படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...
1 அக்., 2010
ஷஹீத் பழனிபாபா அவர்கள் 1994-ம் ஆண்டு உங்கள் தூதுவன் இதழுக்கு அளித்த பேட்டி
கேள்வி - உங்கள் அமைப்பு பற்றி கூறுங்கள்?
பழனிபாபா - அகில இந்திய ஜிஹாத் கமிட்டிதான் எங்கள் அமைப்பு. இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து முஸ்லிம்களை காப்பது எங்களது முதல்வேலை. ஆர்.எஸ்.எஸ் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டால் எங்களது நடவடிக்கைகளுக்கு அவசியம் வராது!
கேள்வி - அப்படி என்றால் சமுதாய நலன் என்பதெல்லாம்...?
பழனிபாபா - சமுதாய நலன்களுக்கு பாடுபட எத்தனையோ அமைப்புகள் உள்ளது. இப்போது இந்தியாவில் சமுதாயத்திற்கு தேவை, சமுதாய நலன் அல்ல, சமுதாயத்தின் தற்காப்பு! அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தாக வேண்டும். 6.12.1992-ல் இருந்து 12.3.1993 வரை 13,853 (கப்ரூ) குழிகள் தோண்டியெடுக்கப் பட்டுள்ளது!
இது அமைச்சர்களால், பாராளுமன்றத்தில் தரப்பட்டுள்ள புள்ளிவிபரம் இவ்வளவு பேரும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்! கலவரங்களுக்குக் காரணம் இந்து முன்னணி போன்ற அமைப்புகள்தான். முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் கோழையாக இருப்பதால்தான், அவர்கள் திரும்பத் திரும்ப முஸ்லிம்களை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!
ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் வெடித்ததற்குப் பின்னால், அவர்களின் செயல்பாடுகள் குறைந்து விட்டது. முஸ்லிம்கள் திருப்பி அடிப்பார்கள் என்ற பயம் இருந்தால், எல்லோரும் அமைதியாக இருந்து விடுவார்கள்! எனவே தான் எனக்கு முஸ்லிம்களின் மிதவாதத்தில் நம்பிக்கையில்லை. ஒரு முஸ்லிம் தனியாக,உறுதியான மனநிலையுடன் நின்றான் என்றால், எங்கு வேண்டுமானாலும் தனித்து வாழலாம்! மைனாரிட்டி, மெஜாரிட்டி இங்கு பிரச்சினையில்லை, கெளரவம் (Mighty) தான் பிரச்சினை. அதனை செயல்படுத்த தவறிவிட்டார்கள் அரசியல்வாதிகள்!
அரசியல் அமைப்புகளும், நம் முன்னோர்களும், மிதவாதம் பேசியவர்களும்கூட தங்கள் சுயநலத்திற்காகத்தான் பேசினார்கள்! (கடந்த சில வருடங்களாக) ஜெயலலிதா ஆட்சியில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போன முஸ்லிம்கள் முப்பத்தி இரண்டு பேர். முஸ்லிம்கள் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இன்று பயந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அது முஸ்லிம் அரசியல் அமைப்புகளைக் கண்டோ, சமூக சேவை, ஒழுக்க நெறிகளைக் கண்டோ இல்லை! நான் பதிலடி தருவேன் என்பதனால் பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் தங்கள் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்த் ஆதரவில் பத்து சதவீதம் எனக்கு கொடுத்திருந்தால், இங்கே மதக்கலவரமே இல்லாமல் செய்திருப்பேன்! நாங்கள் இந்த அமைப்பை செயல் படுத்துவதால்தான் முஸ்லிம்கள் மானத்தோடு நடக்கவாவது முடிகிறது. எல்லா முஸ்லிம்களும் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், என்னால்தான் கலவரம் வந்தது என்று ஆதாரப்பூர்வமாய் நிருபிக்க மாட்டார்கள். நிரூபிக்கவும் முடியாது.
கேள்வி - நீங்கள் பேசுகின்ற பேச்சின் மூலம் கலவரம் ஏற்படாது என்கிறீர்களா?
பழனிபாபா - நான் பேசுகின்ற பேச்சின் மூலம் கலவரம் ஏற்படவில்லை என்று ஒரு முறையல்ல,
123-முறை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது! நிருபித்தால் பத்து இலட்சம் ரூபாய் தருவதாக அறிவித்து இரண்டு வருஷமாச்சு.
கேள்வி - கலவரம் ஏற்படவில்லை என்ற கோர்ட்டின் தீர்ப்புகள் உங்களது வாதத்திறமையால் இருக்கலாமா?
பழனிபாபா - எனக்கு வருகின்ற ஜனக்கட்டுபாடு (கூட்டம்) முஸ்லிம் லீக்காரர்களுக்கு இல்லாததாலும், என்னை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததாலும் ஏற்படுகின்ற பொறாமையாலும், அவர்கள் இப்படிச் சொல்லலாமே தவிர, அரசாங்கமும், கோர்ட்டும் அதைச் சொன்னது கிடையாது! குற்றப்பத்திரிக்கைகளில் (குற்றம்செய்ததாக) என்னைக் கைது செய்தது கிடையாது. மதக்கலவரத்தைக் காரணம் காட்டி என்னைக் கைது செய்ததே கிடையாது. பத்திரிக்கையில்தான் அப்படியொரு செய்திவரும்!
இப்போதுகூட (பத்து மாதம்) ஜெயிலில் இருந்தேனே. காரணம் தெரியுமா உங்களுக்கு? ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்புக்கு நான் காரணம் என்ற பத்திரிக்கைச் செய்தியால்தான். முஸ்லிம்களாகிய நீங்கள் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் என்னிடம் அதுபோன்று ஏதாவது இருக்கிறதா? பத்திரிக்கைகள்தான் என்மீது அவதூறாக எழுதுகின்றன.
கேள்வி - நீங்கள் கோயில்களை இடிப்போம் என்றெல்லாம் பேசுவதில்லையா? பேசாதபோது அவதூறு எழுதும் பத்திரிக்கைகள் மீது வழக்குதொடர வேண்டியதுதானே?
பழனிபாபா - கோயில்களை இடிப்பேன் என்று நான் பேசியதற்கு ஆதாரம் காட்டுங்கள். நான் சொன்ன ஒரே வாசகம். பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டினால், வெடிகுண்டு வைத்து தகர்த்தெறிவோம் என்பதுதான். இதை நான் கோர்ட்டிலேயே எழுதி கொடுத்திருக்கிறேன். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது உத்திரப்பிரதேச அரசு. மத்திய அரசோ, தமிழ்நாடு அரசோ அல்ல!
பாபர்மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் கட்டினால், நானோ அல்லது என்னுடைய ஆள்களோ வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவோம். அதற்காக தூக்குக்கயிறு கிடைத்தாலும் சரி, தமிழ் நாட்டிலுள்ள பத்திரிக்கைகள், முஸ்லிம் விஷயத்தில் நியாயமான போக்கை கடைபிடிக்கின்றனவா? முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரியும். தமிழக பத்திரிக்கைகள் பொய் பேசுகின்றன என்று! என் விஷயத்தில் மட்டும் ஏன் பத்திரிக்கை செய்திகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், என்மீது அவர்களுக்கு இருக்கும் வெறுப்பே காரணம். நான் பேசிய அனைத்து கூட்டங்களிலும் மாற்று மதத்தவர்கள் இல்லாமல் இருந்தது கிடையாது!
ஒன்று வன்னியர் சங்கம், அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி, அதற்கு முன்னால் தி.மு.க.காரர்கள் போட்டிருப்பார்கள். அந்த கூட்டங்களில்தான் நான் பேசி இருப்பேன். நாங்கள் எங்கு கூட்டம் போடுவோம் என்றால், எங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட்டம் போட்டார்களோ அங்குதான். அதே மாதத்தில் கூட்டம் போடுவோம். முஸ்லிம்கள் தவறாக உணர்த்தப்பட்ட பொய் வதந்திகளைத் தூக்கி கொண்டு வருவதுதான் காரணம். நாகூர் கலவரத்தின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா? நான் நாகூரில், 1980-ல் பேசியதுதான். அதற்கு பின்னால் பேசியதே கிடையாது!
கேள்வி - அப்படியானால் வன்முறையை நீங்கள் தூண்டிவிடுவதில்லையா?
பழனிபாபா - வன்முறை வந்தால் தடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோமே தவிர, நாங்களாக வலியப்போய் அமைதியைக் கெடுத்ததில்லை. போலீஸூம் குற்றம் சாட்ட்வில்லை. பாபா கைது செய்யபட்டார் என்று பத்திரிக்கைகளில் செய்திவரும். ஆனால் என்னைக் கைது செய்யும்விதமே வேறு.
ஒவ்வொரு ஊரிலும் நான் கோயிலை இடிக்கப்போவதாக சொல்லி என்னை கைது பண்ணியுள்ளார்கள் சரி. பாபர்மசூதி இடித்தவுடன் என்னை கைது செய்தார்களே? அப்போது நான் எந்தக் கலவரத்தைத் தூண்டினேன்? மசூதி இடிப்பிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ கலவரம் செய்யக்கூடும் என்பதற்கு பதிலாக "நீ மயிலாடுதுறையில் மாரியாத்தா கோவிலை இடிக்கப்போனாய்" என்று சொல்லி என்னைப் பிடித்து உள்ளே வைத்தார்கள்! ஆனால் எனக்கு ஜாமீன் கொடுத்தது அக்கோவிலின் டிரஸ்டி சண்முகப்படையாச்சி தான்!
அரசுக்கு தேவை நான் உள்ளே போக வேண்டும் அவ்வளவுதான். நான் எப்படி ஜெயித்து வருகிறேன் என்பது பற்றி இவர்களுக்கு கவலையில்லை! உங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று ஜெயலலிதாவே. தனது அரசாங்கப்பூர்வமாக கடிதம் எழுதிவிட்டார்!
பார்ப்பனப் பத்திரிகைகளில் சொல்வதை கேட்டுக்கொண்ட முஸ்லிம் பத்திரிக்கைகளில் ஒன்றாவது சிறைக்கு வந்து என்னிடம் காரணம் கேட்டீர்களா?
கேள்வி - பழனிபாபா ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது?
பழனிபாபா - அது உண்மைத்தான். இந்து முன்னணியே அதைச் சொல்லிவிட்டது. அது எனக்கு நல்லதுதான். இனிமேல் எங்கள் மீது எந்தவொரு பிரச்சினையும் வராது பாருங்கள். வாய்ச்சவடால் என்றால் என்ன? பத்து இந்து முன்னணியினரை வெட்டிவிடவா? அதனை ஏற்றுக் கொள்வார்களா? நான் வன்முறையைத் தூண்டுகிறேன் என்கிறர்கள். நான் ஒன்றும் செய்வதில்லை என்றும் சொல்கிறார்கள், இவர்களுக்கு என்ன திட்டம்? மற்றவர்களை வேலை வாங்கிக்கொண்டு, இவர்கள் தியாகம் செய்யாமல் ஊர்வம்பு பேசிக்கொண்டு இருக்க விரும்புகிறார்கள்.
ரசூலுல்லாஹ் (ஸல்) வைப் பற்றி பேசினால் வெட்டுவோம் என்று சொல்லீருக்கிறோம். அதே போன்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களையும், அவர்களது மனைவிமார்களையும் பற்றி ஆபாசமாய் படம் எடுக்கப் போகிறோம் என்று சமீபத்தில் இந்து முன்னணியினர் பேசியுள்ளார்கள். நான் சொல்கிறேன் அப்படி எடுங்கள் அதன்பின், நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். வீரமற்ற விவேகத்திற்கும் நான் தயாராக இல்லை. அதே சமயத்தில் அவர்களை நாங்கள் திட்டாமல் இருக்கமாட்டோம்!
கேள்வி - மிதவத்தில் செய்ய முடியாதத்தை தீவிரவாதத்தில் செய்ய முடியும் என்கிறீர்களா?
பழனிபாபா - மிதவாதம், தீவிரவாதம் இரண்டிற்கும் முதலில் நீங்கள் அர்த்தம் சொல்லுங்கள்.
கேள்வி - பிரச்சினைகளை அரசிடம் பேசி தீர்த்துக் கொள்ளலாமே?
பழனிபாபா - இங்கே ஒரு அரசு இருப்பதாய் நீங்கள்தான் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள். இங்கே அரசாங்கம் இருந்திருந்தால், பிரச்சினையே வராதே? எதிர்த்தரப்பினரைக் கூப்பிட்டு அமைதியாக இருக்கச் சொன்னால், நாங்களும் அமைதியாக இருந்து விடுவோமே! இங்கே ஒரு கமிஷன் மண்டிதான் நடக்கிறது. கவர்மென்ட் இருந்திருந்தால் நாங்கள் ஏன் இவ்வ்ளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்? கவர்மென்ட் இருந்திருந்தால் நியாயம் நடந்திருக்க வேண்டுமல்லவா?
கேள்வி - நீங்கள் பேசிவிட்டுப் போனவுடன் சில இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது மாற்றுத்தரப்பினர்களுக்கு எதிராய் செயல்பட்டு விடுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு?
பழனிபாபா - எந்த ஊரில் பேச்சைக் கேட்டவுடன் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு கத்தியை தூக்கிக்கொண்டு போய் விடுகிறார்கள்? அப்படிச் செய்திருந்தால்தான் முஸ்லிம்கள் இப்படி சிரமப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லையே? இவையெல்லாம் உங்களால் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள். அந்த கற்பனைகளிலேயே மிதக்கிறீர்களே தவிர, ஆதாரப்பூர்வமாக ஒன்றைகூட உங்களால் நிரூபிக்க முடியாது.
முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் மிகைப்படுத்தினார்களே தவிர, எந்த இந்துவும் என்னை வெறுப்பவனில்லை. இந்து முன்னணிதவிர இன்றுவரை எனக்கு ஜாமீன் கொடுத்தவர்கள் இந்துக்கள்தான், முஸ்லிம்கள் அல்ல!
கேள்வி - நீங்கள் காஞ்சியிலுள்ள சங்கரமடத்தை இடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அத்வானி பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துள்ளார்?
பழனிபாபா - அது பொய், அப்படிச்சொன்ன அத்வானி அது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றும் சொல்கிறார். உன்மையாக இருந்தால் இவரே டெல்லியில் உள்ள Dro-வில் கொடுத்திருக்கலாமே? சங்கரமடத்தை இடிக்கப்போவதாக சொல்லியிருப்பது மக்கள் கலை இயக்கம். ஏனென்றால் மடம் புறம்போக்கு நிலம். புறம்போக்கு நிலத்தை யார் இடித்தால் என்ன? அப்படி இடித்தால் அதற்கு நாங்கள் ஆதரவு தருவோம் என்று சொன்னோம். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் அரசாங்கமோ, பொதுமக்களோ அதை இடிக்கலாம்! ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் இருந்த ஜூம்மா மசூதிக்கோட்டையை இடித்தார்கள். ஐநூறு வருடங்களுக்கு முன்னால் இருந்த புராதனச் சின்னத்தை(பாபர் மசூதி) இடித்தார்கள். மடத்தை இடிக்கக் கூடாதா?
கேள்வி - மிதவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் நீங்கள் ஒரு உதாரணம் சொல்லுங்கள்?
பழனிபாபா - மிதவாதம், தீவிரவாதம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அடித்தால் திருப்பி அடிப்போம், பேசினால் திருப்பிப் பேசுவோம். அவ்வளவுத்தான்! அதற்குப் பெயர் (Defence) பாதுகாப்பு. ஆர்.எஸ்.எஸ்.-ல் என்ன திட்டம் போடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதனை முறியடித்துக் கொண்டு அவர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பதுதான் எங்களது வேலை. அதற்காக எங்களுக்கு சொர்க்கம் கிடைத்தாலும், நரகம் கிடைத்தாலும் அதுபற்றி கவலையில்லை!
கேள்வி - சரி குத்துமதிப்பாக உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது?
பழனிபாபா - எங்களுக்கு சல்லிக்காசுகூட வெளிநாட்டிலிருந்து வருவதில்லை. சட்டப்பாதுகாப்பு நிதியென்று வருடத்திற்கு 80-ஆயிரம் ரூபாய் வருகிறது. அதுவும்கூட இந்தியாவிலிருந்து வெளிநாடு போய் வேலை செய்யும் நம் சமுதாயத்தினர்தான் அதனை அனுப்புகிறார்கள். அதனைக்கூட நாங்கள் டி.டி.யாகவோ, செக்காகவோதான் வாங்குகிறோம். கருப்புப் பணமாக வாங்குவதில்லை. நம்மவர்கலாக நினைத்துக் கொள்கிறார்கள். எங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதாக!
கேள்வி - நான் ஒரு இந்திய குடிமகன், இந்நாட்டின் முன்னேற்றத்தில் நான் பங்கு வகிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா?
பழனிபாபா - இல்லை... இது போன்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. நான் இந்தியாவை இந்தியா என்றே பார்க்கவில்லை! இந்நாட்டின் குடிமகன் என்ற உணர்வே எணக்கு ஏற்பட்டது இல்லை. என்னுடைய ஜீவாதார உரிமைகள் முடக்கப்பட்டு விட்டது. அதனால் இந்தியாவை நேசிக்கமாட்டேன். எனக்குப் பாதுகாப்பில்லாத நாட்டை நான் மதிக்கமாட்டேன்.
இங்கு நடப்பது ஒரு மதச்சார்பற்ற ஆட்சியல்ல. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் ஆட்சி! இந்தியா எனது சகோதரத்துவக் கொள்கைகளுக்கும், மார்க்கத்திற்கும் பாதுகாப்புத்தராத வரையில், நான் இந்தியாவை ஒப்புக் கொள்ளமாட்டேன்!
கேள்வி - பம்பாயில் குண்டுவெடிப்பதற்கு ஆறு தினங்களுக்கு முன்னால், பம்பாயில் குண்டு வெடிக்கும், எங்கு வெடிக்கும், எப்பொழுது வெடிக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும் என்று நீங்கள் பேசியது தினமலரில் வெளிவந்தது அது எப்படி உங்களுக்கு முன்கூட்டியே தெரியும்?
பழனிபாபா - எனக்கு அல்லாஹ் கனவில் வந்து சொனனார் என்று சொன்னேன். உடனே போலீஸார் சைதாப்பேட்டை கோர்ட்டில் கேஸ்போட்டு விட்டார்கள்! நான் ஐகோர்ட்டுக்கு மாற்றச்சொல்லி வழக்கு அங்கு வந்தது. நான் அங்கு சொன்னேன் 1948-ல் பாபர்மசூதியை பூட்டிவைத்து முஸ்லிம்களும், இந்துக்களும் உள்ளே நுழையக்கூடாது என்று நேரு தடையுத்தரவு பிறப்பித்தார்.
1985-ல் ஒருவன் சொந்த மச்சினன் நீதிபதியாக இருந்த கோர்ட்டில் கேஸ் போட்டு "நேற்று என் கனவில் இராமன் வந்து நாற்பது வருடமாக பூஜை இல்லாமல் இருக்கிறேன்" என்று அழுதார். அதனால் பீட்டைத் திறக்க வேண்டும் என்றான். அவன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்! அதே போல் எனக்கும் பம்பாயில் குண்டு வெடிப்பதைப் பற்றி என் கனவில் அல்லாஹ் வந்து சொன்னார் என்றேன். இரண்டு கேஸையும் தள்ளுபடி செய்து விட்டார்கள்!
கேள்வி - உங்களது அமைப்பினை மற்ற இஸ்லாமிய அமைப்புகளோடு இணைந்து, சமுதாயத்திற்காக இன்னும் நன்றாக பாடுபடலாமே?
பழனிபாபா - நாங்கள் அமைப்பு ரீதியாக மற்ற இஸ்லாமிய அமைப்புகளோடு கூட்டு சேர்ந்து செயல்பட்டால், இந்துக்களின் ஒட்டுமொத்த எதிப்பும் முஸ்லிம்கள்மீது பாயும். இன்று இந்துக்கள் என்ன சொல்கிறார்கள்? நமது கமிட்டிதானே எங்களுக்கு எதிராய் இருக்கிறது. மற்றவர்கள் இல்லையே என்கிறார்கள்! இந்த நிலையில் முஸ்லிம்கள் மீதான ஒரு பெரிய எதிர்ப்புணர்வை அடக்கி வருகிறோம். இது ராஜதந்திரமான போக்கு, இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளோடும் நாங்கள் நேசமாகத்தான் நடந்து கொள்கிறோம். முஸ்லிம்லீக்கை தவிர, மற்றவர்களும் எங்களோடு நேசமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக