படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...
17 அக்., 2010
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
பொதுவெளியில் ஒரு பாதிரியாரின் குற்றம் தெரிந்த பின்தான் திருச்சபைகள் ஏதோ பெயருக்கு ஒரு நடவடிக்கை எடுக்கின்றன. கூடுமானவரை குற்றம் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்படுவதற்கு திருச்சபையில் அதிகார வர்க்கம் எப்போதும் முயன்று வருகிறது.
திருச்சியில் பிரபலமான ஜோசப் கல்லூரியில் அப்படி ஒரு மோசடி சமீபத்தில் வெளிச்சத்திற்க்கு வந்திருக்கிறது. இந்தக் கல்லூரியில் முதல்வராகவும், பாதிரியாராகவும் இருக்கும் ராஜரத்தினம் என்பவர் உடன் பணியாற்றும் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். இதை அந்த கன்னியாஸ்திரி முன்பே ஏன் எதிர்த்துப் போராடவில்லை என்பதற்கு திருச்சபையின் அடக்குமுறையான சூழலே காரணம்.
இப்போது வேறுவழியின்றி இந்த பிரச்சினை வெளியே வந்திருக்கிறது. இதை அறிந்த திருச்சி நகர ம.க.இ.க தோழர்கள் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு 13.10.2010 அன்று காலை கல்லூரி அருகில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், மத அடையாளத்துடன் காம வேட்டையாடும் இத்தகைய தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்று கோரியும் தோழர்கள் முழக்கமிட்டனர். இது திருச்சி நகரெங்கும் மக்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முடிவில் பத்து தோழர்கள் மட்டும் கல்லூரியில் நுழைவதற்கு முயன்றனர். அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ம.க.இ.க செயலர் தோழர் ராஜா தலைமை வகித்தார்.
இந்த உடனடி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பாதிரியார் ராஜரத்தினத்தை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது. போலீசும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறது. இந்த குறைந்த பட்ச நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்றால் திருச்சபையின் ஊழல் இன்னும் பல வடிவங்களில் வெளிவரும் என்பதாலேயே இந்த நடவடிக்கை கல்லூரி நிர்வாகத்தால் அவசரமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
ஊடகங்களில் அனைத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் செய்தியாக பெரும் வரவேற்பைப் பெற்றது பெருவாரியான மக்களிடம் ஆதரவை உருவாக்கியிருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக