படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

20 பிப்., 2012

படித்ததில் மனது வெந்தது !!!

இது ஒரு மனித காட்சி சாலை...!
தாய்பால் குடித்த "மிருகங்கள்" எப்போதாவது வந்து போகும் இடம்.

"
முதியோர்கள்" நம் இல்லத்தில் தான் இருக்க வேண்டும்.
"முதியோர் இல்லத்தில்" அல்ல....


பெற்ற மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்! மதுரையில் சம்பவம்!!

 


மதுரை மாநகராட்சி வளாக ரோட்டில்நேற்று காலை, 70 வயது மூதாட்டி ஒருவர்,மயங்கிக் கிடந்தார். மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் எனபலரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல்ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தார். அசைவுகள் இல்லாததால்சந்தேகப்பட்ட சிலர்அவரை நெருங்கினர்.
அப்போது அவர்மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. சிகிச்சைக்கு அனுப்ப, "108'ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், "காயம் இல்லாததால்அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாதுஎனக்கூறிதிரும்பிச் சென்றனர்
பின்போலீசாருக்கு தகவல் தெரிவித்துஅவர்கள் வந்ததும்மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். பசி மயக்கத்தில் இருந்ததை அறிந்த போலீசார்அவருக்கு உணவு கொடுக்க முயற்சித்தனர்.
அதுவரை வாய் திறக்காதவர்பேசத் தொடங்கினார். ""எனக்கு உணவே வேண்டாம்தயவு செய்து என்னை விடுங்க...'' என,அழுதார். ""மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த குஞ்சம்மாள் நான்.
எனக்கு ஒரு மகள்மகன் . சிரமப்பட்டு அவர்களை வளர்த்தேன். விவசாய வேலைகளை செய்துதிருமணம் ஆன என் மகனுடன் வசித்து வந்தேன்.
ஒரு விபத்தில் என் கால் காயம் அடைந்தது. இரண்டு நாள் வீட்டில் முடங்கிய என்னை,யாரும் கவனிக்கவில்லை. என் மகன் விரட்டியதால்அங்கிருந்து பஸ் ஏறினேன்.
15 நாட்களுக்கு முன்மதுரை வந்தேன். கையில் இருந்ததை வைத்துஉணவு தேவையை சமாளித்தேன். பணம் தீர்ந்த பின்,பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. கடந்த நான்கு நாட்களாக பட்டினி.
காதில் தங்கத்தோடு இருந்தாலும்அதை வைத்து சாப்பிட மனம் வரவில்லை. எனக்கு சாப்பாடு தர உறவுகள் மறுத்ததால்,உணவை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது,'' எனஅழ துவங்கினார்.
அவரை சமாதானப்படுத்திய போலீசார்கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து,மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
http://adiraifact.blogspot.in/2012/01/blog-post_9953.html

1 கருத்து:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் சொன்னது…

மனதை கனக்கவைத்த பதிவு..சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்கள் பணி சிறக்க உங்கள் தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்

எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி