிபான்' பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே.

"நான் ஒரு மதசார்பற்றவன்" என்று நீதிபதி கட்ஜு கூறிய தன்னிலை விளக்கத்தில் ஓர் உண்மை பொதிந்திருக்கிறது.

20 நவ., 2010

யோகாவும் ஏமாற்று வித்தையும்


30 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மூர்மார்க்கெட் கலகலவென்று இருந்த சமயம். ஒரு நாள்அந்த வழியாக நான் சென்று கொண்டிருந்தேன். ஒருவர் அறுந்த பிளாஸ்டிக் செருப்பை ஒட்ட வைக்கும் இரசாயனப் பொடி என்று கூவி விற்றுக் கொண்டிருநதார். அப்பொழுது நான் அணிந்திருந்த பிளாஸ்டிக் செருப்பு அறுந்து இருந்தது. அவா¢டம் அதைக் கொடுத்துச் சரி செய்யச் சொன்னேன். அவரும் தன்கையில் இருந்த இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி அந்த இரசாயனப் பெடியில் (!) தோய்த்துச் செருப்பின் அறுந்த பாகத்தை இணைத்துப் பழுக்கக் காய்ச்சிய அதன்மேல் வைத்த உடன் அறுந்த பாகங்கள் ஒட்டிக் கொண்டன. செருப்பு நேரான மகிழ்ச்சியில் அந்த அதிசயப் பொடியை இரண்டு பொட்டலங்கள் வாங்கிக் கொண்டேன், 
 இன்னொருமுறை அதை உபயோகிக்க முனைந்த போது தான் உண்மை பு¡¢ந்தது. பிளாஸ்டிக் செருப்பின் அறுந்த பாகங்களை இணைப்பது இரும்புக் கம்பியில் உள்ள வெப்பமே தவிர அந்த அற்புதப் பொடிக்கு அங்கே எந்த வேலையும் இல்லை என்று. எனக்கு அந்த பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரன் மீது கோபம் வந்தது, 
 இவரக்ள் எல்லாம் சாதாரண ஏமாற்று வித்தைக்காரர்கள். கெளரவமான வேலையை அனைவருக்கும் தரவேண்டிய அரசு தன் கடமையைச் செய்யாத அயோக்கியத்தனத்தின் விளைவாக, வயிற்றைக் கழுவ வேண்டிய கட்டாயத்தினால் இப்படி ஏமாற்றுவித்தைக்காரர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். ஆனால் இப்பொழுது "யோகா" என்று சொல்லிக் கொண்டு புற்றீசல்களைப் போலப் பெரும் அளவிலானோர் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களில் யாருமே ஏழை மக்களின் வயிறறுப் பசியைப் பற்றிய கவலை இல்லாதவர்கள். இவர்களின் நோக்கமே மக்களை அறிவு மயக்கத்தில் ஆழ்த்தி அவர்கள் சமூக அவலங்களைப் பற்றிய அக்கறை கொள்வதில் இருந்து திசை திருப்புவது தான்.
இவர்கள் உண்மையில் செய்வது என்னவென்றால் உடற்பயிற்சியைக் கற்றுக் கொடுக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் உடல் நலமாக இருக்கும். இதில் மாய மந்திரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த யோகா ஏமாற்றுவித்தைக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் உடற்பயிற்சியின் போது உடல் இருக்க வேண்டிய நிலையை (கடவுளை) வணங்குவது போல இருக்கச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக இரு கைகளை உயர்த்திக் கொண்டு இருந்தால் சரி என்ற நிலையில் இவர்கள் கைகளை உயர்த்தி வணங்குவது போல் (கைகூப்பி) இருக்கச் செய்வார்கள்.
 பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரன் தேவையின்றித் தனது அற்புதப் பொடியில் இரும்புக் கம்பியைத் தோய்த்தது போல இவர்கள் தேவையின்றி கைகூப்பி வணங்கச் செய்கிறார்கள். இடையிடையே 'ஓம்' என்ற வார்த்தையை உச்சா¢க்கச் செய்கிறார்கள். இவர்களிடம் பயிற்சி பெறுகிறவர்களின் உடல் நலம் தேறுவது கண்டு ஏதோ ஆண்டவனின் சக்தி தான் தங்களைக் காக்கிறது என்று நினைக்க வைத்துவிடுகிறார்கள். 
 பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரரின் அற்புதப் பொடி இல்லாமலேயே அறுந்த செருப்பை ஒட்ட வைக்கமுடியும். அது போலவே யோகா ஏமாற்றுவித்தைக்காரர்களின் ஆன்மீகக் கலவை இல்லாமலேயே உடல் நலம் பெற முடியும். இரும்புக் கம்பியின் வெப்பம் அறுந்த செருப்பை நேர் செய்வது போல யோகாவில் உள்ள உண்மைப் பொருளான உடற்பயிற்சி உடலை நலமாக வைத்துக் கெள்ளும். 
 சரி! யோகா என்று சொல்பவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க ஈஷா 'யோகா' என்ற வகுப்பில் சேர்ந்தேன். முதலில் இங்கு கற்றுக் கொண்டதை வெளியில் சொல்லக் கூடாது என்று உறுதிமொழி கேட்டார்கள். அது ஏன் என்று வினா எழுப்பிய போது சரியான தெளிவான விடை கூற மறுத்துவிட்டார்கள். விவாதம் தொடர்ந்தபோது வகுப்பில் இருந்த பலர், என்னை விவாதம் செய்ய வேண்டாம் என்றும், அதனால் பலருடைய நேரம் வீணாவதாகவும் கூற நான் வகுப்பு முடிந்தபின் கையெழுத்திடுவதாகக் கூறினேன். 
 பின் வகுப்பு தெடங்கியது. ஆசிரியர் முதலில் தான் கூறுவதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதுவரை நாம் பெற்ற அனுபவ அறிவை அகற்றிவிட வேண்டும் என்றும் கூறினார். அதற்குக் காரணமும் கூறினார். ஒரு குவளையில ஏற்கனவே தேனீர் இருந்தால் அதற்கு மேல் ஊற்றப்படும் தேனீரைக் கொள்ளாது என்றும், ஆகவே முதலில் குவளையில் இருக்கும் தேனீரைக் கொட்டிவிட வேண்டும் என்றும், அது போல் ஏற்கனவே பெற்ற அனுபவ அறிவை நீக்கிவிட்டால் அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார். 
 உடனே நான் மறுத்தேன். தேனீர்க் குவளையின் கொள்ளளவு வரம்புக்கு உட்பட்டது. மனித மூளையின் கொள்ளளவு வரம்பில்லாதது. ஆகவே ஏற்கனவே இருக்கும் அனுபவ அறிவுடன் புதிதாகப் பெறுவதற்கு மனித மூளைக்குத் திறன் உண்டு. ஆகவே பழைய அறிவை மறைக்கத் தேவையில்லை என்று கூறினேன். மேலும் தேனீரைக் கொட்டிவிடுவது போல அனுபவ அறிவை வெளியேற்றுவது இயலாத ஒன்றாகும் என்பதையும் கூறினேன். என்னடைய விளக்கத்தால் ஆசிரியர் திணறினார் என்பது அவருடைய மழுப்பல்களில் இருந்து வெளிப்பட்டது. அவர் சொல்லும் பாடங்களை நான் ஏற்கனவே பெற்ற அனுபவ அறிவுடன் சோதித்துப் பார்த்துத்தான் ஏற்கவோ மறுக்கவோ முடியும் என்று சொன்னதை அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. 
 எங்கள் விவாதம் தொடர்ந்தது. வகுப்பில் சுமார் நூறு பேர்கள் இருந்தார்கள். எங்களுடைய விவாதம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆசிரியர் ஏதோ சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாக இருக்கும் வேளையில் நான் தடைக் கல்லாக இருப்பதாக நினைத்தார்கள். உடனே ஒரு ஒப்பந்தத்தை முன் வைத்தேன். இனி நான் எந்த வினாவையும் எழுப்புவதில்லை என்றும், அமைதியாக என்ன பாடம் நடக்கிறதோ அதைக் கவனித்து விட்டுச் செல்வதாகவும், அதே போல் ஆசிரியரும் என்னுடைய கருத்தைக் கேட்கக் கூடாது என்றும் கூறினேன். 
 ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. நூறு பேர் செல்லும் படகில், ஒருவருக்கு உடல் நலம் இல்லை என்றால் அவரைத் தூக்கி எறிய முடியாது என்றும் முதலில் அவரைக் கவனிப்பது தான் முறையான செயல் என்றும் கூறி, என்னுடைய அனுபவ அறிவை உபயோகிக்கக் கூடாது என்று ஒப்புக் கொள்ள வைக்க இயன்ற அளவு முயற்சி செய்தார். அவருடைய இக்கட்டான சூழலையும், வகுப்பில் இருந்தவர்களின் மனோநிலையையும் பார்த்த பின்னர் நான் வகுப்பிலிருந்து வெளியேறிவிட்டேன். 
 இந்த அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் யோகா வகுப்புகளில் உடற்பயிற்சி உண்டு. அதுதான் உண்மையில் மனிதர்களுக்குப் பயன்படுகிறது. கூடவே அவர்கள் செய்ய வைக்கும் தேவையற்ற அசைவுகள் (கை கூப்புவது போல) இது உடற்பயிற்சி என்பதை மறைப்பதற்குத் தான். மேலும் வகுப்பில் உடற்பயிற்சிக்கு 25% நேரம் ஒதுக்கப்படுகிறது. மதிமயக்கப் பிரச்சாரத்திற்கு அதாவது மூளைச் சலவைக்கு 75% நேரம் அளிக்கப்படுகிறது. பகுத்தறிவாளர்கள் அங்கு அமைதியாக அமர்ந்து இருப்பதைக் கூட அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 
 பிளாஸ்டிக் செருப்பு வித்தைக்காரன் மீது இருந்த கோபம் நீங்கிவிட்டது. 
- இராமியா ( ramearamiya@gmail.com)

சேலம் அருகே குடோனில் 160 மூட்டை வெடிபொருள் பறிமுதல்

8500 kg of ammonium nitrate seized - Tamilnadu News Headlines in Tamil

சேலம் அருகே குடோனில் 160 மூட்டை வெடிபொருள் பறிமுதல்


சேலம், நவ. 19-
சேலம் அருகே ஜவ்வரிசி பேக்டரி குடோனில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 160 மூட்டை வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சூப்பிரவைசர் கைது செய்யப்பட்டார்.
சேலத்தை அடுத்த ஏ.என்.மங்கலம் ஏரிக்கரையோரம் வவ்வால்தோப்பு என்ற இடத்தில் ஜவ்வரிசி ஆலை ஒன்றில் வெடிமருந்து தயாரிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சந்திரகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு 2 பெரிய அண்டாவில் அமோனியம் நைட்ரேட் என்ற உரத்துடன் ரசாயன பொருளை கலவை செய்து வெடிமருந்து தயாரிப்பதற்காக அதை பாகுபோல காய்ச்சிக் கொண்டிருந்தனர். அந்த பாகு, குடோனில் உள்ள தரைத்தளத்தில் குழாய் மூலமாக வடிந்து உறைந்தது. பின்னர் அவற்றை அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் மைசூர்பாகு போல அதை உடைத்து 50 கிலோ கொண்ட சாக்குப்பையில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
அதிகாரிகளை கண்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விற்பனைக்கு தயாராக இருந்த 160 மூட்டையில் இருந்த வெடிபொருட்களை கைப்பற்றினார்கள். இவற்றின் எடை 8 ஆயிரம் கிலோ ஆகும். வெடிமருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட சூப்பிரவைசர் கிருஷ்ணமூர்த்தி (வயது27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, உடைசல்பட்டியை சேர்ந்த சுருளிராஜன் என்பவர்தான் வெடிமருந்து தயாரிக்கும் தொழில் செய்வதாகவும், தனக்கு சுருளிராஜன் பெரியப்பா மகன் எனவும், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் குடோனில் தொழில் நடப்பதாகவும், இதுவரை 2 லாரிகளில் வெடிமருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சதித்திட்டத்திற்காக வெடிபொருள் பயன்படுத்தப்படுகிறதோ? என்ற எண்ணத்தில் உளவுத்துறை அதிகாரிகள், கியூ பிராஞ்ச் போலீசார் புலன் விசாரணை நடத்தினார்கள்

19 நவ., 2010

ரோமிலா தாப்பர், இர்பான் ஹபீப் உள்ளிட்ட 61 வரலாற்று அறிஞர்கள் அறிக்கை


அண்மையில் அயோத்தியா சிக்கல் தொடர்பாக வெளியாகியுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து, சஃப்தர் ஆஸ்மி அறக்கட்டளை சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றுப் பேராசிரியர்களும், சமூக அறிஞர்களும் அந்த அறிக்கையில் கையயாப்பமிட்டுள்ளனர். ரோமிலா தாப்பர், கே.என்.பணிக்கர், இர்பான் ஹபீப், கே.எம்.ஸ்ரீமாலி, பிரபாத் பட்நாயக் உள்ளிட்ட 61 பேர் கையயாப்பமிட்டுள்ள அவ்வறிக்கையின் முக்கியமான பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:
“வரலாற்றுப் போக்கில், சமயச் சார்பின்மை குறித்த விழுமியங்கள் கையாளப் பட்டிருப்பதால், 2010 செப்டம்பர் 30 அன்று, ராமஜென்மபூமி - பாபர் மசூதிச் சிக்கல் தொடர்பான, அலகாபாத் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு, மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லாவற்றைக்காட்டிலும் முதன்மையாக, இந்துக் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்னும் பார்வை, இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் அகழ்வாய்வுகள் வெளிப் படுத்தியுள்ள உண்மைகளுக்கு மாறாகவும், அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளா ததாகவும் உள்ளது. அகழாய்வில் பரவலாகக் கிடைத்துள்ள விலங்குகளின் எலும்புகளும், இஸ்லாமியர்களுக்குத் தொடர்பான ‘சுர்க்கி’ மற்றும் எலுமிச்சை, சிமெண்ட் கலவையும், அங்கு (மசூதிக்கு அடியில்) இந்துக் கோயில் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பை முற்றாக மறுக்கின்றன.
நம்பிக்கையின் அடிப்படையில் பழங்கால நிகழ்வுகளை (இராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தை) ஏற்றுத் தீர்ப்பு அளித்திருப்பது தவறு என்பதோடு மட்டுமின்றி, இதுபோன்ற ஒப்புதல்கள், இனிமேல் சொத்துப் பிரச்சினைகளுக்கும் பொருத்தி விவாதிக்கப்படும் என்பது மிகுந்த கவலை தருவதாக உள்ளது. வன்முறைக்கும், ஆள் பலத்திற்கும் சட்ட ஒப்புதல் வழங்கியுள்ளமை கடும் மறுப்புக்கு உரிய தீர்ப்பின் ஒரு பகுதியாகும். மாபெரும் வியப்பிற்கு உரியதாக, 1992 இல் மசூதி இடிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வது போல, மசூதியில் இடிக்கப்பட்ட முக்கியமான பகுதிகளை, அவ்விடத்தில் கோயில் கட்டவேண்டும் என்று உரத்துக் கூச்சலிட்டவர்களுக்கே மாற்றிக் கையளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய காரணங்களால், வெளிவந்துள்ள தீர்ப்பை, நம் நாட்டின் மதச்சார்பின்மைக் கட்டிடத்தின் மீதும், நீதித்துறையின் பெருமையின் மீதும் விழுந்துள்ள மற்றுமொரு பலத்த அடியாகவே பார்க்க முடிகிறது.
அடுத்ததாக, இவ்வழக்கில் என்னவெல்லாம் நேர்ந்தாலும், கெட்ட வாய்ப்பாக, நாடு இழந்தனவற்றை இனிச் சரி செய்ய முடியாது”.
தமிழில்: இனியன்
keetru.com

மோடி விசாரணை: நீதி வென்றுவிட்டதா?



2002ல் குஜராத்தில் நடத்தப்பட்ட கொலைவெறியாட்டம் அவ்வளவு எளிதில் யாருக்கும் மறந்து போயிருக்காது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத்தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் குஜராத்தில் முஸ்லிம்களை குறிவைத்து அவர்களின் உயிரும் உடைமையும் நாசப்படுத்தப்பட்டன. இதில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த சம்பவத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஷன் ஜாப்ரி உட்பட 69பேர் எரித்து கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து ஜாப்ரியின் மனைவி ஜாஹியாவும், மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டும் கலவரத்தை தூண்டியதாகவும், கலவரக்காரர்களுக்கு ஆதரவாக நின்றதாகவும் மோடி உட்பட 62பேர் மீது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து முன்னாள் சிபிஐ இயக்குனர் மாதவன் தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த விசாரணைக் குழுவினால் கடந்த மார்ச் 27ம் தேதி மோடி அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இதே போன்று இன்னொரு சம்பவம். 1992ல் பாபரி பள்ளி இடிப்பில் அத்வானியும் இன்னும் சில பாஜக தலைவர்களும் அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை மாறாக இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் என்று ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா நீதி மன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் வைத்து நீதி மன்றங்களின் மாட்சிமை குறித்தும், எல்லாவற்றையும் விட சட்டம் சக்திவாய்ந்தது என்றும் செய்திகள் வளம் வரத் தொடங்கியிருக்கின்றன.
முதலில் விசாரணைக்குழு மோடியை அழைத்து விசாரிக்கவிருக்கிறது என்று தகவல் வந்ததும், ஒரு மாநிலத்தின் முதல்வரை அழைத்து விசாரிக்க அந்த குழுவுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று வினா எழுப்பினார். அதை மீறி  மோடிக்கு சம்மன் அனுப்பியது விசாரணைக்குழு. 21ம் தேதியே விசாரணைக்கு அழைத்ததாகவும் மாலை வரை காத்திருந்தும் மோடி வரவில்லை என்று விசாரணைக்குழு பத்திரிக்கையாளர்களை கூட்டி அறிவித்தது. பின்னர்தான் 27ம் தேதி விசாரணைக்கு சம்மதித்தார் மோடி.
ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கரன் தாப்பர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தண்ணீர் குடித்து வெளியேறினார் மோடி. அதனால் கவனமாக இந்த முறை விசாரணை முடிந்து கிரிக்கெட் பார்க்கப் போனார். பத்திரிக்கையாளர்களை கூட்டி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், இதனால் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றார். ஆனால் கவனமாக மாநிலத்தின் முதல்வரான தன்னை விசாரணைக்கு அழைத்ததன் மூலம் நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்திருப்பீர்கள் என்று குஜராத் மக்களைப் பார்த்து கூறுகிறார். அதாவது தன்னை விசாரணைக்கு அழைத்தது குஜராத் மக்களை அவமதிக்கும் செயல் என்று மடைமாற்றுகிறார்.
இந்த விசாரணை நாடகங்களைத்தான் ஏதோ தண்டனை கொடுக்கப்பட்டு விட்டதைப்போல் சித்தரிக்கிறார்கள். சட்டத்தின் கைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது முதல்வராக இருந்தாலும் கூட என்கிறார்கள். கலவரத்தினால் பாதிக்க்கப்பட்ட மக்கள் இன்னமும் அகதிகள் முகாமில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், விசாரனைக்கைதிகள் என்ற பெயரில் நாடெங்கும் முஸ்லிம்கள் எந்த விசாரணையும் இன்றி தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்க சில மணி நேரம் விசாரித்ததையே தண்டனையாய் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த சட்டங்கள், நீதிமன்றங்கள் இவைகளின் மாட்சிமைதான் என்ன? இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட பல நூறு விசாரணைக் கமிஷன்கள் அனைத்திலும் பதவியில் இருக்கும், ௮ல்லது இல்லாத நீதிபதிகள்தான் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவைகளில் பிரச்சனைகளை உணர்ந்து சரியான தீர்ப்பை சொன்னவை எத்தனை? அவற்றிலும் செயல்படுத்தப்பட்டவை எத்தனை? அவைகளின் நோக்கம் மக்களை ஏமாற்றுவது தான் என்பது வெளிப்படை ஆனால் அது நீதி மன்றங்களுக்கு மட்டும் தெரியாது. இட ஒதுக்கீடு உட்படஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான எந்த விசயத்திலும் தன் மூக்கை நுழைத்து மனுநீதி பேசும் நீதி மன்றங்கள், மக்களை பாதிக்கும் தனியார்மயம் உள்ளிட்ட அனைத்திலும் ஆளும் வர்க்கங்களின் காவலனாகவே நின்றிருக்கிறது.
போலி மோதல் படுகொலைகள் முதல் சங்கரமட ஆபாசப் படுகொலைகள் வரை குற்றவாளிகளுக்கு சாமரம் வீசும் நீதிமன்றங்கள், குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யாமல் ஆண்டுக்கணக்காய் சிறைகளில் வதைபடும் மக்களை பாராமல் கண்களை மூடிக்கொள்கிறது.
குஜ்ஜார் இனமக்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடுவதைக்கண்டு நாட்டுக்கே அவமானம் என்று குமுறும் நீதிபதிகள், கயர்லாஞ்சி, மேலவளவு போல் தினம் தினம் நடைபெறும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான எந்த வன்கொடுமை குறித்தும் தங்கள் திருவாய் மலர்வதில்லை.
அகஒழுக்கம் குறித்து யோக்கியம் போதிக்கும் நீதிமன்றங்கள் நீதிபதிகளின் ஊழல் முறைகேடுகள் குறித்து பேசினால் நீதிமன்ற அவமதிப்பை நீட்டும்.
விவசாயிகள் தற்கொலை தொடங்கி நடைபாதை வியாபாரிகள் பிரச்சனை வரை அரசின் கொள்கை முடிவு என்று தலையிட மறுக்கும் நீதிமன்றம், ராமர்பாலம் போன்ற பிரச்சனைகளில் அரசின் கொள்கை முடிவை கண்டு கொள்ளாமல் தன் பார்ப்பன பாசத்தை வெளிப்படுத்தும்.
நீதி மன்றங்கள் மட்டுமல்ல சட்டங்களின் நிலையம் இதுதான். விலைவாசி உயர்வு நாட்டின் பெரும்பாலான மக்களை வதைத்துக்கொண்டிருக்க, பிரதமர் அமைச்சர்கள் அனைவரும் பதுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்று மக்களை ஏய்த்துக் கொண்டிருக்க, சட்டமோ 50000 டன் வரை உணவுதானியங்கள் சேமித்து வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது.
உற்பத்தி செய்யும் விவசாயிகள் விலையை நாங்களே தீர்மானித்துக்கொள்ள அனுமதியுங்கள் என்று அன்றிலிருந்து இன்றுவரை கோரிவருகிறார்கள், அவர்களை புறக்கணிக்கும் சட்டம், மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஐநூறு மடங்கு லாபம் வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது.
நமது சமூக, அரசியல், வாழ்வியல் பிரச்சனைகளில் தெளிவாக கோடு கிழித்து ஆளும் வர்க்கங்களுக்கு, அதிகார வர்க்கங்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டுள்ள சட்டமும் நீதி மன்றங்களும் அவ்வப்போது மக்களை ஏமாற்றுவதற்கும் கழிசடை அரசியல் வியாபாரிகளை தூக்கிப் பிடிப்பதற்கும் செய்யும் விசாரணை நாடகங்களை நாம் உணர்ந்து கொண்டு புறந்தள்ளவேண்டும். அதுவே நமக்கான பாதையை கண்டடைவதற்கு நமக்கு உதவும்.

அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?


 ‘காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை’ என்று பிரபல சிந்தனையாளரும்,  ஆற்றல் மிக்க எழுத்தாளருமான அருந்ததிராய் வெளியிட்ட கருத்தில்எந்தக் குற்றமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. அருந்ததிராய் மீது தேச துரோகக் குற்றச்சாட்டை தேச பக்தர்கள்’ வீசுகிறார்கள். வழக்குத் தொடருவதற்கு இந்திய ஆட்சி ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன. அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள்பார்ப்பன ஏடுகள் கூக்குரலிடுகின்றன.
 காஷ்மீர் மக்கள் மீது ராணுவ ஆட்சியைத் திணித்து,அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை துப்பாக்கி முனையில் பறித்து வைப்பதற்குப் பெயர்தான் தேச பக்தியா என்று கேட்க விரும்புகிறோம். தேச பக்தர்களுக்கு  சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.
 •              காஷ்மீர் இந்தியாவில் இணைக்கப்பட்டபோது அங்கேஹரிசிங் என்ற இந்து மன்னராட்சி நடந்தது;மன்னருக்கு இந்தியாவின் வைஸ்ராய்மவுண்ட்பேட்டன் எழுதிய கடிதத்தில் இந்தியாவுடனான இணைப்புகாஷ்மீர் மக்களின் வாக்கெடுப்பு  ஒப்புதல் பெற்ற பிறகே இறுதி செய்யப்படும் என்று உறுதி கூறினாரே; (27, அக். 1947)வாக்கெடுப்பு நடத்தப்பட்டதா?
 •              “காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்அய்.நா. போன்ற சர்வதேச அமைப்புகளின் மேற்பார்வையில்அம்மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும்என்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவிக்கு வந்த ஜவகர்லால் நேருகாஷ்மீரிகளுக்கு மட்டுமல்லஉலக நாடுகளுக்கே உறுதி அளித்தாரே (2 நவ. 1947); சொன்னதை செய்தாரா?
 •              காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதற்காகவே இந்தியாபாகிஸ்தானுக்காகஅய்.நா. இரண்டு ஆணையங்களையே உருவாக்கியதே (1948, ஜனவரி);உண்டாஇல்லையா?
 •              சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்திகாஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும் என்று 1948-லிருந்து1957 வரை அய்.நா.வின் பாதுகாப்புக் கவுன்சில் மீண்டும் மீண்டும் தீர்மானங்களை நிறைவேற்றியதேமறுக்க முடியுமா?
 •              காஷ்மீர் மக்களுக்காக வரையறுக்கப்பட்ட சுயாட்சி வழங்கப்பட்டு அதற்காகஅரசியல் சட்டத்தில் 370வது பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது உண்டாஇல்லையா? (1952,
நவம்பர் 17) அடுத்த ஓராண்டிலிருந்தே 1953 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டிருந்த ஓரளவு உரிமைகளும் கட்டாயப்படுத்தியும்அச்சுறுத்தியும்சூழ்ச்சிகளாலும் படிப் படியாகப் பறிக்கப்பட்டுமக்கள் கிளர்ச்சிகளை ஆயுத முனைகளில் ஒடுக்கிகாஷ்மீரை ஒரு போலீஸ் அரசாகமாற்றியது யார்இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சியா?இல்லையா?
 •              தான் கொடுத்த வாக்குறுதியையே மீறிகாஷ்மீரில் வாக்கெடுப்பு என்ற கேள்விக்கே இடமில்லை என்று நாடாளுமன்றத்திலேயே நேரு அறிவித்தாரே; (1956) அது துரோகமாஇல்லையா?
 •              1957 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீரில் நடத்தப்படும் தேர்தல்கள் எல்லாம் ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் கூத்துகளாகவே நடந்தன என்பதும்நேருவின் உறுதி மொழியை எடுத்துக்காட்டிய அரசியல் தலைவர்களும்,பணியாளர்களும் தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் உண்டா?இல்லையா?
 •              டில்லியின் எல்லை மீறிய அதிகார ஊடுருவலை எதிர்த்து, 1987 மார்ச் மாதத்தில் முஸ்லீம் அய்க்கிய முன்னணி’ ஒன்று உருவானது. தேர்தல் தில்லுமுல்லுகளையும்டெல்லியின் அத்து மீறலையும்,எதிர்த்துப் போராடிய அந்த முன்னணி தோழர்களை இந்திய போலீசும்உளவுத் துறையும் மூர்க்கத்தனமாக ஒடுக்கியது உண்மையாஇல்லையா?
•              இந்திய பார்ப்பன ஆட்சியின் தேர்தல் அரசியல் மோசடிகளை உணர்ந்து கொண்ட பிறகு தான்இளைஞர்கள்1989 ஆம் ஆண்டில் தங்களின் விடுதலைக்கான போராட்டத்தை தொடங்கினார்கள் என்பதை மறுக்க முடியுமா?
 •              1990-ல் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் விடுதலைக்கான மக்கள் போராட்டம் வெடித்தபோது,ஆயுதமில்லாத அப்பாவி இளைஞர்களையும் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய (செங்கோராதெங்டோரா பகுதிகளில்) இளைஞர்களையும் ராணுவம் வேட்டையாடி பிணமாக்கியது உண்டாஇல்லையா?
 •              1990 இல் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் காட்டுமிராண்டி’ சட்டத்தைக் கொண்டு வந்து (ஹசஅநன குடிசஉநள ளுயீநஉயைட ஞடிறநசள ஹஉவ) காஷ்மீரில் முழு அதிகாரம் கொண்ட ராணுவ ஆட்சியை நடத்தி வருவது உண்மையாஇல்லையாஅதற்குப் பிறகு சொந்த மண்ணிலேயே காஷ்மீரிகள் கைதிகளாக்கப்பட்டதோடு,சோப்போர்கவக்தால்பிஜ்பேகரா உள்ளிட்ட பல பகுதிகளில் மனித வேட்டை நடத்திரத்த ஆற்றை ராணுவம் ஓடச் செய்தது உண்டாஇல்லையா?
 •              உலகிலேயே மிகப் பெரும் ஜனநாயக நாடு இந்தியா என்று தம்பட்டமடித்துக் கொண்டுஉலகிலேயே மிகப் பெரும் ராணுவ மண்டலத்தை உருவாக்கி வைத்திருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது என்பதை மறுக்க முடியுமாகாஷ்மீரில்50 லட்சம் மக்களைக் கட்டுப்படுத்த 4 லட்சம் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்டவர்கள் 90000 பேர். ராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை9000-க்கும் அதிகம். 11 சதவீத காஷ்மீர் பெண்கள் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
 (ஆதாரம்: எல்லை கடந்த மருத்துவர்கள் குழுவின் ஆய்வு அறிக்கை)
 காஷ்மீர் மக்களின் சுயாட்சி உரிமையைப் பறித்ததை 1956ஆம் ஆண்டிலேயே பெரியார் பார்ப்பனர்களின் காலித்தனம்என்று கண்டித்தார்.
 ஒரு தேசிய இன மக்களின் உரிமைகளை ராணுவ முனையிலேயே பறித்து வைத்துக் கொண்டு கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுநம்பிய மக்களுக்கு துரோகம் இழைப்பதுதான் தேச பக்தியாஇந்த துரோகத்தை சுட்டிக்காட்டிதுணிவுடன் உண்மையை உரக்கக் கூறும் அருந்ததிராய்கள் தேச விரோதிகளாபதில் சொல்லட்டும்!
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி