பெரம்பலூர்: அரியலூரில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 7 நாட்டு வெடிகுண்டுகள், 3 வீச்சு அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள முந்திரி காட்டில் திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ், அரியலூர் எஸ்பி முத்துசாமி தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த முருகன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
தப்பியோடிய தமிழர் மீட்புப்படையைச் சேர்ந்த தீவிரவாதி அறிவழகன், தஞ்சையை சேர்ந்த ரவுடி பாம் பாலாஜி உள்ளிட்ட பலரை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், மதுரை 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் தீவிரவாதி அறிவழகன் நேற்று சரணடைந்தார்.
அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில்,
அறிவழகன் கொடுத்த தகவலையடுத்து அரியலூர் அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தில் உள்ள இலுப்பை தோப்பில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளையும், 3 வீச்சு அரிவாள்களையும் போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அறிவழகனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
thatstamil.oneindia.in/news/2008/04/04/tn-bombs-recovered-at-ariyalur.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக