படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

29 ஜன., 2011

அருந்ததிராய் மீதான தாக்குதல் - இந்துத்வாவின் பண்பாட்டுப் பயங்கரவாதம்


டில்லியில் எழுத்தாளர் அருந்ததிராய் வீட்டின் மீது பாரதீய ஜனதா கட்சியின் பெண்கள் அணியினர் (மகிளா மோர்ச்சா) நடத்திய தாக்குதலும், அங்கு அவர்கள் எழுப்பிய வசை கோஷங்களும் இந்தியாவில் சமய வெறியும், சமய சகிப்பின்மையும் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. இவ்வன்செயல்கள் இத்தகைய அரசியல் இன்னும் தரம் தாழ்ந்து விட்ட தற்கான எடுத்துக்காட்டு. இந்திய அரசியல் சட்டத்தின் மையமாக இருப்பது பேச்சுரிமையும் கருத்து உரிமையும். இவ்விரண்டையும் உண்மையாக மதிக்கும் மக்களாட்சிக் கோட்பாட்டிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டோமென்பதை இச்செயல்கள் உணர்த்துகின்றன.
காஷ்மீர் பற்றி எழுத்தாளர் அருந்ததிராய் கூறிய கருத்துக்களுக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு என்று மோர்ச்சாவின் இந்த மக்களாட்சி விரோத செயல்கள் நியாயப்படுத்தப்பட்டது அருவருப் பானது. முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தையொட்டி இச்செயல்கள் நடந்திருப்பது முக்கியமானது. காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் பி.ஜே.பியின் தாயாகிய ராஷ்ட்ரிய சுவயம் சேவக்கை தடை செய்தவர் வல்லபாய் பட்டேல். “இந்திய அரசினைத் தங்களுடைய தேவை களுக்கு நிர்ப்பந்திக்க இந்துத்வா ஆதரவாளர்கள் செய்யும் முயற்சிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றும் எச்சரித்தவர் பட்டேல்.
அருந்ததிராய் வீடு தாக்கப்பட்டதில் தெளிவான தொரு சதித்திட்டம் இருக்கிறது. முதலில், டெல்லி பொதுக்கூட்டமொன்றில் காஷ்மீர்பற்றி அவர் கூறிய கருத்துக்கள் சிதைக்கப்பட்டு, இந்தியா உடைக்கப்படுவதை ராய் ஆதரிப்பதாகப் பரப்பப் பட்டது. ஆனால் அவர், “அக்டோபர் 1947இல் மகாராஜா காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டாலும் ஜம்மு - காஷ்மீர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதவொன்று” என்றுதான் பேசியிருந்தார். அருந்ததிராய் பேசியது ஒரு உண்மை - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா முதற்கொண்டு ஆயிரக்கணக்கான காஷ்மீர் மக்கள் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
1972இல் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தமும், திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அரசு உட்பட, பல்வேறு இந்திய அரசுகள் காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் ஒரு ஒத்த கருத்தை எட்டச் செய்த, செய்யும் முயற்சிகளும் காஷ்மீர் சிக்கல் தொடர்ந்து இருப்பதற்கான ஆதாரங்கள். காஷ்மீரை ராணுவம் ஆக்கிரமித்து அங்கு நடத்திவரும் கொடுமைகளைப் பற்றியும் ராய் பேசினார். ராணுவத்தின் அத்துமீறல்களையும் நாம் மறுக்க முடியாது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4,00,000க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் போலீஸ் வீரர்கள் உள்ளனர்; கடந்த இருபது ஆண்டுகளில் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இரண்டாவது, பிரிவினையாளர் சையத் அலி ஷா கிலானியுடன் அருந்ததிராயை ஒப்பிட்டு இ.பி. கோ. 124 (அ) பிரிவின் கீழ் தேச விரோத செயலுக்காக ராய் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று பி.ஜே.பி. வற்புறுத்துகிறது. இப்படி பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வை வளர்க்கிறது. உண்மையில் அருந்ததி ராயின் பேச்சு காஷ்மீர் குறித்த ஒரு ‘நிதானமான சிந்தனைதான்’. ஆனால் அரசின் மீது ‘அதிருப்தி’ ஏற்படுத்துவதற்காகவும் ‘வெறுப்பு’ உண்டாக்கு வதற்காகவும் அருந்ததிராய் பேசப்பட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இப்பொய்யினை ஆராய்வதாக மைய அரசு கூறுவது அவதூறு அரசியலை நியாயப்படுத்துவதற்குச் சமம். விவாதத் துக்குரிய, சர்ச்சைக்குரிய, மக்களாட்சிக் கோட் பாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களுக்கும், வன்முறையைத் தூண்டக்கூடிய கருத்துக்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் காணத் தவறு கின்றனர். ராயின் பேச்சு வன்முறையைத் தூண்டக் கூடியது அல்ல. மாறாக அவர் சொல்வது போல, “நீதிக்கான ஓர் அடிப்படை அழைப்பு”.
மூன்றாவது, அருந்ததிராய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்ற தவறான எண்ணத்தை மைய அரசு ‘கருணையுடன்’ கைவிட்டதைக் கண்டு ஊடகங்கள் சில கோபம் கொள்கின்றன. ‘ஏமாற்றுக்காரர்’, ‘தேசத்துரோகி’ என்றெல்லாம் ராயை முத்திரையிடுகின்றன (சில ஊடகங்கள் இவற்றைவிட மோசமான அடைமொழிகளை வீசுகின்றன). ‘டைம்ஸ் நவ்’, ‘நியூஸ் 24’, ஏன் ‘என்டிடிவி’ கூட ராயின் வீடு மீதான தாக்கு தலுக்கு ஒத்துழைக்கின்றது. பி.ஜே.பி.யின் மகிளா மோர்ச்சா ராயின் வீட்டையடையும் முன்பே, அங்கு தங்களுடைய வெளிப்புற ஒளிபரப்பு வாகனங்களை அனுப்புகின்றன. தொலைக்காட்சி பார்ப்பவர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள் வதற்காகப் பேச்சுரிமையையும், சட்டத்தின் ஆட்சியையும் மிதித்தெறிவதற்கு இவை துணை போகின்றன.
மக்கள் சுதந்திரத்தின் மீதும், இந்திய ஜன நாயகத்தின் மீதும் இந்துத்வா வலதுசாரிகள் இரு முனைத் தாக்குதலைத் தொடுத்த நேரத்தில்தான் அருந்ததிராயின் வீடும் தாக்கப்பட்டது. முதலாவது பல்வேறு காரணங்களுக்காக சங்க் பரிவாருக்குப் பிடிக்காத புத்தகங்கள், நாடகங்கள், திரைப் படங்கள் ஆகியவற்றுக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. ‘பெரும்பான்மை சமூகத்தின்’ உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி, அவற்றைத் தடை செய்ய சங்க் பரிவார் விரும்புகிறது (ஆனால் ‘பெரும்பான்மை சமூகத்தை’ இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை).
சங்க் பரிவாரின் விருப்பங்களுக்காக ரோஹின் தான் மிஸ்திரியின் அருமையான நாவல் ஒன்று பம்பாய் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியப் பட்டப் படிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. கலைச் சுதந்திரம் மீதும், அறிவார்ந்த படைப்புகள் மீதும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது புதிதல்ல. இத்தாக்குதல்களுக்கு ஒரு வரலாறு உள்ளது. டெல்லியில் சகமத்தின் ‘அயோத்தியா’ கண் காட்சியும், (ஜேம்ஸ் லேய்ன் விஷயத்தில்) புனேயின் பண்டார்கர் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனமும், எம்.ஃ.ப். உசேனின் ‘கும்பாவும்’ (குகை) இதற்கு முன் தாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப் பிரபலமான நவீன ஓவியர் உசேனை நாட்டை விட்டே விரட்டிவிட்டது சங்க் பரிவார். சங்க் பரிவாரின் செயல்பாடுகள் நம் மக்களாட்சியை உண்மையிலேயே சீரழிக்கின்றனவா? அவ்வாறானால் சங்க் பரிவாரின் செயல்பாட்டை நாம் எப்படித் தடுக்க முடியும் என்ற கேள்விகளை யெல்லாம் இந்தச் சமூகம் கேட்கவில்லை. மாறாக, இக்குற்றங்களை ‘சாதாரண நிகழ்வுகள்’ என்று ‘உள்வாங்கி’விட்டது. ‘பெரும்பான்மை’ மக்களின் பிரதிநிதியாகப் பேசுகிறோம். ‘உண்மையான இந்தியா’ (அப்படி ஒரே ஒரு இந்தியா இருப் பதாகக் கூறிக்கொண்டு) சார்பாகப் பேசுகிறோம். ‘இந்தியப் பண்பாடு’, ‘இந்திய விழுமியங்கள்’ சார்பாகப் பேசுகிறோம். ‘இந்தியாவின் மனம்’ சார்பாகப் பேசுகிறோம் என்றெல்லாம் கூறிக் கொள்பவர்களின் வன்முறையும், சகிப்பற்ற தன்மையும் சகித்துக் கொள்ளப்படும்போதும், ஏற்றுக் கொள்ளப்படும் போதும் சகிப்புத் தன்மையின் ஆன்மாவை நாம் அழித்துவிடுகிறோம்.
சுதந்திரம், சமூக வாழ்வில் சுதந்திரத்தின் தேவை, பொதுஉலகின் நலன் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளாதவர்களாக உள்ளோம். யதார்த்தத் தையும் வேறுபட்ட பண்பாடுகளையும், நம்பிக் கையையும் பல்வேறு கோணங்களிலிருந்து பார்ப்பதை ஏற்றுக்கொள்ள இயலாத சமூகமும், அச்சம், பதற்றம் இல்லாமல் வேறுபாடுகளை விவாதிக்க முடியாத சூழலும் ஆரோக்கியமற்றவை. வேறுபாடு களுக்கும், பன்முகத் தன்மைக்கும் மதிப்பளிப்பது. அவற்றை ஏற்றுக்கொள்வது மக்களாட்சியின் அத்தியாவசியத் தேவைகள். சுதந்திர, சமூக விழிப் படைந்த நிலையிலிருந்து விலக்கி, மதிப்பற்ற ‘பெரும்பான்மை’ அரைகுறை ‘மக்களாட்சி’ முறையை நோக்கி நம்மை வலதுசாரிகள் ஓட்டு கிறார்கள்.
அண்மைக் காலத்தில் பல இஸ்லாமிய தர்காக்கள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்திய ஒழுங்குபடுத்தப்பட்ட தன்னுடைய அமைப்பு களில் இருக்கும் உறுப்பினர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்துத்வா வலதுசாரிகளின் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். இதனை அக்டோபர் 2007 அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு நிகழ்வின் குற்றப் பத்திரிகை அம்பல மாக்கிவிட்டது. ராஜஸ்தான் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இக்குண்டு வெடிப் பிற்குக் காரணமான ஐந்து பேரின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. இதில் நான்கு பேர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்.
காவல்துறை குண்டு வெடிப்பைத் திட்டமிடுவதற்காகக் கூடிய ரகசியக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர் என்று இந்திரேஷ் குமார் என்பவரைச் சந்தேகப்படுகிறது. இந்திரேஷ் குமார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழு நேரப் பணியாளர்; அதன் தேசிய செயற்குழுவின் உறுப்பினர்; இவ்வியக்கத்தின் முக்கியமான பதினைந்து பிரச்சாரக்குகளில் ஒருவராகக் கருதப்படுபவர். ஹர்ஷத் சோலன்கியுடன் சேர்ந்து அஜ்மீர் குண்டைத் தயாரித்து வெடிக்கச் செய்த சுனில் ஜோஷி என்ற முன்னாள் பிரச்சார கருடன் இந்திரேஷ் குமார் எப்பொழுதும் தொடர்பில் இருந்தார்.
சோலன்கி ராஜஸ்தான் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் சோலன்கி முக்கிய குற்றவாளி என்பது நம்மை அச்சுறுத்தும் உண்மை. இந்திரேஷ் குமாரைத் தவிர்த்து, ‘ஜெய் வந்தே மாதரம்’ என்றழைக்கப்படும் மற்றொரு சந்தேகத்திற்குரிய இயக்கத்துடன் தொடர்புடைய மற்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் உண்டு. செப்டம்பர் 2006 மாலே கான் குண்டுவெடிப்புக்கும், மே 2007 ஹைதராபாத் மெக்கா மஜ்ஜித் குண்டு வெடிப்புக்கும் பின்னால் இருந்த ‘அபிநவ் பாரத்’ என்ற அமைப்புடன் தொடர்புடைய இயக்கம்தான் ‘ஜெய் வந்தே மாதரம்’. லெப்டிணன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பிரக்யா சிங், ராம்ஜி குல்சங்கரா, ‘சுவாமி’ அசீமானந்த் ஆகியோரும் இதில் முக்கியமானவர்கள்.
இந்திரேஷ் குமாருக்கு எதிராக ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நேரத்தில் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பயங்கரவாத செயல்களுடன் இணைப்பதற்கான ‘அரசியல் சதி’ முயற்சியில் மைய அரசு இறங்கியுள்ளதாகக் கூறிக் கொண்டு, அதற்கெதிரான பிரச்சாரத்தைத் தொடங்க ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. இத்தகைய பயங்கரவாதத் தொடர்பு நிரூபிக்கப்படுவதைத் தடுக்க அரசியல் நெருக்கடியையும் அச்சுறுத்தலையும் சங்க் பரிவார் பயன்படுத்துகிறது. இந்தத் தொடர்பு நிரூபிக்கப்பட்டால், 1948-1949இல் காந்தி படு கொலையில் ஆர்.எஸ்.எஸ். குற்றஞ்சாட்டப்பட்டதைப் போன்ற நிலை ஏற்படும்; ‘தேசியம்’, ‘நாட்டுப் பற்று’ என்றெல்லாம் தன்னுடைய கொள்கை களுக்கு நியாயம் கூறும் அதன் முகம் கிழியும்.
தன்னுடைய குறுகிய அரசியல் குறிக்கோள் களுக்காகச் சிறுபான்மை சமயத்தவரைக் கொல்வதைச் சரியென்று நம்பும் வன்முறை அரசியல் இயக்கத்தின் யுக்திகள் அருவருப்பானவை; அரசியல் திட்டமெதுவும் தங்களுக்கு இல்லை யென்று மறுத்து ‘பண்பாட்டு தேசியம்’ என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்துகொள்வது இவர்களுக்கு வசதியாக இருக்கிறது. வலதுசாரி இந்துத்வாவின் பயங்கர வாதம் இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதத்தைவிட எந்த வகையிலும் மேலானதல்ல; அரசால் மென் மையாகக் கையாளப்படுவதாலும், காவல் துறைக்குள் வெற்றிகரமாக ஊடுருவியிருப்பதாலும் வலதுசாரி இந்துத்வா பயங்கரவாதம் இஸ்லாமிய பயங்கர வாதத்தைவிட ஆபத்தானது. இந்துத்வா பயங்கர வாதத்தைத் தண்டிப்பதுதான் நம் மக்களாட்சியின் வலுவை நிரூபிக்கும். இதில் தவறிவிடக் கூடாது.
நன்றி : நியூ ஏஜ்
- பிரவுல் பித்வாய்
தமிழில் : ரகு அந்தோணி

27 ஜன., 2011

கனவான்கள் உலவும் வீதிகள்


(சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தெருவில், கொசுக்கள் சேராத வண்ணம் பிளீச்சிங் பவுடரை பிளீச்சிங் பவுடரை பிளாஸ்டிக் கூடையில் கொட்டி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.)
அந்தப் பெருநகரத்தின் தெருக்களைப் போல்
அவன் சுத்தமில்லாதவன்
ஆனால் அவற்றை சுத்தம் செய்தவன் அவன்தான்
எவரும் காணச் சகிக்காத அவன் முகத்தை
குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு
வாழ்கிறான்
கனவான்கள் உலவும் வீதிகள் அவனிடம்
ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன
அவனுக்கான வீடென்று எதுவும் இல்லை
கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு
தேடுகிறான்
வீதிகளின் ஓரங்களிலும் முனைகளிலும்
குப்பைகளை வீணென வீசியெறிந்த
அழுகிய தின்பண்டங்களை
அழுக்கடைந்த அவன் உடைகளையோ
அவன் உடலையோ
தூய்மையாக்கிக் கொள்ளும் அந்தத் தருணம்
நிகழாமலேயே பார்த்துக் கொள்கின்றனர்
பொதுமக்கள்
மேலும் இருப்பனவற்றை தெருவில் போட்டு
துன்பங்களின் உயரத்தில் நின்று கதறுகிறது
அவன் வாழ்க்கை
கார்களின் கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு
ஜாஸ் இசைக்க வேகமாகச் செல்லும்
அவர்களுக்கு எதுவுமே கேட்பதில்லை
அழுக்கடைந்த அவன் மூச்சுக்காற்று உலவும்
நுரையீரல்களின் வலியை
எவருமே அறிவதில்லை
பரந்த பல்கலைக் கழகங்களில்
ஆய்வு மேடைகளில்
அடர்ந்த அச்சடித்த ஆய்வேடுகளில்
பேசுகின்றனர்
அவனைத்தான்
ஆதிக்குடியென்று
ஆதிவாசியென்று
ஆதித்தமிழனென்று!

நீதியின் பாதையை அழிக்கும் நீதிமன்றங்கள்


சொத்து தகராறாகத் தொடங்கி, பிறகு முழுமையான அரசியல் மற்றும் மத ரீதியான மோதலாக உருவெடுத்த, 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியின் மீதான கிரிமினல் தாக்குதலையும், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் உடைமைகளுக்கு எதிரான குறிவைத்த தாக்குதலையும் நியாயப்படுத்தி இருக்கிறது, பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு.
இவ்வழக்கில் செப்டம்பர் 30, 2010 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறது. இத்தீர்ப்பு, ஏற்றுக் கொள்ளப்படாத மத நம்பிக்கைகள் மற்றும் மறுக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் எல்லையற்று அமைந்திருக்கிறது.
‘சஹ்மத்' (SAHMAT), ‘சப்ரங் அறக்கட்டளை' (Sabrang Trust), ‘சோஷியல் சயின்டிஸ்ட்' (Social Scientist) ஆகிய அமைப்புகள், இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விளைவுகள் குறித்து முழுமையாக ஆராய, கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை ஒன்றிணைத்து, புது தில்லியில் மூன்று நாள் (6, 7, 8 டிசம்பர் 2010) கருத்தரங்கை நடத்தின. டிசம்பர் 6, 1992 இன் 18 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் அயோத்தி தீர்ப்பின் அனைத்து விளைவுகள் குறித்தும் புரிந்து கொள்ள கூடினர்.
கருநாடகம், மகாராட்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆர்வலர்கள் ஏறக்குறைய 50 அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி, கருத்தரங்கில் பங்கேற்றனர்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் உள்ள பாபா போதாங்கிரி வழிபாட்டுத் தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் சுவாமி ஆதித்தியானாத் என்பவர், மக்களை பிளவுபடுத்தும் வகையில் மோசமாக பேசியதற்கு எதிரான போராட்டம் மற்றும் இதுபோன்ற பல போராட்டங்கள் இக்கருத்தரங்கில் ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன. கருத்தரங்கில் மூன்று நாட்களாகப் பேசிய பல பேச்சாளர்கள், அண்மையில் வெளியிடப்பட்ட அயோத்தி தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அடிப்படைக்கு எதிரானது என்ற கருத்தை முன்வைத்தனர்.
நீதிபதிகள் பி.பி. சாவந்த், ஹோஸ்பட் சுரேஷ், ஷா ரசா, ராஜிந்தர் சச்சார், பொருளாதாரப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், வரலாற்று அறிஞர்கள், பேராசிரியர் இர்பான் அபீப், பேராசிரியர் சிரீன் மூஸ்வி ஆகியோர் ‘மத நம்பிக்கை மற்றும் உண்மை : அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர் ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் உரையாற்றினர். மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டன :
கிரிமினல் நீதித்துறையின் தொடர்ச்சியான தோல்வி. டிசம்பர் 23, 1949 அன்று இரவில் பாபர் மசூதி மீது ஏவப்பட்ட தாக்குதல் தொடர்பான காவல் துறையின் முதல் தகவலறிக்கை மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காதது. 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் கிரிமினல் சூழ்ச்சியினை தூண்டிய கயவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் முன் அயோத்தியா வழக்கு நிலுவையில் இருந்தபோது சாட்சியம் அளித்த வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் மீது பழிசுமத்தி, திட்டமிட்டு இழிவுபடுத்தியது உள்ளிட்டவை.
கருத்தரங்கின் தொடக்க நிகழ்வுகள் :
அதிகாரம், அச்சுறுத்தல், வன்முறை அடிப்படையிலான அரசியல் தலையீடின்றி ஜனநாயக அமைப்புகள் நீதி பிறழாமல் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியத்தை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் வலியுறுத்தினார். முதிர்ச்சியான ஜனநாயகத்தில் நீதிமன்றங்களின் மீது செல்வாக்கு செலுத்தி, நீதி வழங்கப்படுவதை மாற்றும் செயல்பாடுகளின் மீதிருந்து நீதித்துறை தள்ளி நிற்க வேண்டும்.
தவறான வரலாற்று ஆய்வு, தவறான தொல்பொருள் ஆய்வு :
அயோத்தி தீர்ப்பில் நீதிபதி அகர்வாலின் 5000 வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை விமர்சிக்கும் 96 பக்க விமர்சனக் கட்டுரையை ‘ராம ஜென்ம பூமியின் தீர்ப்பும் வரலாறும்' என்ற தலைப்பில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் மூத்த வரலாற்று அறிஞரும், பண்டைய இந்திய வரலாற்றில் உலகப் புகழ் பெற்ற நிபுணருமான பேராசிரியர் இர்பான் அபீப் எழுதிய விமர்சனக் கட்டுரையை, ‘அலிகார் வரலாற்று அறிஞர்கள் கழகம்' சிறு நூலாக வெளியிட்டுள்ளது.
நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், ‘பாபர் மசூதி 1528 இல் பாபரின் ஆட்சியின்போது கட்டப்படவில்லை ஆனால், 1707 ஆம் ஆண்டு பிறந்த அவுரங்க சீப் ஆட்சியில் கட்டப்பட்டது' என்று நிறுவ முனைகிறார். சிறிதளவே அறியப்பட்ட ஜோசப் டிபன்தேல் என்ற பாதிரியார் மற்றும் பயணி, அயோத்திக்கு 1740 லிருந்து 1765 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வருகை புரிந்ததை வைத்துக் கொண்டு, ஜோசப் டிபன்தேலின் எழுத்துகளிலிருந்து ‘ராம்கோட்' என்கிற இடிக்கப்பட்ட கோட்டையின் மீது ஒரு மசூதி கட்டப்பட்டது என்று கூறி, நீதிபதி அகர்வால் மசூதியில் உள்ள எழுத்துகளின் ஆதாரத்தைப் புறக்கணிக்கிறார்.
மசூதியில் உள்ள எழுத்துகளை நீதிபதி அகர்வால் போலியானவை என்று கூறி, 1760 மற்றும் 1810 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மசூதியில் இந்த போலி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நீதிபதி அகர்வால், இந்த எழுத்துகள் உண்மையானவை என்று ஏறக்குறைய ஒவ்வொரு வரலாற்று அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளரும் கருதியிருப்பதை புறந்தள்ளுகிறார்.
இந்திய தொல் பொருள் ஆய்வுக்கழகம், 1965 இல் கல்வெட்டு ஆய்வு நூல் ஒன்றை அரேபிய மற்றும் பாரசீக துணைக் கையேடாகப் பதிப்பித்தது. நீதிபதி அகர்வால் அவருடைய நீளமான தீர்ப்பில் இக்கையேட்டை கடுமையான சொற்களைப் பயன்படுத்தி புறந்தள்ளுகிறார். ‘மன்னர் பாபரின் கல்வெட்டுக் குறிப்புகள்' குறித்து இந்த அதிகாரப்பூர்வ கையேட்டின் சாட்சியம், நீதிபதி அகர்வாலால் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் பாரசீக மற்றும் அரேபிய கல்வெட்டு குறிப்புகளின் தலைவராகப் பணியாற்றியவரும், அரேபிய மற்றும் பாரசீக கல்வெட்டு ஆய்வாளர்களில் தலைசிறந்தவருமான டாக்டர் இசட்.ஏ. தேசாய் என்பவரால் இக்கையேடு தொகுக்கப்பட்டது.
இக்கல்வெட்டுக் குறிப்பு, டிசம்பர் 6, 1992 அன்று கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்து தள்ளும் வரை, மசூதியின் நுழைவு வாயிலில் காணப்பட்டது. இக்கல்வெட்டு குறிப்பு இப்பொழுது இல்லையென்றால், அதற்கு காரணம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் செயல்தான். டிபன்தேலின் எழுத்துகளில் இந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து எதுவுமில்லாதது குறித்து கூறவேண்டுமென்றால், வரலாற்றில் இத்தகைய பயணிகளின் எழுத்துகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை.
இன்னொரு எடுத்துக்காட்டினை கூறவேண்டுமென்றால், தலைசிறந்த அறிஞர் என்றும் பன்மொழிப் பாவலர் என்றும் கருதப்படும் மார்க்கோ போலோ, சீனப் பெருஞ்சுவர் பற்றி தனது எழுத்துகளில் குறிப்பிடாமல் விட்டதைச் சொல்ல வேண்டும். நீதிபதி சுதிர் அகர்வால் தனது வாதத்தில் பயன்படுத்தியிருக்கும் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினால், சீனப்பெருஞ்சுவர், மார்க்கோ போலோவின் பயணங்களுக்குப் பிறகு கி.பி. 1300 க்கு பிறகு கட்டப்பட்டது என்று தவறாக கூற வேண்டியிருக்கும்!
நீதிபதி அகர்வால் இன்னொரு உண்மையையும் மறந்து விடுகிறார். 1965 இல் கல்வெட்டுக் குறிப்புகளின் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் அரேபிய மற்றும் பாரசீக ஏடு பதிப்பிக்கப்படுவதற்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர், பாபர் மசூதி கதவு மற்றும் மேடையில் அமைந்திருந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ‘அவுத் மாநிலத்தின் கெஸட்டியர்' என்ற பெயரில் பென்னட் என்பவர் தொகுத்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு 1877 – 78 ஆண்டில் பதிக்கப்பட்டு, மேற்கூறிய குறிப்பு அதன் முதல் இதழில் 6 மற்றும் 7 ஆவது பக்கங்களில் காணப்படுகிறது. படம் ஒன்று மற்றும் படம் இரண்டு என்ற தலைப்பின் கீழ் பாபர் மசூதி கல்வெட்டு குறிப்புகள் மற்றும் கட்டப்பட்ட நாள் என்ற தலைப்பின் கீழ் இக்குறிப்பு காணப்படுகிறது.
பாபர் மசூதியின் இரண்டு இடங்களில் அது கட்டப்பட்ட ஆண்டு கி.பி. 1528 ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்டு, பாபர் மாமன்னரின் புகழ் கூறும் மற்ற வாசகங்களோடு பொறிக்கப்பட்டுள்ளது. இது, இதற்குமுன் கூறப்பட்ட ஆண்டைவிட பழமையானது. ஆனால், இந்த செய்தி நீதிபதி அகர்வாலின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்த சுருக்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பென்னட்டின் குறிப்பு எச்.ஆர். நெவில் என்பவர் தொகுத்த ‘பைசாபாத் மாவட்ட கெஸட்டியர்' என்ற 1905 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட வெளியீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் 179 ஆம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :
“மசூதியில் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒன்று மசூதிக்கு வெளியே உள்ளது. மற்றொன்று மசூதியின் மேடையில் அமைந்துள்ளது. இந்த கல்வெட்டுக் குறிப்புகள் 935 ஹிஜ்ரி (கி.பி.1528) என்ற தேதியை கொண்டுள்ளன.'' இந்த கல்வெட்டுக் குறிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் இருக்க முடியாது. பாபர் மசூதியின் வெளி வாயில் மற்றும் மேடை ஆகியவற்றில் உள்ள கல்வெட்டு குறிப்புகள், பாபர் மசூதி கட்டப்பட்ட ஆண்டாக 935 ஹிஜ்ரி (கி.பி.1528) இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதை, இரண்டு அரசாங்க அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த ஆண்டு, பாபர் ஆட்சியின் கீழ் வருகிறது. இந்த அரசாங்க அறிக்கைகள், இக்கல்வெட்டு குறிப்புகளின் சந்தேகமற்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன.
பாபர் மசூதி பின்னர் கட்டப்பட்டது என்ற தவறான முடிவுக்கு வருவதற்காக நீதிபதி சுதிர் அகர்வால், கட்டுமான வடிவமைப்பு மற்றும் கட்டுமான பாணி போன்ற மசூதி கட்டப்பட்ட ஆண்டோடு நெருங்கிய தொடர்புடைய கருத்துகளைப் புறக்கணிக்கிறார். ஒரு நீதிபதி தனது அய்ந்தாயிரம் வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை, மத நம்பிக்கையின் மிகக் குறுகிய அடிப்படையில் அமைத்திருப்பதோடு, வரலாற்று மற்றும் தொல்பொருள் சாட்சியங்களை தவறாக சித்தரித்து, குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்து மதவெறி அமைப்புகள் குறி வைத்து தாக்குகின்ற பண்டைய இந்திய வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளார் என்று அலிகார் வரலாற்று அறிஞர்கள் பதிப்பித்துள்ள விமர்சனக் கட்டுரையில் தெரிய வந்துள்ளது.
பண்டைய இந்திய வரலாறு குறித்த நீதிபதி அகர்வாலின் தவறான புரிதல், பாபர் பற்றிய அவரது குறிப்பிலிருந்தும் மற்றும் அவருடைய தீர்ப்பிலிருந்தும் தெரிய வருகிறது. பாபரை ‘ஒரு முழுமையான இஸ்லாமிய நபர்' என்றும் ‘அவர் சிலைகளை வணங்குபவர்களை சகித்துக் கொள்ளவில்லை' என்றும் பாபரை நீதிபதி அகர்வால் வர்ணிக்கிறார்.
மேலும், தனது தீர்ப்பில் நீதிபதி அகர்வால் பின்வருமாறு கூறுகிறார் : “இன்னொரு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியத் துணைக் கண்டம் மீது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வெளியாட்களின் தாக்குதல் மற்றும் ஊடுருவல் ஏவப்பட்டிருந்ததோடு, இந்த வெளியாட்களால் இந்தியத் துணைக் கண்டம் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டும் வந்தது. மிக அதிகளவிலான செல்வம் இந்நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டது.''
மேற்கூறப்பட்டுள்ள வரி, பண்டைய இந்திய வரலாற்றின் ஒருதலைப்பட்சமான புரிதலை வெளிப்படுத்துகிறது. பிரிட்டிஷாருக்கு முன்னால் இந்தியா வெளியிலிருந்தா ஆட்சி செய்யப்பட்டது? இந்த வெளியிடத்திற்கு செல்வம் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டதா?
யார் கொள்ளையடித்திருந்தாலும், அது சுல்தான்களாக இருந்தாலும், அரசர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்குள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் செல்வமும் இந்தியாவிற்குள்தான் தங்கியது. டாக்டர் எஸ். அலி நதீம் ரசாவீ, பல நூற்றாண்டுக் கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் மசூதி கட்டுமானப் பாணியின் பரிணாம வளர்ச்சியை மிகத் தெளிவாக விளக்கி, பாபர் ஆட்சிக் காலத்திற்கும் அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திற்கும் இடையே கட்டுமான பாணியில் இருந்த வேறுபாடுகளை விளக்கினார். கட்டுமான பாணி மற்றும் முறையை வைத்தே ஒரு கட்டடம் மொகலாயர் ஆட்சிக்கு முன் கட்டப்பட்டதா அல்லது மொகலாயரின் தொடக்க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா அல்லது பிற்கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா என்பதை எளிதாக அறிய முடியும்.
பாபரி மசூதி, ஷர்கி கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது ஜான்பூரில் காணப்படுகிறது. இந்த கட்டுமானப் பாணியில் வெளிவாயிலுக்கு ஒரு தனித்துவமான வடிவமைப்பு தரப்பட்டு, மசூதியின் குவிந்த கூரை பெரிதாகவும் கனமாகவும் காணப்படும். இந்த கட்டுமான பாணி பின்னர் வழக்கொழிந்து போனது. அவுரங்கசீப் காலத்திற்கு முன்னதாகவே கனமில்லாத குவிந்த கூரைகளும் தனியாக நிற்கும் மெல்லிய உயரமான கோபுரங்களும் மசூதியின் தனித்துவக் கூறுகளாயின.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கின் முக்கியமான தோல்விகளை டாக்டர் சிரீன் முஸ்வி எடுத்துரைத்தார். குறிப்பாக, வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் அறிஞர்கள் ஆகியோரது சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக ஆக்கப்பட்டதை டாக்டர் முஸ்வி விளக்குகிறார். வரலாற்று அறிவியல் மற்றும் தொல்பொருள் ஆய்வுக்கூற்றுகள் இரண்டு வாக்கியங்களிலாவது விளக்கப்பட வேண்டியவை. ஆனால், இத்தகைய சாட்சியங்களை ‘உண்டு' அல்லது ‘இல்லை' என்று ஒரே சொல் மூலம்தான் வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வு சாட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று வரையறுத்ததன் மூலம், தேர்ந்த நிபுணர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிமினல் சட்டத்தில், ஒவ்வொரு சாட்சியாளரும் விளக்கங்களைக் கூற, அடிப்படை சட்ட உரிமை உள்ளது. இந்த அடிப்படை சட்ட உரிமையை மறுத்ததன் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதியின் பாதையையே அழித்திருக்கிறது. தொல்பொருள் ஆய்வாளர் டி. மண்டல் எழுதிய ‘இடிப்புக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு'; ‘தோண்டுதலுக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு' ஆகிய இரு நூல்களும் அயோத்தி தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற பெஞ்சினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்திருக்கின்றன. இது, சுதந்திரமான வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆகியோரது ஆய்வு சிந்தனைகளையும், கருத்து சுதந்திரத்தையும் திட்டமிட்டு உயர் நீதிமன்றம் முடக்கும் செயலாகும்.
இது, வாக்குகளுக்காக பெரும் உணர்ச்சிகரமாக தூண்டப்பட்ட ஓர் அரசியல் மதவெறி மோதலுக்காக செய்யப்படுவதும்; ஒரு பழமையான காலனியாதிக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி செய்யப்படுவதும்; அயோத்தி வழக்கில் நீதித்துறை சீரழிவு மற்றும் நீதியின் அழிவுக்குப் பின்னால் உள்ள கொடூரமான அரசியலையும் சுட்டிக்காட்டுகிறது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையேற்று நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அமைக்கப்பட்ட – பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு காணப்பட்ட விலை மதிப்பற்ற மசூதியின் பாகங்களை அழித்த – தொல்பொருள் ஆய்வுக் குழுவை, நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் வெகுவாகப் பாராட்டுகிறார். மதவெறி கட்சியான பா.ஜ.க. வழிநடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆணையிட்ட தொல்பொருள் அகழாய்வுக்குப் பின்னால் உள்ள அரசியலை, நீதிபதிகள் ஆய்வு செய்ய மறந்துள்ளனர். தனது ரத்த வெறி மிகுந்த ரத யாத்திரையை நடத்தி, பிறகு இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் ஆன எல்.கே. அத்வானியும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியும் – மதவெறி பா.ஜ.க. நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்தனர்.
இவ்வாறு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் நடந்த உள்நோக்கம் கொண்ட அகழாய்வுகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை கேள்வி கேட்காத நீதிபதிகள், தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் தவறான – ஜோடிக்கப்பட்ட அறிக்கையின் மீது முழு நம்பிக்கையை வைக்கின்றனர். இந்த ஜோடிக்கப்பட்ட அறிக்கை, இன்னும் அறிஞர்களின் ஆய்வுக்காக முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் ஆட்சியும், ஜோடிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வறிக்கையை உறுதிப்படுத்தியதில் சமபங்கு வகித்திருக்கிறது என்று பேராசிரியர் இர்பான் அபீப் குற்றம் சாட்டினார்.
1949 – 1992 சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்களுக்கு, இந்தியத் துறைகளின் மோசமான பதில் நடவடிக்கைகள் :
டிசம்பர் 23 1949 அன்றிரவு, பாபர் மசூதிக்குள் கிரிமினல் தாக்குதலாக நுழைந்து ராமன் சிலைகளை வைத்து, சட்டத்திற்குப் புறம்பாக செய்யப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக அயோத்தி வழக்கின் வரலாறு ஒன்றும் செய்யாமல் தோல்வியடைந்திருப்பதை, லிபரான் ஆணையத்தின் பல்லாண்டு கால வழக்குரைஞரான அனுபம் குப்தா உணர்ச்சியுடன் எடுத்துரைத்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, காவல் துறை அதிகாரி கே.கே. நய்யார் என்பவருக்கு கடிதங்கள் மற்றும் ஆணைகள் பிறப்பித்தும் கூட, மேற்கூறிய டிசம்பர் 23, 1949 அன்றிரவு நடைபெற்ற குற்றச் செயல் மாற்றப்பட முடியவில்லை. இந்த காவல் துறை அதிகாரி, இப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி அகர்வால் தன்னுடைய தீர்ப்பில் ராமனின் பிறப்பு குறித்த புராணக் கதைகளுக்கு அய்ந்தாயிரம் பக்கங்கள் ஒதுக்கியுள்ள அதே நேரத்தில், 1949 மற்றும் 1992 இல் நடந்த பாபர் மசூதி மீதான கிரிமினல் தாக்குதல்களுக்கு எந்தவொரு கவனத்தையோ, இடத்தையோ ஒதுக்கவில்லை. மசூதிக்குள் கிரிமினல் முறையில் நுழைந்ததற்கான முதல் தகவல் அறிக்கை, மிகுந்த தயக்கத்துடன் வேண்டா வெறுப்பாக காவல் துறை கண்காணிப்பாளரால் பதிவு செய்யப்பட்டதும், பின்னர் மசூதி இடிப்புக்கான அரசியல் வெறித்தனத்தில் பங்கேற்ற மாவட்ட நீதிபதி பி.பி. பாண்டேயின் நடத்தையும் சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை அனுபம் குப்தா சுட்டிக் காட்டினார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங்கால் தரப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டு, டிசம்பர் 6, 1992 அன்று மிகுந்த விளம்பரத்துடன் பலரும் பார்க்க செய்யப்பட்ட கரசேவையில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் தலைமையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறித்தனமானது, அங்கிருந்த சந்தன் மித்ரா மற்றும் சுவபன்தாஸ் குப்தா போன்ற பத்திரிகையாளர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், மசூதி இடிக்கப்பட்ட போதும் 1949 இல் மசூதிக்குள் வைக்கப்பட்ட சிலைகள் இடிக்கப்படவில்லை. அவை கவனத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு, மசூதி இடிப்பு முடிவடைந்த பிறகு மீண்டும் அந்த சிலைகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன.
அப்போதைய பிரதமராக இருந்த நரசிம்மராவ், சம்பவ இடத்திற்கு மத்திய துணை ராணுவப்படைகளை அனுப்பியிருந்தும் அவை ஒன்றும் செய்யாமல் – வெறிக்கூட்டம், கிரிமினல் தாக்குதல்களை மசூதி மீது ஏவிவிட்டதை வேடிக்கை பார்த்ததும், இதில் நரசிம்மராவ் பங்கு குறித்தும் பேச்சாளர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்குகள் திட்டமிட்டு நீர்த்துப் போக செய்யப்பட்டதை பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா விரிவாக விளக்கினார். மசூதி இடிப்பு நடைபெற்ற நேரத்தில் 49 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன; இவற்றில் 47 பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பானதாகும். மீதம் இருக்கும் 2 முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்று, மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான கிரிமினல் சூழ்ச்சி மற்றும் வெறிக் கூட்டத் தாக்குதல் பற்றியதாகும். இதில் எல்.கே. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் வெறிக்கூட்டத் தாக்குதலின் முதன்மையான சூழ்ச்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டாவது முதல் தகவல் அறிக்கை எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களால் மசூதி இடிப்புக்கு முன்னும், மசூதி இடிப்பின்போதும், மசூதி இடிப்புக்குப் பின்னும் பேசப்பட்ட வெறித்தனமான வெறுப்பைக் கக்கும் பேச்சுகள் தொடர்பானவையாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அய்ந்தாண்டு ஆட்சியில் மத்திய அரசு திட்டமிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மூன்று உச்சத் தலைவர்கள் மசூதி இடிப்பின் தலைமை சூழ்ச்சியாளர்களாகப் பதிவு செய்யப்பட்டதை நீக்கினர். இதை செய்து, ஏதோ தலைமை இல்லாத வெறிக்கூட்டம் மசூதி இடிப்பை செய்ததாக பொய்யாக வாதிட்டனர். அந்த இரண்டு வழக்குகளும் இப்போது தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவ்விரு வழக்குகளும் மத்திய அரசின் மேற்கூறப்பட்டுள்ள பாரபட்ச தலையீட்டால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. வின் உச்ச தலைமையும் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் கொடுத்த உறுதிமொழிகளை பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு வெட்கமின்றி மீறியும் கூட, உச்ச நீதிமன்றம் பா.ஜ.க.வினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்டவர்த்தனின் ‘ராம்கே நாம்' என்ற திரைப்படம், மக்கள் மத்தியிலிருந்தும் மற்ற கிரிமினல் சட்டத் துறை நடவடிக்கைகளிலிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்திகளை பார்வையாளர்கள் முன் கொண்டு வந்தது. நீதிமன்றத்தால் சர்ச்சைக்குரிய இடத்திற்கு மத குருவாக நியமனம் செய்யப்பட்ட பாபா லால்தாஸ், 1993 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் திடீரென்று கொலை செய்யப்பட்டது, இந்த செய்திகளில் ஒன்றாகும். இதேபோன்ற இன்னொரு மர்மமான கொலை, பைசாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விலை மதிப்பற்ற ஆவணங்களை லிபரான் ஆணையத்திற்கு கொண்டு சென்ற ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி கொலை செய்யப்பட்டதாகும். இந்தக் கொலைக் குற்றங்கள் எவையும் விசாரிக்கப்படவில்லை.
பைசாபாத் மற்றும் அயோத்தியிலிருந்து குரல்கள் :
ஜனநாயக எதிர்ப்பும் பல்மத வழிபாடும் அயோத்தியில் ஒடுக்கப்பட்டுள்ளது பற்றி ஆச்சாரிய ஜுகல் கிஷோர் சாஸ்திரியும் ‘மெக்செசே' விருதை வென்ற சந்திப் பாண்டேயும் விளக்கமாகப் பேசினர். டிசம்பர் 6, 1992 அன்று மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட 17 முஸ்லிம்கள் மற்றும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 300 முஸ்லிம் வீடுகள் மற்றும் கடைகள் குறித்து எந்த விசாரணையயும் நடத்தப்படவில்லை.
நீதித்துறையின் அரசியல்
உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி. சாவந்த், பம்பாய் உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ், அலகாபாத் மற்றும் லக்னோ உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி எஸ்.எச்.ஏ. ரஸா ஆகியோர் உயர் நீதிபதிகள் வட்டாரத்தில் பாபர் மசூதி அயோத்தி பிரச்சனை குறித்து நிலவிவரும் அரசியல் பற்றியும், பெரும்பான்மை இந்துத்துவ அரசியல் நீதிபதிகள் மற்றும் அரசின் மீது செலுத்தும் செல்வாக்கு குறித்தும் விளக்கமாகப் பேசினர்.
1980–களின் இறுதியில், மகாராட்டிர பம்பாய் நீதிமன்றங்களிலிருந்து வந்த தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்த விளைவுகளை ஆய்ந்த குழுவொன்று பின்வரும் செய்தியை தெரிவித்தது: இந்த வழக்குகளில் ஒன்றில் உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்துத்துவா அரசியல் மத இயக்கத்தை நியாயப்படுத்தி, அதை இந்து மதத்தோடு குழப்பி, அதன் மூலம் பெரும்பான்மை மதவெறி அரசியலுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீதிமன்ற அங்கீகாரத்தை கொடுத்தது. இப்பெரும்பான்மை மதவெறி அரசியலின் வெளிப்பாடாகத்தான் பா.ஜ.க. தோன்றி, இந்திய நாடாளுமன்றத்தில் 90 இடங்களை வென்றது.
மாநிலத் தேர்தலின்போது சிவசேனா தலைவர்கள் சுபாஷ் தேசாய், ரமேஷ் பிரபு மற்றும் மனோகர் ஜோஷி ஆகியோர் பேசிய பேச்சுகள் – அரசியல் ரீதியான வெறித்தனம் மிகுந்த இந்துத்துவாவை வெளிப்படுத்தியதோடு, மதசிறுபான்மையினருக்கு எதிராக இழிவான வெறுப்பினையும் வெளிப்படுத்தின. இந்தப் பேச்சுகள் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தும் தன்மை கொண்டவையாகும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் இரண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், கெடுவõய்ப்பாக அப்போது நாடாளுமன்ற அவைத் தலைவராக ஆகிவிட்டிருந்த மனோகர் ஜோஷியின் தேர்தலை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
அதற்குப் பிறகு இருவேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா இயக்கத்தை நியாயப்படுத்தும் தீர்ப்பினை, அரசியல் சாசன அமர்வு (பெஞ்ச்) முன் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும், இந்த வழக்குகளுக்காக பெரிய அரசியல் சாசன அமர்வுகளை ஏற்படுத்த உச்ச நீதிமன்றத்திற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. இந்த வழக்குகளில் ஒன்றை அரசியல் சாசன அமர்வுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்த மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர் பி. ஏ. தேசாய் இக்கருத்தரங்கில் பங்கேற்று, இந்துத்துவா மற்றும் இந்து மதம் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.
‘கம்யூனலிசம் காம்பட்' இதழின் இணை ஆசிரியரான தீஸ்தா செடல்வாட் தனது முடிவுகளை – ‘வெறித்தனமான வெறுப்புப் பேச்சும் இந்திய நீதிமன்றங்களும்' என்ற கட்டுரையாகப் படித்தார். அதில் பொதுவாக நீதித்துறை குறிப்பாக உயர் நீதிபதிகள் வெறித்தனமான வெறுப்பு பேச்சு குறித்த சட்டவரையறைகளை தெரியப்படுத்துவதில் கவனக்குறைவாக இருந்து வருவதாகக் கூறினார். இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் பிரிவுகள் 153 ஏ, 153 பி, 505 மற்றும் 295 ஆகியவை மக்களில் ஒரு சாராருக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் எழுதுவது மற்றும் பேசுவது குறித்ததாகும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற வன்முறையின் போது பால்தாக்கரே தனது ‘சாம்னா' இதழில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய வெறித்தனமான வெறுப்புப் பேச்சை பம்பாய் உயர் நீதிமன்றம், ‘இந்த வார்த்தைகள் தேசத்திற்கு எதிரான முஸ்லிம்களை நோக்கி பயன்படுத்தப்பட்டன' என்ற அடிப்படையில் நியாயப்படுத்தியதை இந்திய உச்ச நீதிமன்றம் சரி செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 30 ஆயிரம் கையெழுத்துகள் கொண்ட தேசிய இயக்கம் நடத்தப்பட்ட போதும் உச்ச நீதிமன்றம் அதை கண்டு கொள்ளவில்லை. மே 2007 வருண் காந்தி உத்தரப் பிரதேச தேர்தலின் போது விஷத்தனமான பேச்சுகளை பேசிய பிறகு, அதற்கெதிராக குடிமக்களால் இயக்கம் நடத்தப்பட்டபோதும், தேர்தல் ஆணையம் வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேட்பாளர் உத்தரப்பிரதேச மாநிலம், பில்பிட் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, அரசியல் வர்க்கமோ, அரசோ, நீதித்துறையோ, தலைமை தேர்தல் ஆணையரோ விஷமத்தனமான பேச்சுகளை 2007 தேர்தலின் போது பேசிய வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய விஷயங்களில் நீதித்துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், பம்பாய் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மிஹிர் தேசாய், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ரவி கிரண் ஜெயின் ஆகியோர் விளக்கமாகப் பேசினர்.
டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மத சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்த பிறகு பா.ஜ.க. அரசுகள் மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்த வழக்கில் – 1994 இல் 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், மதச்சார்பின்மையே இந்திய அரசியல் சாசனத்தின் மாற்ற முடியாத அடிப்படைக் கூறாக இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இந்த முக்கியத் தீர்ப்பு ஓராண்டுக்குப் பிறகு 1995 இல் உச்ச நீதிமன்றத்தில் வெளிவந்த, இந்துத்துவாவை நியாயப்படுத்திய தீர்ப்பால் அலட்சியப்படுத்தப்பட்டது. 
மதவெறி அரசியலின் விளைவுகள் :
கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராட்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த துடிப்பான பேச்சாளர் குழுக்கள், மதவெறி அரசியலால் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து இத்தெளிவான புரிதலை ஏற்படுத்தினர்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா போதாங்கிரி கோயில் தொடர்பான ஆபத்தான மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் ‘கர்நாடகா மத நல்லிணக்க அமைப்பு' துடிப்பான பங்கினை வகித்தது. பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் திரட்டிய வன்முறை கும்பலுக்கெதிராக மாவட்டத்தில் மக்களை திரட்டி மேற்கூறிய அமைப்பும் ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' என்ற அமைப்பும் செயல்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வமைப்புகள் உள்ளூரில் நடந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
உச்ச நீதிமன்றம் இச்சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு எதிராக தடை விதித்தாலும், அதன் பிறகு கர்நாடக அரசின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை அவமதித்திருந்தாலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேற்கூறப்பட்டுள்ள பிரச்சனையோடு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட மற்ற வழக்குகள் ஒரு தெளிவான சட்ட வரையறையை வெளிப்படுத்த தவறியுள்ளது மட்டுமின்றி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் கிரிமினல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ தயங்குகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதும் மதச் சிறுபான்மையினர் கோயில்களாக அல்லது பன்மத வழிபாட்டுத் தலங்களாக இருக்கும் 30 ஆயிரம் கோயில்களை சட்டத்திற்கு புறம்பாக கைப்பற்றுவதற்கு – பாரதிய ஜனதா கட்சியும் வி.எச்.பி.யும் திட்டமிட்டுள்ளன என்பதை மே 2003 இல் ‘கம்யூனலிசம் காம்பட்' இதழ் வெளிப்படுத்தி, அந்த 30 ஆயிரம் கோயில்களின் பெயர்களைப் பதிவு செய்ததை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டுப் பேசினார்.
பஜ்ரங்தள் மூலம் தனது அரசியல் வாழ்வை வளர்த்துக் கொண்ட பா.ஜ.க., நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கத்தியார், டிசம்பர் 29, 2002 அன்று வாரணாசியில் முஸ்லிம்கள் காசி மற்றும் மதுரா மசூதிகளை வி.எச்.பி., பஜ்ரங் தள் அமைப்புகளிடம் கொடுத்து விடவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அதற்குப் பிறகு மார்ச் 1, 2003 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் படோஹியிலும் அதே ஆண்டு மார்ச் 10 அன்றும், வி.எச்.பி.யின் சர்வதேச செயலாளர் பிரவின் தொகாடியா இதே மிரட்டல்களை மிகுந்த விஷத்தனமான வெறித்தனத்துடன் மீண்டும் வலியுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது பேச்சாளர் எம்.எஸ். வைத்யா மூலம் காசி மற்றும் மதுரா கோயில்கள் ‘விடுதலை' பெறுவதற்கான வி.எச்.பி.யின் விஷத் திட்டத்திற்கு, தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியது.
ராஜஸ்தானில் உள்ள பாபா ராம்தேவ் கோயில், வலதுசாரி பெரும்பான்மை இந்துத்துவ அரசியல், மதப் குழுக்களால் எடுத்து கொள்ளப்பட்டதை சிறந்த வரலாற்று அறிஞர் கே.எம். சிறீமலி விளக்கினார். இதேபோன்று குஜராத் மாநிலத்தில் உள்ள பியாரானா முஸ்லிம் தர்கா, இந்து மதவெறி அமைப்புகளின் பொறியில் சிக்கியிருப்பதை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டார்.
துடிப்பான குடிமக்கள் முனைப்பு, சிறுபான்மை மக்களிடமிருந்து வெளிப்பட்டு 2005 இலிருந்து கோரக்பூரில் சுவாமி ஆதித்யாநாத்தின் வெறித்தனமான பேச்சுகளை கட்டுப்படுத்தியிருக்கிறது. வழக்குரை ஞர்கள் ஆசாத் அயாத் மற்றும் பர்வேஸ் பர்வாஸ் ஆகியோர் ஆதித்யாநாத்திற்கு எதிராக, வெற்றிகரமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்றதை குறிப்பிட்டனர். இந்த வெறித்தனமான மதகுரு, அதற்குப் பிறகு தடை உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்திற்கு ஓட வேண்டியிருந்தது.
வரலாற்று அறிவியல், தொல்பொருள் ஆய்வு, மனித உரிமைகள் முனைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை கோட்பாடுகள் என்று அறிவைத் தூண்டிய வளமான உரையாடல்கள் மூன்று நாட்கள் கருத்தரங்கில் இடம் பெற்றன. ராம ஜென்ம பூமி இயக்கத்தின் அரசியலுக்குப் பின்னால் உள்ள குறிக்கோள் ராமனுக்கு கோயில் கட்டுவது அல்ல. ஆனால், மதத்தின் மொழியையும், பிரசங்கத்தையும் தவறாகப் பயன்படுத்தி – இந்தியாவை அரசியல் ரீதியாக ஒரு பெரும்பான்மை சர்வாதிகார நாடாக ஆக்குவதே ஆகும்.
தமிழில் : இனியன் இளங்கோ

20 ஜன., 2011

கடவுளின் இறப்புச் சான்றிதழ்


வாக்காளர்கள் -
வேட்பாளர்களின் கறுப்புப் பணத்தில்
குறைந்த பட்சக் கூட்டாளிகள்..!

மக்களின் மனங்களை
கொள்ளை கொண்ட
ஆளும் கட்சி ..
மணற்கொள்ளையிலும்
சிறந்து விளங்குகிறது..!

முதலில் மதுக்கடையை திறந்து
"குடிநோயாளி" ஆக்குவார்கள்..!
பிறகு மருத்துவக்  காப்பீடு தந்து
"வாழும் வள்ளல்" ஆவார்கள் ..!

ஏகாதிபத்தியத்தை
நக்கி பிழைக்கும் நாய்கள்
நாடாளுகின்றன..!
அடிமைகளில் சிறந்தவர்களை
அறிவிக்கிறார்கள் "அமைச்சர்கள்" என..!

நம்மை கொலை செய்து
நல்லாட்சி நடத்துகின்றன
அரசுகள்..! 

தேசத்தை விற்பதே
நவீன தேசபக்தி..!
மறுப்பவனும் எதிர்ப்பவனும்
"தேசத்துரோகி"ஆவான்..!

ஒரு வேசியின் -
திறந்த யோனியைப் போல
எம்தேசம்..!
வன்புணர்ச்சி கொள்ள
வருக வருகவே
பன்னாட்டு நிறுவனங்கள்..!

கடவுள் இறந்து விட்டதை
உறுதி செய்யும்
பிரேத பரிசோதனை அறிக்கையை
ஏழை நாடுகளிடம்
விநியோகிக்கின்றன
வல்லாதிக்க நாடுகள்
.


                                                       எல்லாம் அவன் வசம்


- அமீர் அப்பாஸ் ( jibran.abb@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

எல்லாம் அவன் வசம்

ஏழைப் பங்காளனின் ஆட்சி..!
எப்போதும் வாரி வழங்கும் வள்ளல்
மின்சாரத்தை வாரி வழங்குகிறான்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு..!
ஒரு வழியும் அற்ற மக்களுக்கு
நான்கு வழிச் சாலையைக்
காட்டுகிறார்கள்…!
வறுமையைக் கடக்க
கதியற்ற மக்களிடம்
கட்டிய பாலத்தைக் காட்டி
கடந்து போக சொல்கிறார்கள்..!
ஒட்டுக் கோவணத்தையும்
உருவிச் சென்றவர்கள்
கட்டிக்கச் சொல்லி
கரைவேட்டி தருகிறார்கள்..!
நாம் வாழும் உரிமையை
வன்முறையாய் பறித்துக் கொண்டு
"இலவசம் இலவசம்" என
எப்போதும் முழங்குகிறார்கள்..!
எல்லாம் அவன் வசமானது..!
ஆட்சி
அதிகாரம்
அரச வன்முறையால்
ஆளும் அவனை
அனைவரும் அடிபணிகிறார்கள்
ஆண்டவனைப் போல..!
எல்லாம் அவன் வசம்..!
கடைசி விவசாயியின்
கைகளில் மட்டும் விஷம்..!
- அமீர் அப்பாஸ் ( jibran.abb@gmail.com)

அடிமை வாழ்வும்.. ஆண்டவன் மகிமையும்..!


தன் பேரழகினால்..
நம்மை கொள்ளையடிக்கும்
கோயில் சிற்பங்களின்..
எல்லையற்ற இரசிகன் நான்..!
ஒன்று பரம்பொருள்
என்று உணர்ந்தால்..
எதற்கு இத்தனை தெய்வங்கள்..?
சில சில்லறைகள் -
சில்லறை சேர்க்கத் தானா..?
தீபத் தட்டை ஏந்தி நிற்கும்
அய்யர்-
வயிற்றைக் காட்டி நிற்கிறார்
வெளிச்சப்பிச்சை...1
உன் ஆகம விதிகளால்
ஆவது ஒன்றுமில்லை..!
உழைக்கும் மக்களை
உருக்குலைத்த..
தீண்டாமையைத் தவிர..!
ஆறு காலப் பூசை..
எட்டுக்காலப் பூசை
என்பதெல்லாம்..
நீயென்னை-
எத்தனை முறை ஏமாற்றுகிறாய்..?
என்பதன் எண்ணிக்கை மட்டுமே..!
தீட்டுப்பட்டவளை மறுக்கும்
சிலைகளுக்குத் தெரியாது..!
மானிடர் பிறப்பின்
மகத்துவம்
மாத விலக்கால் நிகழ்கிறது
என்று..!
லிங்கத்தைக் கும்பிடுவாய்..!
யோனிக்கு இல்லை
லிங்கத்தின் மதிப்பு..!
படைப்பின் -
பேராற்றலை மறுக்கும்
ஆணாதிக்கத்தின் பெருங்கூறு..!
உழைக்கும் மக்களின்
எல்லா சக்தியையும்
உறிஞ்சிக்கொண்டு..
“சக்தி வழிபாடு” நடத்துகிறாய்..!
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒற்றைக்குறியீடாய்
நிற்கிறது
சங்கிலியால் கட்டப்பட்ட
யானை..!
வழிபாட்டை வழிமறிக்கும்
நந்தியான பசுவை..
வெட்டித் தின்றான் பறையன்
பார்ப்பனனுக்கு
பாலும் நெய்யும்
கிடைக்காத படி..!
காதலர்களின்-
சந்திப்பு நிலையங்களாக இருக்கும்
கோயில்கள்
சாதிகளின் உற்பத்தி நிலையமும்
ஆதலால்
காதல் நிறைவேறாததன்
காரணங்களாகவும் உள்ளன..!
கோயிலுக்குள்
காவல் நிலையம்..!
உலகைக் காப்பவனுக்கு
உள்ளூர்க் காவலர்கள்
எந்திரத் துப்பாக்கியுடன்
பாதுகாப்பு..!
அச்சம் என்பது
ஆண்டவன் ஆனால்..
வீரம் என்பது
பகுத்தறிவின் வெளிப்பாடு..!
                                                  பட்டொளி வீசி பறக்குது பாரீர்..!
- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com)

பட்டொளி வீசி பறக்குது பாரீர்..!


சாராய சீசாவுக்குள்
அடைபட்டுக்கிடக்கிறது
தேசம்..!
மக்களின் வரிப்பணம்
அரசுக்கருவூலத்தில்
அடைக்கலமாகி..
திரும்பி வருகின்றன
இலவசம் என்னும்..
"இழிசொல்லுடன்..!"
செத்த பின்பு சிதைமூட்டும்
திருநாட்டில்..
இன உணர்வு செத்ததற்காக
தன் உயிர்ச்சதையில்
தீமூட்டி எரிந்தனர்
அப்துல் ரவூப்பும்
முத்துக்குமாரும்..
ஈழம் கருகிய இறுதி நேரத்தில்
பிண வாடை முகர்ந்தும்
அதிகாரத்தின் வேர்
அறுந்து விடாமல்
உரத்த குரலில்
துயரப்படுகிறார்கள்
உடன்பிறப்புகள்..!
”வாக்களிக்க யாரும் இனி
வருந்த வேண்டாம்..!”
எந்திரங்கள் பழகிக்கொண்டன
ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க..!
தேசியக் கொடியில் -
ஈழத்தமிழனின்
இரத்தம் தெறித்து
சிவப்பு நிறமானது..!
”பாக்சைட்”டுக்காக
பசுமை வேட்டையாடியதில்
பச்சை நிறம் கீழே
பட்டொளி வீசி பறக்கிறது..!
ஏகாதிபத்தியத்திடம்
சரணடைபவர்களுக்காக
வெண்சாமரம் வீசுகிறது
வெள்ளைக் கொடி..!
                                                  நீதியின் கொலைக்கரங்கள்..!
- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com)

நீதியின் கொலைக்கரங்கள்..!


மருத்துவர்களாலும்
நிர்ணயிக்க முடியாத நேரத்தை
நிச்சயித்து விடுகிறது
நீதித்துறை..!
தூக்குக் கொட்டடியில்
மரணம் நிகழும் வேளை..!
புனையப்பட்ட வழக்குகள்
சித்ரவதைக் கூடத்தின்
செயல் திட்டங்கள்
வன்முறையின் வழியில்
வலி தாங்க இயலாத
வாக்குமூலங்கள்...!
பொய்மையும் கயமையும்
பொங்கிப் பிரவகிக்கும்
சட்டத்தின் ஓட்டையில்
குரூரத்தின்
குருதி ஊற்றுக்கள்..!
ஊடக யூகங்களால்
பிடிபட்ட பூனைகள்
புலிகளாக்கப்படுகின்றன..!
எல்லா சட்டநூல்களையும்
பொய்யாக்கி விடுகின்றன
பூணூல்கள்..!
சட்டத்தின் கயிற்றில் இறுகும்
சாமானியனின்
உயிர்கள் மட்டும்..!
உயிரைப் பறிக்கும் உரிமை
இயற்கைக்கு மட்டுமே!
எவனுக்கும் இல்லை..!!
கழுத்து நெரிபட்டு
கடைசியாய்
கதறித் துடிக்கும்
உயிரின் ஓலத்தில்
செத்து விடுகிறது
உலகின் மனித நேயம்..!
இந்தியாவின்
இறையாண்மை..!
தேசியப் பறவையைக்
கொன்றால் குற்றம்..!
தேசியம் நம்மைக்
கொன்றால் குற்றமல்ல..!
- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com)

சில பொம்மைகளும் சில உண்மைகளும்..!


புதைத்து வைக்கப்பட்ட
பொம்மைகள்
உண்மைகளாகின்றன..!
மெய்ப்பிக்க முடியாத
கற்பனைகள்
சட்டத்தின் சாட்சிகளாகின்றன..!
திருட வந்தவனுக்கு..
வீட்டை ஒப்படைக்கும்படி
உத்தரவிடுகிறது
உயர்நீதிமன்றம்..!
ஆக்ரமிப்பாளனுக்கு
அனுமதி தருகிறது
மதச்சார்பின்மையின் பெயரால்
மனுநீதித் தீர்ப்பு..!
கொலை செய்ய வந்தவனை
மண்டியிட்டு வணங்கி
அகிம்சை வளர்க்கிறது
எம் தேசம்..!
ஆயுதம் தந்து
மனிதத்தைக் கொன்று
முள்வேலிக்குள் முடக்கிய
காந்தி தேசம்
கோட்சேக்களின்
கொள்கை வழி நடக்கிறது..!
நீரோக்கள்-
இசைப்பதை மறந்து
தீர்ப்பு வாசிக்கிறா!ர்கள்..!
தேசம் எரிகிறது..


                                அறுவடை வயல் அமீர் அப்பாஸ் கவிதைகள்
- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com)

அறுவடை வயல் அமீர் அப்பாஸ் கவிதைகள்


பண்டிகைகள் -
ந்டுத்தர வர்க்கத்தின்
குரல்வளையை நெரிக்கும்
கெளரவ தற்கொலைகள்..!
அறியாத வயதில்
அனுபவித்த மகிழ்ச்சியை
தொலைத்து விட்ட..
அறிவின் துக்கங்கள்..!
கூடிக் களித்த
கொண்டாட்டங்களை
கொட்டி கவிழ்த்த
விலைவாசி உயர்வின்
குலை நடுங்கும்
விஷப் பரிட்சைகள்..!
கும்பிடும்போது ஒலிக்கும்
கோயில் மணிகள் அல்ல..!
மரணம் வரை தொடரும்
சம்பிரதாயத்தின்
சாவு மணிகள்..!
மானத்தை மறைக்க
வழியற்றவனின்
கிழிசல் ஆடைகள் அல்ல..!
துயர நெசவுகளால்
நெய்யப்பட்ட
புகழின் பொன்னாடைகள்..!
சாமானியனின் வியர்வை
விதைத்ததை
அறுவடை செய்யும்
சாஸ்திர அரிவாள்கள்..!
உழைக்காமல் வெல்பவனுக்கு
மட்டும் உண்டு..!
ஏமாற்றப் பட்டவனுக்கு..
இல்லை கடவுள்..!
- அமீர் அப்பாஸ் ( israthjahan.ameer@gmail.com)

19 ஜன., 2011

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!


ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! அசீமானாந்தாவின் ஆதாரம் !!
சுவாமி அசீமானந்தா
சுவாமி அசீமானந்தா
ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட
அப்துல் கலீம்
நிரபராதி அப்துல் கலீம்
ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா ஆடுகளும் போய் கடைசியாக ஆட்டுச் சட்டை போட்ட ஓநாய் மட்டுமே மிஞ்சியது. இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்ட மேய்ப்பன் அதை மட்டுமாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கையில் எடுத்தானாம். அப்போது பார்த்து சட்டை நழுவிக் கீழே விழுது உள்ளே பதுங்கியிருந்த ஓநாய் அம்பலப்பட்டதாம்
மேலே சொன்ன அம்புலிமாமாக் கதையின் வில்லனான ஓநாயின் இருபத்தோராம் நூற்றாண்டுப்  பதிப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதில் ஒரு சிறப்பான விசயமென்னவென்றால்,  ஆர்.எஸ்.எஸ் ஓநாய் எந்தக் காலத்திலும் மனிதச் சட்டை எதையும் அணிந்து கொள்ளவில்லை. அப்பட்டமாகத் தனது இந்து பாசிச செயல் திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டே அப்படியொரு சட்டையை அணிந்து கொண்டிருப்பதாக நம்மிடம் சொல்லியது. தாம் தேசபக்தர்கள் என்றும் நல்லவர்களென்றும் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்கள் நம்பினார்களோ இல்லையோ, இந்த அரசும் ஆளும் வர்க்கமும் மனதார நம்பியதோடு பரப்பவும் செய்தார்கள். கூடவே அது காட்டிய திசையிலெல்லாம் பாய்ந்து ஒநாயின் குற்றங்களுக்காக அப்பாவி ஆடுகளைப் பிடித்து ஓநாய் என்று அறிவித்ததோடு சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.
2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகராஷ்ட்டிர மாநிலம் மாலேகான் நகரின் முசுலீம்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தது. 2007ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதேயாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாக்கிஸ்தான்
இந்திரேஷ் குமார்
இந்திரேஷ் குமார்
இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் இரயிலில் குண்டுகள் வெடித்தன. அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் ஷெரீப் தர்காவிலும் குண்டுகள் வெடித்தன. மேலே குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
ஒவ்வொரு முறை குண்டுகள் வெடிக்கும் போதும் பார்ப்பன இந்துமதவெறி தலைக்கேறிய முதலாளித்துவ ஊடகங்கள் எந்த யோசனையுமின்றி இசுலாமிய
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
சமூகத்தை நோக்கி விரலை நீட்டின. அரசு தனது குண்டாந்தடிகளான போலீசு இராணுவத்தைக் கொண்டு இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிவளைத்தது. அதிகாரப்பூர்வமான முறையிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் சட்ட ரீதியிலும் சட்டத்திற்கு விரோதமான முறைகளிலும் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்தரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டன.
2006ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு முதலில் அவசரகதியில் விசாரணை நடத்தி சிமி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. மூன்று பேர் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தனர். தமது சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பழியையும் சுமக்கும் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த முசுலீம்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசு இதன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது.
2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டார்கள்; 50 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கஸூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த நேரமாகும். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களை
சுனில் ஜோஷி
சுனில் ஜோஷி
அடக்கம் செய்வதற்குள் பார்ப்பன-முதலாளித்துவ ஊடகங்கள் விசாரணையை நடத்தி தீர்ப்பையும் எழுதி விட்டன. ஒட்டு மொத்தமாக பத்திரிகைகள் “இது பாகிஸ்தான் சதி” என்று முன்மொழிய, அமெரிக்காவும் ஆமாம் இது ஹூஜி மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் சதி என்று வழி மொழிந்தது.
சம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள்,  முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக
தயாநந்த் பாண்டே
தயாநந்த் பாண்டே
ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது.
இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.
இந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம்
சந்தீர்ப டாங்கே
சந்தீர்ப டாங்கே
அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது.
அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு, அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளைப் பயன்படுத்துவர்.
அசீமானந்தின் இந்த மனமாற்றம் அத்தனை லேசில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
நீதிமன்றக்காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.
இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப்  பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை
ராம்ஜி
ராம்ஜி
பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், இதுமட்டுமே முழுமையான காரணமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு.
ஏனெனில், ஆர். எஸ். எஸ் ஒருவனுக்கு அளிக்கும் ஆரம்ப கட்டப் பயிற்சியே அவனது மனசாட்சியைக் கொன்று விட்டு மாஃபியா கும்பலின் பாணியில் உத்தரவுக்குக் கீழ்படியும் குணத்தை ஏற்படுத்தும் விதமாகத் தான் திட்டமிடப்பட்டுகிறது.  ஆர்.எஸ்.எஸில் புதிதாக சேரும் எவரும் ஷாகா எனப்படும் அவர்களது தினசரி ஒருமணி நேர பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எங்காவது இரகசிய மைதானங்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் குறைவான கோயில்களிலோ கூடும் அவர்கள், முதலில் உடற்பயிற்சி செய்வார்கள். பின்னர் இந்துத்வ பாசிசக்கதைகளை பேசி பயிற்சி கொடுப்பார்கள்.
ஆர்.எஸ்.எஸ்இன் இந்த ஷாகா பயிற்சியானது பொதுவில் கேள்விக்கிடமற்ற கட்டுபாட்டையும், அடிமைத்தன சிந்தனையையும் உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகிறது. மேலும் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்க நடைமுறைகள் இந்த அடிமைத்தன உளவியலை மேலும் வலுவாக்குகிறது.
ஆர். எஸ்.எஸ்ஸின் பயிற்சி முறைகள் நேரடியாக இத்தாலி பாசிஸ்ட் கட்சியிலிருந்து பெறப்பட்டது. இதற்காகவே பி.எஸ். மூஞ்சே எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் 1930களில் இத்தாலிக்குப் பயணித்து முசோலினியைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்த பாசிஸ்டு பயிற்சி முகாம்களை நேரடியாக கவனித்து அதன் அடிப்படையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டது. இந்துத்துவ இயக்கங்களுக்கு பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்ட் கட்சியோடிருந்த தொடர்புகள் பற்றிய மார்ஸியா கஸோலரி என்பரின் விரிவான ஆய்வுகளும் வேறு பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இணையத்தில்
புரோஹித்
புரோஹித்
வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரான கோல்வல்கர் ஹிட்லரை ஆதர்ச நாயகனாகவே வழிபட்டுள்ளார். இது குறித்த அவரது புத்தகம் இன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.
புதிதாக சேரும் சாதாரண உறுப்பினர்களையே இந்தளவுக்குத் தயாரிக்கிறார்கள் எனில் முழு நேர ஊழியர்களான ப்ரச்சாரக்குகளை எந்தளவுக்குத் தீவிரமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருப்பார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். தானும் தனது கூட்டாளிகளும் வைத்த குண்டுகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஏற்படுத்தாத குற்ற உணர்ச்சியை, அதனால் நாடெங்கும் கோடிக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் சுற்றிவளைக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட போது ஏற்படாத குற்ற உணர்ச்சியை, பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் இளைஞனின் நற்செயல்கள் ஏற்படுத்தியதென்று அசீமானந்த் குறிப்பிடுகிறார்.
இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உண்மையை முழுமையாக்கும் முக்கியமான விஷயங்கள் சன்ச்சல்குடா சிறைச்சாலைக்கு வெளியேயும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தற்போது தன்னோடு சதியில் ஈடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்திய பிரதேச மாநில பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர பிரச்சாரக்கான சந்தீப் டாங்கே, மூத்த ப்ரச்சாரக் ராம்ஜி, மேல் மட்ட உறுப்பினர் சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், பிரச்சாரக் தேவேந்திர குப்தா, பிஜேபி எம்.பி யோகி ஆதித்யானந், குஜராத் விவேகானந்த சேவா கேந்திரத்தின் பாரத்பாய், மாநில அமைப்பாளர் டாக்டர் அசோக், இன்னொரு முக்கிய பிரமுகர் லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, சாமியார் தயானந் பாண்டே  ஆகிய பெயர்களை உதிர்த்திருக்கிறார்.
தேவேந்திர குப்தா
தேவேந்திர குப்தா
இதில் ஆர்.எஸ்.எஸ் மத்திய கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமார் தான் குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்ட சதிக்குழுவுக்கு வழிகாட்டும் தலைவராக செயல்பட்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றிய கீழ் மட்ட பயங்கரவாத அலகுகளுக்குத் தொடர்பாளராக சுனில் ஜோஷி இருந்துள்ளார். குறிப்பாக குஜராத் -  பரோடா – பெஸ்ட் பேக்கரி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை சுனில் ஜோஷி தனது பொறுப்பில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர்கள் மாட்டிக் கொண்டால் இந்திரேஷ் குமாரும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களைக் கொன்று போடும் படி அசீமானந்த் ஜோஷியிடம் சொல்லியிருக்கிறார்.
அதற்கு சில தினங்களுக்குள் டிசம்பர் 2007ஆம் ஆண்டு ஜோஷி தனது சக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஆறு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் பெரியளவில் வெடித்து வருவதும், புலனாய்வுத் துறையினரின் விசாரணை ஒரு சங்கிலி போல் கீழ்மட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை நீண்டு வருவதையும் யூகித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது சொந்த உறுப்பினர்களையே கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கக் கூடும்.
அசீமானந்தின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அப்பாவி கலீமின் நன்னடத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி ஒரு காரணமென்றால், ஜோஷியின் படுகொலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மனக்கிலேசமும் முக்கியமான பங்காற்றியிருக்க வேண்டும். அசீமானந்தின் ஷாப்ரிதம் ஆஷ்ரமிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் தொடங்கி இன்னாள் தலைவர் மோகன் பாகவத் வரை பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
தெட்டத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இப்போது கிடைத்துள்ள நிலையிலும் இது வரை இந்த அரசு அதன் மேல் ஒரு சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது பாரதிய ஜனதா ஸ்பெக்ட்ரம்,
லோகேஷ் சர்மா
லோகேஷ் சர்மா
ஆதர்ஷ், காமென்வெல்த் உள்ளிட்ட ஊழல்களைக் குறித்து எழுப்பும் கூச்சலின் அளவைப் பொருத்து வாயை அடைப்பதற்கு மட்டும் பயன்படும்.
ஆனால், இந்த பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை காங்கிரசின் கைகளில் கொடுத்து விட்டு மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் அப்பாவி ஆடுகளின் வெகுளித்தனத்திற்கு ஒப்பானதாயிருக்கும். அந்த மந்தையின் மேப்பன் வேண்டுமானால் ஓநாய் புகுந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூடனாயிருக்கலாம் – ஆனால், காங்கிரசு அப்பாவியும் அல்ல மூடனும் அல்ல. தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் தனது லட்சியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் வளங்களைத் திறந்து விடும் நடைமுறைக்கும் பாரதிய ஜனதாவாவும் வெகுவாக உதவுகிறதுஎன்பதால் பார்ப்பன பயங்கரவாதிகளின் எந்தச் செயலும் மன்னிக்கப்பட்டு விடும்.
இத்தனை நாட்களாக தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை ஒட்டி பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத், வனவாசி கல்யாண் ஆஷ்ரம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பரிவார அமைப்புகளின் பெயர்கள் அம்பலப்பட்ட போதும், குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொண்டதைப் போல இந்த பெயர்களைத் தனித் தனியே உச்சரித்து வந்தன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால், ஆக்டோபஸின் கரங்கள் தனித்தனியே இயங்கினாலும் அதன் மூளை ஒன்றாக இருப்பதை போல, இந்த அமைப்புகளின் மூளையாகவும், மைய்யமாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
சாதாரணமாக குண்டுவெடிப்புகள் என்றால் உடனே அப்பாவி இசுலாமிய மக்கள் கைது செய்யப்படுவதும், பாக் சதி என்று ஊடகங்கள் கதை பின்னுவதுமான நாட்டில் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகள் இத்தனை ஆதரங்களோடு வெளிப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டுமென்றோ, அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படவேண்டுமென்றோ யாரும் பேசுவதைக்கூட நாம் கேட்க முடிவதில்லை. காரணம் இந்து மதவெறி பயங்கரவாதம் என்பது இந்த நாட்டின் அமைப்பு முறையின் ஆசிர்வாதத்தோடு செயல்படுகிறது என்பதால் அதை எவரும் கண்டு கொள்வதில்லை.
ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்.

இந்தியாவை இடுகாடாக்க இந்துத்துவா சதி!!
யார் இந்த நிர்மோஹி அகரா? (Safron Terrorism)
காந்தியை கொன்றது யார்?
தீவிரவாத செயலில் கைதான இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்...
அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்




http://www.vinavu.com/2011/01/09/saffron-terror-exposed/
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி