படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

26 நவ., 2011

விலைவாசி உயர்வு மக்களின் பரிதவிப்பு

பேருந்து கட்டணங்கள், பால் விலை உயர்வு விரைவில் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்த முடிவு-ஜெயலலிதா அண்ணா நூலகத்தை மட்டுமல்லாது பேருந்து கட்டணத்தையும் பால் கட்டணத்தையும் மாற்றி அமைத்த முதல்வரின் திறமை நம்மை புல்லரிக்க வைக்கிறது மின்சாரம்,பால்,போக்குவரத்து போன்றவற்றிற்கு ஏற்றிய கட்டண உயர்வை ஏழை,பணமுள்ளவன் எல்லோருமே இந்த அரசை,முதல்வரை மன்னிக்க மாட்டார்கள்.சாபம் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.அநியாயமாக இந்த மக்களின் வைத்தெரிச்சல் சும்மா விடாது.இருபது ரூபாய்க்கு அரிசி வாங்கி மக்களளுக்கு நூறு சதவிகித நட்டத்தில் இலவசமாக கொடுக்க படுகிறது அது தரம் சரியில்லைஎன்று வாங்கி ஆடு, மாடு, கோழிகளுக்கு பல பேர் உணவாக போடுகிறார்கள்.மக்கள் பணம் ஆடு மாடுகளுக்கு தீவனமாகி விரையமாவதற்கு பதிலாக, பால் விலையை கொஞ்சம் குறைவாக கொடுத்தால் பசியால் அழும் பட்சிளம் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பார்களே குழைந்தைகளின் அழுகுரல் இந்த அம்மாவுக்கு கேட்குமா ? இதுதான் "தொலை நோக்கு " இல்லாத "திரை நோக்கு " பார்வை கொண்ட ஒரு முன்னால் நடிகையின் ஆட்சி. இலவச அடுப்பு , தங்கம், மிக்சி போன்றவற்றை உழைக்கும் மக்கள் பணத்தில் இருந்து அவர்கள் அனுமதி பெறாமல் செலவு செய்யும் இந்த நடிகை , அதை சரி கட்ட பொருள்கள் மற்றும் சேவைகள் கட்டணத்தை உயர்த்தி மக்களை மேலும் அழுத்தத்திற்கு உட்படுத்துகிறார். "பொருளாதாரம் " "தொலை நோக்கு" போன்றவற்றை சினிமா உலகில் இருந்து வந்த முதிர்ச்சி அடையாத நடிகையிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. உழைக்கும் வர்கத்தை சுரண்டி ஏழை மக்களை பிசைகாரர்கள் ஆக்கி , தன் ஊழல் ஆட்சியை தொடருவதுதான் இந்த திறமை , பண்பு, ஒழுக்கம் சிறிதும் இல்லாத அரசியல்வாதிகள் நோக்கு. "ஒரு நடிகை ஆட்சி செய்கிறார்" என்ற படத்தில் தமிழக மக்கள் அனைவரும் நடித்து கொண்டு இருக்கிறார்கள். படம் முடியும் தருவாயில் பெரும்பாலான மக்கள் பிச்சைகாரர்கள் ஆகி இருப்பார்கள்.கறிக்கடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள்? ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள்! அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் எதுவும் மாறவில்லை. சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு! அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு இன்னுமந்த சங்கிலி அறுக்கவோ சாக்கடை சீர்செய்யவோ இயலவேயில்லை. இன்னும் ஒரு தேர்தல், இன்னொரு ஆட்சி இன்னொரு நாயகன் வருவானென்று நம்பி நம்பியே மரணத்தை முட்டிவிட்ட வரலாறுகளே எங்களிடம் மிச்சம்! நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிபோல் பட்டென விழுந்துவிட்டாலும் பரவாயில்லை அரிசிக்கும் பருப்புக்கும் அறுபட்ட மின்சாரத்திற்குமிடையே வெற்று வயிறு பற்றி எரிவதற்கான காரணம்இத் தேசத்தின் அரசியலும் / அரசியல்வாதிகளின் சுயநலமுமன்றி வேறென்ன இருக்கமுடியும்?சரியாக சிந்திக்காமல் வோட்டு போட்டதன் பலன் இது. மக்கள் வெறுப்பைத்தான் இது கொடுக்கும்.

இப்படிக்கு:
நானும் ஒரு தமிழன்



http://nasarpulavar.blogspot.com

24 நவ., 2011

பெண்களால் எதையும் சாதிக்க முடியும்!

[ ஆணுக்குள்ள அத்தனை திறமைகளும் ஒரு பெண்ணிடம் இருக்கின்றன. அதற்கு மேலும் இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டு மதிப்புக் கொடுத்து நம் பெண்களை வளர்க்கத் தவறிவிட்டோம். பெண்களுக்கு ஏன் பொருளாதார சுதந்திரம் வேண்டும்? இந்த உலகத்தைப் பார்த்தோமானால் ஒருவன் படித்தவனா; படிக்காதவனா என்பது முக்கியமல்ல! பணமிருந்தால் படிக்காதவன் கூட மதிக்கப்படுகின்றான். மரியாதை செய்யப்படுகிறான்.
மனிதன் தன் வாழ்வில் மகிழ்வுடன் மனநிறைவுடன் இருக்க விரும்புகிறான். அதுதான் வாழ்வு என்று கருதுகிறான். ஒரு ஆணைப் பார்த்து, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்கிறோம். அவர் "சும்மாதான் இருக்கிறேன்" என்றால் எவ்வளவு கேவலமாக அவரை மதிப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். வேலை, சம்பாத்தியம் எல்லாம் ஆண்மையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
மாறாக, ஒரு பெண்ணை யாரும் 'என்ன செய்கிறீர்கள்?' என்று நம் ஊரில் கேட்பது இல்லை. காரணம் பெண்ணுக்குக் குடும்பம், குழந்தைகள், கணவன், வீடு என்று இருக்கின்றன. அதுவே பெரிய வேலைதான். அதுவே பெரிய மனநிறைவைத் தருகிறது.]
ஒரு முயற்சி வெற்றி பெறும்போது நமக்கு என்ன கிடைக்கிறது?
நாம் விரும்பியதை அடைகிறோம்.
நம் சாதனை - நம்மால் முடியும் என்று நிரூபிக்கிறது.
நமக்கு நம் மீதே ஒரு பெருமை ஏற்படுகிறது.
நமக்கு மனநிறைவைத் தருகிறது.
மேலே கூறிய நான்கு விளைவுகளையும் பார்த்தோமானால் கடைசியில் கூறப்பட்ட மூன்று விளைவுகளும் நம் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகள் என்பது புரியவரும்.
நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன. மேலும் சாதனை செய்யத் தூண்டுகின்றன.
இப்படிப்பட்ட எண்ணங்கள் ஆணின் மனதில் அதிகம் எழுகின்றனவா அல்லது பெண்ணின் மனதில் அதிகம் எழுகின்றனவா என்று கேட்டால், அந்த வாய்ப்பு, குறிப்பாக கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை.
சாதனை புரியும் வாய்ப்புகள் பொதுவாக பெண்களுக்குக் குறைவு. அதிலும் கிராமப் பெண்களுக்கு இன்னும் குறைவு. காரணம் கல்வியறிவின்மை மற்றும் நமது சமூகப் பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், மரபுகள்.
வெற்றிக்கு முதல்படி: அறிவு - படிப்பு
ஒரு ஆணுக்குக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் ஒரு பெண்ணுக்குக் கொடுப்பதில்லை.
"ஒரு பெண் எதற்குப் படிக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போகிறவள்தானே?" என்று ஒரு பெண்ணைத் திருமணத்திற்காகவே வளர்க்கிறோம்.
ஒரு ஆண் திருமணம் ஆகாமல் இருக்கலாம். ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருந்தால் 'கெட்ட பெயர்'. இப்படி
ஒரு மரபு.
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தைத் தடை செய்வது படிப்பின்மைதான். படிப்பு இருந்தால்தான் ஊர் உலகம் தெரியும்; படிப்பு இருந்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும். நல்ல வேலைக்குப் போனால்தான் நிறைய சம்பாதிக்க முடியும்; தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.
வெற்றி என்பது: தன் காலில் நிற்கும் பெருமை
தன் காலில் நிற்கும் பெருமை இருக்கிறதே. அதை நம் நாட்டில் பெண்களுக்கு இல்லாமல் செய்துவிட்டோம். பெண்களை "சார்ந்து நிற்க வேண்டிய ஒரு சமுதாயமாக" உருவாக்கிவிட்டோம்.
ஒரு பெண்ணோ, ஆணோ, தன் காலில் நிற்கும்போது - தன்னால் சம்பாதித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரும்போது, அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அவர்கள் யாரையும் 'சட்டை' செய்யவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு சமூக மதிப்பு, சமூகத்தில் ஒரு பெருமை கிடைக்கிறது. வாத்தியாரம்மா, டாக்டரம்மா, வக்கீலம்மா என்று ஊரும் உலகமும் உங்களைப் பெருமையுடன் அழைப்பதைப் பாருங்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கும் வீட்டிலே இருந்துகொண்டு வேலைக்குப் போகாத பெண்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதை வெவ்வேறானது.
சம்பாதிக்கிற மருமகளை மாமியார் அதிகம் அதட்டிக் கேட்க முடிவதில்லை; அதிகாரம் செய்வதில்லை. மாறாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றன.
"பொட்டைக் கழுதை" என்று பெண்களை இழிவுபடுத்துவதும், "பொம்பளை மாதிரி பேசறீயே!" என்று பெண்களை உதாரணம் காட்டுவதும் சமுதாயத்தில் பெண்களைக் கேவலப்படுத்துகிறது.
"சாண் பிள்ளையானாலும் அவன் ஆண்பிள்ளை!" என்று ஆண்பிள்ளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அவனது சகோதரியின் மண்டையில் அடிக்கிறது. "உன்னால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனெனில் நீ ஒரு பெண்!" என்று சொல்லாமல் சொல்கிறது, நம் சமுதாயம்.
முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும். அதற்கு முதலில் பெண்கள் படிக்க வேண்டும்.
வெற்றிக்குத் தேவை: பொருளாதார சுதந்திரம்
பொருளாதார சுதந்திரம் - அதாவது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, ஒரு பெண் வாழ்வதற்குத் தேவையான வருமானம்தான் அவளுக்கு உறுதுணையாக என்றும் நிற்கும்.
ஆணுக்குள்ள அத்தனை திறமைகளும் ஒரு பெண்ணிடம் இருக்கின்றன. அதற்கு மேலும் இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டு மதிப்புக் கொடுத்து நம் பெண்களை வளர்க்கத் தவறிவிட்டோம். பெண்களுக்கு ஏன் பொருளாதார சுதந்திரம் வேண்டும்? இந்த உலகத்தைப் பார்த்தோமானால் ஒருவன் படித்தவனா; படிக்காதவனா என்பது முக்கியமல்ல! பணமிருந்தால் படிக்காதவன் கூட மதிக்கப்படுகின்றான். மரியாதை செய்யப்படுகிறான்.
ஒருவன் பதவியில் இருக்கிறானா? அல்லது பதவி ஏதும் இல்லாமல் இருக்கிறானா? என்பது முக்கியமல்ல. பதவி இல்லாமல் இருந்தாலும் பணம் இருந்தால் பதவியில் உள்ளவர்களை எல்லாம் அடிபணிய வைக்கலாம். எனவே பணம்தான் முக்கியம்.
ஒரு நபர் ஆணா பெண்ணா என்பது முக்கியமல்ல. சொத்துக்கு வாரிசு ஒரு பெண்தான் என்னும்போது உலகமே அந்தப் பெண்ணுக்கு அடிபணிவதைப்
பார்க்கலாம்.
பணம் என்பது நமக்குப் பாதுகாப்பைத் தருகிறது; பெருமை தருகிறது; செல்வாக்குத் தருகிறது; வலிமை தருகிறது. அதனால்தான் வள்ளுவர், "மகளே! பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் உனக்கு வாழ்வே இல்லை" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
35 வயதுக்குமேல்: வெற்றி உண்டு
பணம், சாதனை, வெற்றி என்பதெல்லாம் எதற்காக? அதன் பலன் என்ன? என்ற கேள்வி வருகிறது.
மனிதன் தன் வாழ்வில் மகிழ்வுடன் மனநிறைவுடன் இருக்க விரும்புகிறான். அதுதான் வாழ்வு என்று கருதுகிறான். ஒரு ஆணைப் பார்த்து, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்கிறோம். அவர் "சும்மாதான் இருக்கிறேன்" என்றால் எவ்வளவு கேவலமாக அவரை மதிப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். வேலை, சம்பாத்தியம் எல்லாம் ஆண்மையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
மாறாக, ஒரு பெண்ணை யாரும் 'என்ன செய்கிறீர்கள்?' என்று நம் ஊரில் கேட்பது இல்லை. காரணம் பெண்ணுக்குக் குடும்பம், குழந்தைகள், கணவன், வீடு என்று இருக்கின்றன. அதுவே பெரிய வேலைதான். அதுவே பெரிய மனநிறைவைத் தருகிறது.
ஆனால், ஒரு 30-35 வயது பெண்மணியின் நிலை என்ன? அந்த வயதுக்கு மேலும் ஒரு 30 ஆண்டுகள் வாழக்கூடிய - வாழவேண்டிய பெண்ணின் நிலை என்ன?
கணவன் வேலைக்குப் போகிறான். குழந்தைகள் பெரியவர்களாகி படிக்கப் போகிறார்கள். ஒரு பெண்மணி தன்னிடம் எவ்வளவோ திறமை இருந்தும் அவற்றிற்கெல்லாம் எந்த வாய்ப்புமில்லாத நிலையில் வீட்டில் பொழுதைக் கழிக்கிறார்.
இத்தனை நாள் நம் சமுதாயத்தில் தொழில், வேலை என்பது ஆணுக்கும், குடும்பம், குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்குமாக என்ற ஒரு நடைமுறை இருந்து வந்தது.
இன்று உலகம் மாறி வருகிறது. பெண்கள் படிக்கிறார்கள். அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள்; தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து சமுதாயத்திற்குப் பயன்படும் பணிகளைச் செய்கிறார்கள். எனவே, மாறிவரும் புதிய உலகிற்கு ஏற்பக் கிராமத்துப் பெண்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
சம்பாத்தியம், குடும்பம் என்ற இரண்டிலும் பங்கு பெறும் போதுதான் தன் காலில் நிற்கும் குணமும், பொருளாதார சுதந்திரமும், தன்னைப் பற்றிய நம்பிக்கையும், சார்ந்து நிற்காத குணங்களும் வளரும். இது பெண்களுக்கு நாளைய உலகிற்கு அவசியமான தேவைகள்.
வருமானம், குடும்பம் என்பவற்றில் ஆண்-பெண்ணின் பங்கு பாதிப் பாதி என்ற விகிதத்தில் இருக்க வேண்டியதில்லை. அது அவர்கள் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். அதேபோல, வளரும் குழந்தைகள் வீட்டிலிருக்கும்போது வருமானத்திற்காக தொழிலிலோ, வேலையிலோ இறங்க வேண்டியதில்லை. அந்தக் குடும்பக் கடமை முடியும்போது, அடுத்த கடமைக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பெண்தான் வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்க முடியும்.
பெண் குணம்
பெண்களைப் பற்றி ஆராய்ந்தவர்கள் ஆண்களைவிடப் பெண்கள் நம்பற்குரியவர்கள், பிறரை மன்னிப்பவர்கள், உறவில் நயம் தெரிந்து அன்பு காட்டுபவர்கள், கடின உழைப்பாளிகள் என்று எழுதுகிறார்கள்.
ஒரு ஆளை மதிக்கும் அளவுகோல் இன்று எல்லா நாடுகளிலும் பணம்தான். ஆனால் ஜப்பானியர் பணத்தைவிடக் குணத்தை அதிகமாக மதிக்கிறார்கள். அடக்கம், பணிவு, எளிமை, சமுதாயத்துடன் சேர்ந்து இணைந்து இயங்குதல்; பிறருடன் இனிமையாகப் பழகுதல் என்ற பெண் குணங்களை ஜப்பானியர் போற்றுகிறார்கள். எந்த சமுதாயத்திற்கும் இந்த இரண்டு வகைக் குணங்களும் தேவை.
பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெண்கள் சமுதாயம், குறிப்பாக நம்முடைய கிராமப் பெண்கள் - அடுத்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு இன்று அவசியமான ஒன்று: கல்வி. இரண்டாவது: உலக ஞானம். மூன்றாவது: தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை.
- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (வெற்றிக்கு முதல்படி-நூலிலிருந்து)

பாகப் பிரிவினையா? பாவப் பிரிவினையா?

வரதட்சணை வாங்குவதால் ஏற்படும் தீமைகளில் மிக மோசமான தீமை, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்களுக்குப் போய் சேர விடாமல் தடுப்பதாகும்.
நாங்கள் எங்கே தடுக்கின்றோம் என்று வரதட்சணை வாங்குபவர்கள் கேட்கலாம். அதற்கான விளக்கம் இதோ!
பொதுவாக சொத்துக்கள் பங்கு வைக்கப்படுவது, சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு தான்! ஆனால் வரதட்சணைக் கொடுமை இங்கும் அநியாயமாகப் பாய்கின்றது.
மாப்பிள்ளைகள், பெண்ணைப் பெற்ற தகப்பனிடம் நகை, தொகை, நஞ்சை, புஞ்சை என்று கோருகின்றனர். தகப்பனார் தனது மகளுக்காக தான் உயிருடன் இருக்கும் காலத்தில் மேற்கண்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்து திருமணம் முடித்து வைக்கின்றார். தகப்பனார் இறந்ததும், அவரது சொத்துக்கள் பாகப்பிரிவினை சட்டப்படி அந்தப் பெண்ணுக்கும் சொத்துக்களின் உரிய பங்கு போய் சேர வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு சேர்கின்றதா என்றால் இல்லை!
பெண்ணின் சகோதரர்கள் அவளை அழைத்து, "உன்னைக் கட்டிக் கொடுக்கும் போது இவ்வளவு தொகை பணமாகவும், பொருளாகவும் தந்திருக்கின்றார். அதன் மதிப்பு இவ்வளவு ரூபாய் ஆகின்றது.
எனவே இப்போது சொத்தில் உனக்குரிய பங்கை எங்களுக்காக விட்டுக் கொடு" என்று அன்பாகவோ, அதட்டலாகவோ பேசி அப்பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தை அநியாயமாக அபகரித்து விடுகின்றார்கள்.
ஒரு சில ஊர்களில் பெண்கள் சொத்தில் பங்கு கேட்பதே பாவம் என்று பெண்களே நினைக்கின்றார்கள்.
இந்தக் கொடுமை தமிழக முஸ்லிம்களிடத்தில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தகப்பன் இறந்த பிறகு பங்கு வைக்கப்பட வேண்டிய சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் போது வழங்கிய அன்பளிப்பை எப்படிக் கழிக்க முடியும்? இதைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணின் சொத்துரிமையை எப்படி மறுக்க முடியும்? பாகப்பிரிவினையைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் சொல்லி விட்டுக் கூறுவதைக் கவனியுங்கள்!
இவை அல்லாஹ்வின் வரம்புகள்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:13,14)
அல்லாஹ்வின் இந்த வரம்புகளை மீறினால் இப்படி மீறுபவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றான்.
வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடம் சொல்லும் போது, மற்ற மற்ற மக்களை விட்டு விடுவோம். ஏகத்துவவாதிகளே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஏகத்துவவாதிகள் எல்லோரையும் இப்படிச் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சொந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தைப் புறக்கணித்து பட்டினி கிடப்பவர்களும் இருக்கின்றார்கள்.
இன்னும் சொல்லப் போனால் இந்தத் தீமைகளையெல்லாம் கருத்தில் கொண்டு வரதட்சணை மட்டுமல்ல, பெண் வீட்டில் தாங்களே விரும்பித் தரும் அன்பளிப்பைக் கூட வாங்க மாட்டேன்; பொட்டு நகை கூட போடாமல் வந்தால் தான் திருமணம் முடிப்பேன் என்று சபதம் செய்த ஏகத்துவவாதிகளும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.
ஆனால் அதே சமயம், இதையெல்லாம் பெரிய தீமையாக நினைக்காமல் வரதட்சணை வாங்கப் படும் திருமணங்களில் போய் கலந்து கொண்டு, அதை நியாயப்படுத்துபவர்களும் ஏகத்துவவாதிகள் என்ற பெயரில் இருக்கத் தான் செய்கின்றார்கள்.
வரதட்சணை வாங்குவது பெண்களின் சொத்துக்களைப் பறிக்கும் அளவுக்குக் கொண்டு செல்கின்றது. சொத்துக்களைப் பறிப்பது அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதாகும். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவது நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்கின்றது. இப்படி நிரந்தர நரகத்தைப் பெற்றுத் தரும் இந்த வரதட்சணையை வாங்கலாமா? அவ்வாறு வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களில் போய் கலந்து கொள்ளலாமா? முடிவெடுங்கள்!
இது போன்ற திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரதட்சணை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணியுங்கள்!
source: tntj.net

பெண்ணைக் கொண்டே பெண்ணை அழிக்கும் வித்தை!


[ இந்த சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனின் அன்புக்கும் பாசத்திற்கும் முதன்மையான ஆன்மாவாக, தாயாக ஒரு பெண் வேண்டும். காதலும் காமமும் பகிர்ந்து இனிமையான வாழ்க்கைக்கு மனைவியாக ஒரு பெண் வேண்டும். இரண்டாம் பாதி வாழ்க்கையின் காரணமாகவும் மகனை விடவும் அதிக பாசம் பொழியவும் மகளாக ஒரு பெண் வேண்டும். ஆனால் அந்த பெண் தனக்கு சரிநிகராக மட்டும்இருந்துவிடக்கூடாது என்பதில் தான் என்ன நியாயம் இருக்க முடியும்?
பெண்ணை கொண்டே பெண்ணை அழிக்கும் வித்தை. இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த மனித சமுதாயத்தின் பெண்ணினத்தின் மீதான புதிய சாதனை.
இன்றும் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சம்பள கவரை பிரிக்காமலே கணவனிடம் கொடுக்கும் மனைவிமார்கள். சென்ற தலைமுறையில் வாழ்ந்த என் உறவினர் ஒருவருக்கு அவரது சம்பளம் எவ்வளவு என்றே தெரியாது. அப்படியே கணவர் வாங்கிக்கொள்வார். இன்றும் தனது ஆசிரிய மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்த, வீட்டில் சும்மாவே முடங்கிகொடக்கும் கணவர் எங்கள் அண்டை வீட்டிலே உண்டு. இதை பெண்ணுரிமையென எப்படி சொல்ல இயலும்?
அடங்கிகிடப்பதும் முடங்கிகிடப்பதுவுமா கலாச்சாரம்? சுய ஒழுக்கத்துடனான யாவரும் தொடுவானம் சென்றுவர உரிமையுண்டு. புதுமைப்பெண்களாய் வீறுகொண்டு நடங்கள். இயற்கைகூட உன் திறமை அறிந்துதான் சமூக வளர்ச்சிக்கான பெரும் பொறுப்பான தாய்மையை பெண்களுக்கு கொடுத்துள்ளது.]
பெண்ணைக் கொண்டே பெண்ணை அழிக்கும் வித்தை!
இன்றுவரைக்கும் இந்த சமுதாயம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கற்பனை உலகத்தில் பெண்ணை வெகு உயரத்தில் தூக்கி வைத்துக்கொண்டாடி வந்திருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில், யதார்த்ததில் பெண்களை சமமாய் பாவிக்க முன்வரவில்லை. விண்ணை பெண்ணென்கிறார்கள். மண்ணையும் பெண்ணென்கிறார்கள். நதியையும், மதியையும் பெண்ணென்கிறார்கள். ஆனால் தன்னுடனே குடித்தனம் நடத்தும் பெண்ணை மட்டும் சகமனுஷியாக பார்க்கத்தெரிவதில்லை.
இன்றும் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றான கற்பிலக்கணத்தை அதிகம் காப்பாற்றி வருபவர்கள் பெண்கள் என்றால் யாரும் மறுப்பதுண்டோ?
இன்றும் ஆண் வர்க்கத்திலிருந்து பெரியார் போன்ற சிலர் மனம் மாறியிருக்க வில்லையென்றால், பெண்படும் துயரங்கள் குறித்து துடித்திருக்கவில்லையென்றால் இன்றும் உடன்கட்டைமுறை மாறியிருக்காது. நடுத்தெருவில் பெண்ணின் மானம் வெளிச்சமாக சூறையாடுப்படுவதைக் கண்டு முத்துலட்சுமி அம்மையார் வெகுண்டெழுந்திருக்காவிட்டால் இன்றைக்கும் தேவதாசிமுறை அழிந்திருக்காது.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்றுதான் இன்றும் பாடிக்கொண்டிருந்திருக்கும் வார்க்கத்தின் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் இன்றும் நிறைந்திருக்கும். பழக்காலத்திலிருந்தே தொடர்ந்துவந்த பெண் சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளும் குற்றங்களும் சில புரட்சிக்குரல்களால் களையப்பட்டாலும் காலத்திற்கு ஏற்றபடியான புதிதுபுதிதான அநீதிகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. தேவதாசி முறையும், உடன்கட்டை முறையும் தீர்ந்ததென பெருமூச்சு விட்ட மறுபொழுதே வரதட்சணைக் கொடுமை முதலாக பெண் சிசுக்கொலை மற்றும் ஈவ்டீசிங் எனப்படும் பெண்கள் மீதான கேலிப்பிரச்சினை ஈறாக எத்தனை புதிய பிரச்சினைகள்.
பெண்ணை கொண்டே பெண்ணை அழிக்கும் வித்தை. இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த மனித சமுதாயத்தின் பெண்ணினத்தின் மீதான புதிய சாதனை. நாகரிக வளர்ச்சியில் இந்த கொடுமைகள் இன்று கொஞ்சம் மறைவது போல் தோன்றினாலும் காலத்திற்கு ஏற்றபடி பெண்ணினத்தின் மீதான புதிய பிரச்சினைகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்பொழுதுமே இந்தெ பெண்குலத்தின் மீதான அடக்குமுறைகளும் அநீதிகளும் வேரறுக்கப்படுவதில்லை. காலத்திற்கேற்ப புதியதாய் அவதாரம் எடுக்கின்றன.
பொதுவாகவே இந்த சமூகம் 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளும். எனக்கென்னவோ இந்த வாக்கியம் கேட்கும் பொழுதெல்லாம் பெண்ணின் வெற்றியை ஆண்கள் தட்டிப்பறித்து பெருமைப்பட்டுக்கொள்வதாக தோன்றும். அதென்ன வெற்றிக்கு பின்னால்?, அதாவது, வெற்றி ஆணுக்குத்தான் வேண்டும். ஆனால் அதற்கு சொந்தக்காரி அந்த ஆணுக்குப் பின் நிற்க வேண்டும் என்பதா அதன் உட்கருத்து? வேண்டுமென்றால் பெண்ணையும் சமமாய் பாவித்து ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருந்து பார்க்கட்டுமே. என்னே இந்த சமுதாயத்தின் சாதுர்யம்! இப்பொழுது நீங்கள் கூட இந்த சமுதாயத்தின் சாதுர்யம் கண்டு வியக்கலாம். ஆச்சரியபடுவதற்கில்லை.
இந்த சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனின் அன்புக்கும் பாசத்திற்கும் முதன்மையான ஆன்மாவாக, தாயாக ஒரு பெண் வேண்டும். காதலும் காமமும் பகிர்ந்து இனிமையான வாழ்க்கைக்கு மனைவியாக ஒரு பெண் வேண்டும். இரண்டாம் பாதி வாழ்க்கையின் காரணமாகவும் மகனை விடவும் அதிக பாசம் பொழியவும் மகளாக ஒரு பெண் வேண்டும். ஆனால் அந்த பெண் தனக்கு சரிநிகராக மட்டும் இருந்துவிடகூடாது என்பதில் தான் என்ன நியாயம் இருக்க முடியும்?
உங்களில் யாரேனும் சொல்லக்கூடும், பெண்கள்தான் இன்று அனைத்து துறைகளிலுமே கால் பதித்து விட்டார்களே. பெண்ணுரிமை கிடைத்தாயிற்றே என. நான் இல்லையென்றும் சொல்லவில்லை. ஆனால் நாடே இமாலய உயரம் ஏறவேண்டியிருக்கவேண்டிய பட்சத்தில் அவர்கள் ஏறியிருப்பது முதல் சில படிகளே என்றுதான் சொல்கிறேன். இன்றுவரை ஒரு இந்திராகாந்தி, ஒரு கல்பனா சாவ்லா என ஒருசிலர் தானே கண்களுக்கு தென்படுகிறார்கள்.
இன்றும் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சம்பள கவரை பிரிக்காமலே கணவனிடம் கொடுக்கும் மனைவிமார்கள். சென்ற தலைமுறையில் வாழ்ந்த என் உறவினர் ஒருவருக்கு அவரது சம்பளம் எவ்வளவு என்றே தெரியாது. அப்படியே கணவர் வாங்கிக்கொள்வார். இன்றும் தனது ஆசிரிய மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்த, வீட்டில் சும்மாவே முடங்கிகொடக்கும் கணவர் எங்கள் அண்டை வீட்டிலே உண்டு. இதை பெண்ணுரிமையென எப்படி சொல்ல இயலும்?
இன்றைய சமுதாயத்தின் பெண்ணினமே! ஒவ்வொரு முறையும் உங்களுக்கு குரல்கொடுக்க ஏன் மற்றவர்களைத் தேடுகிறீர்கள். ஆமைபோல் ஆண்களின் அதிகார ஓட்டுக்குள் இன்னும் எத்தனை காலம் அடங்கியே இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் அடங்கியே இருப்பதால்தான் இந்த சமுதாயமும் உங்களை நகர அனுமதிக்காத பொழுதுகளில் எல்லாம் எளிதாக கழித்துப்போட்டுவிடுகிறது.
உலகின் இன்னும் படிக்கப்படாத பக்கங்கள் எத்தனையோ இருக்க, இன்னும் அழும் தொடர்கள் தானே உங்கள் ''மாலை''களை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. உலகின் அனைத்திலுமே உங்களுக்கும் சம உரிமை உண்டெனெ முதலில் உணர்ந்திடுங்கள். வீடும் அலுவலகமும் தவிர உலகில் இருக்கும் அனைத்தையும் எப்பொழுது கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?
அடங்கிகிடப்பதும் முடங்கிகிடப்பதுவுமா கலாச்சாரம்? சுய ஒழுக்கத்துடனான யாவரும் தொடுவானம் சென்றுவர உரிமையுண்டு. புதுமைப்பெண்களாய் வீறுகொண்டு நடங்கள். இயற்கைகூட உன் திறமை அறிந்துதான் சமூக வளர்ச்சிக்கான பெரும் பொறுப்பான தாய்மையை பெண்களுக்கு கொடுத்துள்ளது.
இன்றைய சமுதாயமே! நீங்கள் இதுவரை திறமையாய் கட்டிக்காத்த உங்களின் சாதுர்யங்களையும் புத்திசாலித்தனம் என நினைக்கும் உங்கள் தந்திரங்களையும் கொழுத்திவிடுங்கள். உங்களின் வக்கிர சூழ்ச்சிகளிலிருந்தும், உங்களால் பூட்டப்பட்ட விலங்குகளிலிருந்தும் பெண்ணினத்தை விடுதலை செய்து விடுங்கள். உங்கள் ஒருகாலுக்கு விலங்கிட்டு ஒர் காலால் ஒலிம்பிக்கில் ஓடி வெல்ல ஆசைப்படுவது போல சரிபாதி பெண்ணினத்தை அடுக்களையில் பூட்டிவைத்து விட்டு இந்தியாவின் வல்லரசு கனவு காணாதீர்கள்.
source: தமிழ் பிரவாகம்
  

ஏழாம் அறிவு -‍ சில அர்த்தங்களும், அபத்தங்களும்



'தமிழன்' என்று சொல்லாதே, இந்தியன் என்று சொல், பாரதமாதாவுக்கு ஜே! ஜெய்ஹிந்த் என்று இல்லாத 'தேசிய இனத்திற்கு' வந்தனம் செய்தே பழகிய வழமையான தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில் 'இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லை' என்கிற உண்மையை வெளிக்காட்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு முதலில் எனது நன்றி கலந்த வணக்கம். உலக அரங்கில் தமிழ்த் தேசிய இனம் கேட்பாரற்ற (எவ்வளவு அடித்தாலும் தாங்குகின்ற) ஒரு இனம் என்கிற அடையாளத்துடன் தான் இருக்கிறது. தனக்கென்று ஒரு இறைமை பொருந்திய அரசு இல்லையென்றாலும் கூட குறைந்தபட்சம் மொழி வழி மாநில உரிமையைக்கூட பயன்படுத்திக் கொள்ள முடியாத வண்ணம்தான் தமிழ்ச் சமூகம் இருக்கிறது. தன் வரலாறு தெரியாமலும், வரலாறு குறித்த பார்வையும் இல்லாத இன்றைய நவநாகரிக தமிழ் இளைஞனின் ஆறாவது அறிவை முடுக்கிவிடும் பண்யினை 'ஏழாம் அறிவு' செய்திருக்கிறது.

'நாகரிகம்' என்கிற சொல் 'நாகர்கள்' என்கிற தொல்குடிகளின் வாழ்வியல் முறைகளிலிருந்து உருவானது. 'நாகரிகம்' (நாகர்+இயம்) பிறப்பதற்குக் காரணம் இந்த துணைக்கண்டம் முழுவதும் இருந்த தொல் தமிழ் நாகர்குடிகளே. நாகர்கோயில், நாகப்பட்டினம், நாக்பூர், நாகாலாந்து என இன்று வழக்கிலிருக்கும் இவ்வூர் பெயர்கள் அனைத்தும் தமிழனின் தொன்மை வரலாற்றையும், ஆண்ட நிலப்பரப்பையும் உலகிற்கு பறைசாட்டும் அடையாளங்களாக இருக்கின்றன. உடைமை சமூக அமைப்பை ஏற்றுக் கொண்டும், ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரித்துக் கொண்டும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் தத்துவங்களையும் ஐரோப்பா உலகிற்கு வழங்கிக் கொண்டிருந்த பொழுது, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று மானுட விடுதலை குறித்து குரல் கொடுத்தவன் நமது வள்ளுவன். தமிழனின் பழங்காலக் கட்டிடங்கள் பலவும், தமிழனின் இயற் கணித அறிவை விளக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய வரலாற்று பாரம்பரியம் உடைய தமிழ் இளைஞர்கள் இன்று பார்ப்பனியமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் ஏற்ற பண்டமாக மாறி வரும் அபாயத்தை நாம் உணர வேண்டும். ஒரு பண்டத்திற்கு இன உணர்ச்சி வராது; வரவும் கூடாது. இதுதான், வல்லாதிக்க சிந்தனை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் விருப்பம். இப்படி ஒரு சூழலில், 'ஒன்பது நாடுகள் சேர்ந்து செய்தது துரோகம். தமிழனின் வீரம் என்றும் மறையாது' என்று கதாநாகன் பேசும் வசனம் இந்திய நடுவண் அரசுக்கும், சிங்கள இனவெறிக்கும் கிடைத்த பதிலடி. சீன விஞ்ஞானியை வில்லனாகவும், சீன அரசை மானுட விடுதலைக்கு எதிராகவும் இப்படத்தில் சித்தரித்திருக்கிறார் இயக்குனர். ஈழப்போரில் சீனா செய்த துரோகத்தை முருகதாசு பதிவு செய்கிறார். அதோடு மட்டுமில்லாமல் சீனா தொடுக்கும் Bio-Warக்கு Operation Red! என்று பெயர் வைத்திருக்கிறார். இதன் மூலம் ஈழப்போரில் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்ட கம்யூனிச நாடுகளையும் மறைமுகமாக சாடுகிறார். வல்லாதிக்கம் என்றாலே அமெரிக்காவை மட்டும் சாடுகிற மனநிலையை உடைத்தெறித்து சீனாவை முதன்மைபடுத்தியிருக்கிறார். 'எல்லோரும் சேர்ந்து (இந்தியா உட்பட) எம்மக்களை கொன்னுட்டிங்களேடா?' என்று கோபப்படுகிறான் ஏ.ஆர்.முருகதாசு என்னும் தமிழ் கலைஞன். சரி, இனிமேல்தான் ஏ.ஆர்.முருகதாசுடன் சில கருத்துகளை விவாதிக்க வேண்டியுள்ளது.

கதைப்படி 1600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த 'போதிதர்மனின்' மரபணு மூலக்கூறுகள், இன்றைய காலகட்டத்தில் அவருடைய பரம்பரையைச் சேர்ந்த சூர்யாவுக்குப் பொருந்துகிறது. இன்றைய உயிர்-தொழில்நுட்ப (Bio-Technology) அறிவின்படி, போதிதர்மனின் மரபணு மூலக்கூறுகளை வைத்து, இன்னோரு போதிதர்மனையே செய்து விடலாம். அதற்கு இன்னொரு சூர்யா தேவையில்லை. மேலும், மரபபியல் மருத்துவம் என்கிற படிப்பின் படி கருவிலிருக்கும் குழந்தையின் குரோமோசோம்களை நன்கு ஆராய்ந்து அதற்கு வரப்போகும் பரம்பரை நோய்களை உடனே களைந்து விட முடியும். அதற்காக பல கோடி செலவில் (Human Geneme Project) என்கிற ஆராய்ச்சியை உலக நாடுகள் நடத்தி வருகின்றன. உயிரின் அடிப்படை வேதிப்பொருட்களாக A T G C(அடினைன், தையமின், குவானைன், சைட்டாசின்)ல் பொதிந்து இருக்கும் செய்திகளை வாசிப்பதுதான் அந்த ஆராய்ச்சியின் நோக்கம். சரி இப்போது, '7-ம் அறிவு' போத்தர்மனுக்கு வருவோம். இப்படத்தில், அறிவியலுக்கு முரணாக சில கருத்துக்ள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதிதர்மனுக்கு அதீத சக்தி இருப்பதாகவும், அதற்குக் காரணம் அவனுடைய மரபணு என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, போதிதர்மருடைய பரம்பரையைச் சேர்ந்த சூர்யாவுக்கும் மரபணுவில் அத்தகைய சிறப்பு இருப்பதாகவும், அதனால், அவர் இரண்டாவது போதிதர்மனாக மாறுகிறார் என்கிற செய்தியோடு படம் நிறைவடைகிறது.

உலகின் முதன் முதலில் தோன்றிய ஆர்கியபாகட்ரீயாவிலிருந்து (Arche Bacteria) பரிணாம வளர்ச்சியின்படி உருவான மனிதன் வரை மரபணு அமைப்புகளால் அதிகமாக மற்றும் குறைவான அளவில் ஒத்ததன்மை இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. ஆனால், குறிப்பிட்ட ஒரு மனிதனுக்கும், அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வீரமும், விவேகமும் உரித்தானது என்கிற கருத்து அறிவியலுக்கு முரணானது. ஏற்கனவே, தனிமனித துதி, சாதிய மேலாதிக்க உணர்வில் வாழ்ந்து பழகிப் போன நம் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இது பின்னடைவைத் தரும். அடுத்தப்படியாக, படத்தில் விமர்சனத்திற்குள்ளான வசனம் இடஒதுக்கீடு தொடர்பானது. இட ஒதுக்கீட்டினால்தான் தமிழன் இன்னும் முன்னேறவில்லை என்று ஏ.ஆர்.முருகதாசு கருதுகிறார். தமிழகத்தில் பெரியாரைப் படிக்காததன் விளைவு, முருகதாசு போன்ற தமிழ் உணர்வாளர்கள் 'அன்னா அசாரே' ஆதரவாளர்களாகிப் போனார்கள்.
இடஒதுக்கீடு என்பது அரசியமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய சலுகை அல்ல. சாதி மற்றும் மதத்தால் வேறுபட்டு இருக்கும் இம்மக்களுக்கு சரியான முறையில் அதிகாரத்தை வழங்க உருவாக்கப்பட்ட நிர்வாக முறையே இடஒதுக்கீடு. உலகம் முழுவதும் இடஒதுக்கீடு அந்தந்த நாட்டின் மக்களின் தன்மைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் நிர்வாக முறையான இடஒதுக்கீட்டை ஊழலுக்கு இணையாக முருகதாசு கருதுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article.25 என்ன சொல்கிறதென்றால் “Forbids Class Legislation, but does not forbid classification”. இதன் உண்மையான பொருளை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சமத்துவமற்ற சமூகத்தில் அதிகாரப் பகிர்வினை மட்டுமே சமமாக வழங்குதல் என்பது சமூக அநீதி என்பதை உங்களைப் போன்ற தமிழ் உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலச்சந்தர், மணிரத்னம், கமலஹாசன், சங்கர் வகையறாக்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான திரைப்படங்களை எடுப்பது வழமையான ஒன்று. திட்டமிட்டு அவர்கள் செய்யும் வேலை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உங்களைப் போன்ற உணர்வாளரை என்னால் அவர்களைப் போல்(அவாளைப் போல்) நினைந்து ஒதுக்க முடியவில்லை. சரியான தமிழ் உணர்விற்கும், அடிப்படைவாத சிந்தனைக்கும் நடுவில் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் “இனமாற்றம், மொழிமாற்றம், மதமாற்றம்” இது மூன்றும் கூடாது என்கிற அறிவுரையுடன் உங்கள் படம் நிறைவடைகிறது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்று மார்க்ஸ் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே “மாற்றத்தை” வரவேற்றவன் தமிழன். ஆனால் நீங்களோ மதமாற்றம் உட்பட எந்த மாற்றத்தையும் ஏற்க மறுக்கிறீர்கள். மாற்றத்தை ஏற்க மறுக்கும் உங்கள் போக்கு இயங்கியலுக்கு எதிராகவும், மனுதர்மத்திற்கு ஆதரவாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஆதித் தமிழனுக்கு 'மதம்' என்பதே கிடையாது.

தமிழனின் வளர்ச்சிக்கு மதமும், சாதியும் தான் தடை என்று சொல்ல வேண்டிய நீங்கள் 'மதமாற்றம்' கூடாது என்று சொல்வது இந்துத்துவா பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும். பெரியாரியவாதிகள் உங்களை அணுக வேண்டியதன் அவசியத்தை உங்களது படம் எங்களுக்கு உணர்த்துகிறது. சிங்களனுக்கு உங்கள் படம் தொந்தரவு செய்திருக்கிறது. அப்படியானால், தமிழர்கள் தோள் கொடுத்து தூக்கப்பட வேண்டியவர் நீங்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழனின் இழிநிலைக்குக் காரணம் சாதியும், அதனைத் தாங்கி நிற்கும் 'இந்துத்துவ' சிந்தனையும் என்பதை நீங்கள் உணர வேண்டும். பெரியாரியத்தையும், அம்பேத்கரியத்தையும் படிப்பதன் மூலமும், நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக மட்டுமே, நீங்கள் விரும்பும் 'இன எழுச்சி' இம்மண்ணில் சாத்தியம். இல்லாவிடில் கொடுங்கோலன் இட்லரின் ஆசான் மனுதர்மப்பிரியன் நியேட்சே (அதிமனிதன் கோட்பாட்டை கற்பித்தவன்) தனக்கு இருப்பதாக கூறிக்கொண்ட '7ம் அறிவாகவே' உங்கள் கருத்து மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாசு அவர்களே தமிழனின் இன்னும் தொன்மையான வரலாற்றைத் தேடி பயணம் செய்யுங்கள். சாதி ஒழித்த போதிதர்மன்கள் பலபேர் உங்களுக்குக் கிடைப்பார்கள்.
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

ஜீவசகாப்தன்
நன்றி: கீற்று

பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும்


முனைவர் ஜி.பி. ஜெயந்தி
முதலில் நமக்கு முன்னே நிற்கும் கேள்விகள்:
பெண் சுதந்திரம் என்றால் என்ன?
பெண்ணுக்கு எதற்காகச் சுதந்திரம் வேண்டும்?
எதற்கெல்லாம் பெண்ணுக்குச் சுதந்திரம் தேவை?
எப்பொழுதெல்லாம் தேவை?
எந்த அளவிற்குத் தேவை அதாவது அதன் எல்லை என்ன?
யாரிடமிருந்து அல்லது எதனிடமிருந்து சுதந்திரம் தேவை?
பெண் சுதந்திரம் என்கின்ற ஒரு சிந்தனை புதியது அல்ல. இது மிகவும் பழையது. பல இடங்களில் பல பேரால் அலசி ஆராயப் பட்டுள்ளது. இக்கேள்விக்கான விடைகளும் விளக்கங்களும் காலத்திற்குக் காலம் மாறுபடும். மனிதர்கள் கண்ணோட்டங்களில் மாறுபடும். புதுப்புது விதமான பாதிப்புகளும் நிகழ்வுகளும் இதற்கு ஓர் வித்தியாசமான பரிமாணத்தைக் கொடுக்கக்கூடும்.
நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது ஏற்பட்டதோ, அப்பொழுதே அடிமைத்தனம் என்ற சங்கிலியில் இருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணம் நம்மில் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. இது ஒரு நியாயமான எண்ணம் என்பதில் ஐயமே இல்லை என்பது ஒன்று கூடிய கரங்கள் அந்த நியாயப் போராட்டத்தில் அஹிம்சா வழியில் வெற்றி பெற்றது மூலம் பெறப்படுகின்றது.
மனித மனங்கள் எப்பொழுதும் முறை கேடான அடிமைத்தனம் என்ற களையினைக் களைவதையே விரும்புகின்றன என்பதும், நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவைக்காக நாம் நியாயமாகப் போராடுவதில் தவறில்லை என்பதும் நன்கு விளங்குகின்றது. தானாகவே கிடைக்கக்கூடிய ஒன்றிற்கு சுதந்திரம் என்று பெயரிட்டு போரிடுவதுமில்லை. இது மனித இயல்பு.
இதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மையானது – எப்பொழுது பெண் சுதந்திரம் என்ற கருத்து வெளிவரத் துவங்கி யதோ, அப்பொழுதே பெண் ஏதோ ஒரு இடத்தில் சிக்கியிருப்பதும், அதிலிருந்து அவள் விடுபடத் துடிப்பதும் புரிகின்றது. நாட்டிற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணம் காந்தியடிகள் காலத்திற்கு முன்னரே கூட தோன்றியிருக்க நியாயம் உள்ளது. ஆனால், இந்த உணர்வைத் தட்டி எழுப்ப நமக்கு ஒரு மகாத்மாவும் அவருடன் கரம் சேர்த்த மற்ற தலைவர்களும் தேவையானார்கள். அதுபோல, பெண்ணடிமை பல நூற்றாண்டுகளாத் தொடர்ந்து இருந்திருக்கலாம். அக்காலங்களில் பெண்கள் அதை அடிமைத்தனமாக நினைக்காமல் இருந்திருக்கலாம்.
ஆணும் தான் பெண்ணை அடிமையாக நடத்துவதாக எண்ணாமலே இருந்திருக்கலாம். பரஸ்பரம் இரு பாலரும் இதுதான் தம் எல்லை என்ற வரையறையோடு வாழ்ந்திருக்கலாம். மேலும், அந்தக் காலங்களில் பெண்களுக்குச் சுதந்திரம் என்ற ஒரு உணர்வு தேவை இருப்பதற்கே வாய்ப்பு இல்லாமல் இருந்ததும் மன்னர்கள் காலத்தில் அந்தப்புரங்கள் தேவையான வசதிகள் அனைத்தும் நிரம்பியிருந்தன. வேண்டும் என்ற தேவைக்கே இடமின்றி இருந்தன. சாதாரண மகளிருக்கும் இல்லறத்தை நல்லறமாக நினைத்து வீட்டோடு வாழ்ந்து வந்ததில் அவர்களுக்கும் எந்த மனச்சுணக்கமும் இருந்திருக்க முடியாது. கடந்த நூற்றாண்டு வரை மகளிர் நிலை ஏறக்குறைய இப்படியே இருந்தது. மொத்தத்தில் பெண்ணினத்திற்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் அபரிமிதமாகவே இருந்ததைக் காணலாம்.
நாகரிகம் வளர வளர, பெண் வீட்டை விட்டு வெளியே காலடி வைக்கத் துவங்கியதும் தான் பெண் சுதந்திரம் என்பது உணரப்பட்டு அதன் தேவை அறியப்பட்டு, இந்த உணர்வு எண்ணமாகி, சிந்தனையாகி, இன்றைய காலக்கட்டத்தில் சொல்லாகி, செயலாக வடிவெடுத்துள்ளது. செயல்கள் வரவேற்கத்தக்க பல மாற்றங்களையும் தருவதைக் காண்கிறோம்.
கண்டிப்பாகப் பெண் சுதந்திரம் என்பது ஆண்பாலிடம் தான் சுதந்திரத்தை வேண்டுவது என்பது தெளிவாகின்றது. ஆண்கள் செய்யும் எல்லாச் செயல்களையும் தாமும் செய்யும் சுதந்திரம் வேண்டும் என்று எண்ணுவதாக இருக்கின்றது. இங்கு எந்த வகை ஆண்களிடம் சுதந்திரம் வேண்டும் என்பது முதலில் தெளிவாதல் வேண்டும். தன்னைப் பெற்றதந்தை, மணந்த கணவன், தான் பெற்றமகன், உடன் பிறந்த சகோதரன் என்று ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல கட்டங்களில் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக என்று ஒரு பெண் பல விதமாக ஆண்பாலருடன் அவள் இணைந்து செல்லும் சூழ்நிலை அமைய வாய்ப்பு உள்ளது. இதனுடன், சமூகத்திலும் அவள் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஆண்களுடன் சேர்ந்து செயல்படும் சூழல்கள் அமைகின்றன. அவளது சுயமான சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும், செயலாக்கத்திற்கும் இந்த ஆண்பாலரிடமிருந்து ஒரு தடை என்று வரும்பொழுதுதான் அவளது இயல்பான நிலைக்கு ஒரு முட்டுக்கட்டு ஏற்படுவதை உணர்கிறாள்.
பெண்ணுக்குச் சுதந்திரம் என்று சொல்லும் பொழுதே, அவள் முதலில் தன்னை ஓர் பணிக்கு – அது குடும்ப நிர்வாகமாக இருந்தாலும் – தகுதியாக்கிக் கொண்டு தான் அதற்காகப் போராடலாம் என்பது உண்மை. அவளது சிந்தனையும், குறிக்கோளும், திட்டங்களும் தெளிவாக இருத்தல் வேண்டும். இதற்கு நிகராக ஆண்களும் அதற்கு உறுதுணையாய் இருந்து அவள் காரியங்களில் கை கொடுக்க வேண்டும். சுதந்திரம் அளித்தல் என்பது அவர்களிடமிருந்து விலகுதல் என்பது அல்ல. இந்தச் சிந்தனையின் வெற்றிக்கு ஆண்களிடம்தான் அதிகமான எதிர்பார்ப்புகள், ஆதரவுகள் தேவைப் படுகின்றன – பெண் எண்ணங்களை மதித்தல், அடிப்படை யான இச்சிந்தனையை அங்கீகரித்தல், உடன் உதவுதல் – போன்றவை ஒரு ஆணிடம் இருந்தால் தான் பெண் சுதந்திரம் என்ற கருத்து வெற்றி பெறக்கூடும்.
ஒரு பேருந்துப் பயணம் நமக்கு வாழ்க்கையில் எத்தனை விஷயங்களைக் கற்றுத் தருகின்றது. ஒரு பெண் பேருந்தில் ஏறியதும், ஓர் ஆடவன் அருகில் மட்டும் ஓர் இருக்கை காலியாக இருந்தால், அப்பெண் எத்தனை முற்போக்கு சிந்தனை கொண்டவளாக இருந்தாலும் ஏன் உடனே அங்கே சென்று அமரத் தயங்குகிறாள்? அவள் சுதந்திரத்தை அந்த ஆடவனா பறித்துக் கொண்டான்? இதே நிகழ்ச்சி சில இடங்களில் வேறு விதமாக நிகழ்கிறது. அங்கே ஆண் பெண் இருபாலருக்கும் இடையே ஓர் பாகுபாடு என்பது சாதாரணமாக நிகழ்வதில்லை. அப்பொழுது அந்தப் பெண் மிகவும் இயல்பாக அந்தக் காலி இடத்தில் சென்று அமர்கிறாள்.
திருமண விழாக்களில் பந்திகளில் பாருங்கள். ஓர் அந்நிய ஆடவன் அருகில் இடம் இருந்தாலும், ஓர் பெண் ஓர் இருக்கையாவது விட்டுத்தான் அமர்கிறாள். அவ்வாறு அடுத்த இருக்கையில் அமர்வது அவளுக்குச் சங்கடமா அல்லது அந்த ஆணுக்குச் சங்கடம் என்று அவள் நினைக் கிறாளா? இதுதான் நம் உள்ளே ஊறியுள்ள நமது பாரம்பரிய கலாச்சாரம். கேட்காமலே ஆண் சமூகத்திற்குச் செலுத்தும் ஓர் மரியாதை. யார் சொல்லியும் போராடியும் வரவில்லை இந்தப் பாரம்பரியம். அதுபோல் தான் வரவேண்டும் பெண் சுதந்திரம்.
அரசியலில் கூட முழுமையாகப் பெண் சுதந்திரம் பெறப்பட்டு, பெண் தலைமைகள் கூட வந்த பின்னர் இன்னும் பெண் சுதந்திரத்திற்குப் போராட அவசியமே இல்லை. பெற்றசுதந்திரம் ஆரோக்கியமான முறையில் பயன்பட வேண்டும்.
பெண் சுதந்திரத்தின் எல்லை நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் மாறுபடலாம். அதை நிர்ணயிக்க முடியாது. சுதந்திரம் கருத்தை வெளியிடுவதில் தேவைப்படலாம். அதற்கு உடன் உள்ள ஆண் அங்கீகாரம் தேவை. குழந்தை வளர்ப்பில் ஆண் என்றும் பெண் என்றும் பெரும்பாலும் பெற்றோர் பாகுபாடு காட்டாத பட்சத்தில், கல்வி அளிப்பதிலும் தற்போதைய காலத்தில் வேறுபாடு செய்யாத பட்சத்தில், இருபாலருக்கும், சிந்தித்துச் செயல்படும் பருவம் வந்ததும், அதை வெளிப் படுத்த, செயலாற்ற, இணையான சுதந்திரம் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால் அவர்கள் அச்சுதந்திரத்தை வெளிப்படுத்தலிலும் செயலாக்கத்திலும் வழி பிறழாது இருக்க நெறிப் படுத்தும் ஆலோசனை களும், அறிவுரைகளும் தேவைப்படுகின்றன. அதனைக் கண்டிப்பாக அவர்கள் ஏற்றுக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
ஊடகங்களிலும், பிரமிக்கத்த வகையில் பெண் சுதந்திரம் பரந்து பேசப்படுகின்றது; காணக் கிடக்கின்றது. ஆனால் அது கலாச்சாரக் கேட்டிற்கு வழி நடத்தாமல், சுணக்கமான வற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான பாதையில் அழைத்துச் செல்வதாய் இருத்தல் வேண்டும். தமிழ் பேச்சினைத் தங்கள் மூச்சென்று நம்மைப் பிரம்மிக்க வைக்கும் பெண்களும், ராக மாளிகைகளில் அழகாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் மங்கையரும், மக்கள் அரங்கங் களில் உண்மைகளையும் உயர் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளும் சிறுமியர் முதல் அனுபவம் பெற்ற முதிய மார் வரை இன்றைய நாளில் மங்கையர் உலகம் அடைந்துள்ள வளர்ச்சி நிச்சயம் இன்று இருந்தால் பாரதியைக் கூட அவன் கண்ட புதுமைப்பெண்ணாய் அசர வைக்கும். ஒருபுறம் இப்படி இருக்க, மறுபக்கம் ஏன் சீரழிக்கும் ஆட்டங்களும் தலை குனிய வைக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சிகளும்? விழித்துக் கொள்வோம். இதுவல்ல நாம் வேண்டும் பெண்சுதந்திரம்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண் சுதந்திரத்தை எதிர்பார்க்கலாம். தவறில்லை. ஆனால், அதுவும் தன்னை இதுகாறும் காத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் மூலம் நிகழ்வதில் என்ன தவறு? அவர்கள் ஆலோசனையும், அறிவுரையும் இதுபோன்றமுக்கிய தீர்மானங்களில் அவளுக்கு நிச்சயம் தேவை.
உயர்கல்வி பெறுவதில் பெண் சுதந்திரம் தேவை. ஆனால், பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற சில சிக்கல்கள் காரணமாக அவளது இலட்சியங்களிலும் கனவுகளிலும் தேக்கம் ஏற்படலாம். சுதந்திரம் என்றபெயரில் பெரியோரைக் கீழ்ப்படியாமையும் ஆதிக்கம் செய்யவும் கூடாது.
மாணவப் பருவத்தில் சுதந்திரம் என்ற பெயரில் சில பள்ளி, கல்லூரி மாணவிகள் போகும் பாதைகள் தற்காலங்களில் அச்சுறுத்து வதாய் உள்ளன. இந்தத் தவறுகளுக்கு யார் பொறுப்பு? அவர்களை யார் திருத்துவது? இது போன்ற வினாக்களுக்கு விடை அளிப்பது சமுதாயத்தின் தலையாய கடமை. இன்றைய பெரியோர்களும் சான்றோர்களும் கூட ஊடகங்கள் மூலம் பெண் குலத்திற்கே உண்டாகும் தலை குனிவான நிகழ்ச்சிகளைக் கண்டும் காணாமல் போவதற்குக் காரணம் என்ன?
அயல்நாடுகளில் வாழும் நம் மக்கள் பாரதக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சுவாசிக்க அவ்வப்பொழுது தேக்கி வைத்த கனவுகளுடன் தாயகம் வருகின்றனர். அவர்களே நம்மிடையே சீர் கெட்டு வரும் சில நிகழ்வுகளைக் கண்டு மனம் வருந்துவது நமக்குப் பெரும் தலைகுனிவே.
பெண் சுதந்திரம் என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும். மென்மையும், நளினமும், பணிவும், அடக்கமும் பெண்மைக்கு உரிய பண்புகள். என்றும் அவற்றைப் பேணிக் காப்போம்.
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களைச் சீராக்குவோம்!
வாழ்வின் வண்ணக் கனவுகளில் சிதறல்கள்
இல்லறம் என்ற வழித்தடம் பிசிறானது
கையில் ஓர் பெண் குழந்தை
எதிர்காலமே ஓர் கேள்விக்குறி!
கேள்விக்குறி ஆச்சரியக் குறியானது
ஆச்சரியக்குறி தொடர்குறியானது
தொடர்குறி முற்றுப்புள்ளியாகும் வரை
வாழ்வெனும் கடலில் எதிர் நீச்சலிட்டு
கரை சேர்வதே குறிக்கோளாய் அமைந்தது!
வாழ்வெனும் பாடம் கற்பிக்கும் செய்திகள் தான்
எத்தனை எத்தனை
புடம் போட்டு மாற்றி வரும் நிகழ்வுள்தான்
எத்தனை எத்தனை
அனுபவங்கள் வெளிப்படுத்தும் நியாயங்களையும்
நெறிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ள
அமைந்த வாய்ப்பிற்கு நன்றி!
மாதம் ஒருமுறைசந்திப்போம்
வெளிவரும் கருத்துக்களை வாதிடுவோம்
அது குறித்து வரும் எதிர்வாதங்களை அலசுவோம்
ஆக்கபூர்வ சிந்தனைக்கு பலம் சேர்ப்பதே
நோக்கமாகக் கொள்வோம்!
முதல் மாதச் சிந்தனையாகப் பெண் சுதந்திரம் இருக்கட்டும்
சுதந்திரமாக இருபாலரும் சிந்திப்போம்
அவரவர் அனுபவங்கள் பேசட்டும்
உள்ளத்து உணர்வுகள் வெளிப்படட்டும்
நன்றி: தன்னம்பிக்கை.நெட்

8 நவ., 2011

அம்பேத்கர் பார்வையில் காந்தியம்

ஏ.கே. அப்துல் மஜீத்
தமிழில்: சுகுமாரன்
" 'காந்தியம் என்று ஒன்றில்லை' எனக் காந்திஜி அறிவித்திருந்தபோதும், அதே தலைப்பில் அவருடைய சம்மதத்துடனேயே ஏராளமான புத்தகங்கள் வெளியாயின; இந்திய வானில் புதிதாக உதித்த கோட்பாடே காந்தியம் என்பதற்கான ஆதாரம் இது" என்ற குறிப்புரையுடன்தான் காந்தியம் பற்றிய தன்னுடைய விவாதத்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தொடங்குகிறார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அடித்தள மக்கள் பிரிவைக் காந்தியம் எப்படிப் பாதிக்கிறது என்பதையே அம்பேத்கர் முதன்மையாக ஆராய்கிறார். தீண்டத்தகாதவரைப் பொறுத்த வரை, பொதுவாகக் கருதப்படுவது போலக் காந்தியம் வரமல்ல; அது ஒரு பொறி என்னும் முடிவுக்கு வந்து சேருகிறார். அதற்கான நியாயங்களையும் அவர் ஒவ்வொன்றாக முன் வைக்கிறார்.
சமூகத்தின் புறம்போக்கு வெளியில் வீசியெறியப்பட்ட தீண்டத் தகாதவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் காந்தி எவ்வாறு தோல்வியடைந்தார் என்பதை விளங்கிக்கொள்ள காந்தியத்தின் அடிப்படை உணர்வுகளை ஆராய வேண்டும். தன்னிறைவு பெற்ற கிராமங்களை நோக்கித் திரும்பச் செல்வதே காந்தியத்தின் அடையாளம் என்னும் பார்வை எளிமைப்படுத்தப்பட்ட ஒன்று. "என்னுடைய அபிப்பிராயத்தில் காந்தியம் அவ்வளவு எளிமையானதோ களங்கமற்றதோ அல்ல; பிராந்தியவாதத்தைவிடவும் வலுவானது அதன் உள்ளடக்கம். பிராந்தியவாதம் அதன் ஒரு அம்சம் மட்டுமே. அதற்கு ஒரு சமூகப் பார்வையும் பொருளாதாரப் பார்வையும் உண்டு. அவை இரண்டையும் விட்டுவிட்டு காந்தியத்தைப் புரிந்துகொள்வது அதைப் பற்றிப் பிழையான சித்திரத்தை முன்வைப்பதாகும்" என்று எழுதுகிறார் அம்பேத்கர்.
இந்து மதத்தில் நிலவும் சாதிய மரபைப் பற்றிய காந்தியின் கண்ணோட்டமே, சமூகப் பிரச்சினைகளில் அவருடைய நிலைபாட்டை வெளிப்படுத்தவும் உதவுகிறது. நவஜீவன் என்னும் குஜராத்தி மொழி வெளியீட்டில் காந்தி எழுதிய நீண்ட கட்டுரை சாதியக் கட்டுமானங்களில் அவருக்குள்ள வலுவான நம்பிக்கையைப் பகிரங்கப்படுத்துகிறது. சுயராஜ்ஜியத்தின் விதைகள் சாதி அடிப்படையில் உருவாக வேண்டும் எனக் காந்தி அதில் குறிப்பிடுகிறார். சாதிக் கட்டுமானத்தை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கல்வியையும் அரசியல் பாதுகாப்பையும் அடைய முடியும் என்ற கண்ணோட்டத்தையும் காந்தி முன்வைக்கிறார். சாதியை ஒரு கட்டுக்கோப்பாகக் காணும் அவர் யாரும் சாதியின் எல்லைகளை மீறக் கூடாது என்றும் விரும்புகிறார். 'சமூகத்துக்கு இயற்கை வழங்கிய முறையே சாதியமைப்பு' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சாதி அமைப்புப் பற்றிக் காந்தி பல சந்தர்ப்பங்களில் நடத்திய அறிவிப்புகளை வரிசைப்படுத்தி அம்பேத்கர் விளக்குவது இந்தியாவில் நிலவும் சாதியமைப்பிலிருந்து காந்தியம் யாரையும் விடுதலை செய்யாது என்பதைத்தான்.
அம்பேத்கரின் விமர்சனத்துக்கு இலக்காகும் இரண்டாம் பொருள் காந்தியத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம். மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றங்களுடனும் எந்திர நாகரிகத்துடனும் காந்திக்கு இருந்த எதிர்ப்புணர்வு பிரசித்தமானது. நவீன எந்திர நாகரிகம் மனிதனை உழைப்பிலிருந்து விடுவிக்கிறது. அதன் மூலம் அவன் சிந்திக்கவும் செயல்படவும் வாய்ப்புகளை அளிக்கிறது என்பது அம்பேத்கரின் கண்ணோட்டம். தொழில் நாகரிகத்தை எதிர்ப்பதன் மூலம் மக்கள் சுதந்திரம் பெறும் வாய்ப்பைக் காந்தி மறுக்கிறார் என்பது அம்பேத்கரின் மதிப்பீடு.
தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் இடையில் உருவாகும் பிரச்சினைகளில் காந்தி முற்றாக முதலாளிகளின் தரப்பிலேயே இருக்கிறார் என்பது காந்தியத்துக்கு எதிராக அம்பேத்கர் முன்வைக்கும் மூன்றாம் விமர்சனம். பம்பாயில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கூலி உயர்வுக்காகத் தொழிலாளர்கள் வன்முறையின் மொழியில் பேசுவது உசிதமான வழியல்ல என்றே காந்தி குறிப்பிட்டார். "ஐரோப்பாவைப் பாருங்கள், அங்குள்ள யாரும் திருப்தியாக இல்லை. தொழிலாளிகள் முதலாளிகளை நம்புவதில்லை. முதலாளிகளுக்கும் தொழிலாளிகள் மீது நம்பிக்கையில்லை" எனச் சுட்டிக்காட்டிவிட்டு "தொழிலாளர்கள் தொழிலாளர்களாக இல்லாமல் போனால் முதலாளிகள் புத்தியையும் தந்திரத்தையும் பயன்படுத்துவார்கள்" என்றும் குறிப்பிடுகிறார். இது தொடர்பான காந்தியின் சொற்பொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் இவ்வாறு எழுதுகிறார்:
"சொத்துடைமை வர்க்கத்துக்குக் கீறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே மிஸ்டர். காந்தி விரும்புகிறார். அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவம் என்னும் உணர்வு அவருக்கில்லை. பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லத் தான் விரும்பவில்லை என்று பணக்கார வர்க்கத்தை முன்னிறுத்தி அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார். உடைமையாளருக்கும் தொழிலாளருக்கும், பணக்காரர்களுக்கும் தரித்திரர்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளுக்குக் காந்தியின் தீர்வு எளிமையானது. சொத்துகளைத் துறக்க வேண்டாம். தாங்கள் சொத்துகளின் அறங்காவலர்கள் மட்டுமே என்று அறிவித்தால் போதும். அதுவுங்கூடத் தங்கள் விருப்பப்படி நிறைவேற்ற வேண்டிய ஓர் ஆன்மீகக் கடமை"
சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை ரூசோவும் ரச்கினும் டால்ஸ்டாயும் சொன்னதைத்தான் காந்தி திரும்பச் சொல்கிறார் என்பது அம்பேத்கரின் கருத்து. காந்தியத்தை உருவாக்கியது பழமையான கருத்துகள்தாம். மீண்டும் விலங்கு நிலை வாழ்க்கைக்குக் கொண்டு செல்பவை அவை. 'எளிமை' மட்டுமே அவற்றின் சிறப்பியல்பு. அது போன்ற கருத்துகளை எல்லாக் காலத்திலும் சில சாமியார்கள் சொல்லிக்கொண்டு திரிவார்கள் என்றும் அம்பேத்கர் கேலி செய்கிறார். முன்னேற்றத்துக்கான பாதையைத் தேடும் நடைமுறை உணர்வுள்ள சமூகம் அவற்றை எதிர்த்துப் புறக்கணிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். "எதிர்பார்க்க எதுவும் இல்லாத மாயையே காந்தியப் பொருளாதாரம்" என்று முடிவும் செய்கிறார்.
சாதாரணனுக்குக் காந்தியம் எந்தவித நம்பிக்கையையும் வழங்குவதில்லை என்று உறுதியாகச் சொல்லும் அம்பேத்கர் அதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டுவது, கலாச்சாரத்தை உயர் வருணத்தவருக்கு மட்டுமே உரியது என்று அது நிலைப்படுத்துகிறது என்பதைத்தான். ஓய்வும் கலாச்சாரமும் எல்லாக் குடி மக்களுக்கும் உரியது என்னும் ஜனநாயக விழுமியத்தைக் காந்தி ஏற்பதில்லை. உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். விலங்குக்கொப்பான வாழ் நிலையையே அது சாதாரண மனிதனுக்கு அளிக்கிறது. பெரும்பான்மை மக்களைப் பொருத்தவரை 'இயற்கையை நோக்கித் திரும்புதல் என்னும் காந்திய அறைகூவல் அவர்களை வறுமையையும் அறியாமையையும் நோக்கியே கொண்டு செல்லும். வருண அடிப்படையில் வேர்கொண்ட காந்தியம் சாதாரண மனிதர்களிடையே சிக்கலான அடிமை உணர்வையே வளர்க்கும். அதிகாரமும் செல்வமும் மமதையும் போலிப் பெருமைகளும் ஒரு புறம் குவியும்போது, பாதுகாப்பின்மையும் பட்டினியும் வீழ்ச்சியும் இழிவுகளும் மற்றொரு பக்கம் பெருகுகின்றன. இப்படிப்பட்ட ஒரு அமைப்பையே காந்தியம் நம்புகிறது.
சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகக் காந்தி முன்வைக்கும் தர்மகர்த்தா வாழ்க்கைமுறை நடப்பு எதார்த்தங்களுடன் தொடர்பில்லாத அபத்தம் என்பது அம்பேத்கருடைய பார்வை. சாதியை அல்லது வருணாசிரம தருமத்தைச் சமுதாய இலட்சியமாக ஏற்கும் காந்தியம் ஜனநாயகத்துக்கு எதிரானது. வெளிநாட்டு ஆதிக்கச் சக்திகளிடம் நிபந்தனையற்றுச் சரணடைந்த வரலாற்றைக் கொண்டவர்கள் உயர் சாதி இந்துக்கள். அவர்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் உருவானதில்லை. அடிமைத்தனத்தை அவர்கள் ஆறுதலாகக் கண்டார்கள். சாதியமைப்புத்தான் இந்துச் சமூகத்தை இது போன்ற கையறுநிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. ராணுவ ஆற்றலை வளர்க்கச் சாதியமைப்பைப் பயன்படுத்தலாம் என்ற காந்தியின் வாதத்தை அம்பேத்கர் கேலி செய்கிறார். வெவ்வேறு சாதியினர் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி விருந்தைக் கூட்டு மலங்கழிப்பு என்று உவமித்த காந்தியின் வாதம் பைத்தியக்காரத்தனம் என்று கண்டிக்கிறார். சாதியப் பிரிவினை இயற்கையானது என்னும் வாதத்தை மிக அபாயகரமானதாகவும் அம்பேத்கர் கருதுகிறார். வரலாற்று அடிப்படையிலும் இந்த வாதம் முட்டாள்தனமானது என்று மனுதர்மத்தை மேற்கோள்காட்டி நிறுவுகிறார்.
பின்னர் காந்தி சாதியப் பிரிவினையிலிருந்து வருணங்களுக்கு மாறுகிறார். ஆனால் இரண்டும் ஏற்படுத்தும் விளைவுகளில் வித்தியாசம் இல்லை என்பது அம்பேத்கரின் தரப்பு. 'வருண'த்திலிருந்து உருவானதுதான் 'சாதி'. வருணாசிரம நிலைபாடுகள்மீது பவுத்தர்கள் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லச் சனாதனிகளால் முடியவில்லை. பகவத் கீதை உயர்த்திக்காட்டும் வருணாசிரம தர்மம் பிறப்பை அடிப்படையாகக்கொண்டதல்ல; ஒருவன் தன் தகப்பனின் தொழிலையே செய்ய வேண்டும் என்று கீதை உபதேசம் செய்யவுமில்லை. தனிநபரின் உள்ளார்ந்த இயல்புகள்தாம் வருணாசிரமத்தின் அடிப்படை. கீதையின் இந்தக் கருத்தை அடையாளம் காண முடியாதபடி காந்தி தலைகீழாக மாற்றிவிட்டார் என்று அம்பேத்கர் குற்றம் சாட்டுகிறார். 'வருணத்தை' மரபுவழிப்பட்டதாகக் காந்தி மாற்றுகிறார். அதனால்தான் காந்தியின் வருணத்துக்கும் சாதிக்கும் இடைவெளியில்லாமல் போகிறது. தன்னுடைய சாதியக் கோட்பாட்டைவிட்டு வெளியேறக் காந்தியால் முடியவில்லை என்று அம்பேத்கர் முடிவு செய்கிறார்.
ஜனநாயகத்துக்கு ஆதரவாகவோ முதலாளித்துவத்துக்கு எதிராகவோ காந்தி ஒருபோதும் பேசியதில்லை. வெளிநாட்டவரிடம் சுதந்திரத்துக்காக வாதாடும்போதே சமுதாயத் தாழ்வுகள் பிறப்பிலேயே உள்ளவை எனச் சொன்னது காந்தியத்தின் முரண்பாடு. 'சுயராஜ்ஜிய' முழக்கத்துக்கு உயர் சாதி இந்துக்களின் ஆதரவைப் பெறுவதுதான் காந்தியின் நோக்கமாக இருந்திருக்குமோ? ஆம் என்பதுதான் பதில் என்றால் காந்தியம் உண்மையானது என்று எப்படிச் சொல்ல முடியும் என்பது அம்பேத்கரின் கேள்வி.
இருப்பவரை இருப்பவராகவும் இல்லாதவரை இல்லாதவராகவும் நிலைநிறுத்துவதுதான் காந்தியத் தத்துவம் என்பது அம்பேத்கரின் கருத்து. இல்லாதவன் அவனுடைய உரிமையைக் கேட்டுப் பெறுவதைக் காந்தியம் தடைசெய்கிறது. 'சொத்துக்கு ஆசைப்படாதே' என்பதுதான் சூத்திரனுக்குக் காந்தி வழங்கும் உபதேசம். தோட்டிகள் தொடர்ந்து அதே தொழிலைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே காந்தி அந்தத் தொழிலுக்கு மகத்துவம் கற்பித்தார் என்று அம்பேத்கர் வாதாடுகிறார்.
தீண்டத்தகாதவர்கள் பற்றிக் காந்தி சொன்ன எதுவும் தீண்டாமையை ஒழிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்னும் முடிவுக்கே காந்திய விமர்சனத்தின் இறுதியில் அம்பேத்கர் வந்து சேருகிறார். தீண்டத்தகாதவர்களை 'ஹரிஜனங்கள்' என்று அழைப்பதன் மூலம் காந்தி ஒரே கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்துகிறார். தீண்டத்தகாதவர்களைச் சூத்திரர் என்று குறிப்பிடாததன் மூலம் வருணாசிரம கட்டமைப்புக்குள் அவர்களை நுழைய முடியாமல் தடைசெய்தாகிவிட்டது. அவர்களுக்குப் புதிய பெயர் சூட்டியதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தீண்டத்தகாதவர்களுக்குக் கல்வி அவசியம் என்று காந்தி ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்தக் கல்வியைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை அவர் மறுக்கிறார் என்று கண்டடைகிறார் அம்பேத்கர். சட்டமோ மருத்துவமோ பொறியியலோ படித்தாலும் தீண்டத்தகாதவர்கள் தமது குலத்தொழிலைச் செய்ய வேண்டும். முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்கள் ஒருபோதும் மாற்றப்படக் கூடாது என்பதே காந்தியின் கொள்கை.
சாதி இந்துத்துவத்தின் விழுமியங்களையே காந்தியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கர்மா கோட்பாடு, பசு வழிபாடு, அவதாரங்கள் பற்றிய நம்பிக்கை, விக்கிரக வழிபாடு இவையெல்லாம் காந்தியத்தின் தவிர்க்க முடியாத அம்சங்கள். அதனால் காந்தியம் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கான வழியல்ல என்னும் கண்ணோட்டத்தை அடைகிறார் அம்பேத்கர்.
n
'அம்பேத்கர் பார்வையில் காந்தியம்' என்னும் கட்டுரை 'சாம்ஸ்காரிக பைத்ருகம்' மலையாள மாசிகையின் அக்டோ பர் 2007 இதழில் வெளியானது. கட்டுரையை எழுதியவர் இதழின் கௌரவத் தலைமை ஆசிரியரான ஏ.கே. அப்துல் மஜீத்.
காந்தியைப் பற்றிய மாற்றுப் பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது என்பதே மொழிபெயர்ப்புக்குத் தூண்டுதலாக இருந்த காரணம். கட்டுரையில் காந்தியைக் கடும் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் மேற்கோள்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்னும் விவரம் கட்டுரையில் குறிப்பிடப்படாதது குறையாகத் தெரிந்தது. தொலைபேசி மூலம் கட்டுரை ஆசிரியர் அப்துல் மஜீதைத் தொடர்புகொண்டதில் மராட்டிய மாநில அரசு வெளியிட்டுள்ள 'அம்பேத்கர் நூல்கள்' தொகுதிகளிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது. எனினும் கட்டுரையில் தென்பட்ட குறை அப்படியே தொடர்கிறது. காந்தியைப் பற்றிய இன்னொரு கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரை என்னும் நிலையிலேயே இந்த மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

யோக்கியனாக இருப்பதைவிட இந்துவாக இருப்பது தான் முக்கியமெனில், எக்கேடும் கெட்டுப் போங்கள்!


தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவினை விரும்புகின்றனராஇல்லையா என்பதுதான் முக்கியக் கேள்வி. இக்கேள்வி தாழ்த்தப்பட்ட மக்களால் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்றுவாழ்வியல் சார்ந்த பார்வை. அதிலிருந்து,தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உயர்விற்கான உறுதியான வழி கல்விஉயர் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பட்ட வருமானத்திற்கான வழிகளில் இருப்பதாகவே நினைக்கின்றனர். சமூக வாழ்வில் நல்ல இடத்தில் தாங்கள் அமர்ந்து விட்டால்,பழமைவாதிகள் இவர்கள் மீது கொண்டிருக்கும் மதம் சார்ந்த பார்வை மதிப்பானதாக மாறும் என்று நம்புகின்றனர். ஒருவேளை அப்படி மாறாவிடினும்அது எந்த விதத்திலும் அவர்களுடைய வாழ்வியல் நலன்களைப் பாதிக்கப் போவதில்லை என நம்புகின்றனர். இந்த அடிப்படையில்ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் திறனையும் பலத்தையும் கோயில் நுழைவு போன்ற ஒன்றுமில்லாத விஷயங்களில் செலுத்தப் போவதில்லை என்று கூறுகின்றனர். அதற்காக அவர்கள் போராடாமல் இருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அந்த வாதமானதுசுயமரியாதையை அடிப்படையாகக் கொண்ட வாதம்.
இந்தியாவில் உள்ள அய்ரோப்பியர்கள் தங்கும் விடுதிகள் முன்பும்மற்ற சமூக விடுதிகளிலும், “நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை'' என்ற அறிவிப்புப் பலகைகளை மாட்டியிருந்த காலம்மிக அதிக நாட்களுக்கு முன்பு அல்ல. இன்று இந்து கோயில்களில் மாட்டப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகள் அதற்கு ஒத்தவையே. ஒரே வேறுபாடு என்னவெனில்இந்து கோயில்களில் உள்ள பலகைகள் நடைமுறையில் சொல்வது என்னவெனில் எல்லா இந்துக்களுக்கும் எல்லா மிருகங்களுக்கும்தெய்வங்கள் உட்பட,அனைவருக்கும் அனுமதி உண்டு. தீண்டத்தகாதவர்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.''
இரண்டு இடங்களிலும் சிக்கலே. ஆனால்அய்ரோப்பியர்கள் தங்கள் திமிரினால் விலக்கி வைத்த இடங்களில்,இந்துக்கள் ஒருபோதும் தங்களை அனுமதிக்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்கவில்லை. இந்துக்களின் திமிரால் விலக்கி வைக்கப்பட்ட ஓரிடத்தில் அனுமதி கோரி ஏன் தீண்டத்தகாதவர்கள் கெஞ்ச வேண்டும்இதுதான் வாழ்வியல் நலன்களில் ஈடுபாடு கொண்டுள்ள ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மனிதனின் நியாயமான வாதம். அவர் இந்துக்களிடம் இவ்வாறு கூற தயாராக இருக்கிறார் : “உங்கள் கோயிலை திறப்பதும் திறவாமல் இருப்பதும் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய ஒன்றே தவிரநாங்கள் போராட வேண்டிய ஒன்றல்ல. மனித மாண்பினை மதிக்காமல் இருப்பது தவறானது என்று நீங்கள் நினைத்தால்கோயிலை திறந்து விட்டு யோக்கியராக நடந்து கொள்ளுங்கள்அல்லது யோக்கியராக இருப்பதை விட இந்துவாக இருப்பதே முக்கியம் என்று கருதினால் கதவை சாத்திக் கொண்டு எக்கேடும் கெட்டுப் போங்கள். நான் வரவேண்டிய அவசியம் இல்லை.''
வாதத்தை இந்த முறையில் வைக்கவே நான் விரும்பினேன். ஏனெனில்பண்டித மதன் மோகன் மாளவியா போன்ற மனிதர்களின் மனங்களில் இருந்த அழுக்கை நான் நீக்க விரும்பினேன். அவர்கள் தாழ்த் தப்பட்ட வகுப்பினர் அவர்களுடைய தயவினை எதிர்பார்த்து நிற்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த கோணம்ஆன்மீகத்தின் அடிப்படையிலானது. மதம் சார்ந்த கருத்தோட்டத்தைக் கொண்ட மனிதர்களாக,தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவினை விரும்புகிறார்களாஇல்லையா என்பதுதான் கேள்வி. வாழ்வியல் பார்வை மட்டும் நிலவினால் தற்பொழுது இருப்பதைப் போன்று ஆன்மீகப் பார்வையில் அவர்கள் கோயில் நுழைவிற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் இறுதி பதிலானது மகாத்மா காந்தியும் இந்துக்களும் கீழ்க்காணும் கேள்விகளுக்கு அளிக்கும் பதிலைப் பொருத்தது. கோயில் நுழைவை வலிய அனுமதிப்பதன் பின்னணி என்னஎது அதனைத் தூண்டியது?
இந்து மதக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக மேம்பாட்டிற்கு இறுதி இலக்காக கோயில் நுழைவுதான் இருக்க வேண்டுமாஅல்லது அது வெறும் முதல் படிதானாமுதல் படி எனில்இறுதி இலக்கு என்னகோயில் நுழைவுதான் இறுதி இலக்கெனில்தாழ்த்தப்பட்ட மக்கள் அதனை ஆதரிக்கவே முடியாது. சொல்லப் போனால்அவர்கள் கோயில் நுழைவினை மட்டும் மறுதலிக்கப் போவதில்லை. மாறாகஇந்து சமூகம் ஒட்டுமொத்தமாக தங்களை மறுதலித்ததாகவே கருதிதங்களுக்கான இடத்தை வேறு எங்கும் தேட விழைவர். மாறாகஇதுதான் முதல்படி எனில்அவர்கள் அதற்கு ஆதரவளிக்கக் கூடும். அப்படியானால் இந்தியாவில் இன்று நடப்பதற்கு இணையான நிலை ஏற்படும்.
இந்தியாவிற்கு அதிகாரம் வேண்டுமென அனைத்து இந்தியர்களும் கேட்டுள்ளனர். எனினும் உண்மையில் அரசியல் சட்டமானதுஅதற்கு சற்றுக் குறைவாகத்தான் இருக்கும் என்றபோதும் பல இந்தியர்கள் அதனை ஏற்றுக் கொள்வர். ஏன்விடை என்னவெனில்இலக்கு தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை பல படிகளை கடந்து அடைவதா அல்லது ஒரே தாவலில் அடைவதா என்பது பொருட்டல்ல. ஆனால் பிரிட்டிசார் இந்தியாவிற்கு அதிகாரம் வேண்டும் என்ற இலக்கை ஒப்புக் கொள்ள மறுத்திருந்தால்இப்போது நடைபெறும் பகுதி சீர்திருத்தங்களை ஒருவரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதைப் போலவேமகாத்மா காந்தியும் மற்றவர்களும்தங்களுக்கான இலக்காக வரித்துக் கொண்டிருப்பது இந்து கட்டமைப்பில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சமூக நிலையை உயர்த்துவது என்பதானால்கோயில் நுழைவு குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மனப்போக்கைத் தெளிவுபடுத்த முடியும். இதில் தொடர்புடைய அனைவரின் தகவலுக்காகவும் பரிசீலனைக்காகவும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் இலக்கு என்ன என்பது விளக்கப்படும்.                                                   
                                                                                                                                                                           (அம்பேத்கர்)
 -தொடரும்

5 நவ., 2011

துயரத்தின் ஒரு துளிக் கண்ணீர்- எனக்கு இல்லையா கல்வி

துயரத்தின் ஒரு துளிக் கண்ணீர்



வாழ்வுரிமையும் கல்வியுரிமையும் ஒன்று என்கிற கருத்தாக்கம், நடைமுறையில் பொய்யாக்கப்பட்டு விட்டது.கூலி அடிமைகளை உருவாக்கும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் கல்விமுறை இன்றளவும் மாற்றப் படவில்லை. இந்தியாவில் இருக்கும் 20 கோடி குழந்தைகளில், 3 கோடி குழந்தைகள் கல்விக்கூடத்துக்குச் செல்லவே முடியாத நிலை தொடர்கிறது. அவர்களே குழந்தைத் தொழிலாளர்களாகவும், பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டவர்களாகவும் தொடர்ந்து வஞ்சிக்கப் படுகிறார்கள்.
அரசியல் ஆதாயத்திற்காக எல்லாவற்றையும் இலவசம் என அறிவிக்கிற அரசுகள், க்யூபாவைப் போல ஏன் கல்வியை இலவசமாக்கவில்லை என்ற கேள்வியை முன் வைக்கிறது. 67 சதவீத அரசுப் பள்ளிகள், முறையான கட்டிடம், கழிப்பறைகள், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, அவல நிலையில் நீடிக்கின்றன. 

மழைக்காலங்களில் ஒழுகும் பாழடைந்த கட்டிடங்களில் வகுப்பறைகள் நடக்கின்றன.ஆதி திராவிடர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் மற்றும் உருது பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து அரசினால் புறக்கணிக்கப் படுகின்றன. 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள், சென்னையில் மூடப்பட்டு விட்டன.


அருந்ததியர் சமூகக் குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் பெஞ்ச் இருந்தும் தரையில் அமர வைக்கப் படுகிறார்கள்.பள்ளிக்கூடத்தின் கழிவறைகளைச் சுத்தம் செய்ய கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். சாதியும் வர்க்கமும் சேர்ந்து,தலித் குழந்தைகளை கல்வியற்றவர்களாக மாற்றி விடுகின்றன.இயற்கையின் குழந்தைகளான மலைவாழ் மக்களில் 40 சதவீதம் பேர், எழுதப் படிக்க தெரியாதவர்களாக இருக்கின்றனர்.அவர்களின் வாழிடம் உயரத்திலும்,வாழ்க்கை, அதல பாதாளத்திலும் உள்ளது.
மொழிப்போராட்டத்தால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த தமிழ்நாட்டில், தாய்மொழியில் கல்வியில்லை. கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டிய அரசாங்கம், சாராயம் விற்கிறது. சாராயம் விற்றவர்கள், கல்வித் தந்தையாக மாறி, சரஸ்வதியை விற்கிறார்கள்.இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அதிகமான தனியார் கல்வி நிறுவனங்கள், வியாபாரம் என்கிற நிலையைத் தாண்டி, கொள்ளையடிக்கும் நிறுவனங்களாக இயங்குகின்றன.ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொடக்கக் கல்வி, கட்டணக் கல்வியாக உள்ளது. பணக்காரர்கள் படிக்கும்உயர்கல்வி இலவசமாகவும் உள்ளது. இத்தகைய முரண், களையப்பட வேண்டிய பெருந்தீமையாக உள்ளது.



சமச்சீர் கல்வி என்பதில் பொது பாடத்திட்டம் மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. கட்டிட வசதிகள், நிர்வாக கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அடிப்படை மாற்றங்கள் ஏதும் இல்லை. எவ்வித சமரசமும் இன்றி,அச்சமின்றி உண்மைகளை, இப்படம் ஓங்கி ஒலிக்கிறது. பேச்சின் வழியாக சொல்லப்படாமல், காட்சிகளின் வழியாக அணுகும் லாவகத்தால், தொடர்ந்து படத்தைப் பார்க்க முடியவில்லை.கண்ணீர் திரையாக மாறி,சொல்லொணா துயரத்தால் நம்மைத் தாக்குகிறது.
"இருப்பதெல்லாம்.. 
அசைக்க முடியாத நம்பிக்கை தான்
துன்புற்ற என் மக்கள் மீதான
முடிவற்ற காதல் தான்"
பாலஸ்தீனக் கவிஞர் தெளபீக் சையத் கவிதை வரிகளுடன் முடிவுறும், இப்படம் போராடத் தூண்டுகிறது.புதுகை தனிக்கொடியின் பாடல் வரிகள், நெகிழ்வுறச் செய்கிறது. தன் எழுத்து, பேச்சு, ஆவணப்படம் என எதைச் செய்தாலும் சமூக அக்கறையோடு அணுகும் பாரதி கிருஷ்ணகுமாரின் நெடும்பயணத்தில் இப்படம், ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.



நன்றி: கவி நிலவு அப்பாஸ்- உயிரோசைதமிழ்ச்சூழலில் ஆவணப் படங்களுக்கென தனித்த அடையாளத்துடன் இயங்கும், மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தகுந்தவர் பாரதி கிருஷ்ணகுமார். அவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் "எனக்கு இல்லையா கல்வி?" சமூக நீதிக்கான, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின், சமகால வரலாற்று ஆவணமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.மதுரையில் இருந்து இயங்கும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கல்வி என்பது முழுமையான சமூக மனிதனை உருவாக்குகிறது. உலகையே கட்டி எழுப்பும் வலிமை மிக்கது.வெறும் தகவல்களை மட்டும் தருவதல்ல..! உணர்வுகளை உருவாக்க வல்லது. இந்திய சமூகத்தின் உயர் அடுக்கில் உள்ள பார்ப்பனர்களிடம் இருந்து, உழைக்கும் மக்களாகிய சூத்திரர்களின் பக்கம் திரும்ப, பல நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது. இந்த சமூகம், பாகுபாட்டை அமைப்பு ரீதியாக ஏற்றுக் கொண்ட சமூகம்.இந்நிலையை மாற்ற ஜோதிராம் பூலே,அண்ணல் அம்பேத்கர், கோபாலகிருஷ்ண கோகலே, தந்தை பெரியார் என பலரும் தொடர்ந்து போராடி வந்தனர்.அதன் விளைவாகவே, எளிய மக்களுக்குப் படிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அதை தனியார்மயம் தட்டிப் பறிக்கும் அவலமே, இப்படத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.

Posted by மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம் at

1 நவ., 2011

ஊடக பயங்கரவாதம் ”பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு” - நீதியரசர் மார்கண்டேய கட்ஜு


சமீபத்தில் மத்திய அரசாங்கம் புதிதாக தொடங்கப் பட உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கென்று விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (a) கருத்துச் சுதந்திரத்தோடு ஊடகத்துக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளது. அனால் அந்த சுதந்திரம் கட்டுப்பாடற்ற வகையில் இருக்க முடியாது. நியாயமான சில கட்டுப்பாடுகள் வேண்டும். பாரபட்சமில்லாமல் உண்மைத் தன்மையோடு மக்களுக்கு செய்திகளைத் தர வேண்டியது, ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் கடமை. ஆனால், இந்திய ஊடகங்கள் இந்த செயலை பொறுப்போடு செய்கின்றனவா ?
பொறுப்பற்ற முறையில் ஊடகங்கள் செயல்படுவது குறித்த சில சம்பவங்களை பார்ப்போம்.
ஊடகங்கள் பல நேர்வுகளில் செய்திகளை திரித்து வெளியிடுகின்றன.
உச்ச நீதிமன்ற நீதிபதி க்யான் சுதா மிஷ்ராவோடு நான் உச்ச நீதிமன்ற டிவிஷன் பென்ச்சில் பல மாதங்கள் அமர்ந்திருக்கிறேன். ஒரு நாள் இந்தியாவின் முக்கிய செய்தித் தாள் ஒன்று முதல் பக்கத்தில் நீதிபதி மிஷ்ராவின் புகைப்படத்தை வெளியிட்டு “தன் மகள்கள் கடன் சுமை (liability) என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கிறார்” என்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தி முழுக்க முழுக்க திரிக்கப் பட்ட உண்மைக்கு புறம்பான செய்தி, அதுவும் பிரபலமான ஆங்கில செய்தித் தாளின் முதல் பக்கத்தில் வந்தது.
உண்மை நிலவரம் என்னவென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக்களையும் கடன்களையும் வெளியிட வேண்டும். கடன்கள் என்ற பிரிவில், நீதிபதி மிஷ்ரா “இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். மிகச் சரியாகப் பார்த்தால், இதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை. கடன்கள் என்றால் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவைதான் அடங்கும். ஆனால் நீதிபதி மிஷ்ரா எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்துக்கு ஏராளமான பணம் செலவு ஆகும் என்ற பொருளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டது. மற்ற இருவருக்கும் இனிதான் திருமணம் செய்ய வேண்டும். நீதிபதி மிஷ்ரா நிச்சயமாக தன்னுடைய மகள்களை கடன் சுமை என்ற பொருளில் அவ்வாறு குறிப்பிடவேயில்லை. பிரசுரிக்கப் பட்ட அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய்யானதும், ஆட்சேபகரமானதும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிரசுரிக்கப் பட்ட செய்தி.
இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கு மட்டும் துயரத்தையும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்த வில்லை. அவரின் குடும்பத்தினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கும் அவர் குடும்பத்துக்கும் எத்தனை வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்பதை அந்த செய்தித்தாளின் பொறுப்பாளர்கள் உணர்ந்திருப்பார்களா ? நிச்சயமாக இல்லை. அவரின் நோக்கம் செய்தியை திரிப்பதன் மூலமாக பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே.
அப்படியே தன் மகள்களைப் பற்றி நீதிபதி மிஷ்ரா எழுதியது தவறு என்று வைத்துக் கொண்டாலும், அடுத்தவருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்தும் என்று உணராமல் இந்த தவறை திரித்து செய்தியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் ? இங்கே குழுமியிருக்கும் ஊடகத்துறையினரே நீங்களே சுயபரிசோதனை செய்து இதற்கான விடையை தேடிக் கொள்ளுங்கள்.
சமீப காலமாக, பணம் வாங்கிக் கொண்டு செயிதி வெளியிடும் போக்கு வளர்ந்து வருகிறது. 2009 தேர்தலில் இது பெரிய சர்ச்சையானது. இதை எப்படித் தடுப்பது என்பதை நாம் விவாதித்து முடிவு காண வேண்டும். 19.09.2011 நாளிட்ட தலைமை தகவல் ஆணையரின் உத்தரவுப் படி பிரனஞ்சோய் குஹா தாகுர்தா மற்றும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகியோர் அடங்கிய, இந்த விவகாரம் குறித்து ஏற்படுத்திய ஆய்வுக் கமிட்டியின் அறிக்கை ப்ரஸ் கவுன்சிலின் இணைய தளத்தில் ஏற்றப் பட்டுள்ளது. இந்த அறிக்கையை ப்ரஸ் கவுன்சில் தனது 26.04.2010 நாளிட்ட கூட்டத்தில் நிராகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
அடுத்ததாக ஊடகங்கள் உண்மையான விவகாரங்களை செய்தியாக்காமல், அவசியமற்ற விவகாரங்களை செய்தியாக்குவது அடிக்கடி நடக்கிறது. நம் நாட்டில் கவனிக்கப் பட வேண்டிய விஷயங்கள், வறுமை, வேலையின்மை, போதுமான வீட்டு வசதி சுகாதார வசதியின்மை, 80 சதவிகித மக்கள் மோசமான பொருளாதார சூழ்நிலையில் வாழ்வது ஆகியவையே கவனிக்கப் பட வேண்டிய செய்திகள். ஆனால் இந்த விவகாரங்களை புறந்தள்ளி விட்டு, ஊடகங்கள் சினிமா நடிகரின் மனைவி கர்ப்பமானது, அவர் ஒரு குழந்தை பெற்றெடுப்பாரா, இரட்டை குழந்தை பெற்றெடுப்பாரா என்பது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. இதுவா இந்த தேசத்தை பீடித்திருக்கும் முக்கிய பிரச்சினைகள் ?
லாக்மே இந்திய ஃபேஷன் விழா நடக்கையில் அரசு அங்கீகாரம் பெற்ற 512 செய்தியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாடல்கள் பருத்தி ஆடைகளை அணிந்து அணி வகுப்பதை கவனமாக செய்தியாக்கும் செய்தியாளர்கள் அ அந்த விழா நடக்கும் இடத்திலிருந்து விமானத்தில் ஒரு மணி நேரத்தில் செல்லக் கூடிய இடத்தில் ந்த பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை வசதியாக மறந்து விட்டார்கள். ஓரிருவரைத் தவிர விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி யாருமே கவலைப் படுவதில்லை.
இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? இந்தியாவின் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களின் மோசமான பொருளாதார சூழலை கண்டுகொள்ளாமல், கவர்ச்சியும் பரபரப்பும் இருக்கும் போலியான இடங்களில் தங்கள் கவனத்தை செலுத்துவது முறையான செயலா ? மக்களுக்கு ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்று சொன்ன ராணி மேரி அன்டோனியெட் போல ஊடகங்கள் நடந்து கொள்ளவில்லை ?
ஊடகங்கள் விவசாயிகளின் தற்கொலைகள், விலைவாசி உயர்வு, என முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் இது 5 முதல் 10 சதவிகிதமே. மொத்த ஊடகத்தின் கவனமும், திரைப்பட நட்சத்திரங்களின் வாழ்க்கை, பாப் இசை, பேஷன் பரேடுகள், கிரிக்கெட் மற்றும் ஜோதிடத்திலேயே இருக்கிறது.
சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அருகேயும், மும்பாய், பெங்களுரிலும் குண்டு வெடிப்புகள் நடந்தன. குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே டிவி சேனல்கள் இந்தியன் முஜாஹிதீன் அல்லது ஜெய்ஷ் ஏ முகம்மது அல்லது ஹர்கத்துல் ஜிஹாத் ஏ இஸ்லாம் போன்ற அமைப்புகள் ஈமெயில் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுக் கொண்டன என்று செய்திகள் வெளியிடுகின்றன. இது போன்ற இயக்கங்களின் பெயர்கள் எப்போதுமே இஸ்லாமியப் பெயர்களாக இருக்கும். ஒரு ஈமெயிலை யாரோ ஒரு விஷமி எளிதாக அனுப்பமுடியும். ஆனால் இதை டிவிக்களில் செய்தியாக காட்டுவதும், செய்தித் தாள்களில் அச்சிடுவதும் இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற போக்கு உள்ளது.
உண்மை என்னவென்றால் அனைத்து சமூகங்களிலும், இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது எந்த ஜாதியோ அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்கள். ஆனால் இது போலச் செய்திகள் வெளியிடுவதால், எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்கும். தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக எஸ்எம்எஸோ ஈமெயிலோ அனுப்பும் நபரின் நோக்கம் நிச்சயமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்குவதுதான். இது பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி. தெரிந்தோ தெரியாமலோ இந்திய ஊடகம் இந்தத் தந்திரத்தை கையாளுவது சரியா ?
ஊடகத்துறையில் உள்ள சில குறைகளை சுட்டிக் காட்டினேன். ஊடகத்தில் மட்டுமல்லாமல், நீதித் துறை அரசு நிர்வாகம் போன்ற துறைகளிலும் குறைகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் அனைவரும் இணைந்து இந்தக் குறைகளை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
ஊடகத்துறையில் உள்ள குறைகளைப் போக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் தீர்க்கும் ஜனநாயக வழி. மற்றொன்று அரசு விளம்பரங்களை நிறுத்துவது, கடுமையான அபராதம் விதிப்பது என்ற கடுமையான வழி.
என்னுடைய கருத்தில் ஜனநாயகபூர்வமான வழியை முதலில் கடைபிடிக்க வேண்டும். இதன் பொருட்டு, நான் ஊடகத் துறையினரை, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்துறையினரை அடிக்கடி சந்தித்து உரையாடலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அந்த விவாதங்களின் போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லாமல், நாமே சுயபரிசோதனை செய்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை கண்டறியலாம். இந்த கலந்துரையாடல்கள் இரண்டு மாதங்களுக்கோ, மூன்று மாதங்களுக்கோ ஒரு முறை நடக்கலாம். அப்போதுதான் மக்களுக்கு ஊடகம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
ப்ரஸ் கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள் தொலைக்காட்சி ஊடகம் வராது என்றாலும் கலந்து உரையாடுவதில் தவறேதும் இல்லை. அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் இரண்டுக்கும் சமமான பொறுப்பு உள்ளது.
ஒரு வேளை ஊடகங்கள் ஒத்துழைக்க மறுத்தால் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக விவாதங்களின் மூலம் சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்ளலாம். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு தொலைக்காட்சிகளுக்கு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளைக் கூட தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இது வரை ப்ரஸ் கவுன்சிலின் பணி தாவாக்களை தீர்த்த வைப்பது மட்டுமே. ஆனால் நான் ப்ரஸ் கவுன்சிலை சமரச மையமாக மாற்ற வேண்டும் என்றும், அதுவே ஜனநாயகபூர்வமான வழி என்றும் கருதுகிறேன். இதற்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
இந்தியா மிக முக்கியமான மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. விவசாயச் சமூகமாக இருந்து வந்த இந்தியா தற்போது தொழில் சார்ந்த சமூகமாக மாறி வருகிறது. 16 முதல் 19ம் நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய வரலாற்றைப் படித்திருப்பீர்க ளேயானால் தொழில் புரட்சி நடந்த அந்த காலகட்டத்தில் கடும் கலவரமும், குழப்பங்களும், போர்களும் நடந்தது என்பதைக் காண முடியும். அந்த நெருப்பில் குளித்த பிறகே ஐரோப்பா தற்போது உள்ளது போல நவீன சமுதாயமாக மாறியது. தற்போது இந்தியா அந்த நெருப்பில் இறங்கியுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்தியா ஒரு நவீன தொழில் சார்ந்த சமூகமாக மாறும் வரை மிகுந்த வேதனையான காலகட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஊடகங்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சமூகத்திற்கு உதவ வேண்டும். சாதி உணர்வு, மத உணர்வு போன்றவற்றுக்கு எதிராக எழுதி நவீன விஞ்ஞான உணர்வுகளை வளர்க்கலாம்.
முடிக்கும் முன்பாக அஜ்மீர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மருத்துவர் டாக்டர் கலீல் க்ரிஸ்டியை விடுவிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொள்கிறேன். கலீல் சிஸ்டி 80 வயதானவர். அவர் இன்னும் நீண்ட நாள் வாழப் போவதில்லை. அவர் மிகச் சிறந்த மருத்துவர். கராச்சி மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு, எடின்பர்க் பல்கலைகழகத்தில் பிஎச்டி முடித்தவர். அவர் ஒரு இதய நோயாளி. மேலும் பல்வேறு நோய்களும் அவருக்கு இருக்கிறது. அவரால் நடக்க முடியாது. மனிதத்தன்மையோடு அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். விடுதலை செய்யப் பட்டால் அவர் கராச்சியில் உள்ள தனது மனைவியோடும் மகளோடும் அவர் இறுதிக் காலத்தை கழிக்க முடியும். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கோபால் தாஸ் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசு அவரை விடுதலை செய்தது. ஆனால் இந்திய அரசு பல மாதங்களுக்கு முன்னால் உள்துறை அமைச்சர், பிரதமர், ராஜஸ்தான் மாநில ஆளுனர் ஆகியோருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நாம் இவரை விடுதலை செய்தால், இந்தியாவின் நன்மதிப்பு கூடும். ஆனால் இவர் இந்தியச் சிறையில் இறந்தால, நமக்கு தீராத அவப்பெயர் உண்டாகும்.

Posted by மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம்

அத்வானியின் ரத யாத்திரை: மோடி வித்தைக்கு எதிரான மோசடி வித்தை



பாரதிய ஜனதாவின் உட்கட்சிப் பூசல், வெடித்து வெளிவந்து விட்டது. கட்டுப்பாடான கட்சி, உறுதிமிக்க இயக்கம் என்பன போன்ற ஒப்பனைகள் கலைந்துவிட்டன. இந்துத்துவத்தின் வெளிப்படையான வெறியைக் கொண்டு, அதிகாரத்தில் இருக்கும் மோடி தொண்டர்களின் முன்மாதிரியாகி விட்டார்.

இதைப் பொறுக்க இயலாத நிதிஷ்குமார், அத்வானி போன்றோர் நிம்மதி இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடாக ரத யாத்திரையை மீண்டும் அறிவிக்க வேண்டிய அவசர நிலை, உட்கட்சிப் பூசலால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஊழலை எதிர்த்து, கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவரவேண்டிய லட்சிய வேட்கை இப்படித்தான் துவங்கியது.
முன்பெல்லாம் பல்வேறு கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இந்துத்துவத்தைப் போற்றி வளர்த்தார்கள். உதாரணமாக, ‘பிள்ளையார் பால் குடிக்கிறார்’ என்று கிளப்பிவிடுவார்கள். அவரை, ‘நான்தான் குடிக்க வைத்தேன்’ என சந்திராசாமிகள் ஆனந்தக் கூத்தாடுவார்கள்.
இது ஊடகங்களின் காலம். உண்மை, தெருவுக்கு வர ஒரு சில விநாடிகள் போதும். ஒரே ஒரு காட்சிப்பதிவில், நித்தியானந்தாக்களின் ஆன்மீக வாழ்வு முடிவுக்கு வந்துவிடுகிறது. இதைப் புரிந்துகொண்ட இந்து மேலாதிக்கவாதிகள், ஊடகங்களின் வழியாக அன்னா ஹசாரேக்களை உற்பத்தி செய்கிறார்கள்.
சென்னையில் கே.கே. நகரில், சினிமா படப்பிடிப்புக்காக, கலை இயக்குநர்களால் வடிவமைக்கப்பட்ட சிவன் சிலையைப் படப்பிடிப்பு முடிந்த பின்னால் அப்புறப்படுத்தாமலே போனதனால், மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்கா, சிவன் பூங்கா ஆனது.
இதை அகற்றக் கோரி, பல போராட்டங்கள் நடத்தியும், முடிவு எட்டப்படாமல் போகவே, பெரியார் திராவிடர் கழகம் அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டது. மதச்சார்பின்மை தேசம் என்றபோதும் பொது இடங்களில் கோயில்கள் அமைப்பதை, ஆக்ரமிப்பதை யாரும் அகற்றிவிட முடியாது.
அதைப் போலவே அசலை நகல்கள் ஜெயித்துவிடும் அரசியல் உலகில், அன்னா ஹசாரேக்கள் அத்வானியின் அரசியல் வாழ்வை, சூனியமாக்கிவிடும் வாய்ப்பு அதிகம். ஆகவே, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அத்வானிக்கு நேர்ந்துவிட்டது. அதனால், அவரும் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுவிட்டார்.  
தமிழ்நாட்டில் கூட ஒரு முக்கியமான திராவிடக் கட்சித் தலைவர் ஒருவர், தனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டதற்காக, மருத்துவர் நடைப்பயிற்சி மேற்கொள்ள சொன்னார். அவரும் அரசியல் காரணங்கள்,சிலவற்றைக் கூறி உடனே கோட்டையை நோக்கி நடைப்பயணம் சென்ற கடந்த கால வரலாறு இங்கும் உண்டு. பின்னாளில் அதே ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்து அவமானப்பட்டார்.

மண்டல் கமிஷன் பரிந்துரையைக் கிடப்பில் போட, ஏற்கனவே 1990களில் ரத யாத்திரை நடத்திய அத்வானியின் பெருமுயற்சியால், 564 முஸ்லிம்கள், பல்வேறு திட்டமிடல்களால், கலவரங்களின் வன்கொடுமைகளால் கொலை செய்யப்பட்டார்கள்.
இதன் எல்லையை விரிவுபடுத்தி, தன் சொந்த மாநிலத்தில் சோதனைக்களமாக 10,000க்கும் மேற்பட்டவர்களைப் படுகொலை செய்த துணிச்சல் மோடிக்கு வாய்த்திருக்கிறது. அரசின் அறிக்கைகளின்படியே 3500 என கணக்கிடப்படுகிறது.
தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களை, இனப்படுகொலை செய்த அரச பயங்கரவாதத்தில், இராஜபக்சேவுக்கு முன்னோடியாக மோடி திகழ்கிறார். இராஜபக்சேயைக் கண்டிக்கிற பலர், மோடியின் ஆதரவாளர்களாக இருக்கும் அரசியல் விநோதம் இங்கே கண்முன் நிகழ்கிறது.
‘நாம் தமிழர் கட்சித்’ தலைவரான இயக்குநர் சீமான் மோடியின் புகழ்பாடி வாக்கு கேட்கும் அளவுக்கு, இழிவான அரசியலை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் கூட்டங்களில் நிகழ்த்திக் காட்டினார்.
அவரால் மட்டுமே ஒரே நேரத்தில் பெரியாரின் பேரன் என்றும், இந்துத்துவத்தோடு கைகுலுக்கிக் கொண்டு ஈழம் பற்றியும் பேச முடிகிறது. ஊழல் பற்றிப் பேசுகிற அருகதை பாரதிய ஜனதாவுக்கு உண்டா? எனில்,அவர்களின் வரலாறு, நமக்குத் தொடர்ந்து அருவருப்பு ஊட்டுவதாக அமைந்திருக்கும்.
கார்கில் போரில் மரணம் அடைந்தவர்களின் சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் செய்கிற அளவுக்கு தேசபக்தி மிக்கவர்கள் அவர்கள். இந்தியாவின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக இவர்கள் பேசியது உண்டா? இல்லை. ஏனெனில் அதன் பங்குதாரர்களாக இருப்பவர்கள் என்பதால் பேச இயலவில்லை.
பாரதிய ஜனதா ஆளுகின்ற கர்நாடக மாநிலத்தில், சுரங்க முறைகேடு ஊழலால் நாடு சிரிக்கிறது. ஆகவே,பெல்லாரி மாவட்டத்தில் இருந்துதான், அத்வானி ஊழலுக்கு எதிரான ரத யாத்திரையைத் துவங்கி இருக்க வேண்டும்.
60,000 கோடி மதிப்புடைய 71 லட்சம் டன் இரும்புத்தாது கனிமங்களைக் கொள்ளையடித்த ரெட்டி சகோதரர்கள், ஒரு பங்கினை எடியூரப்பாவுக்கும், மற்றொரு பங்கினை டில்லியில் உள்ள பா.ஜ.க.தலைவர்களுக்கும் தந்துள்ளனர். இதை விசாரித்த லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தெளிவாகத் தெரிவிக்கிறது. பலரும் இதற்கு எதிராக எழுப்பிய குரல்களுக்கு, அத்வானி வகையறாக்களின் பதில் என்ன?
அலைக்கற்றை ஊழலில் கடந்த காலங்களில், பாரதிய ஜனதா கட்சி கடைப்பிடித்த கொள்கைகளைத் தான் அப்படியே பின்பற்றியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வாக்குமூலம் மற்றும் பிரதமர் அளித்த அறிக்கைகளில் கூறியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வாஜ்பாய் காலத்தில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி நடைமுறைப்படுத்திய இரண்டாம் அலைக்கற்றை மைக்ரேசனில் ரூ.43,000 கோடி, அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர் பி.சி.சாக்கோ அறிக்கை தாக்கல் செய்துள்ளார். வகுப்பு வெறியைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளத் துடிப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு வேசியின் வீட்டைப்போல் தேசத்தைத் திறந்து வைத்து, நாட்டை விற்பவர்களும் அடிப்படையில் தேசத்துரோகிகள் மட்டுமல்ல, மனித குல விரோதிகள்.
அருந்ததி ராய் சொன்னதைத்தான் திரும்பச் சொல்ல வேண்டி உள்ளது. ‘காங்கிரஸ், இரவில் மறைந்து கொண்டு செய்வதை, பாரதிய ஜனதா பகலில் செய்கிறது.’ இவர்கள் அல்லாத ஒரு அரசியல் சூழல் நாட்டிற்கு அமையாதவரை, எரியும் வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்கிற பிழைப்புவாதமே நம் தேசிய குணமாகத் திகழ்வதை மாற்ற முடியாது.
சுரண்டல் அற்ற சமூகத்திற்கு எதிராகச் செயல்படத் திராணியற்ற, கனவுகாணும் வல்லாதிக்கத்தின்குழந்தைகள் நாம்! அடிமைத்தனத்தின் பெருமைக்குரிய பிரதிநிதிகளாகிய நமக்குப் பாடம் கற்பிக்க, காலம்விரைந்து காத்திருக்கிறது.

அமீர் அப்பாஸ்
thanks to Uyirmmai.com
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி