படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

26 ஜூலை, 2011

இந்தியா இழந்த ஒரு மகத்தான கலைஞன் எம்.எஃப். உசேன்



“எது குடியுரிமை? வெறும் துண்டுக்காகித மல்ல. எங்கிருந்து அன்புவந்தாலும் நான் அதனை வரவேற்பேன். இப்போதும் 99 சதவீத இந்திய மக்கள் என்னை நேசிக்கின்றனர். நான் ஒரு இந்திய ஓவியன். கடைசி மூச்சுள்ளவரை நான் அப்படியே இருப்பேன்!”
-இப்படிச் சொன்ன உலகப் புகழ்பெற்ற ஓவியர் மக்பூல் ஃபிடா உசேன் எனும் எம்.எஃப்.உசேன் தன் கடைசிக் காலத்தில் மதவெறி சக்தி களால் இந்தியாவில் வசிக்க முடியாமல் கத்தாருக்குச் சென்று அங்கு குடியுரிமை பெற்று வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவரது இறுதி மூச்சு நின்றது லண்ட னில். கடந்த ஜூன் 9 அன்று காலமான அவருக்கு வயது 95.
இந்தியாவின் பிக்காசோ என்று மதிக்கப்பட்டவர் எம்.எஃப்.உசேன். அவரைப் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இப்படிப் புகழாரம் சூட்டி யது: “இந்தியாவின் அழகியல் பாரம்பரியங்களை மேலும் வலுப்படுத்திய ஓவியர் உசேன். பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சிந்தனை ஓட்டங்கள் கொண்ட மகத்தான இந்திய நாகரிகத்தின் மாண்புகளை மேலும் முன்னெடுத்துச்செல்வதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர்”.
“உலகளவில் பிக்காசோவோடு சமமாக வைத்துப் புகழப்பட்டவர் இந்திய ஓவியக் கலை ஞர் உசேன் மட்டும்தான்” என்று கூறி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் அவருக்குத் தனது அஞ்சலியைச் செலுத்தியது.
உசேன் 1915 செப்டம்பர் 17 அன்று மகாராஷ் டிராவிலுள்ள பாந்தர்ப்பூரில் பிறந்தார். கடுமை யான வறுமை வாழ்க்கை அவருடையது. மும்பை யில் சினிமா போஸ்டர்கள் வரையும் தொழில் அவரது வறுமையை விரட்ட உதவியதோடு அவர் ஒரு சிறந்த ஓவியராகவும் உயர உதவியது. 1947 மும்பையில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியங்கள் வைக்கப்பட்டது முதல் பிரபலமாகத் தொடங்கினார் உசேன்.
பின்னர் முற்போக்குக் கலைஞர்களின் சங்கமா கிய புராகரசிவ் ஆர்டிஸ்ட் குரூப்பில் உறுப்பின ரானார். 1952 ஜூரிச்சில் நடந்த ஒரு ஓவியக் கண் காட்சியில் பங்கேற்றதன் மூலமாக உலகின் கவனத்தைப் பெற்றார்.
1955 ல் பத்மஸ்ரீ, 1973 ல் பத்ம பூஷண், 1991 ல் பத்மவிபூஷண் விருதுகள் உசேனைத் தேடி வந்தன. உசேன் 1967 ல் இயக்கிய ஆவணப்படமான “த்ரூ த ஐஸ் ஆஃப் எ பெயின்டர்” பெர்லினில் நடந்த பட விழாவில் தங்கக் கரடி விருது பெற்றது. தொடர்ந்து பல படங்களையும் உசேன் இயக்கி யுள்ளார்.
கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு 2007 -ஆம் ஆண்டு அவருக்கு ராஜா ரவிவர்மா விருது வழங்க முடிவுசெய்தபோது இந்துத்துவா வாதிகள் நீதிமன்றத் தடையைப் பெற்றனர்.
இந்தியாவின் பெருமைமிகு கலைஞரான எம்.எஃப்.உசேன் மறைவு எந்தவகையிலும் ஈடு செய்யப்பட முடியாத இழப்பன்றோ?
http://www.keetru.com/

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி