ஜ
ஒரு வயதேயான சுதந்திர இந்தியாவின் நெஞ்சில் முதல் கூராணி அறையப்பட்ட
இந்திய தேசியக் கருப்பு தினம். அஹிம்சாவதி என்று உலகமே கொண்டாடிய, சாமானிய
இந்திய மக்களின் தலைவரை மூக்குக்கு முன்னால் கைத் துப்பாக்கியைக் காட்டி,
கோரமாகப் படுகொலை செய்த நாள். சுதந்திர இந்தியாவின் மீது நடத்தப்பட்ட முதல்
தீவிரவாதத் தாக்குதல்!
"பிர்லா மந்திரில் காந்தி, முஸல்மான் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்" என்ற காட்டுத்தீ வதந்தியாய் 'கட்ட'விழ்த்து விடப்பட்டு மிகப் பெரிய கலவரம் வெடிக்கும் சூழல். இதற்காக பாகிஸ்தான் மீது படையெடுக்கவேண்டும் என்று அன்றைய அத்வானிக் கூட்டம் இன்று போலவே கூக்குரலிட்டது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.என்.காட்கிலின் தந்தையான காகாசாஹிப் காட்கில், நேரில் பார்த்த சாட்சியத்தை வைத்து கொலைகாரன் கோட்சே கைது செய்யப்பட்டான். முஸ்லிம்களின் பெயரான 'இஸ்மாயில்' என்று பச்சை குத்திய, 'சுன்னத்' செய்யப்பட்ட முஸ்லிம் அடையாளத்துடன் பிடிபட்ட கோட்சே, பின்னர் தீவிரவாதக் கும்பலான 'ஹிந்து மஹாசபை'யின் உறுப்பினன் என்று விசாரணையில் அறியப்பட்டு தூக்கிலிடப்பட்டதும், ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் தடை செய்யப்பட்டதும் சரித்திரம்! இந்திய முஸ்லிம் சமூகத்தின்மேல் பெரும் பழி ஒன்று திட்டமிட்டுச் சுமத்தப்பட இருந்து, தவிர்க்கப்பட்ட முதல் நிகழ்வு.
நடத்தியது காவி பயங்கரவாதிகள்!
செப்டெம்பர் 8, 2006 வெள்ளிக்கிழமை. மஹாரஷ்ட்ராவின் நாசிக் மாவட்டத்திலுள்ள மலேகானில் தொழுகையிடத்திற்கு அருகே, ஜும்ஆவிற்குப் பின் நடந்த பயங்கரத் தொடர் குண்டு வெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். வடக்கில் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஷஃபே பராஅத் நாள் அன்று என்பது கூடுதல் விஷேசம்.
அது போதாதா? இந்தியாவின்
மொத்த ஊடகக் குழுமமும் இஸ்லாமியப் பெயர் தாங்கிய எல்லா அமைப்புகளையும் முறை
வைத்து, குண்டு வெடிப்போடு தொடர்பு படுத்தி முதல் பக்கத்தில் கொட்டை
எழுத்தில் தலைப்பிட்டு களிப்புற்றன. கோட்சேவின் திட்டம் போன்றே இங்கும்
குண்டு வைத்தவர்கள் போட்டுக் கொண்ட வேஷம் முஸ்லிம்களின் தோற்றத்தை
ஒத்திருந்தது. விசாரணை எனும் பெயரில் தொடக்கமாகப் பதினொரு முஸ்லிம்
இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஐந்து வருடங்களாக மீண்டும் மீண்டும்
'புலன்விசாரணை' செய்து களைத்துப் போன பிறகு, அவர்கள் அனைவரும்
'நிரபராதிகள்' என்று கண்டறியப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள். ஹேமந்த்
கார்கரே என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியால், மிருகபலமான எதிர்ப்புகளைக்
கடந்து, காவி தரித்த ஒரு சாமியாரிணி, ஒரு சாமியார், ஒரு ராணுவ அதிகாரி,
உட்பட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தள் சேவகர்கள் உண்மையான குற்றவாளிகளாகக
நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார்கள். ஹேமந்த் கார்கரேயின் படுகொலை
இன்னும் ஒரு புரியாத புதிராகத் தொடர்கிறது. இந்திய முஸ்லிம் சமூகத்தின்மேல்
சுமத்தப்பட இருந்த மற்றுமொரு சதி!
நடத்தியது காவி பயங்கரவாதிகள்!
மே 18, 2007 வியாழக்கிழமை. சரித்திரப்புகழ் வாய்ந்த சார்மினார் கோபுரத்திலிருந்து கூப்பிடு தூரமுள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலுக்குள் சக்திவாய்ந்த பைப் குண்டு வெடித்து பதினான்கு பேர் ஸ்தலத்திலேயே இறந்தார்கள். தொடர்ந்து, வழக்கம் போலவே அதுவரைக் கேள்விப்பட்டிராத இஸ்லாமியப் பெயர் தாங்கி இயக்கங்களின் பெயர்கள் ஊடகங்களில் அல்லோல கல்லோலப் படுகிறன்றன. முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டுச் சிறைகளிலடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். எண்ணெய்க்கு வேண்டி உலகத்தை முட்டாளாக்கிய ஜார்ஜ் புஷ்ஷின் 'பேரழிவு' ஆயுதங்கள் போல, வெடிமருந்துகளும் ஜிஹாதி பிரசுரங்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் ஊளையிட்டன. அத்தனையும் இட்டுக் கட்டப்பட்ட பொய்ப்பிரச்சாரங்கள் என்பது பின்னாட்களில் எவ்வித ஐயமும் இன்றி நிரூபணம் ஆனது.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞருள் ஒருவனின் பணிவிடையால் மனம் திருந்திய சுவாமி அசீமானந்தா என்பவர் மாஜிஸ்டிரெட்டின் முன்பாக, தான் உட்பட சங் பரிவாரக் கும்பலின் விசுவாசிகள் யார் யாரெல்லாம் எப்படித் திட்டமிட்டு எங்கெல்லாம் குண்டு வெடிக்கச் செய்தோம் என்று அம்பலப் படுத்தினார்.
தேவேந்திரகுப்தா, லோகேஷ் ஷர்மா, சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்ரா, சுனில் ஜோஷி, நாபகுமார் சர்க்கார், ப்ரத் பாய், ராஜேந்திர சவுதிரி, தேஜாரம் ஆகிய காவித் தீவிரவாதிகள் உண்மையான குற்றவாளிகளாக தேசியப் புலனாய்வு ஏஜென்சியால் அறிவிக்கப்பட்டார்கள்.
நடத்தியது காவி பயங்கரவாதிகள்!
பிப்ரவரி 18, 2007. சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் - இல் அதே பார்முலாவிலான குண்டு வெடித்து 65 பேர் கொல்லப்பட்டனர். வழக்கம்போல புதியரக இஸ்லாமிய இயக்கங்களின் பெயர்களைச் சுட்டி விரல் நீட்டப்பட்டது. முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, பின்னர் புலன் விசாரணை செய்ததில் மேற்சொன்ன சுவாமி அசீமானந்தாதான் இந்தக் குண்டுவெடிப்பின் மூளை என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தேசியப் புலனாய்வு ஏஜென்சி டிசம்பர் 30, 2010 அன்று தெரிவித்தது. இந்த வழக்கில் தேடப்பட்டுவரும் காவிக்கும்பலின் இரு குற்றவாளிகளின் இருப்பிடத்தைப் பற்றி துப்புகொடுப்பவருக்கு 10 இலட்சம் இந்திய ரூபாய் பரிசறிவித்தது.
நடத்தியது காவி பயங்கரவாதிகள்!
ஜனுவரி 24, 2008. தமிழ்நாடு தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், தென்காசி பஸ்நிலையத்திலும் பைப் வெடிகுண்டு வெடிக்கிறது. உடனேயே குண்டுவைத்த 'முஸ்லிம் தீவிரவாதிகளை'க் கைது செய்யவேண்டும் என்று சங்க் பரிவாரம் ஊர்வலம் நடத்தி குற்றவாளிகளை ஊகிக்க வைக்கிறது. மற்ற மாநிலம் போலல்லாமல், அன்றைய போலீஸ் அதிகாரி டி.ஐ.ஜி கண்ணப்பன், தன் சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து, அந்தப் பழியை பழைய கோட்சே தந்திரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள்மேல் போட முயன்ற காவிக் கும்பலைச் சேர்ந்த 3 பேரைக் குற்றவாளிகள் என்று கைது செய்கிறார்.
நடத்தியது காவி பயங்கரவாதிகள்!
பிப்ரவரி 21, 2013. ஹைதராபாத்தின் தில்சுக் நகரின் சந்தைத் தெருவில் இரண்டு குண்டுகள் வெடித்தன 17 பேர் கொல்லப்பட்டனர். குண்டுகள் வெடிக்கும்போது மட்டுமே பிரசவிக்கப்படும் இந்தியன் முஜாஹிதீனின் பெயர் மின்னாத தொலைக்காட்சி சேனலில்லை. வழக்கமான வழக்கப்படி, முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இப்போதும் வழக்கம்போல "அஜ்மல் கசாப், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வினை வரும் என்று எதிர்பார்த்தோம்” என 'புலனாய்வு' எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்று காவிக்கும்பல் பாதை காட்டியிருக்கிறது.
இப்படி இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம்களின் மீது திட்டமிட்டே பரப்பப்படும் சதிவேலைகளுள் கண்ணுக்குத் தெரிந்தது கொஞ்சமே. இந்தக் கண்ணோட்டத்தில், "நாடாளுமன்றத் தாக்குதலின் உண்மைக் குற்றவாளிகள் யாரெனத் தெரியாமலேயே போய்விட்டது" என்கிறார் அருந்ததிராய். இந்தியன் முஜாஹிதீன் என்பது, சங்க் பரிவாரக் கும்பலான ஊடகத்துறையின் செல்லப்பிள்ளை என்கிறார் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்ட ஒரு சமுதாயத்தின்மீது திட்டமிட்டே நடத்தப்படும் சதியை அம்பலப் படுத்துவதும் முறியடிப்பதும் நம் சமுதாயத்தின் கடமையாகும்.
- ஆக்கம்: அபூ பிலால்

http://www.satyamargam.com/articles/series/research-articles/2076-saffron-terrorism.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக