காவல் துறையே சட்டத்தை கையில் எடுத்து கொண்டு எந்த ஒரு நீதி விசாரனையும் இல்லாமல் ஒருவனின் உயிரை பறிப்பது என்பது மிகத் தவறு என்றும் அதற்கு எதிராக பல மனித உரிமை அமைப்புகள் போராடி வருவதும் தெரிந்ததே.
மும்பை கல்லூரி மாணவி இர்ஷத் ஜெஹன், சொராபுதீன் என நீளும் காவல் துறையினரின் போலி மோதல் கொலைகள் நாட்டில் பொது மக்களையும் குறிப்பாக சிறுபான்மை மக்களையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது என்பது உண்மையே. இதற்கு எதிராக போராட வேண்டியது மனித நேயம் போற்றும் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது.
அப்பாவிகளை சுட்டுக்கொன்று அரசியல்வாதிகளை மகிழ்வித்து பதவி உயர்வு பெரும் காவல்துறையினரின் போலி மோதல் படுகொலைகளை கண்டிக்கும் அதே நேரம் கோவையில் நடந்தது போன்ற போலி மோதல் படுகொலையை ஆதரிக்காமலும் இருக்க முடியவில்லை.
மூன்று வயது குழந்தைகளை கூட கும்பலாக சேர்ந்து கற்பழிக்கும் இந்த தெரு நாய்களை சுட்டு கொல்லாமல் என்ன செய்வது. டாக்டர் சுனித கிருஷ்னன் அவர்களின் சமிபத்திய பேச்சுகளை கேட்டபோது கண்ணீர் வந்துவிட்டது,
குழந்தைகள் மீது மனித குலம் கேள்வி படாத அத்தனை வன்முறைகள் பிரயோகப்படுத்தப்படுகின்றன. உடல் நலம் பாதிக்கப்பட்டு, மன நிலை பாதிக்கப்பட்டு சமுகவிரோதிகளால் சிதைக்கப்பட்ட பிஞ்சு ஓவியங்கள் நம்மை சுற்றிலும் நூற்றுக்கணக்கில் உள்ளன.
குழந்தைகள் மீது மனித குலம் கேள்வி படாத அத்தனை வன்முறைகள் பிரயோகப்படுத்தப்படுகின்றன. உடல் நலம் பாதிக்கப்பட்டு, மன நிலை பாதிக்கப்பட்டு சமுகவிரோதிகளால் சிதைக்கப்பட்ட பிஞ்சு ஓவியங்கள் நம்மை சுற்றிலும் நூற்றுக்கணக்கில் உள்ளன.
விசாரனை என்ற பெயரில் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருப்பது?.பெற்ற பிள்ளைகளை, ஆசையுடன் வளர்த்த குழந்தைகளை ஒரு சிறு மலர்கள் என்றும் பார்க்காமல் பாலியல் கொடுமைகள் புரிந்து பின் மிருகத்தனமாக கொலை செய்திருக்கும் மனித குல மிருகங்களை எப்படி நம் நாட்டு நீதி துறையிடம் விட்டு வைப்பது?... நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்று நரமாமிசம் சாப்பிட்ட நொய்டா மிருகமும் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது?... என்ன தண்டனை கொடுக்கப்பட்டது?... நீதியின் விசாரனை வந்து தீர்ப்புகொடுக்கும் முன்பே இயற்கை மரணம் அடைந்துவிடுவான்?.. பிறகு எதற்கு இந்த நீதிமன்றம் காவல்துறை?..
தண்டனையின் நோக்கமே இனிமேலும் இது போன்ற குற்ற நடவடிக்கைகள் நடக்க கூடாது என்பது தான்.
ஆனால் எந்த குற்றங்கள் செய்தாலும் நீதி மன்றம் நம்மை இழுத்தடித்தே காப்பாற்றி விடும் என்ற உணர்வு குற்றவாளிகளிடம் வந்து விட்டால் அவர்கள் எல்லோருமே “சிறைப் பறவைகள்” தான்.
நம் நாட்டில் நீதி துறையின் செயல்பாடுகள் செத்து போய்விட்டது. அதன் விளைவுதான் அத்தனை பாதகங்களும் நடைபெறுகின்றது.
ஒவ்வொரு சட்டதிற்கும் ஒரு ஓட்டை என்ற கணக்கீட்டுடன் தான் குற்றவாளிகள் செயல்படுகின்றனர்.
சமிபகாலத்தில் சட்டம் பயின்ற வழக்கறிஞர்கள் நேரடியாகவே கொலை ஆள்கடத்தல் என குற்றசெயல்களில் ஈடுபடுவதும் சட்டதின் செத்த நிலையை தான் காட்டுகிறது.
இந்த புண்ணாக்கு சட்டமும் காவலும் நம்மை ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தில் தான் முன்னால் எம் எல் ஏ ஒருவன் கொல்லை கும்பலில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டான்,
இந்த சட்டங்கள் கேடு கெட்டது என்பதால் தான் பாலியல் வண்கொடுமைகளும். கொலைகளும் நடந்த வண்ணம் உள்ளன.
இந்த சட்டத்தின் இற்று போன தன்மையால் தான் இல்லாத கடவுளுக்கும் இடத்தை பிளாட் போட்டு கொடுக்கிறான்.
காலங்கள் எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்யும்
காலங்கள் கடந்துவிட்டால் ஹிட்லர் கூட மகாத்மா ஆக்கப்படுவான்.
சமிபத்தில் நாதுராம் கோட்சே வுக்கு சென்னையில் பிறந்த நாள் விழா போஸ்டர்கள் ஒட்டியிருந்தது இதற்கு சான்று.
குற்றவாளிகளை முறைப்படி விசாரித்து மக்கள் முன்னிலையில் இனி தவறுகளே செய்ய தூண்டாத வகையில் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால் எப்பொழுது இவன் விசாரித்து முடிப்பான் என்பது தானே கேள்விக் குறி..
போலி மோதல்கள் தவறே என்றாலும் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கும்,குழ்ந்தைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் கொஞ்சமாவது நிம்மதி கிடைத்திருக்கும் அல்லவா..
ஒன்றிரண்டு கொலைகார நாய்களாவது கொஞ்சமாவது பயப்படுமல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக