படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

19 அக்., 2010

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2 இந்து தீவிரவாதிகள் கைது

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2 இந்து தீவிரவாதிகள் கைது

அஜ்மீர்:
ஆஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஆஸ்எஸ்எஸ் மற்றும் பெண் தீவிரவாதி பிரஞ்யா தாகூருடன் தொடர்புடைய இரு இந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவுக்குள் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாயினர்.இந்த சம்பவத்தை ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.சம்பவ இடத்தில் கிடைத்த சிம்கார்டு மூலம், `அபினவ் பாரத் சங்கடன்' என்ற இந்து தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தேவேந்திர குப்தா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த குப்தா நோய்வாய்ப்பட்ட தன் தாயாரை பார்க்க புதன்கிழமை அஜ்மீருக்கு வந்தார். அவது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.

அவரை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.இவரிடம் நடத்திய விசாரணையி்ன் அடிப்படையில் இந்த குண்டுவெடிப்பில் இன்னொரு முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் பரோட் என்பவரும் நேற்றிரவு பிடிபட்டார். ராஜஸ்தான் மாநிலம் சாஜாபூர் அருகே ஒரு கிராமத்தில் வைத்து இவரை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்தனர்.இந்த இருவருக்கும் மராட்டிய மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் கைதான பெண் சாமியார் பிரஞ்யா சிங் தாக்குருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தேவேந்தர் குப்தா தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தெரிவித்துள்ளார்.இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தட்ஸ் தமிழ்                  
 
 
 
 
 
 
 
 
                                                                                   http://meiyeluthu.blogspot.com/2010/05/2.html

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி