இஸ்லாமிய தீவிரவாதம் என்ற அச்ச உணர்வினை உற்பத்தி செய்தும் அந்த பய உணர்வை கொண்டே சிறுபான்மை இஸ்லாமியர்களை ஒடுக்கியும் இன அழிப்புக்களையும் செய்து வந்த இந்துத்துவ தீவிரவாதத்தின் இருக்கம் கொஞ்சம் தளர்ந்துள்ளது.
இந்துத்துவா என்ற மனித விரோத டைனஸருக்கு யார் முதலில் மணி கட்டுவது என்ற பீதியில் சிதம்பரம் தொடங்கி, ஜெயந்தி நடராசன்,பிறகு ராகுல் என கடைசியாக திக் விஜய் சிங் அவர்கள் மிகவும் துணிச்சலுடன் உலகிற்கு வெளிக்காட்டியது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
மாவீரன் சஹித் ஹேமந்த் கர்கரே அவர்களின் படுகொலையில் இந்துத்துவா தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பதற்கான தொலைபேசி ஆதரங்களை இன்று திக்விஜய் சிங் அவர்கள ஊடகங்கள் முன் வெளியிட்டுள்ளார்.
மஹராஸ்டிர தீவிரவாத தடுப்பு (ATS)படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே மாலேகான் மற்றும் பல குண்டு வெடிப்புகளில் இந்துத்துவாவிற்கு இருந்த தொடர்பினை வெளிப்படுத்தியதால் அவர் இந்துத்துத்வ தீவிரவாதிகளிடம் இருந்து பெரும் அச்சுருத்தல்களை சந்தித்து வந்துள்ளார்.
அவர் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக திக் விஜய் சிங் அவர்களிடம் தொலை பேசியில் உரையாடியதையும் அதில் இந்து தீவிரவாத அச்சுருத்தல்களை பற்றி திக் விஜய் சிங்கிடம் உரையாடியதை பற்றியும் இன்று நிருபர்கள் கூட்டத்தில் ஆதரத்துடன் வெளியிட்டார்.
மேலும் யார் யாரெல்லாம் தனது நேர்மையையும், தனது நம்பகதன்மையையும் சந்தேகதித்தார்களோ, தன்னை தேசத் துரோகி என கொச்சைப் படுத்தினார்களோ தன்னிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும் என்றார்.
இதனை சற்றும் எதிர்பார்காத இந்துத்துவா கும்பல்கள் வெட வெடத்து உள்ளனர்.
இதில் காங்கிரஸின் தைரியத்தையும், நேர்மையையும் பாராட்டுவதாய் ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.
ஆனால் ஒரே ஒரு ஒற்றை குரலாய் ”எங்கு குண்டு வெடித்தாலும் அது இஸ்லாமிய தீவிரவாதம் தான் என உடனடியாக நம்பவைக்கப்படுவது சரியானது அல்ல, ஹேமந்த் கார்கரேயின் மரணத்தில் சந்தேகம் உள்ளது அவர் இந்துத்துவ சக்திகளினால் கொல்லப்பட்டிருக்கலாம், எனவே இதை வேறு ஒரு கோணத்தில் தான் விசாரனை நடத்த வேண்டும் என்று
மும்பை தாக்குதலை -26/11 -பற்றி பாரளுமன்றத்தில் குரல் எழுப்பிய அந்துலே எம்.பி அவர்களுக்கு எதிராக எழுந்த கடுமையான எதிர்ப்புகளும், தேச துரோக பட்டங்களும்,கொலை மிரட்டல்களையும் மிகவும் நிதானமாகத்தானே வேடிக்கை பார்த்தது கருனையின் வடிவான காங்கிரஸ்?. அதற்கு காங்கிரஸின் எதிர்வினைகள் எப்படியாக இருந்த்து?. அந்துலேவுக்கு ஆதராவாக எழாத குரல் இப்பொழுது மட்டும் ஆண்மையுடம் குரல் எழுப்புகிறது?. கார்கரே அவர்கள் மரணத்தின் அருகாமையில் இருந்து கொண்டு கொலை மிரட்டல்களையும் அச்சுருத்தல்களையும் உங்கள் காதுகளுக்கு எடுத்து சொன்ன போதும் காங்கிரஸின் ஆட்சி அதிகாரங்கள் என்ன செய்து கொண்டிருந்த்து?. ஒருவேளை உங்கள் அதிகாரங்களும் ஆளுமைகளும் அவரை காப்பாற்ற முடியாமல் போயிருந்தாலும் இத்தனை வருடங்கள் நீங்கள் எல்லோரும் எங்கு போய் தொலைந்தீர்கள்?.
ஜனநாயக நாட்டில் உங்கள் வாய்க்கு பூட்டு போட்டது யார்? இன்று தான் இந்துத்துவவாதிகளின் கொலை முகங்கள் தெரிந்ததா?..
இல்லை இளவரசர் ”இந்துத்துவா” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டதால் காப்பாற்றும் நோக்கில் கார்கரேயின் மரணம் பற்றிய உண்மையை திரு சிங் அவர்கள் வெளியிட நேர்ந்ததா என்ற சந்தேகம் நம் மனதில் வராமல் பார்த்து கொள்வோம்.
வருடங்கள் பல கடந்த பின்னர் இப்பொழுது நீங்கள் வெளியிடும் கார்கரேயின் மரணம் பற்றிய உண்மை என்பது தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் போடும் ஓட்டு வேட்டை நாடகம் என்ற சந்தேகம் நம் மனதில் வராமல் பார்த்து கொள்வோம்.
இந்துத்துவ தீவிரவாத அச்சுருத்தலின் உண்மை முகம் தெரிந்த பின்னர் தீவிரவாத்த்தை காங்கிரஸ் அரசு என்ன மாதிரி நடவடிக்கைகள் மூலம் ஒடுக்கி வருகிறது?. உண்மையான இந்துத்துவ தீவிரவாதிகள் யாருடைய ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள்? காங்கிரஸ் ஆட்சியிலா இல்லை பிஜெபி ஆட்சியிலா?. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு கொடும் காவல் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவார்களா?.. வாழ்க்கையை இழந்து அநியாயமாக சிறை தண்டனை அனுபவிக்கும் அவர்களிடம் இந்திய அரசு பகிரங்க மண்ணிப்பு கேட்குமா? இதில் எதுவுமே நடக்காது என்று தெரிந்திருந்த நாம் ஒருமுறை காங்கிரஸின் இந்துத்துவா எதிர்ப்பு ”வார்த்தை”களை பாராட்டிக் கொள்வோம்!.
http://malcom-x-farook.blogspot.com/2011/01/blog-post_7407.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக