படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

28 செப்., 2011

இனம் அழிக்க மதக்கலவரங்கள்- இந்துத்துவத்தின் மந்திரம் ..

..அரசியல் அதிகாரம் பெருவதற்கு ,சினிமா மற்றும் மதக்கலவரங்கள் இவைகளை விட மிகவும் எளிய வழிமுறைகள் இந்தியாவில் இல்லை.

ஒரு மணிதன் இன்னொரு மணிதனை கொன்றால் மட்டும் தான் கொலை, ஒரு கலவரத்தில் நடந்தால் அது வெரும் மோதல்கள்..விசாரனைகள், கமிசன்கள் என காற்றோடு கரைந்துவிடும். 

ஒரு இனத்தை அழிப்பதற்கு ஒரு கலவரம் போதும்.. பொதுவாக சாதி ,மதக் கலவரங்கள் வந்துவிடக் கூடாது என்பதில் முன்பெல்லாம் அரசுகள் மிகவும் கவணமாக பிரச்சனைகளை கையாளுவார்கள்.

இப்பொழுது இந்துத்துவா பேட்டண்ட் அரசுகள் மதக்கலவரங்கள், சாதிய கலவரங்களுக்கான சூழல்களுடன் காத்திருக்கின்றனர். பிறகு அதன் மூலம் ஒரு இன அழிப்பினை செயல்படுத்துகிறார்கள்.

அதன் தொடர்ச்சிதான் தமிழகத்தில் பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானசாதி கலவரம் என்ற பெயரில் சாதிக் கொலைகள் அரங்கேற்றப்பட்டது. 7 தலித் மக்களின் உயிரை பறித்துள்ளது ஃபாசிச அதிகாரத்தின் துப்பாக்கிகள்.

மூன்று பேர்களின் உயிர்களை தூக்கு கயிறுகள் தின்றுவிடக்கூடாது என போராடும் தமிழகத்தில், கலவரத்தினால் 7 பேரின் உயிரல்ல 7000 பேரின் உயிர்கள் போனாலும் அதை “ சண்டையில கிழியாத சட்டை எங்கப்ப இருக்கு “ என உதிர்த்துவிட்டு போய்விடுவதும் வாடிக்கையாகிவிட்டது.


இந்த உலகம் விழித்திருக்கையில் குஜராத்தில் கண்ணில் காணப்படும் 
ஒவ்வொரு முஸ்லீமும் ...கொல்லப்பட்டனர், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ,கொன்று நெருப்பில் பொசுக்கினார்கள், கருவில் இருக்கும் சிசுவையும் எரித்துக் கொன்றனர்...சொந்த மண்ணில் அனாதையாய் மெளனித்து பிணம் போல் வாழ்கின்றனர் .இந்துத்துவத்தின் பேயாட்டத் தாண்டவம் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது.

இன்று உச்ச நீதிமன்றம் மோடியை உச்சி முகர்ந்து நற்சான்றிதழ் கொடுத்து, அவருக்கு எதிரான வழக்கை திரும்பவும் குஜராத்திற்கே திருப்பி அனுப்பிவைத்து வழக்கமான “ சட்டம் தன் கடமையை செய்யும்” மந்திரத்தை உச்சரித்துள்ளது.





நீதிமன்றங்கள் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான மன்றங்களாக செயல்படுவது நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற குப்பை வார்த்தைகளை இனியும் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.

”குஜராத்தில் உள்ள நீதிமன்றங்கள் ஒரு போதும் நீதி தராது என்று தான் நாட்டின் உச்ச நீதிமன்றம் நாடி சென்றோம், ஆனால் அங்கும் நீதி கிடைக்கவில்லை ...திரும்பவும் நாங்கள் குஜராத்தின் நீதிமன்ற படிகளில் காத்திருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ”
இந்த நாட்டில் இனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை என்கிறார் இந்துத்துவவாதிகளால்
வெட்டி எரித்து கொலை செய்யப்பட்ட முன்னால் காங்கிரஸ் எம்பி ஜாஃப்ரி அவர்களின் மனைவி ஜாக்கிய ஜாஃப்ரி .

இந்துத்துவாதிகள் இந்த நீதி மன்றத்தின் மனுதர்ம தீர்ப்பினை மரணவியாபரி என்றிலிருந்து மனிதநேய பண்பாளர் என்று நரேந்திரமோடியினை தூக்கி கொண்டாடுகின்றனர்...
மதக்கலவரங்களால் ஒடுக்கப்பட்டவர்களை கொன்று குவிப்பதும், இனம் அழிந்த எச்சம் கொண்டு அதிகாரம் தேடுவது, பிறகு அதிகாரத்தின் வலிமையால் தனது நியாங்களை வலிமைபடுத்துவது. நீதி கிடைக்காதபோதும் அவர்களை சமுகத்தை விட்டு தூரமாக்குவதும்.இன்னும் கொலை செய்த கரை காயும் முன்பே தன்னை இதிகாச நாயகனாய் புனிதபடுத்தி கொள்வதுமாய் தொடர்கிறது இந்துத்துவத்தின் பயணம். கல்ல மெளனம் காக்கும் பெரும்பான்மை சமுகம்.. இனி மோடியின் குஜராத்தின் “ புள்ளி விபர வளர்ச்சிகளை “ காட்டி இது தான் இராம இராஜ்ஜியத்தின் முன்மாதிரி என புழங்காகிதம் அடைந்து கொள்வார்கள்
.
ஈழத்து கண்ணீரில் உப்புக்காய்ச்சும் சீமான்களும் தங்களது புனித தாயின் ஆட்சியில் தமிழகம் நரேந்திர மோடியின் ” குஜராத்தை” போல வரவேண்டும் என பாதத்தில் விழுந்து கோரிக்கையும் வைப்பார்கள்.

கொலை செய்த இரத்தம் காயும் முன்னே தான் ஒரு புனிதன் என்று காந்திய வழியில் உண்ணாவிரதம் தொடங்கி விட்டார் ” முன்மாதிரி முதல்வர் , இராம இராஜ்ஜியத்தின் பிரதம வேட்பாளர் நரேந்திரமோடி” .

”மானனும், வீரமும் மனிதனுக்கு அழகு” என்று சூத்திரர்களின் விடுதலைக்காக, மூத்திரசட்டியுடன் வாழ் நாள் முழுவதும் ஊர் ஊராக பயணம் செய்து பகுத்தறிவு பிரச்சாரம் செய்த பகுத்தறிவு சூரியனின் பிறந்த நாளில் ஃபாசிச இந்துத்துவத்தை எதிர்க்க ஆயிரமாயிரம் பெரியார்களை நாம் காண்போம்.


Posted by மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம்

உண்ணாவிரதம் என்னும் தேசிய நோய்

உண்ணாநிலைப் போராட்டம் இன்று இந்தியாவில் அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தையாக உள்ளது. செப் 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் குசராத் முதல்வர் நரேந்திர மோடி மதநல்லிணக்கத்திற்காக உண்ணாநிலை இருந்திருக்கிறார். இவரது இந்த மகத்தான போராட்டத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அதே போல், அன்னா அசாரே என்னும் இந்தியன் தாத்தா ஊழலை ஒழிக்க உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டார். ரமணா படத்தில் வசனம் பேசி விஜயகாந்தும், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதமிருந்து அன்னா அசாரேவும் ஊழலை ஒழித்து விடுவார்கள் என்று இளைய தலைமுறை நம்புகிறது என்றால் அதைவிட கேவலம் என்ன இருக்கிறது?

உண்ணாவிரதம் இருக்கும் இவர்களது யோக்கியதையைப் பற்றி நாம் பேசுவதற்கு முன்னால், உண்ணாநிலை என்கிற போராட்ட வடிவமே சரியான வழிமுறை கிடையாது என்பதே என் கருத்து. உண்மையான போராட்ட குணத்தை மக்கள் பெற்று விடுவதை தடுக்கும் வழிமுறையே உண்ணாநிலைப் போராட்டம். கருத்தியல் வடிவிலும், உடல் உழைப்பின் மூலமும், தங்களது கோரிக்கைகளை, சிந்தனைகளை மக்களிடமும், அரசிடமும் எடுத்துரைத்த போராட்ட வடிவங்களை மறக்கடிக்கச் செய்வதற்கே இந்த உண்ணாநிலை உதவும். ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் இந்த நாட்டில் உண்ணா நிலையை போராட்ட வடிவமாக கையிலெடுக்கும் இவர்கள் அடித்தட்டு மக்களின் விடுதலைக்கு எதிரானவர்கள். விவசாயிகள், நெசவாளர்கள் தங்கள் தொழில் முடக்கம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிற சம்பவம் அன்றாட நிகழ்வாக இருக்கிறது. அவர்களை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியது எது? பசி.
உணவின்மை இங்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வியல் முறையாக இருக்கும் உணவின்மை பிரச்சனையை, வலிந்து ஏற்றுக்கொண்டு அதனை ஒரு போராட்ட வடிவமாக அறிவிப்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம். அன்னா அசாரே மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாத விவசாயிகளும், தொழிலாளர்களும், இனிமேல் உணவு கிடைக்கும் வரை நாங்கள் உண்ணப் போவது இல்லை என்று அறிவித்து உண்ணாநிலை போராட்டம் அறிவிக்க வேண்டும். தங்களுக்கு உணவில்லாமல் செய்துவிட்ட முதலாளித்துவ அமைப்பை எதிர்த்து தொழிலாளர்கள் போராடக் கூடாது. இன்னும் சற்று விரிவாக சொல்ல வேண்டுமானால், ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக லெனின் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். வன்கொடுமைக்கு எதிராக தாழ்த்தப்பட்டோர்கள், இசுலாமியர்கள் மற்றும் பெண்கள் உண்ணாநிலை போராட்டம் அறிவிக்க வேண்டும். இனி வரும் இளைய தலைமுறையினருக்கு உண்ணாவிரதம் குறித்து உருவாக்கப்படும் கற்பிதம் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கக்கூடியது.
உண்ணாவிரத நாடகங்களும், ஊடக மேடையும்:
உண்ணாவிரத நிகழ்ச்சியை வீரியமான போராட்டமாக உருவாக்கப்படுத்துவதில் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. கார்ப்ரேட்டுகளின் முகவராக அடையாளப்படும் அன்னா அசாரேவின் உண்ணாவிரத்தையும், மதவெறியர் நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்தையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுப்போய் சேர்த்ததில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவர்கள் உண்ணா விரதம் அறிவித்த பிறகு ஊடகங்கள் வருகின்றனவா (அல்லது) ஊடகங்கள் அறிவித்த பிறகு, இவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை அறிவிக்கின்றார்களா என்று நாம் சந்தேதிக்க வேண்டியுள்ளது. மூவர் தூக்குத் தண்டைக்கு எதிரான போராட்டம், செங்கொடியின் உயிர்த் தியாகம் போன்ற நிகழ்வுகளை திட்டமிட்டு மறைத்த சில ஊடகங்கள், நரேந்திரமோடி, அன்னா அசாரே ஆகியோரின் உண்ணா விரதத்தை மட்டும் பெரிதுபடுத்தி காண்பிக்கின்றன. ஏனென்றால், இவர்களது உண்ணாவிரதம் சமூக மாற்றத்திற்கான நிகழ்வு அன்று; மாறாக சமூகம் விழிப்புணர்வு பெற்றுவிட கூடாது என்பதற்காக நடத்தப்படும் நாடகம். அந்நாடகத்திற்கான மேடையாக இந்த ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.
உண்ணாவிரதம் என்னும் ஆயுதம்:-
உண்ணாவிரதம் என்பது இவர்கள் குறிப்பிடுவது போல் ஓர் அயுதம்தான். அன்னா அசாரே, நரேந்திரமோடி போன்றோர் உண்ணாநிலை இருக்கும்போது, அவர்களது உண்மையான முகத்தினை மறைத்து, காப்பாற்றும் கவசமாக செயல்படுகிறது. இரோம் சர்மிளா, சானு போன்ற போராளிகள் உண்ணாநிலை இருக்கும்போது அரசு பயங்கரவாதமும், ஊடகங்களும் திட்டமிட்டு மறைக்கின்றன. ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக சிலர் மேற்கொள்ளும் உண்ணாவிரதம் அவர்களைக் கொல்லும் ஆயுதமாக செயல்படுகிறது. வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் அடித்தட்டு மக்களின் விடுதலைக்கு எதிராகத்தான் உண்ணாநிலை என்னும் ஆயுதத்தை நம் எதிரிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கும். தாழ்த்தப்பட்டோரின் இரட்டை வாக்குரிமைக்கு எதிராகத்தான் காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். 81 வருடங்களுக்கு முன் காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதம் அம்பேத்கருக்கு விடுத்த மிரட்டல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக காந்தியார் தொடுத்த வன்முறை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மதங்களும் உண்ணாநிலையும்:
கடவுளின் அன்பைப் பெறவும், ஏழைகளின் பசியை உணரவும் மதங்கள் உண்ணாவிரதத்தை அறிவுறுத்துகின்றன. இதன் பின்னணி என்ன? பசிக்கான மூல காரணத்தையும் அதை களைவதற்கான சமூகப் பணியினையும் மனிதன் மேற்கொள்ளக் கூடாது என்பதே. பிரார்த்தனை, உண்ணாநோன்பு போன்றவை புரட்சியை மட்டுப்படுத்தும் வடிவங்களே. ஆகவே தான், மதங்களும், அஹிம்சைவாதிகளும் அதனை தூக்கிப் பிடிக்கின்றனர். காந்தியடிகளின் உண்ணாவிரதம் அவரது இந்து மதப்பற்றின் வெளிப்பாடே.
தமிழர் போராட்டங்களும், உண்ணாவிரதமும்
தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக உண்ணாநிலை இருந்து உயிர் துறந்த சங்கரலிங்கனார், ஈழத்துப் போராளி திலீபன் போன்றோர் கூட உண்ணாநிலை என்னும் ஆயுதத்தை கையியெடுத்தனர்.
ஆனால், அவர்களது உண்ணாவிரதம் அவர்களைக் கொல்வதற்குப் பயன்பட்டதேயொழிய அவர்களது கோரிக்கைகள் வெல்வதற்கு பயன்படவில்லை என்பதை நாம் உணர வேண்டும். நமக்கான வாழ்வாதார உரிமைகளை நாம் எதிரிகளிடம் கேட்டு கொண்டிருக்க முடியாது. மக்களை அரசியல்படுத்துவதன் மூலம் மட்டுமே நம் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், உண்ணாநிலை என்கிற வடிவம் நமக்கானது இல்லை. நமக்கு சாதகமான தீர்வையும் அது தரப் போவதில்லை. ஒருவேளை, உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமாக நாம் உருவகப்படுத்தினால் வருங்காலத்தில் கீழ்க்காணும் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
1. மாட்டிறைச்சி உண்ணும் தலித்துகளை தூக்கிலிட வேண்டும் - பாபா குரு ராம்தேவ் உண்ணாவிரதம்.
2. இராமர் கோயில் கட்டும் வரை உண்ணாவிரதம் - அத்வானி அறிவிப்பு
3. சாதிவாரியான இட ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி – சோ உண்ணாவிரதம்.
4. இசுலாமியர்களை மும்பையிலிருந்து விரட்டும் வரை பால்தாக்கரே உண்ணாவிரதம்.
5. ஓகேனக்கலை கர்நாடகத்திற்கு கொடுக்கும் வரை சதானந்த கவுடா உண்ணாவிரதம்.
மேற்கூறிய உதாரணங்கள் ஏதோ என்னுடைய மிகைப்படுத்தப்பட்ட கற்பனை அல்ல, உண்ணாவிரதம் குறித்த புனிதக் கோட்பாடும், உண்ணாவிரதமிருப்பவர் குறித்த கதாநாயக பிம்பமும் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டால், கண்டிப்பாக இது போன்ற சம்பவங்கள் நிகழும். உண்ணாவிரதம் ஒரு சண்டித்தனம் என்ற பெரியாரின் கூற்று எவ்வளவு பெரிய உண்மை என்பதை அம்பேத்கர் தனிப்பட்ட வாழ்க்கையில் உணர்ந்திருப்பார். உண்ணாவிரதம் எதிரிகளை மிரட்ட கோழைகள் பயன்படுத்தும் ஆயுதம் என்பதற்கு காந்தியாரின் வாழ்க்கையே சாட்சி. நாம் சமூகத்தை மிரட்டுவதற்கான அரசியலை கையிலெடுக்க வேண்டாம். சமூக மாற்றத்திற்கான அரசியலே நமது கொள்கை. அக்கொள்கையின் அடிப்படையில் மக்களை ஆர்ப்பாட்டக்காரர்களாகவும், போராட்டக்காரர்களாவும் உருவாக்க உறுதி எடுப்போம். சுபர்மதி, ராம்லீலா மைதான பிம்பங்களை உடைத்தெறிவோம். மோடி மஸ்தான் முகத்திரையை கிழித்தெறிவோம்.


நன்றி: கீற்று

திசைகளற்ற சுவர்களுக்குள்!!!



சந்தித்துப்
 பின் விலகிய
ஒரு புள்ளியில்
சாட்சிகளாய் மெளனித்து நிற்கிறோம்!

பிணங்களின் மேல்
அரியணை கொண்டவன்
ஊர்கூடி தீர்ப்பு எழுதிய போதும்,
வேறொரு கிரகத்தில் வீசி எறிந்த போதும்,
திசைகளற்ற சுவர்களுக்குள்
சுழன்று வந்த அழுகுரல்
உன்னை நெருங்க முடியாமல் வீழ்ந்த போதும்,

ஆழ்ந்த சிந்தனையில் அமைதி காத்திருந்தாய்.

பாரம் தாங்காமல்
சோர்ந்து விடும் என,
முரட்டுக் கயிற்றுக்கு
முறுக்கேற்றி வலு சேர்த்தபோதும்,

நொடியில்
முடிந்துவிடாமல்
உயிரின் மாமிசத்தை
முழுமையாய் ருசிப்பதற்கு,
உடல் நலம் சோதித்த போதும்,

குரல் உடைந்து
பேரிருளுக்குள் புதைந்து கிடந்தேன்,

புள்ளியாய் எங்கோ
மறைந்து கொண்டிருந்தாய்.

தூக்கு கயிற்றின் இறுக்கத்தில்
விழிகள் பிதுங்கிய போதும்,
அவை உன்னை மட்டுமே தேடிக் கொண்டிருந்தது.
நுரை தள்ளி நீண்டு நெழிந்த நாக்கும்,
விரைத்து தொங்கிய கைகளும், கால்களும்
உன்னை நோக்கியே நீண்டிருந்தது.

மூச்சு குழாய்
ஒடிந்து நொறுங்கிய ஓசை
உன் காதுகளை சுற்றுகிறது...

"எல்லாம் முடிந்துவிட்டது"
என வரலாற்று திண்ணையில்
தலை சாய்த்து ஓய்வெடுக்கிறாய்.....

பின்னொரு நாளில்
சுழன்று நின்ற ஒரு புள்ளியில்
மீண்டும் சந்திக்கிறோம்.

முன்பு 'நீ' நின்ற இடத்தில் 'நான்'.

பறிக்கப்படும் உயிரை
வெறும் காட்சிகளாய் கண்டு
கரையவிடப் போவதில்லை!
என் குரல்
உன் சுதந்திரத்திற்கான சாட்சியாய் மட்டுமே
முழங்கும்!

26 செப்., 2011

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது? ஏன் அப்சல் குருதூக்கிலிடப்படக்கூடாது?



முகமது அப்சல் குருவின் வழக்கறிஞர் என்ற அடிப்படையிலும், கூடவே மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், நான் இத்துடன் அப்சல் குரு விடுத்த அறிக்கை நகலை இணைத்துள்ளேன்.
இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டது என்பது கண்டனத்துக்குரியது என்பதிலோ, அது எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த இயலாத செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அந்த குற்றம் குறித்த மொத்த புலனாய்வு நடைபெறும் வழிமுறையில், விதத்தில் பல கேள்விகள் முன் நிற்கின்றன.  மேலும் எவ்வாறு துவக்க நிலை விசாரணையே துவங்காத நிலையில் மின்னணு ஊடகங்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் சித்தரித்து அவரை கொன்றேயாக வேண்டும் எனுமளவிற்கு எவ்வாறு ஒலிபரப்ப இயலும்?
மேலும் மீண்டும் ஒரு பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 7 செப் 2011-ல் நடைபெற்று பல உயிர்கள் பலியான சில மணிகளில், அப்சல் குருவின் பெயர் இதில் இழுக்கப்பட்டிருக்கிறது.  ஊடகங்கள் மின்னஞ்சல் ஒன்றை குறிப்பிட்டு அதன் உண்மைத் தன்மை நிறுவப்படாத சூழலிலேயே, முக்கியமான நேர ஒலி/ஒளி பரப்புகளில் குண்டுவெடிப்பு என்பது அப்சல் குருவிற்கு ஆதரவாக உள்ள குழுவினால் ஏற்பட்டது போல் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் ஊடகங்கள் என்பது யாருக்கும் கட்டுப்படாத ஒன்றாகும்.  மேலும் 24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்புகளை மேற்கொள்கிற அத்தகைய ஊடகங்களின் செயல்பாடு, அடிப்படையான பத்திரிகை தர்மத்தை மீறுகிற செயல்களை திறம்பட கண்காணிக்க அதிகார அமைப்பு ஏதுமில்லை. அத்தகைய ஊடகங்களில் நடைபெறுகிற அனைத்து விவாத நிகழ்ச்சிகளும், நிலைத்திருக்கக் கூடிய கருத்திற்கு முரணாக யார் ஒருவர் மாறாக கருத்து சொன்னாலும் அதை எதிர்த்து மிகுதியான கருத்து திணிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. மின்னணு ஊடகங்களெல்லாம் மிக உரக்க ஊழலுக்கு எதிராக பேசிய போதிலும், எந்தவித பொறுப்புமின்றி அதிகாரத்தோடு அத்தகைய ஊடகங்கள் தாம் செய்து வரும் ஊழலை ஒருபோதும் உணர்ந்து பார்ப்பதில்லை.
ஊடகத்தின் முன்பாக யாரேனும் அப்சல் குருவிற்கு சாதகமாக பேசினால் அவர் இந்தியனுக்கெதிராக பேசுபவர் எனவும், தேசிய பாதுகாப்பு வல்லுனர்கள் சொல்லும் தேசப்பற்று என்பது நிலையாக நிற்கக் கூடிய கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் மற்றும் இந்து மத உரிமை பேசுபவர்களுக்கு மட்டுமே உரித்தானது போல் சித்தரிக்கப்படுகிறது.
நமது “அப்சல் குருவை காப்பாற்றுங்கள்” என்கிற பிரச்சாரம் இந்திய ஜனநாயகத்தில் கீழ்காணும் அம்சங்களை பிரதிபலிக்கிறது.
  1. புலனாய்வு அமைப்புகளில் நிலவி வரும் ஊழல் மற்றும் அவர்களிடம் தொழில் திறமை குறைவாக இருப்பது அம்பலப்படுத்தப்படுகிறது.  பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டவர் பலமுறை புகழ்ந்து பேசப்பட்டார்.  ஆனால் பின்னர் கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் அவருக்கிருந்த நிழலான மோசமான தொடர்புகள் காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் சிறப்பு பிரிவில் செயலாற்றும் காவலர்களின் ஊழல்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடலாம்.
  2. நீதித்துறை என்பது அரசியலமைப்பு சட்ட நிலை, மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஊடகங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் “இந்த நாட்டின் தேசிய மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக” தூக்கு தண்டனையை உறுதிப்படுத்துகிறது. எந்த ஒரு நபரின் இறப்பு குறித்த தண்டனையை முடிவு செய்யும் சட்ட அடிப்படை இங்கு கிடையாது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அது எந்த ஒரு இந்தியனும் இந்திய உரிமைக் குழுக்கள் அல்லது கார்ப்பரேட் நலனை திருப்திப் படுத்துவதற்காக தூக்கிலிடப்படலாம் என்றாகிவிடும்.
  3. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் திட்டத்தின் பிரதம மூளை என்ற அடிப்படையில் மெளலானா மசூத் அசார்,காஜிபாபா மற்றும் தாரிக் அகமது என்ற 3 பாக்கிஸ்தானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றக் குறிப்பாணை பதிவு செய்யப்பட்டது.  அத்தகைய பிரதம மூளையாக செயல்பட்டவர்கள் பிடிக்கப் படவில்லை.  கொலை நடவடிக்கையில் நிதர்சனமாக ஈடுபட்டவர்கள் இறந்து விட்டனர்.  எனவே சதிச்செயலில் ஒரு பங்கு அப்சலுக்கு உண்டு என கருதப்படினும் அவருக்கு தலைமை தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது. ஏனேனில் அவர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்படவும் இல்லை, தாக்குதலில் ஈடுபடவும் இல்லை.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்பதும், தீவிரவாதத்திற்கு உண்மை காரணம் என்னவென்று கண்டறியும் நடவடிக்கையும் புறந்தள்ளப்பட்டுவிடும்.
  4. மனித உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாக கைதான இருவர் ஒன்றும் அறிந்திராதவர்கள் என நிரூபித்துள்ளனர்.  இதில் கருவுற்றிருந்து சிறையில் குழந்தையை பெற்றெடுத்த ஒரு சீக்கிய பெண்ணும் அடக்கம். அவளது வாழ்வு முழுமையாக பழிவாங்கப்பட்டுவிட்டது.  நாம் எப்போதும் அவளை தொலைக்காட்சிகளில் கண்டதில்லை, என்பதுடன் அவளின் பயங்கரமான சோகமயமான வாழ்க்கையையும் கண்டதில்லை.  இது எவ்வாறு சில குடிமக்கள் கைவிடப்படுகிறார்கள் என்பதை காண்பிக்கிறது.
  5. டெல்லியிலும் நாட்டின் பிற பகுதியிலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நியாயமாக ஒன்றுபட்ட ஆதரவு காண்பிப்பதை காஷ்மீர மக்கள் பார்க்கின்றனர்.  அப்சலை தூக்கிலிடுவதென்பது அத்தகைய காஷ்மீர மக்களுக்கும், இதர இந்திய பகுதி மக்களுக்கும் இடையே நிலவிவரும் உணர்வு பூர்வமான பாலம் உடைந்துவிட ஏதுவாகும்.
  6. அப்சல் குருவிடம் எப்போதும் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், அவருக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராக முன்வராததால், அவர் வழக்கறிஞர் மூலம் தனது தரப்பை தெரிவிக்க இயலவில்லை. மிக முக்கியமான சாட்சியங்கள் கூட குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ள நியாயமான விசாரணை என்ற உரிமையை நாம் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும்.
  7. பாராளுமன்ற தாக்குதல் வழக்கின் முழுமையான அனுபவம் என்பது நமது ஜனநாயக நிறுவனங்களின் பலவீனத்தை காட்டுவதாக உள்ளது. அதே சமயம் அது குறிப்பிட்ட சில மெனக்கெடும் ஆர்வலர் குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜனநாயக உரிமைக்காக போராட துணிந்தால் அதற்கு இடமளிப்பதும் சாத்தியப்படும் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அந்த இடம் என்பது குற்றத் தீர்ப்பிற்குள்ளாகிவிடும்.  இந்துத்வா தீவிரவாதிகள் வெடிகள் வெடித்து கொண்டாடலாம், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு சில தினங்களுக்கு தொடர்ந்து ஒலிபரப்ப நாடக காட்சிகள் கிடைக்கலாம். ஆனால் இந்திய ஜனநாயகம் என்பது வெடித்து சிதறுவதாக ஆகிவிடும். எனவே தான் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது.
  8. நான் இத்துடன் அப்சலின் பத்திரிக்கை செய்தி அறிக்கை நகல் ஒன்றை இணைத்துள்ளேன்.  அவர் வேண்டுகையின்படி அது பிரசுரிக்கப்பட்டால் அவர் மீது தவறான கருத்துக் கொண்டிருக்கும் மக்களில் பலர் அவரின் குரலைக் கேட்க முடியும்.
- என்டி பஞ்சொலி,  வழக்கறிஞர், 09 செப் 2011

அப்சல் குருவின் பத்திரிகை செய்திக் குறிப்பு:
 சில தீய சக்திகள் மற்றும் சமூக விரோத நபர்கள் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கடுங்கொடிய மற்றும் பதைபதைக்க வைக்கும் குண்டு வெடிப்பு என்ற சம்பவத்தை மேற்கொண்டிருப்பது மிகவும் கவலைப்படக் கூடிய செயலாகும்.  அந்த கொடுஞ்செயல் அனைவராலும் கண்டிக்கத்தக்க செயலாகும்.  எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை கொல்வதை அனுமதிப்பதில்லை.  எனது பெயர் இதில் சம்பந்தமில்லாமல், தேவையில்லாமல் இழுத்தடிப்பது அறிந்து நான் மிகவும் துயருற்றுள்ளேன். சில தரகர்கள்/குழுக்கள் அசிங்கமான ஆட்டத்தை ஆடி என்பெயரை இதில் ஈடுபடுத்துகின்றனர்.  மிகக்கொடுமையான குற்றங்கள் நடைபெறும் போது சில தவறான நோக்கமுள்ள குழுக்கள் என் பெயரை வேண்டுமென்றே இழுப்பது என்பது இது முதல்தடவையல்ல. எப்போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் என் பெயரை வேண்டுமென்றே அடிபடச் செய்வதன் மூலம் என் மீது களங்கம் விளைவிக்கவும், எனக்கு எதிரான பொதுக் கருத்தை வலுப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.
 நான் இதை எனது வழக்கறிஞர் திரு என்டி பஞ்சொலி மூலம் இதை எனது பத்திரிகை செய்திக் குறிப்பாக அனுப்பியுள்ளேன்.  தயவு செய்து இதை பிரசுரிக்கவும்.
 (ஒ-ம்) அப்சல் குரு
த/பெ: அபிபுல்லா
பகுதி எண் 8, சிறை எண் 3
திஹார் சிறைச்சாலை


நன்றி: விணவு

ஆதிக்க சாதிவெறியும் அரச பயங்கரவாதமும்





ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இரண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இரண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன..!
இது வல்லரசு கனவில்.. வளர்ச்சிப் பாதையில் ஒளிரும் இந்தியப் பேரரசின் பெருமைக்குரிய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை.
தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் மனித உடலின் இரு கைகளைப் போன்றவர்கள். இரண்டு கைகளும் சண்டையிட்டுக் கொண்டால் அதை இயக்கும் மூளையே பார்ப்பனியம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். பார்ப்பனியம் பிரசவித்த சாதி ஆணவமே.. பரமக்குடியில் கலவரமாக பற்றி எரிகிறது. காவல் துறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நடத்தி தன்னை யாரென மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்.
தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தன்று.. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போலவே அவரைப் பின் தொடரும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் துயரமும் தொடருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டல மாணிக்கம் என்கிற ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனிக்குமார். ப்ளஸ் 1 படித்து வருகிறான். பக்கத்து ஊருக்கு நாடகம் பார்த்து விட்டு நள்ளிரவில் திரும்பும் வழியில் பச்சேரி என்கிற ஊரில் வைத்து கடுமையாக தாக்கப்படுகிறான். முத்துராமலிங்க தேவர் குறித்து கரித்துண்டால் தவறாக எழுதி வைத்ததாக சந்தேகத்தின் பெயரால் கொலை செய்யப்படுகிறான்.
அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பே ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிப் பிரவாகமாக மாறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டிய அரசும் காவல் துறையும் குற்றவாளியை தேடி கைது செய்யாமல் ஜான்பாண்டியனை கைது செய்திருக்கிறது. அவர் வந்தால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடுமாம். பரமக்குடியில் இருந்து 130 கி.மீ. தூரத்திலேயே..தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரின் கைதைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்டவர்கள் சுமார் ஒன்றறை மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகச் சொல்லி நடந்த பேச்சுவார்த்தை பலனின்றிப் போனது. காவலர்கள் தடியடி நடத்தியுள்ளனர். அதன் எதிர்விளைவாக வன்முறை வெடித்து இருக்கிறது. காவல் துறை மீது நடந்த எதிர்தாக்குதல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் உயிர் இழந்திருக்கின்றனர். இதே போன்று மதுரை சிந்தாமணியில் ஜான்பாண்டியன் கைதினை கண்டித்து நடந்த சாலை மறியலில் ஈடுபட்டவர்களை பரமக்குடி பாணியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். மொத்ததில் 8 பேர் உயிர் இழந்தனர். புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சி, சட்டம்- ஒழுங்கை தனக்கே உரிய காட்டுமிராண்டித்தனத்துடன் பாதுகாத்து விட்டது.
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் எத்தகையவர்கள் என்பதை அறிந்தாலே நடவடிக்கையின் உண்மை முகம் தெரிந்து விடும். பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிகில் D.M.E படிக்கும் மாணவர் தீர்ப்புகனி. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். விடுமுறை நாள் என்பதால் நண்பர்கள் அழைத்ததின் பேரில் இம்மானுவேல் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அவர் கலவரத்தில் சிக்கி சுடப்பட்டு இறந்திருக்கிறார்.
செங்கல் சூளையில் வேலை செய்யும் ஜெயபால் ஓராண்டுக்கு முன்னால் கலப்புத் திருமணம் புரிந்தவர். தன் நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு மருந்து வாங்க வந்தபோது துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார். அதே போல கரிமூட்டம் போடும் கூலி வேலைக்குச் சென்று பிழைக்கும் பன்னீர்செல்வம் சாலையோரம் இம்மானுவேல் நினைவுநாள் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்க நின்றவர். காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரின் அன்புக்குழந்தைகள் அம்புரோஸ்,ரெபோகாள் தாங்கள் அனாதைகளாகி விட்டதாக கதறுகின்றனர். 'அவர் உயிரோடு இருக்கும்போதே சோத்துக்கு வழியில்லை. இனி என்ன செய்யப் போறமோ?' என்கிறார் அவரின் மனைவி சிரோன்மணி.
வெளிநாட்டில் வேலை செய்து வரும் தன் மகன் குணசேகரன் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வந்த 55 வயதான தந்தை கணேசன் துப்பாக்கிச் சூட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். சுடப்பட்டதில் அடையாளம் தெரியாத பிணமாக முதலில் அறியப்பட்ட,  நடுத்தர வயதுடைய முத்துக்குமார் பரமக்குடியில் உள்ள எரிவாயு இணைப்பகத்தில் கடைநிலை ஊழியர்.
சுட உத்தரவு இட்ட காவல் துறை அதிகாரிகள் யார்? அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீதி விசாரணை கண் துடைப்பாக இருந்து விடக்கூடாது. கொடியங்குளம் கலவரத்தில் காவல் துறையின் அத்துமீறல் சரியே என்று விசாரணை ஆணையம் சொன்னதைப் போல தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது.
தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறையும் என்றார்கள். அது இப்போது உண்மையாகி விட்டது. வழக்கமாக கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் தருவார்கள். சுடப்பட்டு இறந்தவர்கள் தலித் என்பதால் அம்மா ஆட்சியில் உயிரின் விலை குறைந்து விட்டது. தலா 1 லட்சம் என அறிவித்து உள்ளார். பொற்கால ஆட்சி என்றால் சும்மாவா?

-அமீர் அப்பாஸ் israthjahan.ameer@gmail.com israthjahan.ameer@gmail.com

 நன்றி: கீற்று

15 செப்., 2011

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்


முதல் மக்கள் இயக்கம்
காந்திஜியின் வருகைக்குப் பின்னர்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு வெகுஜன இயக்கமாக – மக்கள் இயக்கமாக மாறியது. இதற்கு முன்னோடியாக 19-ஆம் நூற்றாண்டில் சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பெரய்ஸி இயக்கம்(Farizis Movement) என்ற மக்கள் இயக்கததைக் கூட்டியவர் கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்த ஹாஜி ஷரியத்துல்லா (Haji.Shariathullah) ஆவார்.
வங்காளத்தின் வடக்கு மாவட்டங்களில் 1820-களில் கரம்ஷா (Karam Shah) வும் அவர் மகன் திப்பு (Thipu)வும்
நடத்திய ஆன்மிக – அரசியல் இயக்கம்தான் இந்த பெரய்ஸி இயக்கத்துக்கு முன்னோடி. ஜமீன்தார்களின் கொடுமைக்கு ஆளாகும் விவசாயிகளின் குடி உரிமைகளுக்காகப போராடிய திப்பு, 1825 -இல் செராபூர் பகுதியைக் கைப்பற்றி ஆட்சிஅமைத்தார். ஆங்கில எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டி கோரா மலைப் பகுதிவரை தன் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தினார். 1830 – களிலும் 1840 – களிலும் இப்பகுதிகள் ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்த – பிரச்சனைக்குரிய பகுதிகளாகத் திகழ்ந்தன.* இவ்வியக்கத்தின் தாக்கம்தான் கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லாவைப் போராடத்தூண்டியது.
பிரிட்டீஷாருக்கு வரிவசூல் செய்து கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஜமீன் அமைப்பில் , ஆளுவோரின் பிரதிநிதிகளான ஜமீன்தார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலகட்டம், கிழக்கு வங்காளத்தில் ஜமீன்தார்களின் அடக்குமுறைகளுக்கு ஆளான விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் தங்கள் முதலீடுகளையும் உழைப்பையும் வரி என்ற பெயரில் பறி கொடுத்துக் கொண்டிருந்தனர்.
உரிமை இழந்து வந்த இம்மக்களை ஒன்று திரட்டி, பரிதாபூரை மையப்படுத்தி ஹாஜி ஷரியத்துல்லாவும் அவர் மகன் தத்தோமியானும் நடத்திய மக்கள் இயக்கம்தான் பெரய்ஸி இயக்கம். இவர்களின் ஜமீன் எதிர்ப்பு நாளடைவில் ஜமீன் எஜமானர்களான பிரிட்டீஷாருக்கு எதிரான கிளர்ச்சியாக வெடித்தது. 1839 முதல் 1857 வரை 18 ஆண்டுகள் இவ்வியக்கம் ஆங்கிலேயருக்குப் பல சிக்கல்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தியது.** கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தத்தோமியான், புரட்சியைத் தூண்டியவர் என குற்றம் சுமத்தப்பட்டு 1860 – இல் தூக்கிலிடப்பட்டார்.
சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பிரிட்டீஷாருக்கு எதிராக நடைபெற்ற பெரய்ஸி இயக்கம்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் மக்கள் இயக்கம் என்பதை புதிய வரலாறு பதிவு செய்யட்டும்.
(* B.L. Grover,S.Grover, A New Look at Modern Indian History, P.248. **lbid.,P.248)
முதல் சுதந்திரப் பிரகடனம்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனம் 2.7.1943 – இல் சிங்கப்பூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸால் செய்யப்பட்டது. ஜப்பானியரின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government) – என்ற தற்காலிக சுதந்திர அரசை அறிவித்தார். அவ்வரசுக்கு ஆசாத் ஹிந்த் பவுச் (Azad Hind Fauj) – என்ற இந்திய தேசிய ராணுவத்தையும் தனி ரிசர்வ் பேங்க் ஒன்றையும் ஏற்படுத்தினார்.* அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய சுதந்திரக் கொடியை முதன்முதலாக அந்தமானில் 30.12.1943-இல் ஏற்றி ஆங்கிலேயரை அச்சம் கொள்ள வைத்தார்.
நேதாஜியின் இந்த இமாலய முயற்சிக்கு முன்னோடியாக, இந்திய மண்ணிலேயே ஆங்கிலேயருக்கெதிரான தனி
சுதந்திர அரசுகளைப் பிரகடனப் படுத்தியவர்கள் இஸ்லாமியர்களாவர். (* lbid.,P.665)
இந்திய வஹாபி இயக்கத்தின் தலைவர் சையது அஹமது ராய்பரலி அவர்கள் உத்திரப் பிரதேசத்தில் அச்சாதனையை நிகழ்த்தினார். சமய – சமுதாய சீர்திருத்த இயக்கமான வஹாபி இயக்கம் பின்னர் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட இயக்கமாக மாறியது. ஹாஜ் சரியத்துல்லா, தத்தோ மியான் ஆகியோரது வீழ்ச்சிக்குப் பின்னர் பெரய்ஸி இயக்கத்தைச் சார்ந்த தொண்டர்கள் இந்த வஹாபி இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.* *(lbid. P.248..)
பாட்னாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட செய்யது அஹமது ராய்பரலி, இந்திய தேசத்தைத் தாருல் இஸ்லாம் (Darul Islam) அதாவது ‘இஸ்லாமியர்களின் உலகம்’ என்ற சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தினார். இச்சுதந்திர அரசுக்கென மேற்குப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் தன் ராணுவத்தளம் அமைக்ப்பட்டது. இச்சுதந்திர அரசின் நோக்கம், ‘இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காக ஜிஹாத் (புனிதப்பேர்) புரிவதாகும்’.
செய்யது அஹமது ராய்பரலியின் இச்சுதந்திர அரசம் அதன் முன்னணித் தலைவர்களும் ஆங்கிலேயரின் அடக்கு முறைகளால் சந்தித்த கொடுமைகள் ஏராளம். பாட்னாவில் விலாயத் அலி, ஹிமாயத் அலி ஆகியோர் தலைமையில் ஆங்கிலேயருக்கெதிரான புரட்சிகள் தொடர்ந்தன.
கிளர்ச்சியில் ஈடுபட்ட மௌல்வி. முஹம்மது ஜஃபிரை ஆங்கில அரசு கைது செய்து, தேசத்துரோக தண்டனை விதித்து அந்தமானுக்கு நாடு கடத்தியது. அவர் அந்தமானில் பல வருடங்கள் தனிமைச் சிறையில் வாடினார். 1870 – இல் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான அமீர்கானும் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரை அந்தமானுக்கு நாடுகடத்தும் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி நார்மனை அப்துல்லா என்ற முஜாஹித் இளைஞன் சுட்டுக்கொன்றான். இதுபோன்ற பல வீரவரலாறுகள் இச்சுதந்திர அரசின் நடவடிக்கையில் உண்டு.
இதுபோன்றே 1921-இல் மலபார் மாப்பிள்ளைக் கிளர்ச்சியின் போது, கேரளாவில் எர்நாடு, வள்ளுவநாடு, பகுதிகளை ஒருங்கிணைத்து கிலாபத் இராஜ்யம் என்ற தனி சுதந்திர அரசை அலி முஸல்லியார் பிரகடனப்படுத்தினார். இவ்வரசுக்கென கிலாபத் கொடி, கிலாபத் நாணயம், கிலாபத் ராணுவம் ஏற்படுத்தி தனி முத்திரையுடன் கூடிய சாகச ஆட்சியை, ஆங்கிலேயரை ஆதரித்த சமஸ்தாங்களின் எல்லைகளுக்குள்ளேயே நடத்திக்காட்டினார்.
இவ்வாறு இந்த மண்ணில் சுதந்திரத்திற்காய் சிந்தப்பட்ட முதல் ரத்தம் – முதல் போராட்ட உத்வேகம் – முதல் மக்கள் இயக்கம் – முதல் சுதந்திரப் பிரகடனம் என பல முதல்களுக்குச் சொந்தக்காரர்களாக, அம்முதல்களுக்கு மட்டுமே சொந்தம் உடையவர்களாக இஸ்லாமிய பரம்பரை உள்ளது.
2. மண்ணிற்காக மார்க்க அறிஞர்கள்
கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கலந்து கொள்ள மாட்டோம்.-மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி.
ஒரு மனிதன் ஒரு பட்டாளம்
மீரட் ராணுவ முகாமுக்கு அருகில் வசித்து வந்த ஒரு பக்கிரியை, சர்க்கார் அவ்விடத்தை விட்டுச்சென்று விடும்படி உத்தரவிட்டது. சர்க்காரின் உத்தரவு கிடைத்ததும் அப்பக்கிரி ஒன்றும் அற்pயாத ஒரு சாதுவைப் போல யாதொரு பதிலும் கூறாமல் தன் யானை மீதேறி பக்கத்திலுள்ள கிராமத்துக்குச் சென்று சிப்பாய்களின் வீடுகளில் சொந்தமாக வசித்துக் கொண்டு, தமது அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார். அவர் தான் அதிதீவிர தேசபக்தரான மௌல்வி அஹமதுஷா என்பவர். அவரது புனிதமான பெயரானது ஹிந்துஸ்தானத்துக்கே ஒரு ஜோதியைக் கொடுத்திருக்கிறது. – என்று வீரசாவர்க்கரால் புகழப்பட்ட ஒப்பற்ற விடுதலைப் போராட்ட தியாகிதான் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.*
சென்னையில் பிறந்து வளர்ந்து உத்திரப் பிரதேசத்தில் வாழந்தவர்.புரட்சி விதையை நாடெங்கும் விதைப்பபதந்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர். லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பகிரங்கமாக சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். ”ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டையோ மதங்களையோ பாதுகாக்க முடியாது” – என்றார். ஆங்கில அரசு வதித்திருந்த பல தடைகளை மீறி இவ்விதம் பிரச்சாரம் செய்ததற்காக அவர்மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி, ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65.)
கைது செய்யப்பட்டு பைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். 1857 – இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் போது சிறைச்சாலையை உடைத்து சிப்பாய் போராளிகள் இவரை விடுவித்தனர். சிறந்த ராணுவ யுத்த நிபுணரான அஹமதுல்லா ஷாஹ் தனக்கென ஒரு சிறுபடையைத் திரட்டி, லக்னொவின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஒரு குட்டி அரசையே நடத்தினார். சுதந்திர யுத்தத்திற்கான வலைகளை வெகு திறமையுடன் வீசி வந்தார். அந்த வலைகள் லக்னோவிலும் ஆக்ராவிலும் உள்ள மூலை முடக்குகள் எல்லாம் பரவிக்கிடந்தது. தன் தனித்துவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தார்.
ஆங்கில அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே ஒரு மகத்தான இயக்கத்தை ரகசியமாக உருவாக்கிய நானா சாஹிப், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், அலி நத்ஹிகான் போன்றத்தலைவர்களின் இணையற்ற திறமையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். – வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.77.
ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டீஷ் ராணுவத் துருப்புகளுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வருவதை அஹமதுல்லா ஷாஹ் அறிகிறார். ஆந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக 1858 ஜனவரி 15 – இல் கான்பூர் நோக்கிப் படை நடத்தினார். மேஜர் அவுட்ராம் படைக்கும் மௌல்வி படைக்கும் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். ஆனால் வீரர்கள் அவரை ஆங்கிலேயர் கையில் சிக்கவிடாமல் ஒரு டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட காயம் பூரணமாக குணமடையுமுன் பிப்ருவரி 15 – இல் மீண்டும் போர் முனைக்கு வந்துவிட்டார்.
கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. காலின் வந்து சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மௌல்வியின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌல்வியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப் பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.
அஹமதுல்லா ஷாஹ்வின் இணையற்ற தைரியத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் ஹோம்ஸ் குறிப்பிடும் போது: புரட்சிக்காரர்களின்… தலைவரான பைசாபாத் மௌல்வி அஹமதுஷா மகத்தான சார்த்தியமும் தைரியமும் உத்வேகமும் வாய்க்கப்பெற்றவர். ஓர்உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் ஆற்றல் படைத்தவர். ஒரு பெரும் ராணுவத்தையும் நடத்தும் சக்தி பெற்றவர். என்று புகழ்ந்துள்ளார்.* (* வீரசாவர்க்கர், எரிமலை., பக்கம்.354.)
அதன்பின்னர் லக்னோவின் இருதயம் போன்ற ஷாஹத்கன்ஞைக் கைப்பற்றி, கோட்டை போன்ற கட்டிடத்தில் இருந்து ஆங்கிலேயரது பீரங்கிப் படையைத் தாக்கினார். இவரை அப்பகுதியில் இருந்து விரட்ட ஆங்கில அரசு 21 படைப்பிரிவுகளை அனுப்பி வைத்தது. இதனால் லக்னோவில் இருந்து 29 மைல் தூரத்திலுள்ள பாரியில் முகாமிட்டார்.
அயோத்தி பகுதியில் சிற்றரசு நடத்திய பான்ராஜா ஜகன்னாத சிங் தனக்கு உதவுவார் என்ற எண்ணத்துடன் அவருக்கு கடிதம் அனுப்புகிறார். ஜகன்னாத சிங்கிடம் இருந்து அஹமதுல்லா ஷாவிற்கு அழைப்பு வருகிறது. அவர் அழைப்பின் பிண்ணனியில் பின்னப்பட்டிருந்த சூழ்ச்சியை அறியாத அஹமதுல்லா ஷாஹ். ஆரவாரம் ஏதுமின்றி யானை மீதமர்ந்து பாவன்ராஜாவின் கடி நகருக்குள் நுழைகிறார். அவர் கோட்டைக்குள் நுழைந்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கோடடைச்சுவரின் மீது காவலர்கள் சூழ ராஜா ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார். சதிவலைக்குள் அகப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மௌல்வி, தப்பிக்க முயற்சிக்கு முன் ராஜாவின் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட… தோட்டாக்களை மார்பில் ஏந்தி மண்ணில் சாய்கிறார் அஹமதுல்லா ஷாஹ்.
ஆங்கிலேயருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் ராஜாவும் அவர் தம்பியும் வீரமரணமடைந்த மௌல்வியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, 13 மைல் தூரத்திலுள்ள தாணாவில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயரிடம் ஓடினர். மௌல்வியின் தலையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதனை ஒருகம்பில் செருகி போலிஸ் கொத்தவால் சாவடியில் எல்லோரும் பார்க்கும் படி ஊன்றி வைத்துத் தங்கள் ஆத்திரங்களுக்கு ஆறுதல் தேடிக் கொண்டனர். அன்னாரது உடலைத துண்டு துண்டாக வெட்டி தீயிலிட்டுப் பொசுக்கினர். இந்த மண்ணிற்காக உயிர் நீத்த அப்அபருமகனின் உடல்கூட முறைப்படி நல்லடக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறமுடியாமல் போயிற்று. அவரது தலை மட்டும் அஹ்மத்பூர் ஹான் மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒரு கையில் வாளையும் மறுகையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத்தியாகி (மௌல்வி அகமதுஷா) புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை ! – வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.354.
ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்து கொண்டதற்காக ராஜா ஜகன்னாத சிங்கிற்கு ஆங்கில அரசு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்துப் பாராட்டியது.
மௌல்வி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் தீரத்தைப் பற்றி ஜெனரல் தாமஸ் என்ற ஆங்கில அதிகாரி : இந்திய சுதந்திரத்திற்காகப் புரட்சி செய்தவருள் இவரைவிட மேலான வீரர் எவருமில்லை. ஸர், ஆலன் கேம்பல் என்ற மாபெரும் ஆங்கிள தளபதி, யுத்தக் களத்தில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு இவரே காரணம். தன் தாய்நாடு விடுதலை பெற வேண்டும் என்று போராடியதில் இவர் ஒரு நிகரற்ற தீரர்;. – என்று குறிப்பிட்டுள்ளது உண்மை … வெறும் புகழ்ச்சி இல்லை!*
(* ஏ.என்.முகம்மது யூசுப், இந்தி விடுதலைப் போராட்ட வீரர்கள், பக்கம்,60-61.)
ஒரு வாள் இருபது தலைகள்
மௌல்வி அஹமதுல்லா ஷாஹ் போன்று ஒரு தனிமனிதராக இருந்தாலும் ஒரு பட்டாளத்திற்குரிய முழு பராக்கிரமத்துடன் திகழ்ந்த மற்றொரு மார்க்க அறிஞர் மௌல்வி மிர்ஜா மஹ்தீ சாலிஹ் சிறந்த போர்க்கலைப் பயிற்சியாளராகத் திகழ்ந்த மிர்ஜா மஹ்தீ, முஃத்தீகன்ஞ் பகுதியைத் தன் ஆளுகைப் பகுதியாகக் கொண்டவர். இவரது முஃத்தீகன்ஞ் எல்லைக்குள் ஆங்கிலேயர் நுழைந்தால் அவர்களது தலை தப்பாது.
1858 – இல் இவரை வீழ்த்துவதற்காக கௌகாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கிலப் படை மிர்ஜா மஹ்தீயின் எல்லைக்குள் நுழைய முடியாமல் தத்தளித்தது. பல நாள் முற்றுகைத் தொடர்ந்தது. ஒரு நாள் அதிகாலை பஜ்ரு தொழுதுவிட்டு பள்ளிவாயிலை விட்டு மிர்ஜர் மஹ்தீ வெளிவர, ஆங்கிலப் படை அவரைச் சூழ்கிறது. தனி நபராக நின்று 20 பேரை வெட்டி வீழ்த்தி இறுதியில் எதிராளியின் குண்டுகளை மார்பில் தாங்கி சாய்கிறார். இப்படி இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய உலமாக்கள் பலர் வீர மரணம் அடைந்தபோது, அவர்களது ஜனாஸா (இறந்த உடல்)வைப் பொதிந்த கபன்துணி (சவத்துணி) முழுக்க இரத்தக்கறைப் படிந்திருந்தது உண்மை வரலாறாகும்.

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்


சிப்பாய்கள் பெற்ற உத்வேகம், ஒரு பிடி மண்
சிப்பாய்கள் பெற்ற உத்வேகம்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது 1857 -இல் நடந்த சிப்பாய் கலகம் ஆகும்.
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியப் போக்குகளுக்குத் துணை போகிறோமே என்ற அதிருப்தியுடன் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிய ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு. பிரிட்டீஷாருக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் உத்வேகத்தைக் கொடுத்ததே ஓர் இஸ்லாமிய நாடு சந்தித்த போர்தான்.
நெப்போலியனையே கடற்ப்போரில் தோற்கடித்த ஆங்கிலப் படை முதன் முதலாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போரில்தான் தோல்வியைச் சந்தித்தனர். 50 கோடி ரூபாய் செலவு செய்து, 20 ஆயிரம் போர் வீரர்களை இழந்த ஆங்கிலேயரின் அத்தோல்வி, இந்திய சிப்பாய்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. ஆங்கிலேயர் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அவர்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய சிப்பாய்களுக்குப் பிறந்தது.
ஆங்கிலேயரை வென்று துரத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது ஓர் இஸ்லாமிய நாடு என்றால், அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவாக்கியது ஓர் இஸ்லாமிய மார்க்க நெறி ஆகும். 1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப் பிரிட்டீஷார் அறிமுகம் செய்தனர். ஆத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எளிதாக வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக்கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்தோட்டாக்களைப் பொதிந்திருந்த மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில் தடவப்பட்டிருந்த பன்றி – பசுக் கொழுப்பு வாயில்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட(ஹராம்)உணவு ஆகும். பிராமணர்களும் பிற சைவர்களும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். எனவே தங்கள் வாயில் பன்றி – பசுக்கொழுப்பு படுவதை இருசாரரும் வெறுத்தனர். கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட என்ஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது. அந்த நேரத்தில் வங்காளம் பராக்பூரில் முகாமிட்டிருந்த 34-வது படைப்பிரிவு புரட்சியை ஆரம்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது இப்படைப் பிரிவிலுள்ள இந்திய சிப்பாய்களுக்கு கல்கத்தாவின் அருகில் தங்கியிருந்த அலி நத்ஹிகான் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்தான் ஆதரவும் தூண்டுதலும் அளித்து வந்தார்.*
இந்த நேரத்தில் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய வீரர்களிடம் பிரிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள் ஏற்படுத்தினார்ககள். ஆயிரக்கணக்கான பக்கீர்கள் பல இடங்களுக்கும் சென்ற சிப்பாய்கள் மனதில் விடுதலைத்தீயை மூட்டினர். ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.** (* வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.85) (** மேற்படி., பக்கம்.63)
மக்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் மூலம் இப்பக்கீர்கள் சுதந்திர எழுச்சியை ஊட்டினர். இதனை வீரசாவர்க்கர், 1857-இல்…தேசயாத்திரை செய்வதாக கூறிவந்த சன்னியாசிகளும் பக்கிரிகளும் மௌலவிகளும் பண்டிதர்களும் ஒவ்வொரிடத்திலும் ரகசியமாக ஜனங்களுக்கு சுதந்திர யுத்தத்தைப் பற்றி போதித்துச் சென்றனர். அவ்வாறாக புரட்சித்தீ எங்கும் பரவுவதற்கான உறைகள் வெகு சுதந்திரமாக் கைக்கொள்ளப்பட்டன.
அந்தப் போதகர்கள் (மௌல்விகள்) ஒவ்வொரு நகரத்திற்கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள் பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவரப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் ஹிருதயத்தில் சுதந்திர உணர்ச்சியையும் தேச பக்தியையும் குமுறி எழும்படி செய்தார்கள்*. -என்று வியந்து தன் நூலில் வடித்துள்ளார்.
பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன் இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர். (* மேற்படி, பக்கம். 63-64)
அவ்வாறு எதிர்த்தவர்கள் விலங்கிடப்பட்டு, ராணுவ உடைகள் கிழித்தெறியப் பட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அவமானப்பட்ட குதிரைப்படை வீரர்கள் சிறைகளை உடைத்துக் கைதிகளை விடுவித்துக்கொண்டு வெளியேறினர்.அப்போது கர்னல் பின்னஸ் போன்ற அதிகாரிகளையும், ஏராளமான பிரிட்டீஷாரையும் கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு தீயிட்டனர்.
அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! – என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.*
இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார்.** நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.
கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.
(* ஏ.என். முகம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.10)
(** B.L.Grover, S.Grover, A New Look at Modern Indian History, P665)
பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது. அதில் கைதான – கொல்லப்பட்ட – தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.
வட இந்தியாவில் அப்புரட்சியின் பாலமாக முஸ்லிம்கள் இருந்ததால், முஸ்லிம்களை விடக்கூடாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர், கலகத்தை ஒடுக்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை சகல நிலைகளிலும் இழப்புக்குரியவர்களாக்கினர். முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.
1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.- திவான் இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பக்கம்,57.
இஸ்லாமியர் நடத்திய அரசுகள் – அதன் கஜானாக்கள் அபகரிக்கப்பட்டன. இஸ்லாமிய செல்வந்தார்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் உடைமைகளை இழந்தனர் இன்று தென்னிந்திய முஸ்லிம்களை விட வட இந்திய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுதான் காரணமாகும். இதில் தப்பிப் பிழைத்த ஒரு சில செல்வந்தர்கள் இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டனர். அதனால் தான் இன்று சாலை ஓரத் தொழிலாளிகளாக – கூலிகளாக – ரிக்ஷா ஓட்டுபவர்களாக வட இந்திய முஸ்லிம்களை நாம் காண்கின்றோம்
இஸ்லாமியரின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இந்திய மண்ணில் அவர்களது வாழ்க்கைத் தரத்தையே மாற்றி அமைத்தது. இது பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர வேண்டும். அது காலத்தின் தேவை.
ஏனென்றால் இன்றும் இஸ்லாமியரின் வளர்ச்சியை இம்மண்ணில் தடுக்க, அவர்களைப் பொருளாதரத்தில் வீழ்த்துவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்களது நோக்கம் கோவை போன்ற இடங்களில் நிறைவேறி வந்துள்ளதையும் காணலாம்.
இவ்வாறு இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போரான சிப்பாய் கலகம் உருவாக உத்வேகம் அளித்தவர்கள் – அக்கலகத்தை தங்கள் பிரச்சாரங்கள் மூலம் சுதந்திரப் போராட்டமாக மாற்றியவர்கள் – அப்போராட்டத்தில் இழப்புகளுக்கு ஆளானவர்கள் பெரும்பான்மை முஸ்லிம்களே என்பது வீரசாவர்க்கர் போன்றோர் தரும் வாக்கு மூல உண்மையாகும்.
ஒரு பிடி மண்
பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். இந்தச் சூழலில் தான் 1837 -இல்-பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.
1847 – இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து – முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக்  காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்.-என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து – முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.
இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, “ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டும் மாடுகளை வெட்டக்கூடாது” – என்று பிரகடனப் படுத்துகிறார். நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், “என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்” – என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.
பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய திட்டம் உருவானது.
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும்.அவனை முடித்து உய்pரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம்.- என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.*
தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு – போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.
… ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.**
(* காஸிம் ரிஸ்வி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர் பக்கம், 7., ** வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம்,58.)
இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா – ராஜஸ்தான் – மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக – ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.
…ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 99.
ஆனால் மே 10-ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமைiயாக இறங்கினர்.
தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.
மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். ஒரு நாள் காலை… காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.
ஹட்ஸன்: பகதுர்ஷா… நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! (என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான். அங்கே… பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு… இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து…)
பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்! (கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு …
ஹட்ஸன்: உமது கண்களில் என்ன… நீர் வற்றி விட்டதா?
பகதுர்ஷா: ஹட்ஸன் … அரசர்கள் அழுவதில்லை! (என்று பெருமிதத்துடன் கூற… தலை குனிந்த வாறு வெளியேறுகிறான் ஹட்ஸன்)*
அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள்… உடம்பிலிருந்து துண்டாய்! பெற்ற மனங்கள் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதுர்ஷா கலங்கவில்லை.
* Kasim Rizwi, The Great Bahadur Sha Jaffer, P.10.
சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது. மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது. “என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்.” – என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
கேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 296-297.
தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார். பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து,* அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்! – என்று சபதமேற்றார். இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே … ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.
(* அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்


வடக்கில் சிந்திய முதல் ரத்தம், தெற்கின் முதல் போராளியோடு, கிளிங்கர்கள்


1. முதன்மையாளர்கள்

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. – குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.
வடக்கில் சிந்திய முதல் ரத்தம்
வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.
இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.
1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா.
ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.
தெற்கின் முதல் போராளியோடு
தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரவாற்று நாயகர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டப்பொம்மன். இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்தித்த கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல். அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை,
மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்…
- என்று பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் புகழ்கிறது.* (* செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.36)
கட்டபொம்மன் படையில் வீராகளாகவும் ஏராளமான இஸ்லாமியர் இருந்திருக்கின்றனர். அவர்கள் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை வாய்பேச முடியாதவர் என்ற பொருளுடைய MOOKAH என்னும் உருது வார்த்தையால் அழைத்ததைக் கர்னல் வேல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்**.
இச்செய்திகள் தென்னகத்தின் முதல் போராளிகளுடனும் இணைந்து இம்மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் புரிந்தவர்கள் இஸ்லாமியர் என்பதை வெளிப்படுத்துகின்றன. (** செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.38)
கிளிங்கர்கள்
மலேசிய திருநாட்டின் பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் முன்பு கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால் அழைக்கப்பட்டனர். கிளிங்கர்கள் என்ற பினாங்கு வாழ் தமிழர்களின் பட்டப் பெயரின் பின்னால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாறு ஒன்று ஒழிந்திருக்கின்றது.
தமிழகத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்திதுப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்டுது வரலாறு. மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு திருப்தியடையாத ஆங்கில அரசு, அன்னாரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தியது.
அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களுக்கு விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர். நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேரிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.
அக்கைதிகளில் இருவருக்கும் மட்டும் நடக்கக் கூட முடியாத அளவிற்கு சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டுகளைக் கைச்சங்கிலியில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் அந்தக் கைதிகள் கூட்டத்தில் தலைமை சான்றவர்களாவர். அவர்களில் உருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. முற்றவர் முக்கிய படைத்தளபதிகளில் உருவான சேக் உசேன் எனற் இஸ்லாமிய இளைஞர்*.
யார் இந்த சேக்உசேன்?
(* Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 – இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. பார்வை:மேற்படி பக்கம்.45.)
இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி [1800-1801] முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.
இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷ்கான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். ஆந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.* ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சிஙில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்**
(* K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.) (**libd.,P.125)
அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர்.* இம்மண்ணின் விடுதலைக்காக ஜமாத்தாக(கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.
இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை தலைமை தாங்கி நடத்திச் சென்றவருள் ஒருவர்தான் பினாங்குக்கு நாடுகடத்தப்பட்ட சேக் உசேன். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத் திண்டுக்கல் புரட்சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.**
இந்த சேக்உசேன் தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்கு தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பட்டினியால் வாடி அங்கேயே காலமானவர். இம்மண்ணின் விடுதலைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று தியாக வரலாறு படைத்தவர்களாக கனீஷாகான், சேக்உசேன் போன்ற இஸ்லாமிய தீரர்கள் விளங்கியுள்ளனர்.
(* செ.திவான், இந்திய விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம் 41.)
(** K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence, 1800-1803..,Page.274.)

14 செப்., 2011

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்

யாருக்கு வேலை இல்லை?


படித்துள்ளேன், ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. இது பெரும்பாலான இளைஞர்களின் புலம்பல்.
தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், மொழிப்புலமை ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் வேலை கிடைக்காததற்கான அடிப்படைக் காரணங்கள்.
அதேபோல, மாணவப் பருவத்தில் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் இல்லாமல், நாட்டு நடப்புத் தெரியாத தலைமுறை உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தலைமுறையினருக்கு இணையதளம் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், இணையதளத்தில்
வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே நம்பகத்தன்மையுடையவை அல்ல என்பதை உணராதவர்களாக இருப்பது வேதனைக்குரியது.
அதேபோல, மாணவர்களின் தோல்விக்குத் தாய்மொழியாம் தமிழைச் சரளமாகப் பேசத் தெரியாமல் இருப்பதும் முக்கியக் காரணமாகும். இதே நிலை
தொடர்ந்தால், வரும் காலங்களில் ஆங்கில மொழிக்குச் சிறப்புப் பயிற்சி மையங்கள் செயல்படுவதைப்போல, தமிழைப் பேசவும், படிக்கவும் பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கும் நிலை உருவாகும். கிட்டத்தட்ட இப்போதே அந்த நிலை வந்துவிட்டதாகக்கூட கூறலாம்.
மாணவரின் முதல்கட்டத் தோல்வி மொழியில் இருந்தே தொடங்குகிறது. உலக நாடுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு அடிப்படைக் காரணம் பேச்சுரிமைதான்.
ஆனால், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பிறகும், நமது இளைஞர்கள் பேசத் தயங்கியே வாழ்க்கையை இழந்துவிட்டனர். ஆனால், வீண் பேச்சு, விவாதங்களில் மட்டும் சளைப்பதில்லை.
இதை உணராமல் – உணர முயற்சிக்காமல் படித்துவிட்டேன், எனக்கு அரசுதான் வேலை அளிக்க வேண்டும் என்று காலத்தைக் கழிப்பது சுய முன்னேற்றத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவாது. எனவே, ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் செயல்படுவார்களேயானால், இளைஞர்கள் யாரிடமும் வேலை கேட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்படாது.
ஆளுமைத் திறன் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும். பணம் சம்பாதித்தால்தான் மனிதனைச் சம்பாதிக்க முடியும் என்ற சூழல் நிலவுவது என்பது உலகறிந்த உண்மை. இந்தச் சூழலில், ஆளுமைத் திறன் வளர்த்தலில் இன்றைய இளைஞர் சமுதாயம் அக்கறை செலுத்த வேண்டும்.
தாய் மொழி, தேசிய மொழி, பன்னாட்டு மொழிகளில் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது புலம்பெயர்ந்து செல்லும் அனைவருக்கும் அடிப்படையானது, அவசியமானது. ஆனால், எத்தனை இளைஞர்கள் படிக்கும் காலத்தில் மொழி அறிதலில் கவனம் செலுத்துகின்றனர் என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்கும் நிலையே உள்ளது.
முதுநிலைப் பட்டம் பெற்றவருக்குக்கூட தான் வாங்கிய பட்டத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களின் அர்த்தம் தெரியாமல் இருப்பது கசப்பான உண்மை.
புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஆங்கிலப் பயிற்சி நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள தனது பயிற்சி மையங்களுக்குத் தேவையான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் உள்பட சுமார் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களில் தேர்வானவர்கள் 2 பேர் மட்டும்தான் என்பதிலிருந்து, ஆங்கில மொழி அறிவில் நமது இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
வறுமையால் படிக்க இயலாத சூழலில் எந்த வேலையும் செய்யலாம் என்ற சூழல் இருந்தது. ஆனால், இன்று உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்ட நிலையில், ஆசிரியர் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சாராயக் கடைகளில் பணிக்குச் செல்வது அவர்கள் தகுதியை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
நமது பள்ளிகளில் பாடங்கள் மட்டுமே போதிப்பது, தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், உலக விஷயங்களைப் போதிக்காதது ஆகியனவே இதற்கெல்லாம்
அடிப்படைக் காரணம். அந்தக் காலத்தில் இருந்ததைப்போல நீதி போதனை வகுப்புகளை பள்ளிகளில் மீண்டும் தொடங்க வேண்டும். அதில் கூறப்படும் நீதிக் கதைகளைக் கேட்காமல் பிள்ளைகள் வளர்வதால்தான் நேர்மை, நியாயம், நீதி, மனசாட்சி போன்றவை எங்கே கிடைக்கும்? என்ன விலை எனக் கேட்பதுடன், குறுக்கு வழியில் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நிலை அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் பொது அறிவை வளர்க்கும் போக்கு அதிகரிக்க வேண்டும். தினமும் நாளிதழ்கள், வார இதழ்களைப் படித்து, அதில் உள்ள நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கான களமாக நூலகங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் அறிவுத் திறனுடன் ஆளுமைத் திறனையும் பெற முடியும். இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால்… யாருக்கும் வேலை இல்லை என்ற கேள்வி தானாகவே மறைந்துவிடும்.
 நன்றி:–ஆர். மோகன்ராம் – தினமணி
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி