படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

20 அக்., 2010

ஆயுத பூஜையில் கரடியாய் புகுந்திடும் பெரியார் திராவிடக் கழகம்



தொழில் நுட்ப விஞ்ஞான வளர்ச்சியில் இந்தியாவின் சாதனை இன்று தவிற்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்து வருகிறது.
உலகமயமாதலில் வல்லரசு நாடுகளுடன் பெரும் போட்டியில் இறங்கியுள்ள இந்தியாவை முழுவதுமாய் இயக்குவது மக்களின் தொழில் நுட்பத் திறனோ இல்லை அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளோ காரணம் இல்லை என  மக்கள் உறுதியாக நம்புகின்றனர். கல்லோ இல்லை மண்னோ  சிலைகளும் உருவங்களும் தான் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் , நாட்டின் வளர்ச்சியினையும் வழி நடத்துவதாக கருதப்படுகிறது.
இதற்காக தங்களது உழைப்பினால் விளையும் செல்வத்தை எந்த உழைப்பும் செய்யாத சிலைகளுக்கும் அதற்கு பூஜை செய்யும் கடவுளை உருவகப்படுத்தியோருமான பார்ப்பனர்களுக்கும் அள்ளி அள்ளி கொடுத்த வண்ணம் உள்ளனர். பார்ப்பனர்களும் உயர்சாதிய வர்க்கத்தினரும் தின்று கொழுப்பதால் கடவுளும் கொழுத்து கடைசியில் நம்மையும் காத்தருள்வதாய் முழுமையாக நம்ப்படுகிறது. ஒருவனின் பிறப்பு முதல் இறப்பு வரை சம்பிரதாயங்கள், சாஸ்த்திரங்கள், கடவுள் காரியங்கள் என எத்தனை இலட்சங்களும், கோடிகளும்  சராசரியாக செலவிடுகிறான் என்பதை கணக்கிட்டுப் பார்த்தால் தெரியும் ஏன் பார்பனர்கள் மட்டும் இப்படி கொழு கொழு வென இருக்கிறார்கள் என்ற உண்மை தெரியும்.
அது கிரமாவாசிகள் என்றாலும், நகரத்துவாசிகள் என்றாலும் பக்தி என்று வந்து விட்டால் போதும் உயிரைக் கூட கொடுப்பார்கள்
அது ஆசிரமத்து கடவுளாக இருந்தாலும் சரி, மடாதிபதிகளின் கடவுளாக இருந்தாலும் சரி பொன்னும் பொருளும் குவியும் இடமாகத்தான் உள்ளது..
எது யாருக்கு குவிந்து இருந்தாலும் பக்தர்களுக்கு நிறைய அருள் குவிகிறதாக கருதப்படுகிறது.
இதைக் கொடு அதை தருகிறேன் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் கல் சிலைகளுடன் பேரங்கள் நடைபெருகின்றது..
அது கல்வியாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்பாக இருந்தாலும், வணிகமாக இருந்தாலும் சரி, மேலும் ஆரோக்கியம், மங்கல காரியங்கள், எல்லாமே..இந்த ஒப்பந்தத்தின் அடிப்ப்டையில் தான்.
அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் வாகணங்கள் முதல் , தொழில் செய்ய உதவும் ஆயுதங்கள், உபகரணங்கள் என எல்லாவற்றிற்கும் வருமான வரி கட்டுவது போல் வருடத்திற்கு ஒரு முறை சாமி வணிகம் செய்யும் கடவுள் நிருவனங்களுக்கு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ இந்திய பக்தன் செலவு செய்கின்றான். அப்படி கோடி கோடி யாய் அழிக்கப்படும் சாமி வியாபார நாள் தான் ஆயுத பூஜை.
வீடுகள், சிறு தொழிற்கூடம் முதல் பெரும் நிருவனங்கள் வரை  ஆயுத பூஜை செய்யாத இடமே இல்லை.அதற்கு பன்னாட்டு தொழிற் நிருவனங்களும் விலக்கு அல்ல. இந்தியாவின் தலைசிறந்த மென்பொருள் நிருவனம் HCL டெக்னாலஜி என்ற நிருவனத்தின் எல்லா அலுவலகங்களிலும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாப்பட்டது, அலுவலகம் முழுவதுமாய் அலங்கரிக்கப்பட்டு சாமி சிலைகள் அடுக்கி வைக்கப்பட்டு தேங்காய் , வாழைப்பழம் ,பூ, குங்கும்ம், சந்தனம், என படையலிட்டு  அதில் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் keyboard, mouse ,printers என எல்லா கணினி சாதனங்களும் வைக்கப்பட்டு சந்தனம் குங்கும்மும் தடவபட்டு பூஜை செய்யப்பட்டது. தொழிலாளர்களுக்கு ஒரு கை பை நிறைய பொரியும் ஒரு சாத்துக்குடியும் (இலவசமாய்) வழங்கப்பட்டது.  ஐயர் வந்து மந்திரம் உச்சரித்து பூஜை புணஸ்காரங்கள் எல்லாம் செய்து ஹெச் சி எல் நிருவனத்திற்கு இறைவனிடம் பரிந்துரை செய்து போதுமான வருமானத்தை போன வருடம் போல இந்த வருடமும் வாங்கி கொடுப்பதற்கு உறுதிசெய்தார். இனி மில்லியன் டாலர் வருமானம் சென்ற வருடம் கிடைத்தது போல் இந்த வருடமும் பெருகும் என்று உறுதியாக நம்புவோமாக.
அதற்கு ஒரு நாள் முன்னதாக நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் வினித் நாயர் சென்னையில் Direction 2011 என்ற தொழிலாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த நிருவனம் தொழிலாளர்களின் ஒருமித்த முயற்ச்சியாலும் அவர்களின் குறையாத சக்தியாலும் தான் நாட்டின் சிறந்த ஐடி நிருவனமாக மாறியுள்ளது என்றும் அதற்காக தொழிலாளர்களின் தொடர் ஒத்துழைப்பினை சென்ற ஆண்டினை போலவே இந்த ஆண்டும் தங்களுக்கு தருமாறு வேண்டிக்கொண்டார்.
இப்பொழுது யார் இந்த நிறுவனத்திற்கு அருள் படியளக்க போகிறார்கள்??
பார்ப்பன ஐயரின் பரிந்துரைக்கு செவிமடுக்கும் சிலைகளா இல்லை வினித் நாயரின் வேண்டுகோளுக்கு செவிமடுத்த நிருவனத் தொழிலாளர்களா என்பது தான் கேள்வி,
ஒரு வேளை, அவனே கொடுத்துவிட்டு போகட்டும் என இருவரும் சும்மா இருந்துவிட்டால் பாவம் வினித் நாயரும், சிவ நாடரும் தெருவுக்கு போக வேண்டியது தான். ஆகவே தொழிலாளர்களோ இல்லை பார்பனர்கள் கண்டெடுத்த சாமிகளோ ஹெசிஎல் போன்ற பன்னாட்டு நிருவனங்களுக்கு போதுமான நிதி அருள் நிறைய கொடுக்குமாறு வேண்டி கொள்கிறேன். நாட்டில் ஆயுத பூஜை செய்யாத எதாவது ஒரு நிருவணமோ, தொழிற் நிலையங்களோ, வீடுகளோ அரசு அலுவலகமாகவோ இருந்திருந்தால் அது பெரும் விரயத்தில் செயல்படுவதாக தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் கோயில் இல்லாத தெருக்கல் இல்லை என்ற நிலையிலும் அரசு அலுவலகங்கள் ஒரு கோயிலாகத் தான் பூஜிக்கப்படுகின்றது. காந்தியின் படம் இருக்கிறதோ இல்லை அங்கு ஒரு கனபதி படமாவது கண்டிப்பாக இருக்கும், அப்படி சாமி படங்கள் இல்லாத ஒரு அரசு அலுவலகம் இருக்குமானால் அது இந்தியா என்ற தேசியம் அழிந்து விட்ட்தாய் பொருள் கொள்வோமாக.
இந்திய மதச்சார்பின்மையை முழுவதுமாய் பாதுகாக்கும் நோக்கிலும், செய்யும் தொழில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டியும் தமிழக காவல்துறையினரின் வணிகம் நலமாக நடக்க வேண்டியும் மேட்டூர் காவல் நிலையத்தை போலிஸார் அழகாய் பூக்களால் (காசு கொடுத்து வாங்கிய பூக்களால்) தோரனைகள் கட்டி,காவல்நிலையத்தில் உள்ள  படங்களுக்கு மாலை அணிவித்து,  துப்பாக்கிகளுக்கு பொட்டு வைத்துசந்தனம் தெளித்தனர் சாமி சிலைகளுக்கு படையல் வைத்து பூஜை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கரடி குட்டியைப் போல் புகுந்த பெரியார் திராவிட கழகத்தினர்,
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை உள்ளிட்ட மத சார்பான எந்த விழாக்களையும் கொண்டாட கூடாது என்ற விதிமுறையை மீறி தொடர்ச்சியாக விழாக்கள் கொண்டாடபடுவதாக எதிர்ப்பு தெரிவித்து
படங்களுக்கு போட்டிருந்த மாலைகளையும்  சாமி தின்பதற்காக வைத்திருந்த பொரிகளையும் பறித்து எறிந்தனர். பின்பு மதச்சடங்குகள் அரசு அலுவலகங்களில் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்கள் எழுப்பியுள்ளனர்.

பெரியாருடைய கொள்கைகளை எழுத்துக்களோடு நின்று விடாமல் நேரடியாக சமுக தளத்திலும் ஒரு போராளியாக நின்று போராடும் பெரியார் திராவிட கழகத்தினரின் செயல்கள் பிரமிக்க வைக்கின்றது.

 சாதிய கொடுமைகளை தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்த தீண்டாமை ஒழிப்பு காவல் நிலையத்தை பூட்டு போட்டு மூடும்  போராட்டம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ..

பெரியார் என்ற ஒரு பகுத்தறிவு சூரியன் மறைந்தாலும் அதன் சுடர்கள் மூட நம்பிக்கை எனும் இருள் வெளிகளை சுட்டெரித்து வருவது சமுகத்திலிருக்கும் ஆரிய மாயையை முழுவதுமாய் விரட்டி விடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பெரியார் திராவிட கழகத்தினரின் செயல்பாடுகளை வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி