படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

28 அக்., 2010

நீதிமன்ற பயங்கரவாதம் + ஹிந்து பயங்கரவாதம் = முஸ்லிம் இன படுகொலை


குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப் படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தாலும் குஜராத் உயர்நீதி மன்றத்தாலும் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மூன்று தீர்ப்புகள் இந்து மதவெறி கும்பலுக்கு, குறிப்பாக அப்படுகொலையை நடத்திய நாயகன் மோடிக்கு எதிராக அமைந்திருப்பதோடு, இந்த இனப்படுகொலை தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.
கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ் 6 பெட்டி எரிந்து போனதை, பாகிஸ்தான் ஆதரவோடு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என ஊதிப் பெருக்கி, அவ்வழக்கை காலாவதியாகிப்போன பொடா சட்டத்தின் கீழ் நடத்தி வந்தது, குஜராத் அரசு. “இச்சம்பவத்தைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருத முடியாது; எனவே, இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கோத்ரா சம்பவம் தொடர்பான தனது பித்தலாட்டங்களை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மோடி அரசு, தனது கைக்கூலிகளைத் தூண்டிவிட்டு இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையைப் பெற்றுவிட்டது.
கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ்6 பெட்டி எரிந்துபோன வழக்கு மற்றும் அகமதாபாத்திலுள்ள நரோடா பாட்டியா, நரோடா கிராமம், குல்பர்க் சொசைட்டி ஆகிய முஸ்லிம் குடியிருப்புகளில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 10 வழக்குகளை விசாரிக்க ஆறு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்; இவ்வழக்கு விசாரணையை உச்சநீதி மன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு கண்காணித்து, மூன்று மாதத்திற்கு ஒருமுறை விசாரணை தொடர்பான அறிக்கையை உச்சநீதி மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, உச்சநீதி மன்றம்.
இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் ஏறத்தாழ 2,000 வழக்குகளைப் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி, கலவரம் நடந்து முடிந்த கையோடு கைகழுவி விட்டது, மோடி அரசு. இந்த 2,000 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதி மன்றம், இந்தக் குறிப்பிட்ட 10 வழக்குகளைத் தனது கண்காணிப்பின் கீழ் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்து மதவெறிக் கும்பல் குல்பர்க் சொசைட்டி குடியிருப்பைத் தாக்கியபொழுது மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்ஸான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, இந்த இனப்படுகொலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்குள்ள தொடர்பை விசாரிக்கக் கோரி நடத்தி வந்த வழக்கில், “சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் இனப் படுகொலையில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்குள்ள தொடர்பை மூன்று மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தர வேண்டும்” என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஜாகியா ஜாப்ரியின் இவ்வழக்கை குஜராத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்டது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
இத்தீர்ப்புகள் வரவேற்கப்படத் தக்கவைதான் என்றபோதும், உச்சநீதி மன்றம்கூட குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை தொடர்பான வழக்குகளை பத்தோடு பதினொன்றாகத்தான் நடத்தி வருகிறது என்பதையும் இங்கு அழுத்தமாகச் சொல்லித்தான் தீர வேண்டும்.
இந்த இனப்படுகொலை நடந்து முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இனப்படுகொலையின்பொழுது உயிர் தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் இன்றும்கூட தாங்கள் வாழ்ந்து வந்த பகுதிகளுக்குள் கிராமங்களுக்குள் நுழைய முடியாமல் அகதிகளாக வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். இந்த இனப்படுகொலை தொடர்பாகப் பதியப்பட்ட 2,000 வழக்குகளில் வெறும் 2 வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; மீதி வழக்குகள் அனைத்தும் நீதிமன்ற விசாரணை என்ற நிலையிலேயே ஊறப்போட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு வழக்குகளிலும்கூட நீதிமன்றம் தன்முனைப்போடு செயல்பட்டுக் குற்றவாளிகளைத் தண்டித்துவிடவில்லை. மோடி கும்பல் நடத்திய தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல்கிஸ் பானு போன்ற அப்பாவி முஸ்லிம்களும் மனித உரிமை அமைப்புகளும் நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.
இந்த இனப்படுகொலையைத் தலைமையேற்று நடத்திய நரேந்திர மோடியையும், அவரது தளபதிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்ட இந்து மதவெறி பாசிசக் குண்டர்கள் அனைவரையும், யூத இனப்படுகொலையை நடத்திய பாசிச நாஜிக் கும்பலைத் தண்டித்ததைப் போல, தனி விசாரணை மன்றம் அமைத்து, தனிச் சட்டம் இயற்றி இந்நேரம் தண்டித்திருக்க வேண்டும்.  தீவிரவாதிகள் கடந்த நவம்பரில் மும்பய் நகர் மீது தாக்குதல் நடத்தியவுடனேயே, இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்த இந்திய அரசு, மோடி போன்ற இந்து மதவெறி தீவிரவாதிகளை எதிர்கொள்ள தனிச் சட்டம் இயற்ற மறுத்து வருகிறது. இந்த இனப்படுகொலை தொடர்பான 2,000 வழக்குகளில் வெறும் 10 வழக்குகளை மட்டும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள உச்சநீதி மன்றம், இந்தப் பத்து வழக்குகளை வெளி மாநில நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தனது தீர்ப்பில் உதறித் தள்ளி விட்டது.
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணையைக் கண்காணித்து உச்சநீதி மன்றத்திற்கு அறிக்கை அனுப்புவது; இந்தப் பத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள கட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பது; சிறப்புப் புலனாய்வுக் குழுவோடு கலந்தாலோசித்து, அரசு வழக்குரைஞர்களை நியமிப்பது ஆகிய பொறுப்புகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்து வழக்குகளும் இந்து மதவெறிக் கும்பலின் அச்சுறுத்தலின்றி நடைபெறும் என நம்பச் சொல்கிறது, உச்சநீதி மன்றம்.
2,000 வழக்குகளில் இந்தப் பத்து வழக்குகளில் மட்டும் விரைவாகவும் நியாயமாகவும் நீதி கிடைத்துவிட்டால் போதும் என்று இருந்துவிட முடியாது; இரண்டாவதாக, இந்து மதவெறிக் கும்பல் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்துகொண்டு இந்த பத்து வழக்குகளையும் இழுத்தடிக்கும் நரித்தனத்தில் இறங்காது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.
குஜராத் அரசில் மகளிர் நலத் துறையில் இணை அமைச்சராக இருந்த மாயாபென் கோத்நானியும், விசுவ இந்து பரிசத்தின் பொதுச் செயலாளராக இருந்த ஜெய்தீப் படேலும்தான், நரோடா பாட்டியாவிலும், நரோடா கிராமத்திலும் நடந்த தாக்குதல்களுக்குத் தளபதிகளாகச் செயல்பட்டவர்கள். இவர்கள் இருவரும் கைபேசிகள் மூலம் கொடுத்த உத்தரவுகளின்படிதான் இந்து மதவெறிக் கும்பல் அந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தபொழுதும், இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டதோடு, நரோடா பாட்டியா மற்றும் நரோடா கிராம கொலைச் சம்பவ வழக்குகளைப் போதிய சாட்சியமில்லை என்ற பொய்யைச் சொல்லிக் கைகழுவி விட்டது, மோடி அரசு.
உச்சநீதி மன்ற உத்தரவுப்படி இந்த இரண்டு வழக்குகளையும் மீண்டும் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அமைச்சர் மாயாபென்னையும், ஜெய்தீப் படேலையும் விசாரணைக்கு அழைத்தது. அவர்கள் இருவருமே மோடிக்குள்ள அதிகாரத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசாரணைக்குப் போகாமல் காலத்தைக் கடத்தினர். இதனையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அவர்கள் இருவரையும் தலைமறைவாகத் திரியும் குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களோ குஜராத்திலுள்ள கீழ் நீதிமன்றமொன்றில் மனுப் போட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு தங்களைக் கைது செய்துவிடாத வண்ணம் பிணை வாங்கிக் கொண்டனர். அந்த நீதிமன்றம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் இவர்கள் சாட்சியத்தைக் கலைத்துவிட மாட்டார்கள் என இக்கிரிமினல்களுக்குச் சான்றிதழ் அளித்தது. இதன்பின், சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதி மன்றத்தை அணுகி கீழ் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்ய வைத்து, அதன் பிறகு அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. எனினும், கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவ்விருவருக்கும் பிணை வழங்கி விட்டது, குஜராத் நீதிமன்றம்.
இப்படிப்பட்ட இழுத்தடிப்புகளை இந்து மதவெறிக் கும்பல் மட்டுமல்ல, உச்சநீதி மன்றம்கூட “சட்டப்படி” செய்து வருகிறது என்பதும் உண்மை.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வசமுள்ள இந்தப் பத்து வழக்குகளையும் குஜராத்திற்கு வெளியே விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனித உரிமை அமைப்புகள் 2003ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம் இந்த வழக்குகளின் மீது குஜராத் நீதிமன்றங்களில் நடந்துவந்த விசாரணைகளுக்கு இடைக்கால தடை விதித்தது. மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட உச்சநீதி மன்றம், இந்த பத்து வழக்குகளை குஜராத்திலேயே விரைவு நீதிமன்றங்களை அமைத்து விசாரிக்கலாம் என இப்பொழுது தீர்ப்பளித்திருக்கிறது. இந்த “பரபரப்பான” தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்குவதற்குள் ஏறத்தாழ ஆறு ஆண்டு காலம் உருண்டோடிவிட்டது. இந்து மதவெறியன் வருண் காந்தி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கை கைசொடுக்கும் நேரத்திற்குள் தள்ளுபடி செய்துவிட்ட உச்சநீதி மன்றம், இந்தப் பஞ்சு மிட்டாய் தீர்ப்பை வழங்குவதற்கு இத்துணை காலதாமதம் ஏன் செய்தது? இப்படி இழுத்தடிப்பதில் நீதிபதிகளுக்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? என்ற கேள்விகளை எழுப்பினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நம் மீது பாய்ந்து விடும்.
சபர்மதி விரைவுவண்டி கோத்ரா ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற ஒருசில நிமிடங்களிலேயே, அவ்வண்டியின் எஸ்6 பெட்டி தீக்கிரையானது. இது தொடர்பாக கோத்ராவைச் சேர்ந்த 135 முஸ்லிம்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுள் 22 பேர் தலைமறைவாகிவிட 100 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 100 பேரில் 16 பேருக்கு மட்டும் பிப்ரவரி 14, 2003 அன்று குஜராத் உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. இந்தத் தீர்ப்பு வந்த மறுநிமிடமே, அதுவரை சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை பாசிச பொடா சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார், மோடி. இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எளிதாகப் பிணை கிடைத்துவிடக் கூடாது என்ற ‘நல்லெண்ணம்’தான் இதற்குக் காரணம்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கடந்த ஐந்தாண்டுகளாக முறையாக விசாரிக்கப்படாமல் உச்சநீதி மன்றத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சபர்மதி விரைவுவண்டியின் எஸ்6 பெட்டி தீக்கிரையான வழக்கு பொடாவின் கீழ் வராது என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே, மைய அரசால் அமைக்கப்பட்ட பொடா மறு ஆய்வுக் கமிட்டி 2004ஆம் ஆண்டிலேயே இப்படியான தீர்ப்பை அளித்துவிட்டது. பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் உரிமை உண்டு என 2006ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிறையில் வாடி வரும் 84 முஸ்லிம்களுக்குப் பிணை வழங்கும் மனுவை முறையாக விசாரிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறது, உச்சநீதி மன்றம்.
உச்சநீதி மன்றத்தின் இந்த அநீதியான மற்றும் பாரபட்சமான போக்கை வெட்கக்கேடு என விமர்சித்தார், மனித உரிமைப் போராளியும் வழக்குரைஞருமான தீஸ்தா சேதல்வாட். உச்சநீதி மன்றத்தின் முதல் “தலித்” தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த அநீதிக்காக வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ, தீஸ்தா சேதல்வாட் உச்சநீதி மன்றத்தின் பாரபட்சமான சிவப்பு நாடாத்தனத்தை அம்பலப்படுத்தியதற்காக ஆத்திரமடைந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி 84 முஸ்லிம்களின் பிணை மனு விசாரணைக்கு வந்தபொழுது, “யார் இந்த தீஸ்தா சேதல்வாத்? உங்களில் யாராவது எந்த வகையிலாவது அவருடன் தொடர்புடையவர்களா? அவருடன் தொடர்புடைய யாராவது பிணை மனு தாக்கல் செய்திருந்தால், அதனை இந்த அமர்வு நீதிமன்றம் கேட்க விரும்பவில்லை” எனக் கீழ்த்தரமான முறையில் மனுதாரர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
குஜராத் இனப் படுகொலையின்பொழுது நடந்த கொடூரங்களை வெளிக் கொண்டு வந்ததிலும், பெஸ்ட் பேக்கரி மற்றும் பில்கிஸ் பானு தொடர்பான வழக்குகளில் இந்து மதவெறிக் கிரிமினல்கள் தண்டிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் பங்கு அளப்பரியது எனத் தெரிந்திருந்தும், “யார் இந்த தீஸ்தா?” என உச்சநீதி மன்றம் வினவியது, அம்மன்றத்தின் அதிகாரத்திமிரைத்தான் வெட்ட வெளிச்சமாக்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதை விட, தனது அதிகாரத் திமிரையும் பாரபட்சமான, தன்னிச்சையான போக்கையும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதில்தான் உச்சநீதி மன்றம் குறியாக இருந்து வருகிறது.
மனுதாரர்கள் தங்களுக்குப் பிணை கிடைக்க வேண்டும் என்ற பதைபதைப்பில், உச்சநீதி மன்றத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்து, தீஸ்தாவுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைக் கைவிடுவதாக அறிவித்தனர். எனினும், உச்சநீதி மன்ற நீதிபதிகள் அவர்களுக்குப் பிணை வழங்காமல், விசாரணையை ஒத்திவைத்து, அம்முஸ்லிம்களின் வாழ்க்கையோடு விளையாடிப் பார்த்து மகிழ்ந்தனர். இந்தக் குரூரத்தை யாரால்தான் சகித்துக் கொள்ள முடியும்? தனது அரசால் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு நீதி மட்டுமல்ல, பிணைகூடக் கிடைத்துவிடக் கூடாது என விரும்புகிறார், மோடி. மோடியைப் போலவே நீதிபதிகளும் எண்ணுகிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?
‘‘தாமதமாக வழங்கப்படும் நீதி, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது” என்ற பொன்மொழியை உச்சரித்துக் கொண்டே, குஜராத் முஸ்லிம்களுக்கு ‘நீதி’ வழங்குவதை இழுத்தடிக்கும் திருப்பணியை இந்திய நீதிமன்றங்கள் சட்டப்படியே செய்து வருகின்றன. சில சமயங்களில் குஜராத் முஸ்லிம்களுக்குச் சாதகமாக வழங்கப்படும் தீர்ப்புகள்கூட, அவர்களுக்கு முழுமையான நியாயத்தை வழங்கிவிடுவதில்லை. பல்கிஸ் பானு வழக்கில் (பார்க்க; புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2008) பாலியல் வன்முறை தாக்குதலையும், படுபாதக கொலைகளையும் நடத்திய இந்து மதவெறி கிரிமனல்களுள் ஒருவனுக்குக்கூடத் தூக்குத் தண்டனை தரப்படவில்லை. இக்கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகள், அரசு மருத்துவர்களில் ஒருவருக்குக்கூட ஒருநாள் சிறை தண்டனைகூட வழங்கப்படவில்லை.
இச்சூழ்நிலையில், இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்புகளில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தும் அதேசமயம், இந்த இனப்படுகொலையின் நாயகன் மோடி தண்டிக்கப்படும் வரையிலும், ஒவ்வொரு வழக்கிலும் விரைவாகவும், நியாயமாகவும் தீர்ப்பு வழங்கப்படும் வரையிலும் போராடுவது ஒன்றுதான் மதச்சார்பின்மையை நேசிக்கும் இந்திய மக்களின் முன் உள்ள ஒரே வழியாகும்.
தலைப்பு மாற்ற பட்டுள்ளது.
கட்டுரையாளர்: செல்வம்
புதிய ஜனநாயகம், ஜூன்’2009,

அருந்ததிராய் ஒரு தேசவிரோதியா?




                                               அருந்ததிராய் 
” நானாக எனது கருத்துக்களை எதுவும் சொல்லவில்லை,
பல ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் தினம் தோரும் சொல்லி வருவதைத்தான் நான் கூறினேன்.!
எழுத்தாளர்கள் தங்கள் மனதில் இருப்பதை பேசுவதற்கு தடை விதிக்கும் இந்த நாட்டினை நினைத்து  நான் பரிதாபப்படுகிறேன்.
 நீதி கேட்க்கும் மக்களை சிறைச்சாலைக்குள் தள்ளும் இந்த நாட்டை நினைத்து நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்.
ஆனால் சமுதாயத்தை சீரழிப்பவர்களையும்,  இனப் படுகொலைகள் செய்வோர்களையும், பல மோசடி ஊழல் செய்வோர்களையும், கொள்ளை அடிப்பவர்களையும்,கற்பழிப்பவர்களையும், மேலும் ஏழைகளை வேட்டையாடி மேலும் ஏழைகளாக்குபவர்களையும் இங்கு சுதந்திரமாக உலாவவிடும் இந்த நாட்டினை நினைத்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.
நான் கைது செய்யப்படுவதாக செய்தி ஊடகங்களில் பார்க்கிறேன், பல லட்சம் காஷ்மீரக மக்கள் என்ன கேட்கிறார்களோ அதைத்தான் நான் கேட்கிறேன், அதைத்தான் பல சிந்தனையாளர்களும் இந்த நாட்டில் வழியுறுத்துகிறார்கள்.
எனது பேச்சுகளை கவணிப்பவர்களுக்கு தெரியும் காஷ்மீரத்து மக்கள் அடிப்படையில் கேட்ப்பது நீதி ஒன்று தான் என்று!!! ” ---அருந்ததி ராய்


கடந்த சில தினங்களாக அருந்த்தி ராய் அவர்களின் புது டில்லியிலும் காஷ்மீரிலும்  சுதந்திர காஷ்மீர் பற்றிய பேச்சுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்களை இந்திய அரசாங்கம் மிகவும் உண்ணிப்பாக கவணித்து வருவதாக தெரிகிறது.
அவரின் பேச்சுக்களில் நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்கும் கருத்துக்கள் இருக்குமாயின் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தயார் நிலையில் உள்ளன.
ஆனால் சற்றும் மனம் தளராத அருந்ததி ராய் அவர்களின் கம்பீரமான பதிலால் அரசாங்கம் சற்று நிலைக் குலைந்து போய்விட்டது என்பது தான் உண்மை.
நேர்மையான அரசியல்வாதிகளாலும், நடுநிலையாளர்களாலும் காஷ்மீரில் நடக்கும் இந்திய அரசின் மனித விரோத செயல்களையும்,பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பு அத்துமீரல்களையும்,குஜராத்தில் நடத்தப்பட்ட இஸ்லாமிய இனப்படுகொலைகளையும் எதிர்த்து குரல் கொடுக்க துனிவு இல்லாமல் முடங்கி கிடக்கும் நிலையில். ஒற்றை குரலாய்போராடிவரும் இந்த எழுத்தாளரை சிறைச்சாலைகளில் அடைக்கும் திட்டத்தோடு இந்திய அரசியல் கட்சிகள் ஒரணியில் திரண்டு வருகிறது.
வரலாற்றில் எப்பொழுதுமே எதிர் எதிர் அணியில் நிற்கும் அரசியல் கட்சிகளான காங்கிரஸும் பா.ஜா.கா வும் கூட ஓரணியில் நின்று நீதி கேட்டு போராடும் அருந்ததி ராய் அவர்களை ஏதாவது ஒரு தேசப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடியுமா என்று திட்டங்களும், அறிக்கைகளும் தயார் செய்து வருகின்றது.
எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களை கைது செய்தே ஆகவேண்டும் என்ற இந்த முனைப்பு ,மக்கள் விரோத செயல்களில் காங்கிரஸுக்கும் இந்துத்துவா வலது சாரிகளுக்கும் இடையேயான கள்ள உறவுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் காங்கிரஸுக்கும், பாஜாகவுக்கும் பொது எதிரியானது ஒன்றும் அவரின் தனிபட்ட விசயங்களுக்காக அல்ல. மாறாக இந்த இரண்டு தேசிய கட்சிகளும் மக்களை சுரண்டியும், அழித்தும் நடத்தும் மக்கள் விரோத அரசியல் நாடகங்களை தனது எழுத்துக்களாலும், பேச்சுகளாலும் அவர்களின் போலி முகமூடிகளை கிழித்தெறிந்தார்.
குஜராத் இன படுகொலைகளின் இந்துத்துவ கொடுரத்தையும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வரும் பண்ணாட்டு முதலாளித்துவ ஏஜெண்டு அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளையும், காஷ்மீரத்து மக்கள் இந்திய அரசாங்கத்தால் வஞ்சிக்கப்படுவதையும் அவர்களின் சுதந்திரத்தையும் வழியுறுத்திம் மட்டுமே பேசியதால் இன்று எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களினை எதன் அடிப்படையில் கைது செய்யலாம் என காவல் துறைகளும், சட்டத்துறைகளும், மக்கள் விரோத அரசியல் கட்சிகளும் அவரின் பேச்சுக்களை தொடர் ஆய்வு செய்து வருகின்றது. எப்படியோ அவரின் எழுத்துக்களை படிக்காத ஆளும் வர்கத்தினர் அவரை கைது செய்யும் முயற்சிக்காவாது அவரின் பேச்சுகளை கேட்டுவருகின்றனர்.

குஜராத்தில் இஸ்லாமிய இனப் படுகொலைகள் நடத்திய, அவர்களின் வாழ்வுரிமைகளை அழித்து சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்கிய இந்துத்துவவாதிகளை தேசியப்பாதுகாப்பில் அடைக்க வேண்டும் என்று என்றாவது காங்கிரஸ் போராடியதா?
பாபர் மசூதி ஆக்கிரமிக்கப்பட்ட போதோ இல்லை அது இடிக்கப்பட்ட போதோ அதற்கு எதிராக இது போன்ற ஆவேச குரல் காங்கிரஸிடமிருந்தோ அல்லது வேறெந்த கட்சிகளிடமிருந்தோ வந்ததில்லை.
அப்படி வந்த ஒன்று இரண்டும், பசப்பு வார்த்தைகளுடன் எந்த பக்கமும் ஓட்டினை இழந்துவிடாத தந்திர உணர்வுடன் தான் செயல்பட்டன.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய போபால் விச வாயு தாக்குதல் பண்ணாட்டு நிருவணங்கள் மீது தேச பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஏன் எந்த தேசிய கட்சியும் முன் வரவில்லை. மாறாக ..விமானம் நிலையம் வரை வழியனுப்பி வந்த வரலாறுதானே இருக்கிறது... நாட்டையே விற்று சம்பாதித்த எத்தனையோ ஹவாலா குற்றவாளிகளும், கருப்பு பணங்களை பதுக்கி வைத்துள்ளோர்கள் மீதும் எத்தனை தேச விரோத சட்டங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்?
கொத்து கொத்தாய் குழந்தைகளும்,பெண்களும் செத்து மடிந்த போதும் தமிழ் இலங்கை தேசத்திற்காகவோ, காஷ்மீரத்து மக்களுக்காகவோ,வட கிழக்கு மாநில மக்களுக்காவோ ஒரு துளி கண்ணீர்கூட சிந்தவில்லை தேசியவாதிகள். நீண்டதொரு மெளனத்தை மட்டுமே அவர்களால் கடைபிடிக்க முடிகிறது.  
நம்  நாட்டின் நாடாளுமன்றம் மிகப்பெரும் கொலை, கொள்ளை ஊழல்கள் புரியும் கிரிமினல் குற்றவாளிகளால் மட்டுமே நிரபப்ப்படுகிறது. அவர்களுக்கு எதிராக பேசப்படும் எல்லாமே நாட்டின் இறையாண்மைக்கு எதிரான பேச்சுகளாகத்தான் கருதப்படும்.
இந்த அவலம் உலகின் மிகப்பெரும் ஜன நாயக நாட்டில் நடப்பது என்பது தான் மிகவும் கேவலமான விசயமாகும்.
தேசப்பாதுகாப்புச் சட்டங்கள் என்பது நீதி கேட்போருக்கு எதிராகத்தான் இங்கு பயன்பட்டு வருகிறது.
இந்திய மக்களுக்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்தற்காக எழுத்தாளர் அருந்த்திராய் அவர்களினை தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்ய வேண்டும் என்று ஆளும் அரசாங்கமும் வலது சாரிகளும் ஓரணியில் திரண்டு வருவது நமக்கு சொல்லும் பாடம் இது தான்.
எல்லாக் கட்சிகளும் எல்லா குற்ற செயல்களிலும் கூட்டணி கொண்டு தான் செயல் படுகிறது.
பண்ணாட்டு முதலாளிகளிடம் நாட்டை விற்று ,இந்தியாவை சுடுகாடாக்குவதற்கு எதை வேண்டும் என்றாலும் செய்வதற்கு தயாராக இருக்கும் தேசிய கட்சிகள். மேலும் அதற்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களின் மீது தேசப்பாதுகாப்புச் சட்டம் பாயும், அவர்கள் தேசத்துரோகிகள் என்று அறிவிக்கப்படுவார்கள்.
அடக்குமுறைகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும், கொள்ளை ஊழல்களுக்கும் எதிராக ஆளும் வர்கத்தை எதிர்ப்பவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவர்களாக சித்தரிக்கப்பட்டு தேசத்தின் பாதுகாப்புக்கு பாதகம் விளைவித்ததாக சிறைச்சாலைக்குள் தள்ளப்படுவார்கள்.
அடிமையாகவே இருந்துவிட்டீர்கள் ,அப்படியே கடைசிவரையும் அடிமையாகவே இருந்து விட்டு மரணித்துவிடுங்கள் நீங்கள் தேசபக்தியாளர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.


என் தாய் நாடு – இது கவுகளின் பூமி

என்ன மந்திரமோ தெரியவில்லை
தலித்துகளின் குடிசைகளுக்கு மட்டும்
தானாகவே பற்றி எரியும்
சக்தி இருக்கிறது..!!!
அவர்களின் பெண்கள்
மல்லாந்து படுக்கையில்
பகவான்களால் கற்பழிக்கப்படுகின்றனர்.
நம்புங்கள் ஆண்மிக பூமியில்
எதுவுமே சாத்தியம் தான்.!!!

கருவரையை கிழித்து
தேச பக்தியாளர்களின்
சூழாயுதங்களில் தானாகவே சொருகிக் கொள்ளும்
சிசுக்கள்!
அன்னை பூமியில்
அமைதியாய் உறங்கட்டும்
இஸ்லாமிய உயிர்கள்!

ஆண்குறித்தோல் உறித்தவர்களுக்கு
சிறைச்சாலைகளின் மேல்
வெறி பிடித்த ஆசை!!!
அவர்களின் ஆசைகள்
வண்கொடுமைகளால் நிறைவேற்றப்படும்!!!
இங்கு எவர்களின் ஆசைகளும்
நிராகரிக்கப்பட மாட்டாது!!

சுட்டுக்கொல்லப்பட்டவர்களை
பற்றி கவலைப்பட வேண்டாம்
தியாகங்கள் உள்ளவரை
அவர்களின் தியாகங்கள் வாழும்!!
சந்தேகம் வேண்டாம்.
இது தியாகங்களின் பூமி !!! 

காடுகளை பாதுகாக்க
பழங்குடியினரை வெளிவரச் சொல்கிறோம்!
ஆபத்தான வேலைகள் என்று காடுகளை
அன்னியர்களிடம் விற்று விட்டோம்!
இனி நாகரிக மிடுக்கோடு
நகரத்தில் உலவாருங்கள் ஆதிவாசிகளே!!
வேண்டும் என்றால் பாருங்கள்
அடுத்த ஆண்டு உலக அழகியாக
பழங்குடி பெண்கள் மகுடம் சூட்டுவார்கள்!!

இது அன்பின் பூமி
நாங்களாக யார் மீதும் போர் தொடுக்க மாட்டோம்.!!
தேவைப்பட்டால்
உள்ளூர் மக்களையே கொன்று
போர்தாகம் தீர்த்துக் கொள்வோம்!
மற்றபடி இது என்றுமே காந்திய தேசம் தான்.

கொலைக்களம் குவாண்டனாமோ!


வெ. ஜீவகிரிதரன்
அமெரிக்க நாட்டின் பொருளாதார இதயமான நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் 2001 செப்டம்பர் 11-ல்தான் தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக அளவிலே ஹஹபயங்கரவாதத்திற்கு எதிரான போர் -பிரகடணத்தை அமெரிக்கா அறிவித்து களத்தில் இறங்கியதை நாம் அறிவோம்.
ஆனால், எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் பேராசைக்கு இது இன்னொரு காரணம் மட்டுமே என்பதை வெளி உலகம் அறியாது.
அரபு நாடுகள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளாக இருப்பதால், முதலில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து-அவர்களை ஒடுக்குவதாக கூறி அந்நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து-அதன் பின் அங்குள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கிறது அமெரிக்கா.
ஈராக் பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி, அதன் மீது  பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடுத்து, அதிபர் சதாம் உசேனையும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அனைவரையும் கொன்றொழித்தது. ஆனால், பேரழிவு ஆயுதம் ஒன்றைக் கூட ஈராக் மண்ணில் இருந்து கைப்பற்றி உலகுக்கு காட்ட இயலவில்லை. இன்று ஈராக் என்ணெய் வளம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.
இப்படியான ஆக்கிரமிப்புப் போர்களின் போது பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்வதுடன் பல நூறு பேரை கைதிகளாக பிடித்து, விசாரணை என்ற பெயரிலே கொடும் சித்ரவதை செய்வது அமெரிக்காவின் வாடிக்கை. ஈராக் மீதான ஆக்ரமிப்புப் போரின் போது ஈராக் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் பேரை கைது செய்தது அமெரிக்க ராணுவம். அக்கைதிகளை அடைத்து வைக்க கியூபா நாட்டின் குவாண்டனாமோ வளைகுடாவில் சிறைச்சாலையையும் அமைத்தது. இது சிறைச்சாலையாக இல்லாமல் கொடும் சித்ரவதைச் சாலையாகவே இருந்தது. பல நூறு கைதிகள் இங்கு பிணமாக்கப்பட்டனர்.
இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நாள் முதல் 9.7.2004 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டுமே 24,000 கைதிகள் இந்த சிறையிலே விசாரணை என்ற பெயரிலே இது மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது வெளி உலகின் குற்றச்சாட்டு அல்ல. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலே உள் விசாரணை ஒன்றை நடத்தியது.
இந்த மூன்று வருட காலங்களில் குவாண்டனாமோ சிறையில் பணி புரிந்த சுமார் 493-எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு அதன் தலைமையகம் ஈமெயில் ஒன்றை அனுப்பியது. அதில் சிறைக் கைதிகளிடம் இராணுவ அதிகாரிகள் யாரேனும் வரம்புமீறி, அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பற்றி தெரியுமா? அப்படி ஏதும் நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட் அதிகாரிகள் யார்? போன்ற விவரங்களை தலையகத்துக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டது. மொத்தம் 493 அதிகாரிகளில் 434பேர் இதற்கு பதிலனுப்பினர்.
தங்கள் பதிலில் தாங்கள் பணிபுரிந்த பொழுது சிறையில் நடந்த கொடுஞ் செயல்கள், சித்ரவதைகள், மேலும் அதைச் செய்த அதி காரிகளின் விவரங்கள் ஆகியவற்றை அளித்திருந்தனர். இச்செய்தி எப்.பிஐ. தலைமையகத்தால் டிசம்பர் 2004ல் அரசுக்கு அளிக்கப்பட்டது.
மனித உரிமை மீறல்கள், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த மீறல் போன்ற கொடுஞ் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டது அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பாலேயே வெளிப்பட்டதால், ஒரு உள் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க இராணுவம் தள்ளப்பட்டது. 2004-டிசம்பரில் தென் பிராந்திய கமாண்டர். பண்டஸ் ஜே.கிரட்டாக் இராணுவ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டார். பிரிகேடியர் ஜெனரல் ஜான். டி. பர்லோ விசாரணை
அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதலில் 2 மாதம் விசாரணை நடத்திய ஜான். டி.பர்லோ, தன்னை விட மூத்த அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டிய நிலை இருப்பதை தலைமையகத்துக்கு தெரியப்படுத்தினார். அதனால் 28.2.2005 அன்று இந்த விசாரணைக் குழுவில் லெப்டினன்ட் ஜெனரல் ரேன்ட்ஸ் எம்.ஷ்மித் மற்றும் அமெரிக்க வான்படையின் தென்பிராந்திய கமாண்டர் டேவிட் மோன்தான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த புலன் விசாரணைக்குழு 24.3.2005 வரை விசாரணை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க தென் பிராந்திய இராணுவ அதிகாரிகள், 30க்கும் மேற்பட்ட எப்.பி.ஐ. அதிகாரிகள், ஜாய்ன்ட் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கூட்டு நடவடிக்கைப் படை பிரிவு 160,170 மற்றும் குவாண்டனாமோ அதிகாரிகள், அமெரிக்க இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணையின் போது பல்வேறு குற்றச் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்ட தகவல்கள் புற்றீசல்களாய் வெளிவந்தன. இந்த புதிய தகவல்களையும் சேர்த்து புலன் விசாரணை செய்யுமாறு 5.5.2005ல் இராணுவ தலைமையகம் மீண்டும் உத்தரவிட்டது.
சித்ரவதைகள்
இந்த புலன் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டியதாக கூறப்பட்ட ஒழுங்கீனங்கள் என்ன தெரியுமா? இராணுவ விதிகளிலே கூறப்பட்டுள்ள விசாரணை உத்திகளை மீறி வேறு வகையான உத்திகளை விசாரணையின் போது கையாண்டது என்பதுhன். அவை யாவை?
1. விசாரணைக் கைதிகளின் மீது இராணுவ நடவடிக்கையில் உபயோகப்படுத்தப்படும் நாய்களை ஏவி விட்டு பயங்கரமாக குரைக்க வைப்பது. கடிக்க விடுவது போல பயமுறுத்துவது (இந்த உத்தி 12.11.2002க்கு பிறகு அங்கீகரிக்கப்பட் உத்தியாக மாற்றப்பட்டது)
2. கைதிகள் குர்ஆனின் ஆயத்துகளை தொடர்ந்து முணுமுணுப்பதாகக் கூறி அவர்களின் வாய்களை சுற்றி ஒட்டும் நாடாவைக் கொண்டு இறுக்கிக் கட்டி வைத்தது.
3. கைதிகளை விசாரணை செய்யும் போது தான் இராணுவ அதிகாரி என்பதை மறைத்து, எப்.பி.ஐ. அதிகாரி எனப் பொய் சொல்லி அவர்களை மிரட்டியது.
4. எப்.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்ய விடாமல் இராணுவ அதிகாரிகள் தடுத்தது.
5. வக்கிரமான பாடல் இசைகளை பயங்கர சத்தத்துடன் நீண்ட நேரம் அலறச் செய்து கைதிகளை சித்ரவதை செய்தது.
6. ஒரு நாளைக்கு 18 முதல் 20மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து 48 முதல் 54-நாட்கள் கைதிகளை தூங்கவே விடாமல் விசாரணை செய்தது. தொடர்ந்து 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க அனுமதிக்காதது. (இந்த உத்தி 2.12.2005க்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட உத்தியாக மாற்றப்பட்டது).
7. தரையிலே சிறு வளையம் பொறுத்தி அதிலே கைதியின் இரு கைகளையும் மணிக் கட்டுவரை நுழைத்து பூட்டி விடுவது இதன் மூலம் எப்போதும் கைதி குறுகிய நிலையில் குனிந்தே இருக்க வேண்டும்.
8.அளவுக்கு அதிகமான வெப்பத்தையும், அளவுக்கு அதிகமான குளிரையும் மாறி மாறி கைதிகள் மேல் செலுத்தியது (2.12.2005க்கு பின்னர் இந்த உத்தி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது)
9. ஆண் கைதிகளின் தொடை மீது அமர்ந்து பெண் இராணுவ அதிகாரிகள் லேப் டான்ஸ் எனப்படும் பாலியல் வக்கிர நடனம் ஆடியது.
10. பெண் இராணுவ அதிகாரி ஆண் கைதி முகத்தின் மீது மாதவிலக்கில் வெளிப்பட்ட இரத்தத்தை பூசியது (விசாரணையில் அது வெறும் சிவப்பு மைதான் என கூறப்பட்டது)-
11. கைதிகளிடமிருந்து குர்ஆன் நூலை பிடுங்கி எறிவது.
12. பெண் இராணுவ அதிகாரிகள் தங்களின் உடைகளைக் களைந்து விட்டு ஆண் கைதிகளின் உடலோடு உரசுவது, அவர்களின் தலை மயிரில் விரல்விட்டு கோதுவது, அவர்களின் மர்ம உறுப்புகளை தொடுவது போன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது. (இந்த உத்தி இராணுவ விசாரணையின்போது கைதியின் மன உறுதியை குலைக்கச் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட உத்திதான் என விசாரணையின்போது விளக்கம் தரப்பட்டது).
13. கைதிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை தராமல் சித்ரவை செய்தது.
14. குர்ஆனை தரையிலே கிடத்தி விட்டு அதன் மேல் ஏறி உட்கார சொல்வது.
15. கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்காக அவர்களின் குடும்பமே தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொய் சொன்னது.
இவையல்லாம் கடுமையான உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும் மேலாக செய்யப்பட்ட மன ரீதியான சித்ரவதைகள்தான். உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு அளவே இல்லை.
அமெரிக்க இராணுவத்தின் புலன் விசாரணையின்போது கைதிகளிடம் கையாள வேண்டிய விசாரணை உத்திகளில், கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்கென சில உத்திகள் கையாளப்படுகின்றன. இராணுவ விதிகள் எப்.எம்.34-52 விதிகள் எனப்படும் அவை என்ன தெரியுமா?
1. ஆண் கைதிகளுக்கு பெண்களின் உள்ளாடைகளை மட்டும் அணிவிப்பது.
2. கைதியின் தாயும், சகோதரியும் விபச்சாரிகளாக மாறிவிட்டதாக பொய் தகவல் தருவது.
3. கைதி ஒரு ஓரின சேர்க்கையாளன் என முத்திரை குத்துவது. ஓரின சேர்க்கை மூலம் வன் புணர்ச்சிக்குள்ளாக்கப் போவதாக மிரட்டுவது.
4. நாய்க்கு கழுத்திலே கட்டும் பட்டையைப் போல கைதியின் கழுத்திலே கட்டி சிறு கயிறு அதிலே இணைத்து நாள் முழுவதும் நாயைப் போல அறையை சுற்றி, சுற்றி வரச் செய்வது.
5. வக்கிரமான பாடல்களை அலறவிட்டு அந்த இசைக்கு ஏற்ப விசாரணை அதிகாரியுடன் நடனமாட வேண்டும் என கொடுமைப் படுத்துவது.
6. கைதியை முழு நிர்வாணமாக்கி விட்டு பெண் அதிகாரிகளின் மத்தியிலே நிற்கச் செய்வது.
7. தொழுகை நடத்த முயலும் போது தடுப்பது.
8. கைதியில் தலை மீது அடிக்கடி நீரைக் கொட்டுவது.
இந்த உதிகளின் மூலம் ஒரு கைதி தொடர்ந்து 160 நாட்கள் தனிமைச் சிறையிலேயே, ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டதாக விசாரணைக் கோப்புகளில் இருந்ததை மேற்சொன்ன இராணுவ புலன் விசாரணைக் குழு காண முடிந்தது. அக்கிரமங்கள் மூடி மறைப்பு!
இந்த கொடும் செயல்கள் எல்லாம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த விதிகளை மீறுவதாகவும், மனித குல நாகரிகத்துக்கு எதிரானதாகவும் இருந்த போதும், விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு அத்துனை அக்கிரமங்களையும் மூடி மறைத்தது. கைதிகள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ன.
1. இராணுவ விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட விசாரணை உத்திகள்.
2. இராணுவ விதிகளால் பிற்பாடு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விசாரணை உத்திகள்.
3. அங்கீகரிக்கப்படாத விசாரணை உத்திகள்.
இவற்றில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. மூன்றாவது வகை குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களை எச்சரித்து விட்டு விடலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.
சர்வதேச நெருக்கடி காரணமாக சமீபத்தில் குவாண்டனாமோ சிறையை படிப்படியாக மூடிவிடுவது எனவும், அங்குள்ள கைதிகளை அமெரிக்காவின் சாதாரண சிறைகளுக்கு மாற்றி விடுவது என்றும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
2002ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த உமர் காதிர் என்ற 15-வயது சிறுவன் அல்-காயிதா அமைப்பை சேர்ந்தவன் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டான்.
இன்றுவரை அச்சிறையின் அனைத்து சித்ரவதைகளையும் சந்தித்தும் உயிரோடு உள்ளான். அவன் மீதான வழக்கு விசாரணை தொடங்குவதாக அமெரிக்க ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் தெரியுமா? அதே கொடுங்கோல் இராணுவத்தின் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுதான்.இங்கு கொலைக் களமே நீதிமன்றம்... கொலைகாரர்களே நீதிபதிகள்!!

நீதிமன்றங்கள் மத சார்புடையதாக மாறுவது சரியா?!


மூன்று நீதியரசர்களில்இரண்டு பேர் ஷர்மாவும்அகர்வாலும்இந்துக்கள்அதனால் அவர்கள் கொடுத்த தீர்ப்பில்அயோத்தியில் சர்ச்சைக்குர்யா இடத்தில்ராமர் கூரையின் கீழ் பிறந்திருக்கலாம்என்று கூறியுள்ளனர்யாராவது நீதியரசர் என்ற பெயரில் உள்ளவர்கள் "லாம்போட்டு ஒரு தீர்ப்பை கொடுப்பார்களா?

இவர்கள் இந்துத்துவாவாதிகளாக இருப்பது இதிலேயே தெரிகிறதுஅதேபோல கான் என்ற ஒரு நீதியரசர் மட்டும், 1949 ஆம் ஆண்டு 23 ஆம் நாள்தான் ராமர் சிலையை கொண்டுவந்து மசூதிக்குள் வைத்தார்கள் என்கிறார்அவர் இந்து இல்லை என்பதனால் தைரியமாக இப்படி சொல்ல முடிகிறதா?
அதேபோல அந்த இரண்டு இந்து நீதியரசர்களும்கோவிலை இடித்துதான் மசூதியை கட்டியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள்இந்த அதி புத்திசாலிகளுக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்த்தது என்று சொல்லவேண்டும்.
கற்பனை கதைகளை சொல்லவும்கடவுள் அங்கே பிறந்திருக்கலாம் என்று சொல்வதற்கும் இது ஒன்றும் அந்த தாத்தாக்களின் வீட்டு பேரன்களுக்கு சொல்லும் கதை இல்லையேஇது நீதி மன்றம் என்பது அவர்களுக்கு தெரியாதா?
சொத்து யாருக்கு சொந்தம் என்று வழக்கு கேட்டால்ஆளுக்கு பாதி எடுத்துகிடுங்க என்பதற்கு இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா?
இவர்கள் பிரித்துக்கொடுத்தது அயோத்தியில் உள்ள நிலத்தை அல்ல,

மாறாக இந்த நாட்டு மக்களது நெஞ்சங்களை.
இவர்கள் பிரித்து கொடுத்தது இந்த நாட்டு மக்களின் உணர்வுகளை.
இந்த நாட்டு மக்களின் மனதுகளை.
இதற்கு ஒரு நீதியரசர் மற்றும் நீதிமன்றம் தேவையா?
இது ஒருமதச்சர்பு அரசு என்பது பலருக்கு தெரிவதில்லைஅதனால்தான் இங்குள்ள நீதிமன்றமும் ஒருமதச்சார்பு நீதிமன்றமாக இருக்கிறதுதியோகிரடிக் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஒருமதச்சார்பு அரசு மற்றும் நீதிமன்றம் இருப்பது இப்படியாவது அம்பலமானதே.
தவறான தீர்ப்பு
தீர்ப்பு மிகவும் தவறு என்று வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார். 1992 இல் மசூதி இடிக்கப்பட்டது உண்மையா இல்லையா என்று கேட்டார். அப்படி இடிக்கப்பட்டது உண்மை என்றால், அந்த இடத்தின் சொந்தக்காரர்களான சன்னி வக்போர்டு தொடுத்த வழக்கை எப்படி காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய முடியும்? என்று வினவினார்.
பிரச்னையை மிகவும் சிக்கலாகக் நீதியரசர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு அல்ல என்பதாக இதன்மூலம் சொல்லுகிறார்களா? இது ஒரு ஒருமதச்சார்பு அரசு இயந்திரம் என்று இதன்மூலம் தெரிகிறதா? தீர்ப்பு ஒரு சார்பானது என்பதை ராஜீவ் தவான் கூறினார்.
மூன்றில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டு, மீதம் இரண்டு பகுதிகளை இரண்டு இந்து அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இது இரண்டு இந்து அமைப்புகளுக்கு சேர்த்து, மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களுக்கு என்றும், ஒரு பங்குதான் முஸ்லிம்களுக்கு என்றும் தீர்ப்பு கூறுவதாக பொருள். இது ஒருமதச்சார்பு தீர்ப்பு இல்லையா?
பாபர் மசூதி கமிட்டிக்கு ஒரு பகுதியை கொடுத்தால், அதில் பாபர் மசூதியை கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களா? ஒரு பகுதியை நிர்மோகி அகாரா அமைப்பிற்கு கொடுக்க வேண்டும் என்றும், இன்னொரு பகுதியை புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறியிருப்பதன் நோக்கம் என்ன?
இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கவா? இது கட்டப்பஞ்சாயத்து போல இல்லையா? நீதிமன்றம் ஒரு சிவில் வழக்கில், சொத்து வழக்கில் ஒனக்கும் இல்லை, அவனுக்கும் இல்லை, இரண்டு பேருக்கும் கொஞ்சம், கொஞ்சம் என்று கூறுமா?
நமக்கு தலை சுற்றுகிறது. இந்த நாட்டு மக்களுக்கும் தலை சுற்றட்டும் என்று இப்படி ஒரு விளையாட்டா? எப்படியோ இந்த நாட்டு மக்களுக்குள் ஒற்றுமை இருக்கக்கூடாது என்பது ஆள்வோரின், அதாவது சட்டம் மூலம் ஆளும் நீதியரசர்களின் நோக்கமா? இப்படி குழம்பி திரிகிறார்கள் ஒற்றுமை விரும்புவோர்.

maniblogcom.blogspot.com/2010/09/blog-post7527.html



மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி