பாபர் மஸ்ஜித்- சீதையை கடத்திய வழக்கில் -அலகாபாத் நீதிமன்றம் பரபரப...
- ராமர் பிறந்த இடம் அயோத்தி என தீர்ப்பளித்த நீதிபதி ...
- வரலாற்றை நிராகரிக்கும் தீர்ப்பு
- கண்ணை மறைக்கும் காவிப் புழுதி : சிறுபான்மையினருக்க...
- கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்ப...
- மனு(அ)நீதியின் வெற்றி
- பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: ஆபத்தானது சிபிஎம் பொலிட் ...
- பாபர் மசூதி : நீதிபதிகள் செய்த கட்ட பஞ்சாயத்து!
- அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் க...
- பாபர் மஸ்ஜித் இடமும்; பாரபட்சமான தீர்ப்பும்!
- நீதிமன்றங்கள் மத சார்புடையதாக மாறுவது சரியா?
- ''எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே..?..
- நீதியைத் தீர்மானிக்கும் அச்சங்களும் கிழிந்து போன ம...
- வரலாற்றை நிராகரிக்கும் தீர்ப்பு
- ரோமிலா தாப்பர், இர்பான் ஹபீப் உள்ளிட்ட 61 வரலாற்று அறிஞர்கள் அறிக்கை
-அமீர் அப்பாஸ்.
இடித்தாலும்
வெடித்தாலும்..
அவர்கள் கரசேவகர்கள்..!
அதற்காக துடித்தாலும்
தொழுதாலும்
நாங்கள் பயங்கரவாதிகள்..!
இடிக்கப்பட்ட மசூதி
யாருக்கு சொந்தம்?
இடித்தவனுக்கு சொந்தம்..!
அயோத்தியில்
நிலத்தைப் பறிகொடுத்தவனுக்கு
ஒரு பங்கு..!
ஆக்ரமிப்பாளனுக்கு இரண்டு பங்கு..!
மதச்சார்பின்மைத் தேசத்தின்
மகத்தான தீர்ப்பு..!
இத்தனை நாளாய்
எழுத்துப் பிழையாய்
வாசித்திருக்கிறேன்..!
உயர்நீதி மன்றம் அல்ல
அது உயர்சாதி மன்றம்..!
நீதிமன்றத் தீர்ப்பை
அவமதிக்க கூடாது..!
ஆனாலும்-
நீதியை அவமதிக்கலாம்..!
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
இந்த பூமி திருந்தாது
ஏனெனில்
இது இராமஜென்மபூமி
பூணூல்கள்-
பாம்பாகி கொத்துகிறது
தடி கொண்டு அடிக்க
தடுக்கிறது சட்டம்…!
ஒரு முறை நீதி
புதைக்கப்படும் போது
ஆயிரம் அநீதிகள்
விதைக்கப் படுகிறது..!
ஒரு இரும்புக் கரம்
நம்மை ஒடுக்கும் போது..
ஒராயிரம் பயங்கரங்களாய்
அது வெடிக்கக் கூடும்..!
விதைத்தவர்கள் மறந்தாலும்
அறுவடைக் காலம்
அவர்களை மறப்பதில்லை..!