படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

21 அக்., 2010

நீதியைத் தீர்மானிக்கும் அச்சங்களும் கிழிந்து போன மதச்சார்பின்மையும்




மதச்சார்பின்மை என்ற கிழிந்து போன கந்தல் ஆடையை இந்தியா கழற்றி எறிய வேண்டிய நேரம் வந்து விட்டது...
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது போல் தோன்றினாலும்
உண்மையில்  இது முதலாளிகளின் நாடு,
இது ஒரு மதச்சார்பின்மை நாடு என்று சொன்னாலும்
அடிப்படையில் ஒரு இந்துத்துவ நாடு
இங்கு நீதித் துறைகளில் சம நீதி கிடைக்கும்
என்று நம்பினாலும் மனு தர்மம் மட்டுமே தீர்ப்பாக கிடைக்கும்
பார்ப்பனிய எல்லைகளை கடந்து எவராலும் இங்கு வாழமுடியாது..
இது ஒரு இந்துத்துவ நாடு..
பாபர் மசூதி இடம் சம்பந்தமான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு கூறும் மையக் கருத்து இதுதான்.
நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பினால், இனி மேலும் இந்தியாவில் சிறுபான்மை மக்களும் அடித்தட்டு மக்களும் சுதந்திரமாக வாழவே முடியாது என்பதை இந்திய நீதித்துறை உறுதி செய்துள்ளது.
வரலாறும், சட்டங்களும் பாதிக்கப்பட்ட சிறுபான்மை-அடித்தட்டு மக்களுக்கு துணை நின்றாலும் பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளும், கற்பனைகளுமே நீதியின் குரலாக வெளிப்படும் அபாயம் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத ஒன்றாகும்.
இனி போகும் காலங்களில் காமிக்ஸ் ஹீரோக்கள் கூட கடவுள் அவதார நம்பிக்கையின் மூலம் இந்திய அரசியல் அதிகாரத்தின் ஆளுமை உக்தியாக மாற்றப்படுவார்கள்.  
குற்றச்சாட்டுகள் நிருபிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை அஃப்சல் குருவை பெரும்பான்மை மக்களின் மன நிம்மதிக்காக ஒரு முறையாவது தூக்கிடாலாம் என்று  நாட்டின் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறி பெரும்பான்மைமக்களின் நம்பிக்கையை  நிலை நிறுத்துகிறது.. இது நம்பிக்கைகளின் பூமி.
இராமர் நடந்து சென்ற பாலம் என்ற பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் படி சேது சமுத்திர திட்டம் தடைப் பட்டுக்கிடக்கிறது. மேலும் இராமர் இந்த இடத்தில் தான் பிறந்தார் என தீவிரவாதிகளால் ஒரு மசூதி இடிக்கப்பட்ட்து, பிறகு அந்த இடத்தையும் அபகரித்தனர்.  நீதி வேண்டிச் சென்ற சிறுபான்மை இஸ்லாமியர்களை, பெரும்பான்மையினரின் கோபத்திற்கு ஆளாகமல் அந்த இடத்தை அபகரித்தவர்களிடமே கொடுத்து விடச் சொல்லி நீதி மன்றமும் தீர்ப்பு கொடுத்திருக்க்றது.
இது நம்பிக்கைகளின் பூமி- பெரும்பான்மையினரின் பூமி. வரலாற்று ஆசிரியர்களினாலும், தொல்பொருள் ஆராய்ச்சி துறையினராலும்  இப்படி ஒரு மனிதன் இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து இருந்திருப்பானா என நிருபிக்க முடியாதா  இராமன் என்ற காமிக்ஸ் கதாபாத்திரம் இந்த இடத்தில் தான் பிறந்தான் என வட்டமிட்டு காட்டி நீதிமன்றம் பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு கூறுகிறது.

ராம ஜென்ம பூமி தொடங்கி, இராமர் பாலம் வரையிலும் ,பசுவில் தொடங்கி பன்றிகள் வரையிலும்  கங்கை தொடங்கி எல்லையில்லா கடல் வரைக்கும் இந்திய எல்லைப் பரப்புக்குள் கடவுள் சம்பந்தப்பட்டு உள்ளார். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை நாடாக இருப்பதால் இங்கு சட்டங்களும், ஆளும் நிர்வாகங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறது. இந்திய எல்லைக்குட்பட்ட இயற்கைகளில் எல்லாம் இந்துக் கடவுள்கள் இருக்கும் அபாயத்தால் இனி இந்த நாட்டில் மனிதர்கள் வசிப்பது பெரும் சிரமமான காரியமாகும். இந்தியா ஒரு இந்து நாடு என்று இந்துத்துவவாதிகளால் அறிவிக்க கூடிய நேரம் வந்துவிட்டது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான நீதி சிறுபான்மை இனத்தவர்களுக்கு மறுக்கப்படுவதே இதை உறுதி செய்துள்ளது.
கவி நிலவு அமிர் அப்பாஸின் கவிதை வரிகள் காலத்தின் சாட்சியாய் இருக்கிறது.

இடித்தாலும் வெடித்தாலும்..அவர்கள் கரசேவகர்கள்..!
அதற்காக துடித்தாலும் தொழுதாலும்
நாங்கள் பயங்கரவாதிகள்..!
இடிக்கப்பட்ட மசூதி யாருக்கு சொந்தம்?
இடித்தவனுக்கு சொந்தம்..!
அயோத்தியில் நிலத்தைப் பறிகொடுத்தவனுக்கு
ஒரு பங்கு..!
ஆக்ரமிப்பாளனுக்கு இரண்டு பங்கு..!
மதச்சார்பின்மைத் தேசத்தின் மகத்தான தீர்ப்பு..!
இத்தனை நாளாய் எழுத்துப் பிழையாய்
வாசித்திருக்கிறேன்..!
உயர்நீதி மன்றம் அல்ல அது உயர்சாதி மன்றம்..!
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்க கூடாது..!
ஆனாலும்- நீதியை அவமதிக்கலாம்..!
பூணூல்கள்- பாம்பாகி கொத்துகிறது
தடி கொண்டு அடிக்க தடுக்கிறது சட்டம்…!
       ஒரு முறை நீதி புதைக்கப்படும் போது
       ஆயிரம் அநீதிகள் விதைக்கப் படுகிறது..!
ஒரு இரும்புக் கரம் நம்மை ஒடுக்கும் போது..
ஒராயிரம் பயங்கரங்களாய்
அது வெடிக்கக் கூடும்..!
விதைத்தவர்கள் மறந்தாலும்
அறுவடைக் காலம்
அவர்களை மறப்பதில்லை..!

சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரு இஸ்லாமியன் மீது குற்றம் சாட்டினால் போதும் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லாமல் உடனடியாக தண்டனை உறுதி செய்யப்படும். ஆனால் பெரும்பான்மையினரின்  நிருபிக்கப்பட்ட குற்றங்களும் வெறும் சந்தேகம் மட்டுமே என தள்ளுபடி செய்யப்படும். சிறுபான்மையினரின் தற்காப்பு என்பது தீவிரவாதமாகும், பெரும்பான்மையினரின் தீவிரவாதம் தேசபக்தியாகவும் இங்கு உறுதிசெய்யப்படும்.
ஒரு சூலாயுதமும், எலும்பிச்சை பழமும், கொஞ்சம் பூவும், குங்குமமும்  ஒரு சிலையோ இல்லை புகைப்படமோ போதும் ஏதாவது ஒரு சாமி அவதரிக்க ,பின் அது வாகனங்கள் போகும் சாலைகளாகட்டும், மனிதர்கள் நடமாடும் பாதைகளாகட்டும், இல்லை பலர் கூடும் பொது இடங்களாகட்டும்.. நாளடைவில் கும்பாபிஷேகம், சிறப்பு தரிசனம் என நடு ரோட்டில் வளர்ந்து நிற்கும்.
நகரங்களிலும், கிராமங்களிலும் அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி முளைத்து கொண்டே இருக்கும் கடவுளர்களை நாமும் கடந்த வண்ணம் தான் உள்ளோம்., அறக்கட்டளைகளும் கறுப்பு பணங்களும் அறங்காவலர்களாய் கடவுள்களை பாதுகாக்கும்.
நாளைக்கு உச்ச நீதிமன்றத்தையோ இல்லை பாரளுமன்றத்தையோ ஏதாவது ஒரு இந்து கடவுளின் ஜென்ம பூமியாக்குவதற்கு ஒரு சூலாயுதமோ இல்லை ஒரு களிமண் சிலையோ போதும். மிச்சங்களை இந்துத்துவ சங்பரிவார்கள் பார்த்துக் கொள்வார்கள். இது பெரும்பான்மையினரின் நம்பிக்கை பூமி இங்கு எல்லாமே அப்படித்தான் இருக்கும். கல்,மண் என எல்லாவற்றிலும் கடவுளைக் காணும் பக்தியாளர்கள் கடைசியாய் இராமனை கண்டு கொண்டது பாபரின் மசூதியில். கோயில்கள் இல்லாத அரசு அலுவலக வளாகங்கள் இந்தியாவில் இல்லை. எந்த நேரமும் அவைகள் கோயில்களாகலாம் பிறகு அங்கு இஸ்லாமியர்களுக்கு என்ன வேலை இருக்கிறது.


தீர்ப்பு வந்த மகிழ்ச்சியில் சங்பரிவார்களின் கூட்டணிகள்..அவர்களின் வாதம் இதுதான்                               “ நாங்கள் பாபர் மசூதியை இடித்ததால் தான் இன்று  இப்படியொரு சாதகமான தீர்ப்பு வெளிவந்துள்ளது என்கிறது சங்பரிவார்கள் (Todays AYODHYA VERDICT was possible only due to demolition of BABRI masjid !).
இனி காவி தீவிரவாதிகள் செய்ய போவது இது தான். இனி ஒவ்வொரு பள்ளிவாசலும் கோயிலாக மாற்றுவதற்கு பாபர் மசூதி தகர்ப்பும் பிறகு சட்டங்களின் தீர்ப்பும் முன் மாதிரியாக்கப்படும். சிறுபான்மையினர்கள் ஒன்று கூடும் அவர்களின் வணக்க வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமிப்பது மூலம்  அந்த சமுகம் ஒன்று கூடுவதை தடுக்கமுடியும் ,பிறகு தனது இன அடையாளங்கள் இழந்து அதுவாகவே அழிந்து போகும், ஸ்பெயினில் இஸ்லாமிய அடையாளத்தை அழிப்பதற்கு என்னென்ன உக்திகள் கையாளப்பட்ட்தோ அத்தனை உக்திகளையும் இந்துத்துவ சங்பரிவார்கள் இந்தியாவில் கையாண்டு வருகின்றனர்.
இஸ்லாமிய அடையாளம் இல்லாத ஒரு இராம ராஜ்ஜியம் காண்பதில் நீதித்துறை, பாதுகாப்புத் துறை, கல்வித்துறை,அரசியல் அமைப்புகள் என பல குழுக்களாக பிரிந்து, இணைந்து செயல்பட்டு வருகின்றனர். திட்டங்களை நிறைவேற்றுவதில் எதிர்கட்சி, ஆளும் கட்சி என்ற பேதங்கள் எல்லாம் இல்லை, நான் எதிர்ப்பது போல் எதிர்க்கிறேன், மற்றதை நீ பார்த்து கொள் என்ற ரகசிய சங்பரிவார்களின் புரிதலின் படி திட்டமிட்டு பலியிடப்பட்ட முதல் பள்ளிவாசல் பாபர் மசூதி, சங்பரிவார்களின் கைகளில் ஆக்கிரமிக்க போகும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களின்  பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. நீளும் இந்த பட்டியல் இஸ்லாமியர்களை இந்த நாட்டை விட்டே விரட்டிவிட்டுத் தான் அமைதியடையும்.
பாபர் மசூதி ஆக்ரமிப்பிலிருந்து,அது இடிக்கப்பட்டு, பின் நிலம் கையகப்படுத்தியது வரை ஒவ்வொரு அசம்பாவிதங்களிலும் கட்சி பேதமின்றி காங்கிரஸுக்கும் நேரடி பங்கு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் சிலை வைக்கப்பட்டு இஸ்லாமியர்கள் தொழுகை வணக்கம் நடத்தப்பட்டு வந்த பள்ளிவாசல் இழுத்து மூடப்பட்டது. அவர்களின் ஆட்சியின் போதுதான் இந்துக்களுக்கு மட்டும் வணக்க உரிமைகொடுத்து இஸ்லாமியர்களை நுழையவிடாமல் தடுத்தது, பிறகு அவர்களின் ஆட்சியில் தான் அந்த மசூதி இடிக்கப்பட்டது, அதை தொடர்ந்து அவர்களின் ஆட்சியில் தான் அவர்கள் நாடியது போன்ற தீர்ப்பை அலகபாத் நீதிமன்றம் வழங்கியுள்ளது. தீர்ப்பு இப்படித்தான் அமைய வேண்டும் என்ற சூழலை காங்கிரஸ் அரசு அதற்கே உரிய கள்ளத் தந்திரத்தால் சாதித்துள்ளது.
இதனால் பாபர் மசூதி இடத்தை இராமனுக்கு சொந்தமாக்கிய விசயத்தில் பி.ஜெ.பி மற்றும் சங்பரிவார்கள் மட்டும் உரிமை கொண்டாட முடியாது அதில் காங்கிரஸுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் பெயரால்  நாட்டில் நடத்தப்படும் வன்முறைகளுக்கும், ஆக்கிரமிப்புக்களுக்கும் ஒரு நாட்டின் நீதியை நிலை நாட்டக் கூடிய சட்டத்துறை அவ்வளவு எளிதாக ஆதரித்து தீர்ப்பு கூற முடியாது..அதற்காக சூழல்களை தனக்கு சாதகமாக மாற்றியது காங்கிரஸ் மற்றும் இந்துத்துவா சங்கபரிவார்களின் கூட்டாளிகள்.
நாடு முழுவதும் ஒரு அசாதாரணமான பதட்டம் நிறைந்த சூழல்கள் உருவாக்கப்பட்டன.               அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற அச்ச நிலையில் மக்களை நடுங்க வைத்தது அந்த சூழல்.பிஜெபி ஆளும் கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கூட முன்னதாகவே விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. மாநில மத்திய அரசாங்கள் பல அடுக்கு பாதுகாப்பினை நாடு முழுவதும் அமல்படுத்தியது, காவல் அணிவகுப்புகளை ஆங்காங்கே நடத்தி வந்தன, பிரதமர் உட்பட பல முக்கிய அமைச்சர்கள் அறிவிக்கும் செய்திகளும்,பத்திரிக்கை தொலைக்காட்சி செய்திகளும் மக்களை பெரும் அச்சத்திலும் பதற்றத்தையும் எதிர் நோக்கி இருக்க செய்த்து. இந்த பதட்டத்தினை ஒரு அரசாங்கம் திட்டமிட்டு ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன?.

அப்படி உண்மையிலேயே மதவாதிகளின் மூலமாக நாட்டில் பெரும் அசாம்பாவிதங்கள் தீர்ப்பை ஒட்டி  ஏற்பட வாய்ப்புள்ளது என்ற செய்தி உளவுத்துறையின் மூலமாக அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் பட்சத்தில் மத தீவிரவாதிகளின் அத்தனை அமைப்புகளையும், தலைவர்களையும் அரசு தன் கட்டுபாட்டுக்குள் ரகசியமாக கொண்டுவந்து அவர்களின் செயல்பாடுகளை முழுவதுமாய் ஒடுக்கி இருந்திருக்க வேண்டும், அது மக்களை சென்றடையாமல் கவனத்துடன் பாதுகாத்து வந்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தேவையில்லாத பீதியினை மக்களிடம் உருவாக்கியதற்கு காரணமே தீர்ப்பு இப்படித்தான் வரவேண்டும் என்ற முன்னறிவுப்புக்காக தான்.
ஒரு வேளை பெரும்பான்மையினருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் அது சிறுபான்மை இஸ்லாமியர்களை வெகுவாக பாதிக்கும், நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டு போகும் என்று மக்களை நம்ப வைப்பதற்காகத்தான் இந்த அச்ச நிலை உருவாக்கப்பட்டது. இது தான் காங்கிரஸின் பாணி.
அது எந்த அளவிற்கு என்றால், இஸ்லாமியர்களில் சிலரே இந்த பள்ளிவாசலை சமய நல்லிணக்கம் கருதி விட்டு கொடுத்து விடலாம் என்கின்றனர்.
இன்னும் சில நடுநிலையாளர்கள், மசூதியும் வேண்டாம், கோயிலும் வேண்டாம் எதாவது ஒரு பூங்கா, கல்லூரி , நூலகம் என பொதுவான ஒன்றை அமைக்கலாம் என்கின்றனர்..இவர்கள் சொல்ல வருவது தான் என்ன? இது தான் நீதியை நிலை நாட்ட அவர்கள் சொல்லும் ஆலோசனை.
இந்துத்துவவாதிகள் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே ,தீர்ப்பு பெரும்பான்மை இந்துக்களுக்கு சாதகமாகத்தான் வரவேண்டும் ஒருவேளை அது பாதகமாக அமையும் பட்சத்தில் அந்த தீர்ப்பை நாங்கள் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர்.  ஒரு வேலை தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக வந்தாலும் இஸ்லாமியர்கள் பெருந்தன்மையுடன் அதை பெரும்பான்மை இந்துக்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்றனர்.
வீட்டை சுற்றி பயங்கர ஆயுதங்களுடன் குண்டர்கள் , வீட்டுக்குள்ளே கட்ட பஞ்சாயத்து தலைவர் சொல்கிறார், இணக்கமான சூழலுடன் நீங்கள் வாழ வேண்டும் என நினைத்தால் இந்த வீட்டை அபகரித்தவனிடமே கொடுத்து விட்டு அந்த மூளையில் உள்ள கழிவறையில் போய் படுத்துக் கொள். என தீர்ப்பு சொல்லப்படுகிறது.
அச்சமும் பெரும்பான்மையும் சேர்ந்து இந் நாட்டில் விதிகளையும் நீதிகளையும் தீர்மானிக்கிறது.
இது தான் அலகாபாத் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு,  நாட்டு மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்கு, சமய நல்லிணக்கம் காண்பதற்கு காங்கிரஸ் அரசு விரும்பிய தீர்ப்பு , எதை சொல்லியோ ராமனுக்கு இடம் வாங்கி கொடுத்த திருப்தியில் இனி ஆட்சியை கூட இழக்க காங்கிரஸ் முன்வரலாம்.
தீர்ப்பு எதிர்பார்த்தபடியே இஸ்லாமியர்களுக்கு எதிராக வெளி வந்துள்ள நிலையில் ,மேல் முறையிடு செய்ய முயற்சிப்பவர்களுக்கு இந்துத்துவாதிகளின் பணிவான மிரட்டல்கள் இதுதான்.
மேல் முறையீடு செய்வதை விட்டு விட்டு ,இந்த தீர்ப்பினை இறுதி தீர்ப்பாக கருத்தில் கொண்டு இஸ்லாமியர்களே தானாக முன் வந்து கோவில் கட்டுவதற்கு இடத்தை கொடுக்க வேண்டும் என்கிறார் பாபர் மசூதி இடிப்பின் முன்னால் உத்திரபிரதேச முதல்வர் கல்யாண் சிங்.
பிரச்சனைக்குரிய இடத்தை இஸ்லாமியர்கள்  நீதி மன்றத் தீர்ப்பு மூலம் அடைய முயற்சித்தது எல்லாம் முடிவுக்கு வந்துவிட்ட்து இந்த தீர்ப்புக்கு பின் எல்லா இடங்களையும் இஸ்லாமியர்கள் கோவில் கட்டுவதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் இருந்த போதும் அவர்கள் இராமர் கோவில் கட்டுவதற்கு அவர்களுக்கு கிடைத்த பங்கினை விட்டுக் கொடுத்து உதவ வேண்டும் என்றார் வினய் காடியார்.
பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போதே அவர்களுக்கு தேவையான பங்கினை நாங்கள் கொடுத்து விட்டோம். இது இந்துக்களின் பூமி, அவர்கள் எதையும் கேட்பதற்கு உரிமை இல்லை என்கிறார். அங்கு முழுமையாக கடவுளின் விருப்பபடி ராமர் கோவில் கட்டப்படும் என்கிறார் ஆன்மீக துறவி உமாபாரதி..
இஸ்லாமியர்களின் ஒரு பங்கு இட்த்தில் மசூதி கட்டினாலும் அது வரும் காலத்தில் பெரும் பிரச்சனையாகவும் மதக்கலவரங்களையும் தோற்றுவிக்க வாய்ப்பு இருப்பதால் அதை இஸ்லாமியர்கள் கோவில் கட்டுவதற்கே கொடுத்துவிடவேண்டும், மேலும் இஸ்லாமியர்களே அருகில் கோயில் இருப்பதை விரும்ப மாட்டார்கள் என்கிறது சங்பரிவார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்ய நினைத்தால் இருப்பதையும் பறித்துக் கொள்வோம் என்கிறது இந்துத்துவ காவிப் படைகள்.
ஆக மொத்தம் மிச்சம் இருப்பதையும் பிடுங்கி விட்டு மொத்தமாய்இஸ்லாமியர்களி வெளியேற்ற சங்கராச்சாரியரிலிருந்து, அத்வானி வரை எல்லாவிதமான மிரட்டல்களையும் சூழ்ச்சிகளையும் செய்துவருகின்றனர்.
இந்த தீர்ப்பை போகின்றவன் வருபவன் எல்லாம் கட்டபஞ்சாயத்து தீர்ப்பு என கூறிவிடக்கூடாது என்பதற்காக ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு இது ஒரு சமுதாய ஒற்றுமைக்கு காரணமாக அமைந்த தீர்ப்பு என்று தொடர்ந்து புகழ்ந்து தள்ளுகிறது.  ஊடகங்களோடு சேர்ந்து கொண்டு காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் சமுக ஒற்றுமைக்கான தீர்ப்பை தொடர் புகழ் பாடுகிறது. பொது மக்களின் மூளைகளும் ஊடகங்களின் அசைவுகளுக்கு ஏற்றவாரே சிந்திக்க தொடங்கி விட்டது. மதச்சார்பற்ற நாட்டில் ஒற்றுமையை வழியுறுத்தும் ஓர் உன்னதமான தீர்ப்பாகும், மசூதியும் கோவிலும் அருகருகில் பார்க்கும் போதே எவ்வளவு அழகாக இருக்கும்.....ஜாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்த்தான் ஹமாரா “ நாட்டு பற்றின் பெருமையில் விம்மி விம்மி ஆன்ந்த கண்ணீர் வடிக்கிறான் தேசபக்தன் என்றழைக்கப்படும் பொதுமக்கள்..... வாழ்வியல் உரிமைகளை இழந்து மரண அச்சத்தில் வாழ்ந்து வருகிறது வரலாற்றில் பலியாகப்போகும் இஸ்லாமிய சமுகம்...
மதச்சார்பின்மை என்ற கிழிந்து போன கந்தல் ஆடையை இந்தியா கழற்றி எறிந்து விட்டது....கொலை சிரிப்போடு இஸ்லாமியர்கள் கருவறுக்க கிளம்புகின்றன சூலாயுதங்கள்....

  மால்கம் "X" ஃபாருக்-

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி