அருந்ததிராய்
” நானாக எனது கருத்துக்களை எதுவும் சொல்லவில்லை,
பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் தினம் தோரும் சொல்லி வருவதைத்தான் நான் கூறினேன்.!
எழுத்தாளர்கள் தங்கள் மனதில் இருப்பதை பேசுவதற்கு தடை விதிக்கும் இந்த நாட்டினை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்.
நீதி கேட்க்கும் மக்களை சிறைச்சாலைக்குள் தள்ளும் இந்த நாட்டை நினைத்து நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்.
ஆனால் சமுதாயத்தை சீரழிப்பவர்களையும், இனப் படுகொலைகள் செய்வோர்களையும், பல மோசடி ஊழல் செய்வோர்களையும், கொள்ளை அடிப்பவர்களையும்,கற்பழிப்பவர்களையும், மேலும் ஏழைகளை வேட்டையாடி மேலும் ஏழைகளாக்குபவர்களையும் இங்கு சுதந்திரமாக உலாவவிடும் இந்த நாட்டினை நினைத்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.
நான் கைது செய்யப்படுவதாக செய்தி ஊடகங்களில் பார்க்கிறேன், பல லட்சம் காஷ்மீரக மக்கள் என்ன கேட்கிறார்களோ அதைத்தான் நான் கேட்கிறேன், அதைத்தான் பல சிந்தனையாளர்களும் இந்த நாட்டில் வழியுறுத்துகிறார்கள்.
எனது பேச்சுகளை கவணிப்பவர்களுக்கு தெரியும் காஷ்மீரத்து மக்கள் அடிப்படையில் கேட்ப்பது நீதி ஒன்று தான் என்று!!! ” ---அருந்ததி ராய்
கடந்த சில தினங்களாக அருந்த்தி ராய் அவர்களின் புது டில்லியிலும் காஷ்மீரிலும் ” சுதந்திர காஷ்மீர் ”பற்றிய பேச்சுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்களை இந்திய அரசாங்கம் மிகவும் உண்ணிப்பாக கவணித்து வருவதாக தெரிகிறது.
அவரின் பேச்சுக்களில் நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்கும் கருத்துக்கள் இருக்குமாயின் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தயார் நிலையில் உள்ளன.
ஆனால் சற்றும் மனம் தளராத அருந்ததி ராய் அவர்களின் கம்பீரமான பதிலால் அரசாங்கம் சற்று நிலைக் குலைந்து போய்விட்டது என்பது தான் உண்மை.
நேர்மையான அரசியல்வாதிகளாலும், நடுநிலையாளர்களாலும் காஷ்மீரில் நடக்கும் இந்திய அரசின் மனித விரோத செயல்களையும்,பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பு அத்துமீரல்களையும்,குஜராத்தில் நடத்தப்பட்ட இஸ்லாமிய இனப்படுகொலைகளையும் எதிர்த்து குரல் கொடுக்க துனிவு இல்லாமல் முடங்கி கிடக்கும் நிலையில். ஒற்றை குரலாய்போராடிவரும் இந்த எழுத்தாளரை சிறைச்சாலைகளில் அடைக்கும் திட்டத்தோடு இந்திய அரசியல் கட்சிகள் ஒரணியில் திரண்டு வருகிறது.
வரலாற்றில் எப்பொழுதுமே எதிர் எதிர் அணியில் நிற்கும் அரசியல் கட்சிகளான காங்கிரஸும் பா.ஜா.கா வும் கூட ஓரணியில் நின்று நீதி கேட்டு போராடும் அருந்ததி ராய் அவர்களை ஏதாவது ஒரு தேசப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடியுமா என்று திட்டங்களும், அறிக்கைகளும் தயார் செய்து வருகின்றது.
எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களை கைது செய்தே ஆகவேண்டும் என்ற இந்த முனைப்பு ,மக்கள் விரோத செயல்களில் காங்கிரஸுக்கும் இந்துத்துவா வலது சாரிகளுக்கும் இடையேயான கள்ள உறவுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் காங்கிரஸுக்கும், பாஜாகவுக்கும் பொது எதிரியானது ஒன்றும் அவரின் தனிபட்ட விசயங்களுக்காக அல்ல. மாறாக இந்த இரண்டு தேசிய கட்சிகளும் மக்களை சுரண்டியும், அழித்தும் நடத்தும் மக்கள் விரோத அரசியல் நாடகங்களை தனது எழுத்துக்களாலும், பேச்சுகளாலும் அவர்களின் போலி முகமூடிகளை கிழித்தெறிந்தார்.
குஜராத் இன படுகொலைகளின் இந்துத்துவ கொடுரத்தையும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வரும் பண்ணாட்டு முதலாளித்துவ ஏஜெண்டு அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளையும், காஷ்மீரத்து மக்கள் இந்திய அரசாங்கத்தால் வஞ்சிக்கப்படுவதையும் அவர்களின் சுதந்திரத்தையும் வழியுறுத்திம் மட்டுமே பேசியதால் இன்று எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களினை எதன் அடிப்படையில் கைது செய்யலாம் என காவல் துறைகளும், சட்டத்துறைகளும், மக்கள் விரோத அரசியல் கட்சிகளும் அவரின் பேச்சுக்களை தொடர் ஆய்வு செய்து வருகின்றது. எப்படியோ அவரின் எழுத்துக்களை படிக்காத ஆளும் வர்கத்தினர் அவரை கைது செய்யும் முயற்சிக்காவாது அவரின் பேச்சுகளை கேட்டுவருகின்றனர்.
குஜராத்தில் இஸ்லாமிய இனப் படுகொலைகள் நடத்திய, அவர்களின் வாழ்வுரிமைகளை அழித்து சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்கிய இந்துத்துவவாதிகளை தேசியப்பாதுகாப்பில் அடைக்க வேண்டும் என்று என்றாவது காங்கிரஸ் போராடியதா?
பாபர் மசூதி ஆக்கிரமிக்கப்பட்ட போதோ இல்லை அது இடிக்கப்பட்ட போதோ அதற்கு எதிராக இது போன்ற ஆவேச குரல் காங்கிரஸிடமிருந்தோ அல்லது வேறெந்த கட்சிகளிடமிருந்தோ வந்ததில்லை.
அப்படி வந்த ஒன்று இரண்டும், பசப்பு வார்த்தைகளுடன் எந்த பக்கமும் ஓட்டினை இழந்துவிடாத தந்திர உணர்வுடன் தான் செயல்பட்டன.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய போபால் விச வாயு தாக்குதல் பண்ணாட்டு நிருவணங்கள் மீது தேச பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஏன் எந்த தேசிய கட்சியும் முன் வரவில்லை. மாறாக ..விமானம் நிலையம் வரை வழியனுப்பி வந்த வரலாறுதானே இருக்கிறது... நாட்டையே விற்று சம்பாதித்த எத்தனையோ ஹவாலா குற்றவாளிகளும், கருப்பு பணங்களை பதுக்கி வைத்துள்ளோர்கள் மீதும் எத்தனை தேச விரோத சட்டங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்?
கொத்து கொத்தாய் குழந்தைகளும்,பெண்களும் செத்து மடிந்த போதும் தமிழ் இலங்கை தேசத்திற்காகவோ, காஷ்மீரத்து மக்களுக்காகவோ,வட கிழக்கு மாநில மக்களுக்காவோ ஒரு துளி கண்ணீர்கூட சிந்தவில்லை தேசியவாதிகள். நீண்டதொரு மெளனத்தை மட்டுமே அவர்களால் கடைபிடிக்க முடிகிறது.
நம் நாட்டின் நாடாளுமன்றம் மிகப்பெரும் கொலை, கொள்ளை ஊழல்கள் புரியும் கிரிமினல் குற்றவாளிகளால் மட்டுமே நிரபப்ப்படுகிறது. அவர்களுக்கு எதிராக பேசப்படும் எல்லாமே நாட்டின் இறையாண்மைக்கு எதிரான பேச்சுகளாகத்தான் கருதப்படும்.
இந்த அவலம் உலகின் மிகப்பெரும் ஜன நாயக நாட்டில் நடப்பது என்பது தான் மிகவும் கேவலமான விசயமாகும்.
தேசப்பாதுகாப்புச் சட்டங்கள் என்பது நீதி கேட்போருக்கு எதிராகத்தான் இங்கு பயன்பட்டு வருகிறது.
இந்திய மக்களுக்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்தற்காக எழுத்தாளர் அருந்த்திராய் அவர்களினை தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்ய வேண்டும் என்று ஆளும் அரசாங்கமும் வலது சாரிகளும் ஓரணியில் திரண்டு வருவது நமக்கு சொல்லும் பாடம் இது தான்.
எல்லாக் கட்சிகளும் எல்லா குற்ற செயல்களிலும் கூட்டணி கொண்டு தான் செயல் படுகிறது.
பண்ணாட்டு முதலாளிகளிடம் நாட்டை விற்று ,இந்தியாவை சுடுகாடாக்குவதற்கு எதை வேண்டும் என்றாலும் செய்வதற்கு தயாராக இருக்கும் தேசிய கட்சிகள். மேலும் அதற்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களின் மீது தேசப்பாதுகாப்புச் சட்டம் பாயும், அவர்கள் தேசத்துரோகிகள் என்று அறிவிக்கப்படுவார்கள்.
அடக்குமுறைகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும், கொள்ளை ஊழல்களுக்கும் எதிராக ஆளும் வர்கத்தை எதிர்ப்பவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவர்களாக சித்தரிக்கப்பட்டு தேசத்தின் பாதுகாப்புக்கு பாதகம் விளைவித்ததாக சிறைச்சாலைக்குள் தள்ளப்படுவார்கள்.
அடிமையாகவே இருந்துவிட்டீர்கள் ,அப்படியே கடைசிவரையும் அடிமையாகவே இருந்து விட்டு மரணித்துவிடுங்கள் நீங்கள் தேசபக்தியாளர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.
என் தாய் நாடு – இது கனவுகளின் பூமி
என்ன மந்திரமோ தெரியவில்லை
தலித்துகளின் குடிசைகளுக்கு மட்டும்
தானாகவே பற்றி எரியும்
சக்தி இருக்கிறது..!!!
அவர்களின் பெண்கள்
மல்லாந்து படுக்கையில்
பகவான்களால் கற்பழிக்கப்படுகின்றனர்.
நம்புங்கள் ஆண்மிக பூமியில்
எதுவுமே சாத்தியம் தான்.!!!
கருவரையை கிழித்து
தேச பக்தியாளர்களின்
சூழாயுதங்களில் தானாகவே சொருகிக் கொள்ளும்
சிசுக்கள்!
அன்னை பூமியில்
அமைதியாய் உறங்கட்டும்
இஸ்லாமிய உயிர்கள்!
ஆண்குறித்தோல் உறித்தவர்களுக்கு
சிறைச்சாலைகளின் மேல்
வெறி பிடித்த ஆசை!!!
அவர்களின் ஆசைகள்
வண்கொடுமைகளால் நிறைவேற்றப்படும்!!!
இங்கு எவர்களின் ஆசைகளும்
நிராகரிக்கப்பட மாட்டாது!!
சுட்டுக்கொல்லப்பட்டவர்களை
பற்றி கவலைப்பட வேண்டாம்
தியாகங்கள் உள்ளவரை
அவர்களின் தியாகங்கள் வாழும்!!
சந்தேகம் வேண்டாம்.
இது தியாகங்களின் பூமி !!!
காடுகளை பாதுகாக்க
பழங்குடியினரை வெளிவரச் சொல்கிறோம்!
ஆபத்தான வேலைகள் என்று காடுகளை
அன்னியர்களிடம் விற்று விட்டோம்!
இனி நாகரிக மிடுக்கோடு
நகரத்தில் உலவாருங்கள் ஆதிவாசிகளே!!
வேண்டும் என்றால் பாருங்கள்
அடுத்த ஆண்டு உலக அழகியாக
பழங்குடி பெண்கள் மகுடம் சூட்டுவார்கள்!!
இது அன்பின் பூமி
நாங்களாக யார் மீதும் போர் தொடுக்க மாட்டோம்.!!
தேவைப்பட்டால்
உள்ளூர் மக்களையே கொன்று
போர்தாகம் தீர்த்துக் கொள்வோம்!
மற்றபடி இது என்றுமே காந்திய தேசம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக