பாபர் மசூதி : நீதிபதிகள் செய்த கட்ட பஞ்சாயத்து!

கட்டப் பஞ்சாயத்து – இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து
உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.
இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.
சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
tmmk.in
வேதனையளிக்கிறது: பாபரி மஸ்ஜித் நில வழக்கு தீர்ப்பு பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கை
அலகாபாத் உயர் நீதி மன்றம் பாபரி மஸ்ஜித் நில வழக்கு சம்பந்தமாக வெளியிட்டுள்ள தீர்ப்பின் முழு விபரம் இன்னும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் மூன்று நீதிபதிகளும் வழக்கின் முக்கிய பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எனினும் தீர்ப்பின் மைய கருத்து சர்ச்சைக்குரிய நிலத்தின் இரண்டு பகுதிகளை ஹிந்துக்களுக்கும் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பிரித்து அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசலின் மைய பகுதியை ஹிந்துகளுக்கு கொடுக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வழக்கில் சமர்பிக்கப்பட்ட உண்மை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லாமல் வெறுமனே மத நம்பிக்கையின் அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது நமக்கு வேதனையளிக்கிறது. எந்த கட்சியினரும் நிலத்தை பிரித்து வழங்கும்படி கோரவில்லை. இவ்வழக்கில் அகழ்வாரய்ச்சியின் கண்டுபிடிப்பிற்கு மிக அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு நடைமுறையை வரும் காலங்களில் வரும் வழக்குகளிலும் பின்பற்றப்படுமானால் நாட்டின் பல மத மற்றும் பண்டைய கால கட்டடங்களுக்கு பெரும் சவாலாகவே அமையும்.
வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் உயர்நீதி மன்ற தீர்ப்பு தான் இறுதியானது என்று குறிப்பிடவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு உள்ளது. உ.பி. சுன்னத் வக்பு போர்டு உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்திய முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை சட்டரீதியாகவும் ஜனநாயாக முறையிலும் மீட்டு எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். இந்நிலையில் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பொது அமைதியினையும் மத நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாக்குமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது
popularfrontindia
இது இறுதித் தீர்ப்பு அல்ல…
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
1949 முதல் எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் தொடர்பான வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் முதல் நிலை தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பில் அந்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி இரண்டு பகுதிகளில் ஒன்றை கோயிலுக்கும், இன்னொன்றை நிர்மோஹி அகாரா அறக்கட்டளைக்கும் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர், பள்ளிவாசலைக் கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாபர் மஸ்ஜித் நிலம் எங்களுக்கு சொந்தமானது என்ற சுன்னத் ஜமாத் வக்ஃபு வாரியத்தின் மனு, மூன்று நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் சில மூத்த வழக்குரைஞர்கள் இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறியது போல் சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகாமல் பஞ்சாயத்து செய்யும் முறையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டிருக்கிறார்கள்.
1949க்குப் பிறகு முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்திற்கு அருகே நெருங்கவே முடியாது என்ற நிலை இருந்தது. இப்போது அதில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளதி-ருந்து அந்த இடம் முஸ்-ம்களுக்கும் சொந்தமானது என்று தெளிவாகிறது.
இதுவே நீதியின் முதல் படிதான். எனவே நாங்கள் ஏற்கனவே கூறியபடி இப்போதைக்கு இத்தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்ற உ.பி. வக்ஃபு வாரியத்தின் முடிவை வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய மக்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைபெற அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
tmmk.in
நீதி செத்துப் போனது tntj
பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.
எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.
ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.
நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.
இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
இப்படிக்கு
ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்
tntj.net

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக